Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...
வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...
வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...
Ebook148 pages54 minutes

வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சூரியன் மனைவிக்கு அடங்கிய கணவன் போல் கடமை முடிந்து போய் விட்டான். மஞ்சளும் சிவப்பும் படரத் தொடங்கியது வானத்தில். பறவைக் கூட்டம் மாணவக் கூட்டம் போல் சிறகடித்து வீடு திரும்பியது.
 களை எடுப்பு முடிந்திருந்ததால் சலனமற்ற வயலில் நண்டுகள் மேலே வந்து ஆட்டம் போட்டன.
 எல்லோரும் சம்பளமே வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். துளசி மட்டும் பம்ப் செட்டில் இன்னும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
 கைகளால் முகம் கழுவ வந்தவள்தான். கட்டையில் உட்கார்ந்து கால்களைத் தொட்டித் தண்ணீரில் விட்டுத் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள். பளீரென பாய்ந்து விழுந்த தண்ணீரின் சிதறல் மேலே தெறிப்பது ஆனந்தமாக இருந்தது.
 தண்ணீரில் நனைந்த கால்கள் பளபளத்தன. தன் வாழைத்தண்டு போன்ற காலைத் தானே ரசித்தவளாய் தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.
 "இந்த அழகுக் காலுக்கு கொலுசு போட்டா நல்லாத்தானிருக்கும்? ஆரு வாங்கித்தாரா?"
 தப்தப்பென கால்களால் தண்ணீரை சிதறடித்தாள். கொட்டும் தண்ணீரைக் கை சேர்த்துப் பிடித்துக் குடித்தாள்.
 "எனவே... துளசி? கூலி வேணாமா?" குரல் கேட்டுத் திரும்பினாள்.
 மோகனரங்கம் வெகு அருகில் நின்றிருந்தான். களி மண்ணால் செய்த பொம்மையைப் போல் இருந்தான். முறுக்கிவிட்ட மீசை ஒருவித பொறுக்கித்தனத்தைக் காட்டியது. நெஞ்சின் பாதிப்பகுதி தெரியும்படி பட்டனைக் கழட்டி விட்டிருந்தான். வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை மட்டுமே பளிச்செனத் தெரிந்தது.
 ஓரிடத்தில் நிலையில்லாத கண்கள். அவளின் தண்ணீரில் கிடந்த கால்களையே வெறித்துப் பார்த்தான்சட்டென எழுந்து பாவாடையை இறக்கிவிட்டு அவனைப் பார்த்து முறைத்தாள்.
 "இந்தா கூலிப்பணம்" அவன் நீட்டிய பணத்தை அவள் வாங்கும் போது வேண்டுமென்றே விரல்களால் விரல்களைத் தொட்டான்.
 எரிச்சலுடன் பார்த்தாள்.
 "கூலிப் பணத்தை எனக்கு வந்து வாங்கிக்கத் தெரியாதா?"
 "ஹி... ஹி... நானே உனக்காகக் கொண்டு வந்து தர்றதுல ஒன்னும் கொறைஞ்சு போயிடலை..."
 "ம்... ம்ஹும்" என்று பணத்தை தாவணி முனையில் முடிந்து இடுப்பில் சொருகிக் கொண்டாள்.
 "உங்க ஆத்தாளுக்கு உடம்பு தேவலையா?"
 "தேவலை தேவலை..." என்று கூறிவிட்டு முன்னே நடந்தாள்.
 முன்னே நடக்கும் அவளின் அழகு அவனைக் கொன்றது. நெருங்கி நடந்தான்.
 "துளசி..."
 "சொல்லுய்யா..."
 "நீ ரொம்ப அழகாயிருக்கே..."
 "என்னவோ புதுசா ஒரு விஷயத்தைச் சொல்ற மாதிரி சொல்றே. நான் அழகாயிருக்கேன்னு எனக்குத் தெரியாதா? கண்ணு குருடாவாயிருக்கேன். நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா?" வெடுக்கென பேசிவிட்டு விடுவிடுவென நடந்தாள் அவள். மனசுக்குள் திட்டிக்கொண்டே நடந்தாள்.
 "உன் மேல நான் எவ்வளவு ஆசை வச்சிருக்கேன் தெரியுமா?"
 சட்டென அவள் திரும்பினாள். நெஞ்சில் எரியும் நெருப்பை மறைத்து சிரித்தாள்.
 "நெசமாவா...?" கண்களை விரித்து ஆச்சரியமாய் பார்த்தாள்.
 மோகனரங்கம் குழைந்தான்உன்னை பார்த்தாலே என் மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்குது. ராவும் பகலும் உன் நினைப்புத்தான். என்னென்னவோ குளுகுளுன்னு ஒரே கனவு."
 "ஓ... கோ! அப்படியா? உன் ஆசை தெரியாம நான் இவ்வளவு நாள் இருந்துட்டேனே."
 "இப்பவாவது தெரிஞ்சிகிட்டியே... அதுபோதும்!" அவன் காமம் நிரம்பிய கண்களோடு பார்க்க துளசி பேசினாள்.
 "அப்படின்னா... உங்க ஆத்தாகிட்ட சொல்லி எங்க ஆத்தாகிட்ட பொண்ணு கேட்கச் சொல்லு..."
 "ஐய்யய்யோ... எங்க ஆத்தா ஒத்துக்காது..."
 "நெசம்தான். ஊர்ல முக்காவாசி சொத்துக்காரங்க நீங்க. நாங்களோ உங்க வயல்ல நண்டுபிடிச்சி திங்கற ஏழை. ஒத்துக்காதுதான். அதனால என்ன? இப்படிப் பண்ணினா என்ன?"
 "எப்படி?" அவன் ஆர்வமாய் கேட்க...
 "நாம ரெண்டு பேரும் கோயில்ல தாலி கட்டிப்போம்."
 "ஐய்யோ... எங்க ஆத்தா வெட்டிப் போட்டுடும்."
 "சரியான பயந்தாங் கொள்ளி நீ. சரி ரெண்டு பேரும் இந்த ஊரைவிட்டே ஓடிடுவோம்."
 "என்ன புள்ளயிது. ஊரைவிட்டு ஓடிட்டா எனக்கு இந்த சொத்தெல்லாம் கிடைக்காதே துளசி..."
 "அப்ப உன் ஆசையை என்னதான் பண்ணப் போறே?"
 "கல்யாணம் பண்ணிகிட்டுத்தான் வாழணுமா?"
 "பின்னே?"
 "உனக்கு ஒரு குறையும் இல்லாம வச்சுக்கறேன்."
 கலகலவென சிரித்தாள் துளசி

