Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கேட்கும் வரம் கிடைக்கும் வரை...
கேட்கும் வரம் கிடைக்கும் வரை...
கேட்கும் வரம் கிடைக்கும் வரை...
Ebook98 pages34 minutes

கேட்கும் வரம் கிடைக்கும் வரை...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை சரியாக ஐந்து மணிக்கெல்லாம் அழைப்பு மணி ஒலித்தது.
ஸ்ரீதர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். விழித்ததும்தான் ஞாபகம் வந்தது ரமேஷ் வருவதாக சொன்னது. அவசரமாக எழுந்து லுங்கியை சரியாக கட்டிக்கொண்டு குளியலறைக்குள் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து கதவைத் திறந்தான்.
திறந்ததுமே முதல் பார்வை ரமேஷின் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணின் மேல்தான் விழுந்தது.
ஒரு நிமிடம் உடம்பு முழுவதும் மின்சாரம் தாக்கியதைப் போல் இருந்தது.
வெகு அமைதியான அந்த முகம் மிகப்பெரிய தாக்கத்தை இதயத்தில் உண்டு பண்ணியது.
ஒரு நிமிடம் செயல்பட முடியாமல் நின்றான்.
புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில் மலர்ந்தும் மலராத மலரைப் போன்ற அந்த முகம்.
மங்கிய வெளிச்சத்திலும் பொங்கும் நிலவொளியைப் போன்ற முகம்.
அழகிய பெரிய கண்கள். நீண்ட நாசி. வலது பக்கம் மின்னிய ஒற்றைக்கல் மூக்குத்தி. வடிவான உதடுகள். இதயத்தில் மெல்லிய பூக்களால் வருடுவதைப் போலிந்தது.
“உள்ள வாங்க!” இருவரும் உள்ளே வர வழிவிட்டு நகர்ந்தான்.
அவள் அவனுடன் கடந்து உள்ளே வந்தபோது அவளைத் தொட்ட காற்று அவனைத் தொட்டதில் அவன் சிலிர்த்துப் போனான்.
கலைந்து பறந்த கூந்தல் அவனை உரசியும் உரசாமலும் உணர்ச்சிகளைக் கூட்டியது.
“உட்காருங்க...” இருவருக்கும் எதிரேயிருந்த சோபாவை காட்டினான்.வாசல்பக்க இருட்டிலிருந்து உள்ளே வந்த அவளுடைய உருவம் இப்பொழுது பளிச்சென தெரிந்தது.
லைட் வெளிச்சத்தில் இப்பொழுது தெரிந்த அந்த முகம் மேகத்திலிருந்து வெளிப்பட்ட நிலவைப்போல் பளீரென மின்னியது.
இருவிழிகளிலும் அவள் உணர முடியாதபடி காந்தக் குவியல்.
பார்த்த ஒவ்வொரு பார்வையும் காந்த வீச்சு.
நேற்று வரை ஏன் சென்ற மணித்துளிகள் வரை நினைக்கவில்லை, இப்படி தனக்குள் ஏதோ உடைந்து சிதறும் என்று. சிதறும் உணர்வுகளை நிலை நிறுத்த முடியாமல் அவன் தடுமாறினான்.
இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.
அவள் அமர்ந்திருந்த அழகு தேவதை ஒன்று வானிலிருந்து இறங்கி வந்து அமர்ந்ததைப் போல்...
நிமிடத்திற்கு நிமிடம் அவனுக்குள் சிலிர்ப்பு எழுந்து எழுந்து அடங்கியது.
வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்த நண்பனிடம் பேச நிறைய இருந்தது.
ஆனால் எதுவுமே பேச முடியவில்லை. உலக அழகி என்று அறிவிக்கப்பட்ட ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறான் என்று தோன்றியது.
“நான் காபி கலந்து எடுத்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு சமையலறைக்கு வந்தான்.
சட்டென்று பாலை எடுத்து அடுப்பில் வைக்கவோ கேஸை பற்ற வைக்கவோ தோன்றாமல் சமையலறை ஜன்னலைத் திறந்தான்.
தோட்டத்து மல்லிகையின் வாசனை கும்மென காற்றோடு வந்து நாசியைத் தாக்கியது.
தினமும் நுகரும் வாசனைதான். ஆனால் இப்பொழுதோ அந்த வாசனை அவளுடைய அழகை நுகர்வதைப் போல்...
அவள் தன்னை கடந்து உள்ளே வந்தபோது நாசியை தழுவிச் சென்ற அதே வாசனைமல்லிகை வாசனை என்ற அடையாளம் போய் அவளுடைய வாசனை - அவளுடைய பிரத்யேக வாசனை என்பதைப் போல் அவனுக்கு அறிமுகமாகியது.
அவளுடைய பெயர் என்ன? சுபாவா... இல்லையே... சுபா என்ற பெயருடன் இன்னும் ஏதோ சேர்த்து சொன்னதாக ஞாபகம்.
யோசித்தான்.
‘சுபாங்கி...’
ஞாபகம் வந்தது.
‘சுபாங்கி...?’ எத்தனை அழகான பெயர்.
ஜன்னல் வழியே உள்ளே வந்த காற்றோடு அவன் உச்சரித்த பெயரும் கலந்ததால் வாசனை சுமந்த பெயராக இதயத்தை நிரப்பியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
கேட்கும் வரம் கிடைக்கும் வரை...

