Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாலை சூடும் ம(ர)ண நாள்
மாலை சூடும் ம(ர)ண நாள்
மாலை சூடும் ம(ர)ண நாள்
Ebook78 pages28 minutes

மாலை சூடும் ம(ர)ண நாள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“யார் கிட்ட கேட்கப் போற தம்பி?” சட்டையை மாட்டிக் கொண்டிருந்த நிர்மலைப் பார்த்துக் கேட்டாள் அம்மா. 


“டவுன்ல நம்ம பகவன்தாஸ் இருக்காரே...”


“பான் ப்ரோக்கர், பகவான்தாஸ் தானே அண்ணா?”


“ஆமாம். அவர்கிட்ட கேட்டுப் பாக்கலாம்னு நினைக்கிறேன்!” 


“தம்பீ... யோசிச்சுத்தான் பேசுறியா? நூத்துக்கு பத்து ரூபா வட்டி கேக்கற கிராதகனாச்சே அவன். இருபதாயிரம் வாங்கினா மாசம் ரெண்டாயிரம் வட்டி கட்டிணுமே. உனக்கு சம்பளம் ஆயிரம் கூட வராது. அதுல பிடிப்பெல்லாம் போக கைக்கு, நானூறு வந்தா அதிகம். இதுல வாடகை கொடுப்பமா, வயித்துக்கு பாப்பமானு உருகிட்டு இருக்கேன் நான். ரெண்டாயிரம் வட்டி எப்படி தம்பீ கட்டுவ?” 


“எல்லாத்தையும் இப்பவே யோசனை பண்ணினா, அடுத்த வாரம் சுமி கழுத்துல தாலி ஏறாது. தயவு செஞ்சு என்னைப் போக விடும்மா” எரிச்சலோடு சொல்லிவிட்டு, வெளியே இறங்கி, சைக்கிள் ஸ்டாண்டை விடுவித்தான். தாவி உட்கார்ந்து நிதானமாக பெடலை மிதிக்கத் தொடங்கினான். 


மிதிக்க, மிதிக்க இன்னும் யார், இன்னும் யார் என்ற யோசனை வந்தது. 


அவசரமாகக் கலைத்தான். 


சாலையைப் பார்த்து கவனமாக ஓட்டத் தொடங்கினான். 


பகவன்தாஸ் கடையை நெருங்கியதும், ஏற்கனவே ஒரு கூட்டம் காத்திருக்க- 


ஒரு ஓரமாகக் காத்திருந்தான்.


இருபது நிமிடம் முடிந்து, கூட்டம் ஓய்ந்ததும், மெல்ல உள்ளே நுழைந்தான். 


“வா நிர்மல் பையா! தங்காச்சிக்கு கண்ணாலம்னு ஊரே பேசிக்குது. நமக்கெல்லாம் பத்திரிகை வைக்க மாட்டானா?” 


அந்தக் கவலையிலும் பகவன்தாஸைப் பார்த்ததும் சிரிப்பு பொங்கி வந்தது. தினமும் ஒரு மணிநேரம் ஒதுக்கி, ‘மரியாதையாக தமிழில் பேசுவது எப்படி?' என்று இவனுக்குக் கற்றுத் தர வேண்டும். 


“பத்திரிகை வைக்கலாம் சேட்டு. அதுக்கு நீயும் மனசு வக்கணுமே!” 


“நம்பள் என்னாத்துக்கு மனசை வைக்கிறான் பையா?”


“நிம்பள் பணம் தர்றான் சேட்ஜி!” 


“பத்து ரூபா வட்டி தர்றானா நிர்மல் பையன்?” 


நிர்மல் சட்டென மௌமாகிப் போனான். 


“என்ன பையா பேசறானில்லை?” 


குரலைத் தழைத்துக் கொண்டு, பகவன்தாஸைப் பார்த்தான் நிர்மல். “சேட்ஜி, நான் சொல்றதை நீ கொஞ்சம் கேப்பியா?” 


“என்ன நிர்மல் பையா?” 


“ஆயிரம் ரூபா கூட சம்பளம் வராத நான், ஊர் முழுக்க கடன் வாங்கியாச்சு சேட்டு. இந்த நிலைல இருபதாயிரம் தொகைக்கு, ரெண்டாயிரம் வட்டி எப்படி தர முடியும்? என்னை உன் தம்பியா நினைச்சு, குறைஞ்ச வட்டிக்கு தா சேட்டு இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா, என் தங்கச்சி  வாழ்க்கையே பாழாப் போயிரும் சேட்டு” தன்னையும் மீறி அழுதுவிட்டான் நிர்மல். 


சேட்டு மெளனாக இருந்தான். 


“அரே நிர்மல் பையா நம்மளக்கு பாவமாத்தான் இருக்கறான். நம்பள் இரக்கம் காட்டினா... பிழைக்கறானில்லை. ஸாரி பையா. உனக்காக ஒம்போது ரூபாயா வேணும்னா குறைச்சுக்கலாம்!” 


