Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தொட்டில் வரை காதலி!
தொட்டில் வரை காதலி!
தொட்டில் வரை காதலி!
Ebook118 pages40 minutes

தொட்டில் வரை காதலி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லுவலகம் போன நடேசன் திடீரென தலைசுற்றி, வாந்தி என ஏற்பட, லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். வந்தும் அது தொடர ராஜம் நடுங்கிப் போனாள். கீதா கல்லூரிக்குப் போயிருந்தாள். 


ராஜம் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு போன் செய்ய, வித்யா வந்துவிட்டாள்.


“நீ பயப்படாதேமா. நான் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்!”


பத்தவாது நிமிடம் அந்த கிளினிக்கில் இருந்தார்கள்.


எல்லா டெஸ்ட்டும் எடுக்க வேண்டும் என்றார் டாக்டர்.


எடுக்கப்பட்டது. 


“நாளைக்குத்தான் ரிப்போர்ட் வரும். அதுவரைக்கும் மருந்து தர்றம். அவர் எங்க பார்வைல இங்கேயே இருக்கட்டும்!”


நடசேன் புலம்பத் தொடங்கி விட்டார். 


“ராஜம்! எனக்கு என்னாச்சு?” 


“அப்பா! உங்களுக்கு ஒண்ணும் ஆகலை! இதெல்லாம் மனுஷனாப் பொறந்தா இயல்புதானே! தைரியமா இருங்க!” 


மறுநாள் மாலை அந்த இடி தலையில் இறங்கியது. 


“அவருக்கு பிளட் கேன்சர்மா! ரொம்ப அட்வான்ஸ் ஸ்டேஜ்ல இருக்கு!”


அம்மாவும், மகளும் நிலைகுலைந்தார்கள். 


“அதெப்படி டாக்டர்? இத்தனை நாள் எந்த சிரமும் தெரியாம எப்படி?”


“இது ராட்சஸத்தனமா வளரும்மா. அப்படிப்பட்ட நோய்!”


“குணப்படுத்த முடியாதா டாக்டர்?” 


“ஸாரிமா! உங்களை ஏமாத்த நான் விரும்பல! அதிகபட்சம் ஒரு மாசம் கூட உங்கப்பா தாங்க மாட்டார். உங்களை நீங்க தயார் படுத்திக்கலாம்!” 


வித்யா பலமாக மிக பலமாக அடிபட்டாள். 


அம்மாவுக்கு மயக்கமே வந்து விட்டது. 


தெளிந்த போது, 


கீதாவும், வித்யாவும் பக்கத்தில் இருந்தார்கள். 


“நான் என்ன செய்வேன்? அவரையும் இழந்துட்டு இந்தக் குடும்பம் பாதில நிக்கணுமா?” 


“இதப்பாரம்மா! புலம்பாதே! அப்பா காதுல இந்த செய்தி இதுவரைக்கும் விழலை! கடைசி வரைக்கும் விழாம காப்பாத்துவோம். நாளைக்கு நாம வாழற வாழ்க்கையை விட, இருக்கற நாள்ள அவரை அமைதியாக வச்சுக்கறதுதான் புத்திசாலித்தனம்!” 


ராஜம் பேசவில்லை! 


அன்று மாலை எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வந்தாள் வித்யா. முதலாளியை சந்தித்தாள். 


“சார்! எனக்கொரு உதவி செய்ய உங்களால முடியுமா?” 


“சொல்லும்மா!” 


“எங்கப்பாவுக்கு அதிகபட்ச ஆயுள் ஒரு மாசம்தான்னு டாக்டர் சொல்லியாச்சு! இந்தக் கால கட்டத்துல ராத்திரி – பகல்னு எப்பவும் அப்பாகிட்டவே நான்  இருக்க ஆசைப்படறேன்!”  


“சரிம்மா!” 


