Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மன்மத ஜாடை!
மன்மத ஜாடை!
மன்மத ஜாடை!
Ebook95 pages32 minutes

மன்மத ஜாடை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மறுநாள் மாலை ஐந்து மணிக்கு மதன் காரோடு வந்து நின்றான். உள்ளே வந்தான்.
அம்மா அவசரமாக வரவேற்றாள்.
“காபி கொண்டு வர்றேன் மாப்ளை. ரோகிணி! ரெடியாம்மா?”
“வந்துட்டேன்மா!”
ரோகிணி லேசாக தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“போகலாமா? ஆன்ட்டி! காபி எதுவும் வேண்டாம். வெளில சாப்பிட்டுக்கிறோம். ஒன்பது மணிக்குக் கொண்டு வந்து விட்டுர்றேன்.”
இருவரும் காரில் ஏற, அம்மா கையசைத்தாள்.
நேராக கடற்கரைக்கு வந்து விட்டார்கள்.
ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.
“எனக்குக் கூட ரெண்டு வருஷ வெளிநாட்டு பிராஜக்ட் வரும் போலிருக்கு.”
“ரெண்டு வருஷமா?”
“கவலைப்படாதே! உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன். கூட்டிட்டுத்தான் போவேன். இதுவரைக்கும் சின்ன பிராஜக்ட்ல ஒரு மாசம், ரெண்டு மாசம்னு தான் போயிருக்கேன்.”
“நாமும் போயிட்டா, இங்கே பெரியவங்க கஷ்டப்பட மாட்டாங்களா?”
“என்ன கஷ்டம்? சொளை, சொளையா பணம் வருது. மனுஷங்களை விட பணம்தானே முக்கியம்.”
“அப்படி சொல்லாதீங்க.“இல்லை ரோகிணி. இப்ப உங்கக்கா வெளிநாட்ல போய் பல ஆயிரங்களை சம்பாதிக்கற காரணமாத்தான் நீங்கள்ளாம் செழிப்பா இருக்கீங்க. ‘போதும்டி! விட்டுட்டு வந்துரு’னு உங்கள்ள யாராவது ஒருத்தர் சொல்வீங்களா?”
ரோகிணி பேசவில்லை.
“இதப்பாரு! இந்த உலகமே பாசாங்குல ஓடுது. கூடாது. மனசுல உள்ள எண்ணங்களை, புதைஞ்சு கிடக்கற விகாரங்களை வெளில கொண்டு வந்துடணும். நாம மறைச்சாலும் ஒருநாள் அது தானாவே வெளில வந்துடும்.”
அவள் மௌனமாக இருக்க,
படக்கென மதன் அவள் மடியில் படுத்து விட்டான்.
ரோகிணிக்கு ஒரு கணம் உதறி விட்டது உடம்பு!
சட்டென அவன் தலையைத் தள்ளிவிட்டு விலக, மதனின் தலை மணலில் பட்டது.
அவனுக்குக் கோபம் வந்து விட்டது.
“என்ன ரோகிணி இது?”
“வேண்டாங்க!”
“என்ன வேண்டாம்? உன் மடில நான் தலை வச்சது தப்பா?”
“தப்புதாங்க! நமக்குக் கல்யாணம் முடிஞ்ச பிறகு இந்த மாதிரி உரிமைகளை நீங்க கேக்க வேண்டாம். எடுத்துக்கலாம். ஆனா, இப்ப இல்லை.”
“நீ எந்தக் காலத்துல இருக்கே?”
“காலம் எதுவானாலும் பண்பாட்டை மதிக்கிறதில்லையா? நான் ஒரு பொண்ணு! அதை மறக்கக் கூடாதில்லையா?”
“பாட்டி மாதிரி பேசறே!“தப்பில்லைங்க. தரகர் எனக்கு வரன் பார்க்கும் போது என்ன சொன்னார்? உங்க குடும்பம், மானம் மரியாதைனு ரொம்பவே பார்க்கற குடும்பம்னு சொன்னார். அதுக்குத் தோதா நான் இருக்க வேண்டாமா?”
“பாட்டியம்மா மன்னிச்சுடு. மடினு ஒண்ணு ஒடம்புல இருக்கறதையே இனி நான் மறந்துடுவேன்.”
ரோகிணி வாய்விட்டுச் சிரித்து விட்டாள்.
“ஓக்கே! உனக்குப் புடிக்கலைனா வேண்டாம். ஆனா, கல்யாணத்துக்கு முன்னால அத்துமீறினா, அதுல ஒரு திரில் இருக்கு.”
“வேண்டாம். ஆம்பிளைங்க எப்ப வேணும்னாலும் வேலி தாண்டலாம். சமூகம் அதைப் பெரிசுபடுத்தாது. பொண்ணுங்க கதை அப்படி இல்லை. சரி! உங்க குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்க.”
“அப்பா - அம்மா இருக்காங்க. எந்தப் பிரச்னையும் தராதவங்க. நல்லவங்க. ஒரு அக்கா. அவ டில்லில இருக்கா. ரெண்டு பசங்க. பள்ளிக் கூடத்துல படிக்கறாங்க. ஒரு தம்பி. அகமதாபாத்ல எம்.பி.ஏ., பண்றான். நான் மட்டும் எங்க அம்மாவுக்கு ஸ்பெஷல். அதனால ஒரு சின்ன பொஸஸிவ் இருக்கும். நீ பார்த்து நடந்துக்கோ. அதிகபட்ச உரிமைகள்தான் மாமியார் - மருமகள் பிரச்னைக்கு வேர்.”
“என்னால எந்த பிரச்னையும் வராது. உங்கம்மா மடிதான் முதல். புரியுதா?”
“மறுபடியும் மடியா?”
“ச்சீ! போங்க.”
“சரி! மெதுவா போயிட்டு, எங்கியாவது சாப்டுட்டு, உன்னை உங்க வீட்ல ட்ராப் பண்றேன்.”
இருவரும் ஒரு நல்ல ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டார்கள்.
ஒன்பது மணிக்கு வீடு திரும்பி விட்டார்கள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
மன்மத ஜாடை!

