Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மௌனம் பேசட்டும்!
மௌனம் பேசட்டும்!
மௌனம் பேசட்டும்!
Ebook89 pages33 minutes

மௌனம் பேசட்டும்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மது வீட்டுக்குள் நுழைந்தான். அம்மா இரவு உணவைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தாள்!
 அப்பா போனில் பேசிக் கொண்டிருந்தார்.
 மது உடைகளை மாற்றிக் கொண்டு வந்தான்.
 "சப்பாத்தி, குருமா ரெடி! சாப்பிட வரலாம்!" - அம்மா அழைப்பு தர, இருவரும் வந்து உட்கார்ந்தார்கள்.
 "மது! அந்தக் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்றது?"
 "ஆமாண்டா! நீதான் சொல்லணும்!"
 "மது! அந்த அனு அழகா இருக்கா! எல்லா தகுதிகளும் அந்தப் பொண்ணுக்கு இருக்கு! நீ கலந்து பேச என்ன இருக்கு?"
 மது பேசவில்லை.
 "எனக்கும் அப்பாவுக்கும் பூரண திருப்தி! குடும்பமும் கண்ணியமான குடும்பம். நீ உன் பதிலைச் சொல்லிட்டா, மேற்கொண்டு பேசிடலாம்!"
 "அம்மா! நான் அவகாசம் கேட்கக் காரணம் இருக்கு!"
 "என்ன காரணம்?"
 "எனக்கு அனுவோட அக்கா கீதாவைப் புடிச்சிருக்கும்மா!"
 அம்மா சரக்கென சப்பாத்தியை நழுவ விட்டாள்.
 "நீ என்னடா பேசற?"
 "என் மனசுல பட்டதைச் சொல்றேன்.உளறாதே மது! அனுவுக்கு ஒரு தங்கை இருந்து, நீ அவளைக் கேட்டா கூட ஒரு அர்த்தம் இருக்கு. அதுவே கொஞ்சம் அநாகரிகம்தான்! ஆனா இது? கீதா அக்காடா! அதுவும் கல்யாணம் ஆன பொண்ணு! உனக்குப் பைத்தியமா மது?"
 மது சிரித்தான்.
 "கீதா கல்யாணம் ஆனவ. ஆனா புருஷன்கூட வாழலை. விவாகரத்து ஆனவ!"
 "எ... என்னது? இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"
 "உங்களை விட்டுட்டு வெளில போனவன் அதை விசாரிச்சிட்டுத்தான் வர்றேன்!"
 "அடப்பாவி! இத்தனை தீவிரமா இருக்கியா?"
 "விவாகரத்து முடிஞ்சு ரெண்டு வருஷமாச்சு! இப்ப கீதா பிறந்த வீட்லதான் இருக்காங்க!"
 அப்பா எழுந்து விட்டார்.
 "அந்த வீட்ல இப்படி ஒரு வில்லங்கம் இருக்கா? அவங்க நம்மகிட்ட சொல்லவேயில்லையே?"
 "இதைச் சொல்லி என்னங்க வேணும்? நாம பாக்கப் போனது அனுவைத் தானே?"
 "இருக்கட்டுமே மாலதி! ஒரு பெண் விவாகரத்து செய்யறானா... அதுக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு! இந்தப் பெண்கிட்டக்கூட தப்பு இருக்கலாம் இல்லையா? திருமண பந்தத்தை முறிச்சுக்கற அளவுக்கு ஒரு பெண் துணிஞ்சிட்டா, அங்கே என்னல்லாம் ஏடாகூடமோ? அப்படிப்பட்ட குடும்பத்துலேருந்து இன்னொரு பெண்ணை நாம எடுக்கணுமா?"
 மது திடுக்கிட்டான்.
 "என்னப்பா இப்படி பேசறீங்க?"
 "அப்பா பேசறதுல தப்பில்லை மது! நம்ம குடும்பங்கள்ல விவாகரத்தெல்லாம் யாருக்குமே நடந்ததில்லை. குடும்பம் கோர்ட் படியை மிதிக்கறதை அவமானகரமா நினைக்கற குடும்பம் நம்ம குடும்பம்!"
 "சரி விடு மாலதி! இனி அந்தக் குடும்ப சம்பந்தம் வேண்டாம்."அது நிச்சயம்."
 "ரெண்டு பேரும் என்னைக் கொஞ்சம் பேச விடுங்க! நீங்களே பேசிட்டுப் போனா எப்படி?"
 "உன்னை எதுக்குடா பேச விடணும்? அனுவே வேண்டாம்னு நாங்க சொல்றோம். நீ கிறுக்குத்தனமா விவாகரத்து ஆன பெண்ணைப் பிடிச்சிருக்குனு உளர்ற! வாய்ப்பே இல்லை. பார்த்ததும் புடிச்சிட்டா, தாலியைக் கைல எடுத்துர முடியாதுடா! நாலும் பேசித்தான் ஒரு முடிவுக்கு வரணும்! இது வாழ்க்கை! மார்க்கெட்ல வாங்கற வாழக்காய் இல்லை. இந்தப் பேச்சை விடு! மாலதி! தரகரைக் கூப்பிட்டு வேற வரன் கொண்டு வரச் சொல்லு! அந்த வீட்டுக்கு போன் போட்டு, நம்ம சம்பந்தம் தொடரக் கூடிய சூழ்நிலை இல்லைனு சொல்லு!"
 "அப்பா வேண்டாம்! அவசரப்பாதீங்க!"
 "மது! நீ பேசாதே! பெரியவங்க - எங்களுக்குத் தெரியும் எது நல்லது, எது கெட்டதுன்னு." - இருவரும் எழுந்து போய் விட்டார்கள்.
 மது அப்படியே உட்கார்ந்து விட்டான்.
 'என்னைப் பேச விடவேயில்லையே! ஒருக்காலும் இதற்கு இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்!'
 ஆனால் கீதாவைப் பார்த்த பிறகு உண்டான அதிர்வு இப்போது கூட உடம்பில் இருக்கிறது.
 கீதாவின் முகம் பளிச்சென நெஞ்சில் பசை போல ஒட்டிக் கொண்டு விட்டது!
 'ஏன்?'
 'கீதாதான் வேண்டுமென்று தோன்றுகிறது!'
 'இது தப்போ?'
 'போகாத ஊருக்கு வழியோ?'
 'இரண்டு பக்கத்து குடும்பமும் இதற்கு சம்மதிக்கப் போவதில்லை! முதல்ல கீதாவே இதை ஒப்புக்க மாட்டா! நான் ஒரு தலை ராகம் பாடி எப்படி சாதிக்கப் போறேன்?'
 ஆனாலும் நெஞ்சுக்குள் ஒரு நம்பிக்கை துளிர் விட்டது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223341062
மௌனம் பேசட்டும்!