Read more from ஆர்.சுமதி

Related to கேட்கும் வரம் கிடைக்கும் வரை...

Related ebooks

Reviews for கேட்கும் வரம் கிடைக்கும் வரை...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கேட்கும் வரம் கிடைக்கும் வரை... - ஆர்.சுமதி

    1

    ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஸ்ரீதர் தாமதமாகத்தான் எழுந்தான். வழக்கம் போல் விழிப்பு சீக்கிரமே வந்துவிட்டாலும் சும்மாவே புரண்டு கொண்டிருந்தான்.

    புரண்டு கொண்டிருந்ததில் ஏதேதோ சிந்தனைகள்.

    அந்த சிந்தனையில் ஊர், அம்மா, அப்பா, ரமேஷ் என அனைவரும் வந்து போக -

    ரமேஷின் மேல் எண்ணங்கள் குவிந்தன.

    ‘பத்துப் பதினைந்து நாட்களாக ரமேஷிடமிருந்து போன் வரவில்லை.’

    கடைசியாக பேசியபோது தன் காதலைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்தான்.

    ப்ச்! ரெண்டு வீட்லயும் எங்க காதலை ஒத்துக்கமாட்டேங்கறாங்க. எங்க மாமாவுக்கு சுபாங்கியை பிடிச்சிருக்கு. அவ படிப்பு வேலை எல்லாம் பிடிச்சிருக்கு. ஆனா... ஜாதியைக் காரணம் காட்டறாங்க. அதேதான் அவ வீட்லயும். என் படிப்பு வேலை எல்லாம் பிடிச்சிருக்கு. ஜாதிதான் பிரச்சனை. என்ன மனுஷங்க. இந்த காலத்துல கூட மனுஷங்க இப்படி இருப்பாங்களா?

    எந்த காலத்திலேயும் இப்படித்தான் இருப்பாங்கடா. விஞ்ஞானம் எவ்வளவுதான் முன்னேறினாலும் மனித பிறப்புங்கறது டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சின்னு படிச்சாலும் கடவுளோட தலையிலேர்ந்து ஒருத்தன் பிறந்தான், கால்லேர்ந்து ஒருத்தன் பிறந்தான்னு இங்க வர்ணபேதம் பேசிக்கிட்டுத்தான் இருப்பானுங்க. எவ்வளவு உயர்வான பதவிக்கு போனாலும் அந்த உயர்வான இடத்திலேர்ந்து கீழான இந்த எண்ணங்களைப் பிடிச்சுக்கிட்டுத்தான் இருப்பானுங்க ஜாதிங்கறது எப்படித் தெரியுமா? பருந்து எவ்வளவுதான் உயாத்துல பறந்தாலும் கீழே செத்துக்கிடக்கற எலியைத்தான் பார்க்கும். அப்படித்தான் மனுஷனும். பணம், பதவி, அறிவு ஆற்றல் எல்லாம் இருந்து எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் புத்தி எப்பவும் ஜாதியைத்தான் பார்க்கும்.

    ப்ச்! நீ ஊருக்கு உபதேசம் மாதிரி பேசிக்கிட்டிருக்காதே. எனக்கு உபயோகமா ஏதாவது சொல்லு. என் காதல் நிறைவேற வழி சொல்லு எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை.

    பேசாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க.

    ரிஜிஸ்டர் மேரேஜா?

    ஆமா.

    ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றதுக்கு ஒரு மாதிரியாயிருக்கு

    ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். அப்பறம் சரியாயிடும். ஒரு குழந்தை பொறந்துட்டுன்னு வச்சுக்க, எல்லாரும் ஓடி வந்திடுவாங்க. அதனால துணிஞ்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணு

    கடந்த முறை ஸ்ரீதர் ரமேஷிற்கு இப்படித்தான் அறிவுரை சொன்னான்.

    ரமேஷிற்கு போன் செய்ய வேண்டும். என்ன முடிவு எடுத்திருக்கிறான் என்று கேட்க வேண்டும் என்று நினைத்தவாறே படுக்கையை விட்டு எழுந்தான்.