Read more from தேவிபாலா

Related to மன்மத ஜாடை!

Related ebooks

Reviews for மன்மத ஜாடை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மன்மத ஜாடை! - தேவிபாலா

    1

    ரோகிணியை அவர்களுக்குப் பிடித்து விட்டது. பார்த்ததும் அதை வாய்விட்டே சொல்லி விட்டார்கள்.

    உங்களுக்கும் மனசுக்கு திருப்தினா, இன்னிக்கே நாள் நல்லா இருக்கு. தாம்பூலத்தை மாத்திடலாமா? பிள்ளையின் அம்மா கேட்டாள்.

    இவர்களிடம் ஒரு தயக்கம் இருந்தது.

    எதுவானாலும் சொல்லுங்க.

    எங்க மூத்த பொண்ணு ராதிகா வெளிநாட்ல இருக்கா. எங்க குடும்பத்தை நடத்தறவளே அவதான்! அவகிட்ட அனுமதி கேக்காம நாங்க எதையும் செய்ய மாட்டோம்.

    போன்ல இப்பப் பேச முடியுமா?

    முயற்சி செய்யறோம்.

    ரோகிணி உடனே போன் செய்தாள். சட்டென இணைப்பு கிடைத்து விட, யாரிடமோ அந்தப் பெயரைச் சொல்லி, கொஞ்சம் காத்திருந்து, ராதிகா ‘ஹலோ’ என்க, அப்பாவிடம் தந்தாள் ரோகிணி!

    நான் அப்பா பேசறேன்மா! ரோகிணியைப் பெண் பார்க்க வந்திருக்காங்க. பரஸ்பரம் ரெண்டு பேருக்கும் புடிச்சுப் போச்சு. தாம்பூலம் மாத்திக்கலாமானு கேக்கறாங்க.

    என்னப்பா எதிர் பார்க்கறாங்க?

    உங்களால முடிஞ்சதைச் செய்ங்கணு சொல்றாங்க. ரொம்ப நல்ல மனுஷங்க. குடும்ப கௌரவத்தை மட்டுமே பெரிசா நினைக்கறவங்க.

    சரிப்பா! ரோகிணிக்குப் புடிச்சிருந்தா உடனே தாம்பூலம் மாத்திடுங்க.

    தேதி எப்பம்மா குறிக்கறது?

    சீக்கிரமே குறிச்சிடுங்கப்பா!

    நீ வர முடியாதாம்மா?

    அப்பா! என் சூழ்நிலை இங்கே எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. நல்லது சீக்கிரம் நடக்கணும். நடத்திடுங்க.

    அம்மா, ரோகிணி இருவரிடமும் பேசினாள்.

    போனை வைத்து விட்டு வந்தார்கள்.

    சரிங்க! எங்க மகள் பச்சைக் கொடி காட்டிட்டா. இப்ப நல்ல நேரம். தாம்பூலத்தை மாத்திடலாம்.

    அனைவருக்கும் உற்சாகம்.

    பத்தே நிமிடங்களில் லக்னப் பத்திரிகை எழுதப்பட்டு, படிக்கப்பட்டது. தாம்பூலம் மாற்றப்பட்டது. பஞ்சாங்கம் வைத்துக் கொண்டு முகூர்த்தத் தேதிகளைக் கணக்கிட்டார்கள்.

    அடுத்த மாதமே மூன்று தேதிகள் கிடைத்தன.

    ஒன்றைக் குறித்து விட்டார்கள்.

    தாம்பூலம் மாத்தியாச்சு. சாப்டுட்டுத்தான் போகணும்.

    அப்பா சொல்லிவிட அவர்கள் தலையாட்டினார்கள்.