Read more from Devibala

Related to மௌனம் பேசட்டும்!

Related ebooks

Reviews for மௌனம் பேசட்டும்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மௌனம் பேசட்டும்! - Devibala

    1

    அனுவைப் பெண் பார்க்க வரப் போகிறார்கள். வீடு கொஞ்சம் பரபரப்பாக இருந்தது.

    அம்மா காலை நாலு மணிக்கே எழுந்து குளித்து பூஜை முடித்து சமையல் கட்டுக்குள் புகுந்து விட்டாள்.

    அப்பாவும் பரபரப்பாக இருந்தார்.

    அனு உறங்கிக் கொண்டிருந்தாள்.

    கீதா! அனுவை எழுப்பு! அவங்க வரும்போதுகூட இவ தூங்கிட்டு இருப்பாளா?

    அம்மா சத்தம் போட்டாள்.

    அனும்மா! எழுந்து குளிச்சு, ட்ரஸ் பண்ணு! - அக்கா கீதா அவளை அசைத்து எழுப்ப,

    விடுக்கா! ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் தூங்க முடியுது!

    அம்மா வந்து விட்டாள்.

    நல்லா இருக்குடி. உன்னைத்தான் பெண் பார்க்க வர்றாங்க. நீயே பொறுப்பில்லாம இருந்தா எப்படி?

    அம்மா! சத்தம் போடாதே. நான் பாத்துக்கறேன். - கீதா அனுவை அணைத்து முத்தமிட்டு, கொஞ்சி ஒருமணி நேரத்துக்குள் குளிக்க வைத்து, நல்ல சேலையைக் கட்டி விட்டு, அழகாக அலங்காரம் முடித்து விட்டாள்.

    அம்மா! இப்ப வந்து பாரு உன் பொண்ணை!

    அம்மா வந்து பார்த்தாள்.

    அனு மகாலஷ்மி போல இருந்தாள்.

    கீதா! இந்தப் பெருமையெல்லாம் உனக்குத்தான். அவளைக் கட்டுப்படுத்த உன் ஒருத்தியாலதான் முடியுது.

    பாவம்மா! அவ குழந்தை.

    சரிதான். இன்னொரு வீட்டுக்குப் போய் குப்பை கொட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு! இன்னமும் குழந்தையா இருக்க முடியுமா?

    அனு எம்.காம். படித்து முடித்து இன்னும் அக்கவுன்ட்ஸ் சம்பந்தமாக சில படிப்புகளையும் முடித்து ஒரு வங்கியில் அதிகாரியாக இருக்கிறாள். வயது இருபத்தி மூன்று. அது ஒரு வெளிநாட்டு வங்கி. ஒரு ஜாதகம் நன்றாகச் சேர்ந்து விட்டது. பையன் ஒரு தூதரகத்தில் அதிகாரி. பெரிய சம்பளம். ஒரே பிள்ளை - புகைப்படம் அனுப்பி - பிடித்து விட்டது. அப்பா விசாரித்ததில் கண்ணியமான குடும்பம் எனத் தெரிய, பார்க்க வர சம்மதித்து விட்டார்கள்.