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223979340
வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...

Read more from R.Sumathi

Related to வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...

Related ebooks

Related categories

Reviews for வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வசந்தத்தைத் தேடும் வானம்பாடி... - R.Sumathi

    1

    "ஏன்டி... செவப்பி... என்னாங்கடி எல்லாரும் இன்னிக்கு மூஞ்சியைத் தூக்கி எறவானத்துல வச்சிகிட்டு இருக்கீங்க? களை புடுங்கும் போது கலகலன்னு பேசினாதானேடி சட்டுபுட்டுன்னு வேலை ஓடும்? யேய்... செவப்பி... சேத்துக்குள்ளேயே பொதைஞ்சிடப்போவுது மொகம். அப்படி நட்டுகிட்டு நிக்கறே...?"

    பட்டை பட்டையாய் மூக்குத்தி போட்டிருந்த செல்லாயி களை எடுப்பதை நிறுத்திவிட்டு சற்றுத் தள்ளி களையெடுத்துக் கொண்டிருந்த செவப்பியைக் கேட்டாள்.

    எண்ணெய் கண்டு ஏழுநாளான தலைக்கு ஏக்கமாம் மல்லியப் பூ மேல... செவப்பி எரிச்சலாய் திரும்பி சொல்லி விட்டு வெடுக்வெடுக்கென களை பிடுங்கினாள்.

    ஆத்தாடி... ஆருமேலடி இத்தினி கோவம்?