    உங்க மூத்த மகள் எப்ப வெளிநாடு போனாங்க? பிள்ளையின் அம்மா கேட்டாள்.

    அவ வெளிநாட்டுக்குப் போய் நாலஞ்சு வருஷம் ஆச்சு.

    பெரிய படிப்போ?

    இல்லீங்க! சாதாரண பட்டதாரிதான். கம்ப்யூட்டர் படிச்சிருக்கா. இங்கே ஒரு கம்பெனில வேலை பார்த்துக்கிட்டிருந்தா. இவ திறமையைப் பார்த்து ஒரு வெளிநாட்டு வாய்ப்பு தேடி வந்தது. உடனே புடிச்சுகிட்டா.

    அவ கல்யாணம்?

    நாங்க சொல்லிக்கிட்டே இருக்கோம். இதுவரைக்கும் அவ பிடி கொடுக்கலை. அடுத்த தங்கச்சிதான் ரோகிணி. மூணாவதுரேணுகா, கடைசி வருஷம் பி.காம். படிக்கறா. எல்லாத்துக்கும் கடைசி 12வது படிக்கற எங்க பையன் பரணி. ‘எல்லாரையும் ஆளாக்கின பிறகு என் வாழ்க்கை பற்றி யோசிக்கலாம்’னு சொல்லிட்டா.

    அப்பா கண்கலங்கி விட்டார்.

    மாப்பிள்ளை மதன் ஆச்சர்யப்பட்டான்.

    அவன் பொறியியல் பட்டதாரி. இங்கே ஒரு நல்ல தனியார் நிறுவனத்தில் மாதம் ஐம்பதாயிரம் வரை சம்பாதிப்பவன். இருமுறை வெளிநாட்டுக்குப் போய் வந்தவன்.

    உங்க மகளோட விலாசம் குடுங்க. அடுத்த முறை அமெரிக்கா போகும் போது நான் அவங்களை சந்திக்கறேன்.

    விலாசம் எங்களுக்கே தெரியாது. வாரம் ஒரு முறை போன்ல பேசுவோம்.

    விருந்து சமையல் அடுத்த ஒரு மணி நேரத்தில் தயாராக, எல்லாரும் சாப்பிட்டார்கள்.

    புறப்பட்டு விட்டார்கள்.

    ரோகிணியிடம் வந்தான் மதன்.

    நாளைக்கு நான் வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கறேன். வெளில போகலாம்.

    ரோகிணி, தன் அம்மாவைப் பார்த்தாள்.

    மாப்ளை கூப்பிடும் போது நீதான் பதில் சொல்லணும். என்னைப் பார்த்தா?

    மதன் அம்மா அருகில் வர,

    ரொம்பக் கூச்சப்படுவா. கல்லூரியில் படிக்கற காலத்துலேயே ரொம்ப பயப்படுவா. மூடி மூடி வளர்த்தாச்சு.

    நல்லதுங்க! பெண் குழந்தைங்க அடக்கமா அப்படித்தான் இருக்கணும். மதன்கூட நீ தாராளமா வெளில போகலாம் ரோகிணி. அதுல தப்பே இல்லை.

    ரோகிணி வெட்கத்துடன் தலையாட்டினாள். புறப்பட்டு போனார்கள்.

    வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு உள்ளே வந்தார்கள்.

    ஒரு மாசத்துல கல்யாணத்தை நடத்த முடியுமா?

    ஏன் முடியாது? ராதிகா சம்பாதிச்சு அனுப்பின பணத்தைத்தான் நிறைய சேர்த்து வச்சிருக்கோமே! நகைகள் வாங்கியாச்சு. பாத்திர பண்டங்கள் இருக்கு. துணிமணிகள் வாங்கணும். கல்யாண மண்டபம் பதிவு பண்ணணும். தவிர, சாப்பாட்டுச் செலவு.

    அம்மாவும், அப்பாவும் பட்ஜெட் போடத் தொடங்கி விட்டார்கள்.

    இதப்பாரு பார்வதி. முழுசா பட்ஜெட்டைப் போட்டுட்டு, நம்ம கையிருப்பு என்ன, பற்றாக்குறை எத்தனைனு ஒட்டு மொத்தமா கணக்குப் போட்டு ராதிகாவுக்கு... பேக்ஸ் பண்ணிடலாம்.

    ரோகிணி அருகில் வந்தாள்.

    அம்மா! அக்காவை ரொம்பக் கசக்கிப் பிழியக் கூடாது. பாவம் அக்கா.

    அப்பாவுக்குக் கோபம் வந்து விட்டது.

    யாருடி கசக்கறது? என்ன செலவானாலும் நடத்துங்கனு அவ பச்சக்கொடி காட்டிட்டாளே!

    "சரி! அந்தப் பணத்தைத் திரட்ட அவ என்ன பாடுபடறாளோ? ஒருத்திதானே இந்தக் குடும்பப் பாரத்தைத் தோள்ல

    Enjoying the preview?
    Page 1 of 1