நிர்மல் எழுந்தான். 


சோர்ந்து போய் வெளியே வந்தான். 


சைக்கிளில் ஏறி, பெடலை மிதிக்கத் தொடங்கியதும், காரியரை யாரோ இழுத்த தினுசில் சைக்கிள் நகர மறுத்தது. 


இறங்கி, திரும்பினான். 


பின்னால் நின்ற அந்த மனிதன் சிரித்தான். சிரிப்புகூட முழுவதும் வெளித் தெரியாமல் அந்த பிரெஞ்சு தாடியும், புஷ்டியான – உதடுகளைத் தின்ற-மீசையும் அழுத்திக் கொள்ள, ரோமங்களின் சின்ன சலனத்தில் அது சிரிப்பு என்று தெரிந்தது.


“யார் நீங்க?” சற்று எரிச்சலோடு கேட்டான் நிர்மல். ஆறடி உயரத்தை அனாயாசமாக அடைந்திருந்த அவன், நல்ல தேகக் கட்டும், அத்லெட் உடம்புமாக, பார்வைக்கு ஒரு மாஜிக் நிபுணனைப் போலிருந்தான். கண்ணாடிக்குப் பின்னால் தெரிந்த கண்களில் ஒரு அலட்சியம் இருந்தது. 


“அதை இங்கே வச்சுப் பேச வேண்டாமே!” 


“எங்கேயும் வச்சுப் பேச வேண்டாம். நீங்க யார்னு தெரியாம நான் நகர முடியாது இங்கிருந்து!” 


“உன் தங்கை கல்யாணத்துக்கு வேண்டிய பணத்தை வட்டியில்லாம தர வந்திருக்கேன். இப்ப வர்றியா? என் வீட்ல போய் பேசுவோம்!” 


தேடி வந்த அதிர்ஷ்டமா? 


மறுபேச்சே இல்லாமல், நிர்மல் அவனைத் தொடர்ந்து சைக்கிளைத் தள்ளிக்  கொண்டு நடந்தான். தெருமுனை திரும்பியதும், அந்த நீளமான அயல்நாட்டு  கார், எவர்சில்வர் கலரில் பளபளத்தது. வெய்யில் அதன் உடம்பில் பட்டுப் பிரதிபலிக்க- 


“சைக்கிளைப் பூட்டிட்டு, கார் ஏறு?”


நிர்மல் சற்று தயங்கி, சைக்கிளை அந்த மெடிகல் ஷாப் பக்கம் பூட்டி நிறுத்தினான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
மாலை சூடும் ம(ர)ண நாள்

Read more from தேவிபாலா

Related to மாலை சூடும் ம(ர)ண நாள்

Related ebooks

Reviews for மாலை சூடும் ம(ர)ண நாள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாலை சூடும் ம(ர)ண நாள் - தேவிபாலா

    1

    "இன்னும் இருபதாயிரம் குறையுதம்மா!" பேப்பரும் பென்சிலுமாக அம்மாவைப் பார்த்தான் நிர்மல்.

    அம்மா கனத்த கவலையை கண்களில் அணிந்து கொண்டு மகனைப் பார்த்தாள்.

    லோன்ல எவ்ளோ கிடைக்கும்பா?

    எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சு போட்டாச்சும்மா. அப்படியும் இருபதாயிரம் முள்ளங்கிப் பத்தையாட்டம் உதைக்குது!

    என்னப்பா செய்யறது?

    "அதான், எனக்கும் புரியலம்மா. குருட்டு தைரியத்துலநாள் குறிச்சு, பத்திரிகை கூட அடிச்சாச்சு. இந்தக் கட்டத்துல கல்யாணத்தை நிறுத்தவா முடியும்?

    அம்மா மௌனமா தலை குனிந்திருந்தாள்.

    நீ அழறீயாம்மா?

    வேறென்னப்பா என்னால செய்ய முடியும்? பெண்ணைப் பெத்து என் கையில கொடுத்துட்டு, பொறுப்பில்லாம உங்கப்பா வீட்டையும், குழந்தைகளையும் விட்டுட்டு ஓடிப் போயாச்சு, இன்னிக்கு அந்தப் பொறுப்பை நீ சுமக்க வேண்டியிருக்கே நிர்மல். குருவி தலைல பனங்காயா?

    கல்யாணத்தை நிறுத்த வழியுண்டா? கதவின் மறு பக்கத்திலிருந்து கசிந்தது மெலிதான குரல்.

    திரும்பிப் பார்த்தான் நிர்மல்.

    நின்று கொண்டிருந்தாள் சுமித்ரா.

    ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா உனக்கு? எரிச்சலோடு ஓரடி முன்னே வைத்தான்.

    கோச்சுக்காதே அண்ணா. இந்தப் பிரச்னைக்கு முடிவு தெரிய வேண்டாமா? என் வாழ்வுல உனக்கு பங்கு இருக்கும் போது, உன் நலத்துல நான் அக்கறை எடுத்துக்கக் கூடாதா அண்ணா?