    ஆத்தா... கம்முன்னு கெட... நெஞ்சு எரிஞ்சு கிடக்கிறேன் நானு... நீ வேற...

    பூசாரி எரிச்சல் பூஜையில, பொண்டாட்டி எரிச்சல் புருஷன் மேல... என்று நாலு பேருக்கு அப்பால் களை எடுத்த நாகம்மா நறுக்காய் சொன்னாள்.

    ஆமா... புருஷன். கட்டி வச்சாங்களே என்னை கட்டையில ஏத்த...

    ஏன்டி... குடிச்சிட்டு வந்து அடிச்சானா கண்ணு? அக்கறையாய் செல்லி கேட்க.

    அடிபட்டு மரத்துப் போன உடம்பு ஆத்தா இது. பாழுங்குழியில போறவன் எவளோ... ஒரு சிறுக்கி கூட கூத்தடிக்கிறான். அதை நெனைச்சா... என் தேகமே எரியுது ஆத்தா...

    மூலையில கிடக்கிறதை எடுத்து அந்த மூதேவியை விளாச வேண்டியது தானேடி? நாகம்மா ஐடியா சொல்ல அமைதியாய் இருந்த துளசி கலகலவென நகைத்தாள். கையிலிருந்து களைச் செடிகளைத் தூக்கி வரப்பில் போட்டுவிட்டுச் சிரித்தாள். எல்லோரும் முறைக்க அவளும் நிறுத்தாமல் சிரித்தபடி வரப்பில் பொத்தென அமர்ந்தாள்.

    அவள் சிரித்தபோது பெரிய பெரிய அவளின் விழிகளும் கன்னத்தில் சுழித்த குழியும் அவளின் முகத்தில் அழகுக்கு அழகு சேர்த்தது. குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததில் காது வளையம் குதித்தது. மார்பின் லேசான குலுங்கலில் வெள்ளை முத்துமணி புரண்டு புரண்டு துள்ளியது.

    பழுத்த மட்டையைப் பார்த்து குறுத்து மட்டை சிரிச்சுதாம். குறுத்து மட்டை பழுத்த மட்டையாக இன்னும் எத்தனை நாளுக்கு? செவப்பி கடுகடுப்பாய் துளசியைப் பார்த்து முறைத்தாள்.

    நான் ஒன்னும் என் புருஷனை உன்னை மாதிரி மேயவிட்டுட்டு அழுவமாட்டேன் துளசி அழகு காட்டினாள் அவளுக்கு.

    ஆமாடி... இப்படியே தந்தனத்தாம் பாட்டு பாடிகிட்டு எத்தினி நாளைக்கு திரியப்போறே? கழுத்து எவனுக்காவது நீட்டிட்டா கள்ளு குடிச்சாலும் கண்டவ கூட சுத்தினாலும் கட்டுப்பட்டுத்தான்டி போவணும்.

    ஏ... கெழவி... உன்னாலதான் இந்த ஊரே கெட்டுப் போவுது. உன்னை மாதிரி கெழவிங்களை முதல்ல ஒழிச்சுக் கட்டினாத்தான் சரிவரும். பொம்பளைங்களை சூடு சுரணை இல்லாத கட்டையா ஆக்குறதே நீங்கதான்...

    ஆமாடி. கெழவின்னா உனக்கு எளப்பம்டி.

    ஒரு நாளைக்கு குடிச்சிட்டு வந்தா ஓங்கி ஒரு அறை விட்டா மறுநாளு குடிப்பானா கெழவி, ஒருத்தன். இன்னொருத்தன்கிட்ட இளிச்சுப் பேசற பல்லைப் பேக்க வேணாம் ஒரு பொண்டாட்டி.

    ஆத்தாடி... நீ பொம்பளையாடி. உன் புருஷனை போன அன்னிக்கே கொன்னுடுவேடி

    தா... கெழவி. எனக்கு வர்றவன் எப்படி இருப்பான் தெரியுமா?

    களை பிடுங்குவது இரண்டாம் பட்சமாகிப் போனது. முதல் பட்சமாகிப் போனாள் துளசி.