    முகத்தைக் கழுவிக்கொண்டு டி.ஷர்ட்டை எடுத்து அணிந்து கொண்டு தெருமுனைக் கடையில் டீ குடிக்கலாம் என நினைத்தவாறே கதவை சாத்திக் கொண்டு மாடியை விட்டு கீழே இறங்கி வந்த போது அவனுடைய செல்ஃபோன் ஒலித்தது.

    ‘ரமேஷ்’

    நினைத்ததுமே அழைக்கிறான்.

    ஹலோ! டேய் உனக்கு நூறு வயசுடா!

    அட... பார்க்கிற வேலையை ரிசைன் பண்ணிட்டியா?

    ஜோசியம் பார்க்கிறியா? என் ஆயுளையெல்லாம் சொல்றே? ரமேஷ் சிரித்தான்.

    உனக்கு போன் பண்ணணும்னு நினைச்சேன். நீயே போன் பண்ணிட்டே. அதான்...

    போடா! என் காதல் விவகாரம் பெரிசாயிட்டு, எங்கே என்னை வெட்டி வீசிடுவாங்களோன்னு நானே பயந்துகிட்டிருக்கேன். அல்ப ஆயுசுல போய்டுவேன் போலிருக்கு. நீ என்னடான்னா நூறு வயசுவரைக்கும் வாழ்வேன்கறே?

    ஏண்டா? பிரச்னை பெரிசாயிட்டா?

    ஆமா!

    சரி என்ன பண்ணப்போறே? பயந்துகிட்டு ‘எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு தாடியோட அலையப் போறியா? இல்லே... நான் சொன்னமாதிரி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணப்போறியா?

    ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம்னு முடிவெடுத்திட்டேன்.

    வெரிகுட்!

    நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்.

    என்ன ஹெல்ப் பண்ணணும் சொல்லு. என்னைக்கு எத்தனை மணிக்கு எந்த ஊர் ரிஜிஸ்டர் ஆபீஸுக்கு வரணும்னு சொல்லு. வர்றேன் சாட்சிக் கையெழுத்துப் போடறேன்.

    நீ இங்க வர வேண்டாம். நான் சுபாங்கியை கூட்டிக்கிட்டு உன் வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன். நீதான் எங்களுக்கு அடைக்கலம் தரணும். கல்யாணம் பண்ணிக்க உதவி செய்யணும். எனக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுக்கணும். ஒரு வேலையும் வாங்கிக் கொடுக்கணும்.

    அடப்பாவி! ஒரு உதவின்னுட்டு உன் குடும்ப பாரத்தையே என் தலையில சுமத்தறியே.

    வேற வழி இல்லைடா. உன்னைவிட்டா எனக்கு வேற யாரும் இல்லைடா.

    சரி! ஒண்ணும் கவலைப்படாதே. ரெண்டு பேரும் கிளம்பி வாங்க. எங்க பிரண்ட்ஸுங்களை வச்சே கல்யாணத்தை ஜாம்ஜாம்னு நடத்திடுவோம். என் வீட்டு கீழ்போர்ஷன் காலியாத்தான் இருக்கு குடியிருந்தவங்க போன வாரம்தான் காலி பண்ணிக்கிட்டுப் போனாங்க. வீட்டுக்காரர் குடிவர யாராவது வரமாட்டாங்களான்னு ஆள் தேடிக்கிட்டிருக்கார். அவர்கிட்ட நான் சொல்லி வைக்கிறேன் வந்துரு. அப்பறம் என் கம்பெனியிலேயே உனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்.

    அட... இவ்வளவு சுலபமா எல்லா வேலையும் முடிஞ்சுட்டு. உண்மையிலேயே நான் அதிர்ஷசாலிதான்டா

    சொல்லுவே, ஏன் சொல்லமாட்டே? என்னை மாதிரி இளிச்சவாயன் ஃபிரண்டா அமைஞ்சா நீ அதிர்ஷ்டசாலியாத்தான் இருப்பே

    சரி எப்போ வர்றே?

    இன்னைக்கு நைட் கிளம்பறோம். காலையில் உன் வீட்ல இருப்பேன். ஆபிஸுக்கு லீவு போட்டுடு.

    எதிர்முனையில் ரமேஷ் சிரித்தான். பாவம், அவன் தன்னை அதிர்ஷ்டசாலி என்றான். துரதிர்ஷ்டம் இங்கே காத்திருப்பது அவனுக்குத் தெரிய நியாயம் இல்லை.

    2

    காலை சரியாக ஐந்து மணிக்கெல்லாம் அழைப்பு மணி

    Enjoying the preview?
    Page 1 of 1