“இந்த ஒரு மாசம் நான் வேலைக்கு வரலைனா என்னை வேலையை விட்டு நிறுத்திடுவீங்களா?” 


“நிச்சயமா மாட்டேன்மா! உன்னை மாதிரி அபாரமா வேலை பாக்கறவங்க யார் இருக்காங்க!” 


“அது போதும் சார்! அவரை நல்லபடியா வழியனுப்பிட்டு, நான் வந்துடுவேன் சார்!” 


அந்த வாரக் கடைசியில் அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள்.


“நான் எப்பம்மா வேலைக்குப் போறது?” 


“உங்களுக்கு ஒரு மாசம் லீவு சொல்லியாச்சு. உங்க ஆபீஸ்ல நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும்பா!” 


“எனக்கு லீவு அதிகம் இல்லைம்மா! சம்பளம் கட் ஆனா கஷ்டம். அவசரப்பட்டு எல்லாரையும் போல ஆசைப்பட்டு சொந்த வீட்டைக் கட்டியாச்சு. கிட்டத்தட்ட கடன் மட்டும் வெளில ரெண்டு லட்சம் இருக்கும்மா! எனக்கு சம்பளமும் கட் ஆச்சுனா எப்படிம்மா அடைக்கறது?” 


“எல்லாம் செய்யலாம்மா! நீங்க ஏன் கவலைப்படறீங்க?” 


“நீ வேலைக்குப் போகலையா?” 


“லைசென்ஸ் பிரச்சனைப்பா! ஒரு மாசத்துக்கு நான் போக வேண்டாம் வேலைக்கு. மறுபடியும் அடுத்த மாசம் கம்பெனி திறப்பாங்க!” 


அப்பா பேசவில்லை!. 


இரவு மருந்தின் மயக்கத்தில் அவர் உறங்க, கீதா படித்துக் கொண்டிருந்தாள், மாடியில். 


அம்மா வித்யாவிடம் வந்தாள். 


“வித்யா!”


“சொல்லும்மா!” 


“கடவுள் ஏதாவதொரு அற்புதத்தை செஞ்சு உங்கப்பாவைப் பிழைக்க வைக்காதா?” 


வித்யா சிரித்தாள். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
தொட்டில் வரை காதலி!

Read more from தேவிபாலா

Related to தொட்டில் வரை காதலி!

Related ebooks

Reviews for தொட்டில் வரை காதலி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தொட்டில் வரை காதலி! - தேவிபாலா

    1

    "என்னங்க! கீதா வயசுக்கு வந்துட்டா!" மூச்சிரைக்க ஓடி வந்து சேதி சொன்ன மனைவியை நிதானமாகப் பார்த்தார் நடேசன்.

    அதுக்கு ஏன் நீ பதட்டப்படறே?

    இல்லையா பின்ன? இது சந்தோஷச் சேதி இல்லையா? நடசேன் சிரித்தார்.

    நம்ம பொண்ணே வயசுக்கு வந்த மாதிரி பதட்டப்படறியே!

    ராஜத்தின் முகம் சட்டென சுருங்கியது.

    எனக்கு இதுதான் உங்கிட்ட பிடிக்கலை!

    எது?

    கீதா நம்ம பெண்ணுல்லையா?

    அதெப்படி நம்ம பொண்ணாக முடியும்! நீ சுமந்து அவளைப் பெத்தியா? இல்லை, அதுக்குக் காரணமா நான் இருந்தேனா? உன் தங்கச்சி மகள் கீதா. அதுதானே நிஜம்?

    ராஜம் முகம் நிறமிழந்தது!

    ஏன் நீங்க இப்படி இருக்கீங்க?

    எப்படி இருக்கேன்?

    என் தங்கச்சி மகள்னுதானே நீங்க அவமேல பாசம் இல்லாம இருக்கீங்க! இதுவே உங்க தங்கச்சி மகள்னா இப்படி இருப்பீங்களா? நடேசன் அதற்கும் சிரித்தார்.