    துளசி வரப்பில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். கால்களில் சேறு அப்பிக் கிடந்தது. களைச் செடியில் ஒன்றை எடுத்து கன்னத்தில் உறவாட விட்டாள். நெற்றியில் விழுந்த முடிக்கற்றையை ரஜினி ஸ்டைலில் ஒதுக்கிக் கொண்டாள்.

    எனக்கு வர்றவன்கிட்ட அழகு இல்லினாலும் பரவால்லே. அன்பிருக்கணும். பணம் இல்லினாலும் பரவால்லே. பண்பு இருக்கணும். குடிசைகூட இல்லினாலும் பரவால்லே. குடிக்காம இருக்கணும். ஆத்திரக்காரனா இருந்தாக்கூடப் பரவால்லே. அடுத்தவளை நெனைக்காதவனா இருக்கணும்.

    கண்களை மூடவிட்டு கனவில் தன் கற்பனைக் கணவனுடன் வலம் வந்தாள் துளசி.

    கையிலிருந்த களைச் செடிகளை மூவரும் ஒரே நேரத்தில் துளசி மீது தூக்கி எறிந்தனர். சிரிக்கத் தொடங்கினர்.

    தெத்துப்பல் தெரிய சிரித்த செல்லாயி சிரிப்பினூடே கிண்டல் செய்தாள்.

    காஞ்ச வயிறு கஞ்சிக்கு ஏங்குதாம். கனவு கப்பலேறி போவுதாம்.

    துளசி எழுந்து சேறு தெறிக்க தைதை என நடந்தாள். கிழவி முதுகில் குத்தினாள்.

    பொறாமை புடிச்ச கெழவி நீ...

    வேலையைப் பாருடி வெட்டிப் பயமொவளே!

    துளசி வாய்க்குள் என்னென்னவோ முனகியபடியே மீண்டும் களை பிடுங்கியபோது செவப்பி துக்கம் தாளாமல் பாட ஆரம்பித்தாள்.

    சாமத்திலே பூத்த பூவு மச்சான் சாமந்திப்பூ நானிருக்க சாறிப்போன பூவுக்குத்தான் மச்சான் சந்து சந்தா நீ சுத்தலாமோ? பாடுங்குயில் நானிருக்க பனங்காட்டைத் தேடலாமா? சித்திரம் போல் நானிருக்க தேசவழி போகலாமா?

    ஒப்பாரி போல் ஓலமிட்டாள் செவப்பி. அவளின் உருக்கமான பாட்டில் நாகம்மாளுக்கும், செல்லாயிக்கும் அழுகையே வந்தது. துளசிக்கு மட்டும் சிரிப்பு வந்தது. அவள் பழையபடி வெள்ளிக்காசுகளைக் கண்ணுக்குத் தெரியாமல் வீசினாள்.

    என்ன துளசிக் குட்டி... ஒரே சிரிப்பு...? குரல் கேட்டு அனைவரும் திரும்ப, குடைபிடித்தபடி வரப்பில் அந்தக் கிழவன் நின்றிருந்தான். பண்ணையார் ஜம்புலிங்கத்தின் மணியார். இந்தக் கிழவன், வயல் வேலைகளுக்கு மேற் பார்வை. துளசியைப் பார்த்து பார்த்து ஜொள்ளுவிடும் பார்ட்டி. மண்டையில்தான் முடியில்லையே தவிர மனசுக்குள்ளே கிழத்துக்கு மைனர்னு நினைப்பு.

    நிமிர்ந்த துளசி கிழவனைப் பார்த்து சிரித்தாள்.

    ஏ... கிழவா... குட்டி கிட்டின்னா குடையெல்லாம் பறந்துபூடும் ஜாக்கிரதை...

    கிழவன் முணுமுணுத்துக் கொண்டே நகர துளசி படுகும்மாளமாய் மீண்டும் பாடிக்கொண்டே சேற்றிலே ஆட்டம் போட்டாள்.

    குட்டிமானாய் ஆட்டம் போடும் துளசி பற்றித் தெரிந்து கொள்வோமா?