    சொந்த வீடு, கார் என வசதியாக வாழும் பிள்ளை விட்டார்.

    இன்னும் அரைமணியில் வந்து விடுவார்கள்.

    அம்மா! நான் கோயிலுக்குப் போயிட்டு வெளி வேலைகளை முடிச்சிட்டு, மத்யானமா வர்றேன்.

    கீதா புறப்பட -

    என்னடீ நீ? அனுவைப் பெண் பார்க்க வரும்போது - அக்கா நீ இருக்க வேண்டாமா?

    வேண்டாம்னுதான் நான் கிளம்பறேன்மா!

    என்னக்கா நீ?

    இதப்பாரு அனு! நான் வாழலை. விவாகரத்து ஆகி இப்ப பிறந்த வீட்ல இருக்கேன். என்னைப் பற்றி அவங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் வரும். அது ஒரு வில்லங்கமா வந்து நிக்கணுமா?

    என்னக்கா பேசற நீ? இது நம்ம சொந்த விஷயம். நீ பட்ட வேதனைகள் எங்களுக்குத் தானே தெரியும்?

    அனு! புதுசா வர்றவங்க அதை யெல்லாம் புரிஞ்சுக்க மாட்டாங்க!

    அதுக்காக? எங்களுக்கு அனு ஒரே மகள்னு பொய் சொல்ல முடியுமா கீதா?

    அம்மா! நான் உன்னைப் பொய் சொல்லச் சொல்லலை. ‘மூத்தவ கீதாவுக்குக் கல்யாணம் ஆயாச்சு’னு ஒரு வார்த்தை நீ சொல்லிட்டா, கீதா எங்கேனு யாரும் கேக்கப் போறதில்லை. நேர்ல நான் இருந்தா, ‘நீங்க என்ன செய்யறீங்க’னு ஒரு கேள்வி வரும். நான் பதில் சொல்ல வேண்டி வரும். இந்த சூழ்நிலைல அது வேண்டாம். அனுவை அவங்க மனசுக்குப் பிடிச்சுப் போனா, மற்றதெல்லாம் ரெண்டாம் பட்சமா படும். அப்புறம் சொல்லிக்கலாம்.

    இல்லைக்கா! இதை நான் ஒப்புக்கலை. நீ என் கூடவே இருக்கணும். அவங்க பாக்க வர்றது என்னைத்தான். இதப்பார்! நீயும் ஒரு பட்டதாரி! உத்யோகம் பார்த்து மாசம் பதினஞ்சாயிரம் ரூபாய் சம்பாதிக்கறே. உன் கால்ல நிக்கற. உனக்கும் ஒரு சமூக அந்தஸ்த்து இருக்கு. நீ போகக் கூடாது!

    அனு, அக்காவைத் தடுத்து நிறுத்தி விட்டாள்.

    சரி! உனக்காவது நல்ல வாழ்க்கை அமையட்டும்!

    சொன்ன நேரத்துக்கு கார் வந்து வாசலில் நின்றது. நாலு பேர் வந்தார்கள்.

    பையனின் அப்பா, அம்மா, பையன், நாலு வயதில் ஒரு சிறுவன் என நாலு பேர்.

    வரவேற்பு, அறிமுகம் எல்லாம் முடிந்தது.

    அந்தக் குழந்தை துறுதுறுப்பாக இருந்தான். உள்ளே ஓடினான்.

    எங்க பேரன்! என் சொந்தப் பேரன் இல்லை. தங்கையோட பேரன். எங்க வீட்லதான் எப்பவும் இருப்பான்!

    குழந்தை உள்ளே ஓடி வந்தான்.

    கீதாவை அவனுக்குப் பிடித்துப் போய் அவளிடம் கொஞ்ச ஆரம்பித்தான்.

    சரி! பெண்ணைப் பாக்கலாமா?

    கீதா, அனுவை அழைத்துக் கொண்டு வந்தாள். அனு நமஸ்காரம் செய்தாள்.

    இது எங்க மூத்த பொண்ணு கீதா! செக்ரட்டேரியேட்ல வேலைபாக்கறா.

    கீதா கை கூப்பினாள்.

    உங்க குடும்பமும் இதே ஊர்லதான் இருக்கா?

    ஆமாம்மா!

    அதற்கு மேல் அவர்கள் எதுவும் கேட்கவில்லை. அனுவிடம் பொதுவாகப் பேசினார்கள். எல்லாருமே கலகலப்பாக இருந்தார்கள்.

    பையன் மதுவிடம் அம்மா மெதுவாகக் கேட்டாள்.

    உனக்குப் புடிச்சிருக்கா?

    "கொஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1