    இதைவிட மோசமா இருப்பேன். பாரு ராஜம்! எனக்கு நீ, நான்னு என்னிக்குமே வேறுபாடு இல்லை! புரியுதா?

    என் தங்கச்சி கீதா பொறந்து நாலு வருஷத்துல புருஷனை இழந்தா ஒரு விபத்துல! எப்படியோ கஷ்டப்பட்டு வாழ்ந்தா கொஞ்ச நாள். சமீபத்துல நோய் வாய்பட்டு நம்மகிட்ட வந்தா. கீதாவை என்கிட்ட ஒப்படைச்சிட்டு அவளும் போய்ச் சேர்ந்தா! அந்தக் குழந்தையை வளர்க்கற பொறுப்பை அவ என்கிட்ட தந்தப்ப, நீங்களும் அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலை இல்லையா?

    இல்லைமா!

    அப்புறம் அவளை ஏன் உங்க மகளா உங்களால ஒப்புக்க முடியலை?

    நமக்குனு வித்யானு ஒரு மகள் இருக்கா. கீதாவை விட ஒரு வயசு சின்னவ. என்னதான் உன் தங்கச்சி குழந்தையா இருந்தாலும், நம்ம மகளைப் போல இன்னொரு பெண்ணை நேசிக்க முடியுமா?

    விடுங்க வேண்டாம்! இந்த சுயநலம் எனக்குப் பிடிக்கலை!

    வேண்டாம். நீ சமத்துவமா இரு! என்னை ஆளை விடு! சரி! இப்ப அந்தப் பொண்ணு வயசுக்கு வந்ததுக்கு என்ன செய்யணும்?

    பட்டுப்பாவாடை வாங்கணும்! ஊரைக்கூட்டி நல்லா நடத்தணும் சடங்கை!

    செய்! வேண்டிய பணத்தை எடுத்துக்கோ! நான் உன்னைத் தடுக்கலையே!

    ராஜம் உள்ளே வந்தாள்.

    தன் கணவனை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. கீதா பெற்ற தாயை பிரிந்து தன் பராமரிப்பில் வந்த போது நடேசன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை!

    அவளுக்காக ராஜம் என்ன செலவு செய்தாலும், அவர் தடுக்க மாட்டார்.

    தன் மகளுக்கு நடக்கும் எல்லாவித சலுகைகளும் கீதாவுக்கும் அனுமதிக்கப்படுவதை அவர் எதிர்க்கவே இல்லை!

    ஆனால் முதலில் பெற்ற மகள்தான்!

    அதில் மாற்றமில்லை!

    இரண்டு பேரையும் நல்ல கவர்மெண்ட் பள்ளியில் தான் சேர்த்திருந்தார்.

    கீதா அமைதியான பெண்.

    ஏற்கனவே தாய், தகப்பனை இழந்து பெரியம்மா, பெரியப்பா ஆதரவில் வந்து விட்டதால், இருக்குமிடம் தெரியாது.

    நன்றாகப் படிப்பாள்.

    பெரியம்மாவுக்கு உதவியாக எல்லா வீட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள்.

    பார்வைக்கும் வித்யாவைவிட அழகாகவே இருப்பாள்.

    அம்மாவையும் பறிகொடுத்து நாலைந்து வருடங்கள் ஆகிவிட்டது.

    அது பள்ளி இறுதித்தேர்வு!

    அதற்கு முந்தைய வருடங்களில கீதா நன்றாகவே மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள்.

    வித்யா வெகு சுமார்.

    முடிவுகள் வந்து விட்டன.

    மாநிலத்தில் முதல் நாலு மாணவிகளில் ஒருத்தியாக கீதா தேறியிருந்தாள். வித்யா பெயிலாகி இருந்தாள்.

    நடேசனின் முகம் விழுந்து கிடந்தது.

    என்னங்க!

    ம்! சொல்லு!