    துளசி பதினெட்டு வயது பருவச்சிலை. நகர் பகுதியில் பிறந்திருந்தால் யாராவது சினிமாவில் சான்ஸ் தருவார்கள். கணவனை இழந்த குப்பாயியின் ஒரே மகள். குடிப்பது கஞ்சியும் கூழுமேயானாலும் உடம்பு வெண்ணெய்யால் செய்த மாதிரி அப்படி ஒரு பளபளப்பு. இடுப்பும் முன்புற எடுப்பும் எத்தனை பேரைக் கிறங்கடித்துக் கொண்டிருக்கிறது என்பது அவளுக்குத் தெரியாது. தூக்கனாங் கூடுபோல் தூக்கிப் போட்ட அலட்சியமான கொண்டை. ஏழ்மையைப் பற்றியோ இல்லாமையைப் பற்றியோ கவலைப்படாத மனசு. சதா சிரிப்பு தாண்டவமாடும் முகம். அடக்கம் என்றால் என்ன என்பதே தெரியாத ஆட்டத்துடன் கூடிய நடை. நடையோடு கூடிய கும்மாளம். கும்மாளத்துடன் கூடிய வாழ்க்கை... எல்லோரையும் கிண்டல் செய்வதும் நாட்டுப்புறப் பாடல்களால் நையாண்டி செய்வதும்தான் மற்ற எல்லா வேலைகளையும் விட முக்கியமான வேலை அவளுக்கு.

    குப்பாயிக்கு கொஞ்ச நாளாக உடல்நிலை சரியில்லை. அதனால் இவளுக்கு அதிகப்படியான வேலை. களத்துமேட்டில் முன்போல் கூட்டம் சேர்த்துக் கொண்டு ஊஞ்சலாட முடிவதில்லை. திருட்டு மாங்காய் அடிக்க நேரமில்லை. கண்ணாமூச்சி விளையாடும் களத்துப் பக்கம் போக முடியவில்லை.

    இந்தப் பெண்களுடன் வந்து களையெடுக்கவும், நாற்று நடவும், நண்டு பிடிக்கவுமே சரியாக இருந்தது. பெயருக்குத்தான் வேலை செய்வாளே தவிர வெட்டிப் பேச்சும், வீண் அரட்டையும் தெம்மாங்குப் பாட்டும், ஆட்டமுமே அவளுக்கு முக்கியம்.

    2

    சூரியன் மனைவிக்கு அடங்கிய கணவன் போல் கடமை முடிந்து போய் விட்டான். மஞ்சளும் சிவப்பும் படரத் தொடங்கியது வானத்தில். பறவைக் கூட்டம் மாணவக் கூட்டம் போல் சிறகடித்து வீடு திரும்பியது.

    களை எடுப்பு முடிந்திருந்ததால் சலனமற்ற வயலில் நண்டுகள் மேலே வந்து ஆட்டம் போட்டன.

    எல்லோரும் சம்பளமே வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். துளசி மட்டும் பம்ப் செட்டில் இன்னும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

    கைகளால் முகம் கழுவ வந்தவள்தான். கட்டையில் உட்கார்ந்து கால்களைத் தொட்டித் தண்ணீரில் விட்டுத் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள். பளீரென பாய்ந்து விழுந்த தண்ணீரின் சிதறல் மேலே தெறிப்பது ஆனந்தமாக இருந்தது.

    தண்ணீரில் நனைந்த கால்கள் பளபளத்தன. தன் வாழைத்தண்டு போன்ற காலைத் தானே ரசித்தவளாய் தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.

    இந்த அழகுக் காலுக்கு கொலுசு போட்டா நல்லாத்தானிருக்கும்? ஆரு வாங்கித்தாரா?

    தப்தப்பென கால்களால் தண்ணீரை சிதறடித்தாள். கொட்டும் தண்ணீரைக் கை சேர்த்துப் பிடித்துக் குடித்தாள்.

    எனவே... துளசி? கூலி வேணாமா? குரல் கேட்டுத் திரும்பினாள்.

    மோகனரங்கம் வெகு

    Enjoying the preview?
    Page 1 of 1