    அதுக்குச் சொல்லலை கண்ணம்மா! தணிந்து வந்தான்.

    மாப்ளை வீட்டுக்காரங்க கிட்ட பேசிப் பார்க்கலாமா தம்பி?

    என்னன்னு?

    கொஞ்சம் குறைச்சுக்கச் சொல்லி!

    நம்ம என்னம்மா, அள்ளி செய்யறம்? ஆறு சவரன் நகை அதிகமா? இது குறைஞ்சபட்ச செலவும்மா இதைக்கூட செய்யலைன்னா, பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணவே நமக்கு யோக்கியதை ஏதும்மா?

    சரி, என்னதான் செய்யலாம்னு யோசிக்கற?

    ஏதாவது செய்யலாம்மா. இப்ப பசிக்குது... சாதம் போடறியா?

    அவசரமாக உள்ளே போனாள் சுமித்ரா.

    சுமித்ராவுக்கு போன மாதம்தான் இருபது முடிந்து, ஓட்டுப் போட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். பாம்பு பற்றிய பயம் எதுவும் உங்களுக்கு உண்டா? அப்படியானால் சுமித்ராவின் பின் பக்கத்தை நீங்கள் பார்க்கக் கூடாது. உச்சந்தலையில் படம் போல ஆரம்பித்து கழுத்தில் இளைத்து சீராக இடுப்பைத் தாண்டி நீளும் அந்த கருநாகம் உங்களை அச்சப்படுத்தும். அந்தக் கருமைக்கு சவால் விடும் விவாவின் நிறம் நீங்கள் ராமனாக இருக்க ஆசைப்பட்டால், அது சுமித்ராவின் உதடுகளை... அந்த ஈரப் பிளவைப் பார்க்கும் வரைதான் சாத்தியம். மூக்குக்கு மேல் இரண்டு கருநீல நீச்சல் குளங்கள்.

    இந்த வர்ணனை போதும். இல்லையானால் கதையை விட்டுவிட்டு சுமித்ராவையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.

    சாப்பிட உட்கார்ந்தான் நிர்மல்.

    சாதத்தை போட்டு, குழம்பை அதில் வார்க்கும் போது-

    வாசலில் ‘பெல்’ அடித்தது.

    சார்... ரிஜிஸ்டர்!

    பாரு சுமித்ரா!

    சுமித்ரா போனாள். அண்ணா உனக்குத்தான்? வர்றியா?

    நீயே கையெழுத்துப் போட்டு வாங்கு. யாரு போட்டா என்ன? அப்பளத்தைக் கடித்துக் கொண்டே சொன்னான். தற்செயலாகச் சொன்ன அந்த வாக்கியம், தன் வாழ்வையே மாற்றி அமைக்கப் போவதை நிர்மல் அறியவில்லை.

    2

    "யார் கிட்ட கேட்கப் போற தம்பி?" சட்டையை மாட்டிக் கொண்டிருந்த நிர்மலைப் பார்த்துக் கேட்டாள் அம்மா.

    டவுன்ல நம்ம பகவன்தாஸ் இருக்காரே...

    பான் ப்ரோக்கர், பகவான்தாஸ் தானே அண்ணா?

    ஆமாம். அவர்கிட்ட கேட்டுப் பாக்கலாம்னு நினைக்கிறேன்!

    தம்பீ... யோசிச்சுத்தான் பேசுறியா? நூத்துக்கு பத்து ரூபா வட்டி கேக்கற கிராதகனாச்சே அவன். இருபதாயிரம் வாங்கினா மாசம் ரெண்டாயிரம் வட்டி கட்டிணுமே. உனக்கு சம்பளம் ஆயிரம் கூட வராது. அதுல பிடிப்பெல்லாம் போக கைக்கு, நானூறு வந்தா அதிகம். இதுல வாடகை கொடுப்பமா, வயித்துக்கு பாப்பமானு உருகிட்டு இருக்கேன் நான். ரெண்டாயிரம் வட்டி எப்படி தம்பீ கட்டுவ?

    எல்லாத்தையும் இப்பவே யோசனை பண்ணினா, அடுத்த வாரம் சுமி கழுத்துல தாலி ஏறாது. தயவு செஞ்சு என்னைப் போக விடும்மா எரிச்சலோடு சொல்லிவிட்டு, வெளியே இறங்கி, சைக்கிள் ஸ்டாண்டை விடுவித்தான். தாவி உட்கார்ந்து நிதானமாக பெடலை மிதிக்கத் தொடங்கினான்.

    மிதிக்க, மிதிக்க இன்னும் யார், இன்னும் யார் என்ற யோசனை வந்தது.

    அவசரமாகக் கலைத்தான்.

    சாலையைப் பார்த்து கவனமாக ஓட்டத் தொடங்கினான்.

    பகவன்தாஸ் கடையை

    Enjoying the preview?
    Page 1 of 1