    கீதாவை காலேஜ்ல சேர்க்கணும்! இன்ஜினியரிங் காலேஜ் முயற்சி பண்ணலையா! அப்ளிகேஷன் வாங்கணும்!

    அவர் பேசவில்லை!

    பேசாம இருந்தா எப்படி? கடைசி தேதி ஆயிடும். அவ வாங்கியிருக்கற மார்க்குகளுக்கு இடம் சுலபமா கிடைக்கும்!

    ம்! ஏற்பாடுகளைச் செய்!

    ஏன்! உங்களுக்கு இஷ்டமில்லையா?

    அப்படி நான் சொல்லலைமா! நம்ம பொண்ணு இப்படி பெயிலாயிட்டாளே!

    வித்யா உள்ளே நுழைந்தாள்.

    விடுங்க டாடி! எனக்குப் படிப்பு ஏறலை! என்ன செய்ய முடியும்? அக்கா நல்லா படிக்கட்டும்! எனக்கு சந்தோஷம்தான்!

    வித்யாவுக்குப் பொறாமை கிடையாது.

    அம்மா! உனக்கும் ஒரு எதிர்காலம் இருக்கில்லையா?

    நமக்குனு உள்ளது கிடைக்காமலா போகும்? தன்னைால வந்து சேரும் டாடி! விட்டுத் தள்ளுங்க!

    சரி! நீ என்ன செய்யப் போற?

    மறுபடியும் எழுதுறேன். பாஸ் பண்ண முயற்சி பண்றேன்.

    வித்யா ஓடி விட்டாள்.

    இரண்டே வாரங்களில் கீதாவுக்கு என்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைத்து விட்டது.

    ஒரு கல்வி நிறுவனம் அவளது படிப்புச் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டது.

    பார்த்தீங்களா? நமக்கு சல்லிக்காசு செலவில்லை! குழந்தைனா இப்படி இருக்கணும். பெத்தவங்களையும் இழந்த பொண்ணு! தானாக வாழ்க்கைல எப்படி முன்னேறனும்னு துடிக்கறா பாருங்க! நமக்கும் ஒண்ணு இருக்கே!

    வாயை மூடு! அவளும் வாழத்தான் போறா. நம்ம குழந்தையை கேவலமாப் பேசாதே!

    சரி நான் பேசலை! ஆனா ஏதாவதொரு தகுதி வேணும்! இல்லைனா, நாளைக்குக் கல்யாண மார்கெட்ல விலை போகமாட்டா உங்க மகள்!

    சபிக்கறியா?

    இல்லை! பயப்படறேன்!

    நடேசன் பேசவில்லை. அவருக்குக் கவலையாகி விட்டது.

    மாலை கீதா மாடியில் படித்துக் கொண்டிருந்தார்கள். ராஜம் கோயிலுக்குப் போயிருந்தாள்.

    வித்யா உள்ளே நுழைந்தாள்..

    வாம்மா! நானே உங்கிட்ட பேசணும்னு நெனைச்சேன்!

    நானும் உங்கிட்ட பேசத்தான் வந்தேன்பா!

    என்ன விஷயம்மா?

    பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல கார்மெண்ட்ஸ் பேக்டரி இருக்கில்லைப்பா?

    ஆமாம்!

    அங்கே பெண் டெய்லர்கள் கேக்கறாங்க!

    சரி!

    நான் போய் சேர்ந்துரட்டுமாப்பா?

    நீயா? எதுக்கும்மா?

    சம்பளம், தவிர பீஸ் ரேட் எல்லாமா மாசம் ஆயிரம் ரூபா வரைக்கும் சம்பாதிக்க அங்கே வழியிருக்குப்பா. எனக்குத்தான் தையல் நல்லா வருமே!

    வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு உனக்கென்னம்மா தலையெழுத்து? வயசு பதினெட்டுகூட ஆகலை!

    Enjoying the preview?
    Page 1 of 1