Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சதுரங்க ராஜா and நள்ளிரவு வானவில்
சதுரங்க ராஜா and நள்ளிரவு வானவில்
சதுரங்க ராஜா and நள்ளிரவு வானவில்
Ebook498 pages2 hours

சதுரங்க ராஜா and நள்ளிரவு வானவில்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாட்ச்மேன் கேட்டைத் திறந்து விட காரை உள்ளே கொண்டு போய் நிறுத்தினான் குருபரன்.
 மனசுக்குள் ஓர் இனம் புரியாத கலக்கம் பரவியிருக்க, காரினின்றும் இறங்கி போர்டிகோ படிகளில் ஏறி ஹாலுக்குள் நுழைந்தான்.
 ஹாலின் நடுவே போட்டிருந்த சோபாக்களில் அப்பாவின் முதல் தங்கையான வசந்தி அத்தையும், ரகு மாமாவும் எதையோ மென்றபடி சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். குருபரனைப் பார்த்ததும் ஒருசேர மலர்ந்தார்கள்.அதோ.. குருவும் வந்தாச்சே...!"
 "வாங்க.. அத்தே.. வாங்க மாமா...!"
 "எப்படியிருக்கே குரு...?" - ரகுமாமா கேட்டார்.
 "ஃபைன் மாமா!" - சொல்லிக் கொண்டே குருபரன் அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் - தன்னுடைய அப்பா ஞானமூர்த்திக்கு அருகில் உட்கார்ந்தான். அம்மா சத்தியபாமா காப்பி நிரம்பிய டம்ளர்களை ட்ரேயில் ஏந்தியபடி உள்ளேயிருந்து வெளிப்பட்டாள்.
 "குரு...! நீ என்ன சாப்பிடறே?"
 "எனக்கு ஒண்ணும் வேண்டாம்மா... இப்ப ஏதாவது சாப்பிட்டா.. நைட் டின்னரை சரியாய் சாப்பிட முடியாது."
 ரகுமாமா எழுந்து குருபரனின் கைகளைப் பற்றிக் குலுக்கினார். "கங்கிராட்ஸ் குரு...! யுவரத்னா செஸ் சேம்பியன்ஷிஃப் போட்டியில் நீ ஜெயிச்சதுக்கு இந்த அத்தை - மாமாவின் வாழ்த்துக்கள்."
 "தேங்க்ஸ் மாமா...!"
 "இன்னும் ரெண்டு மாசத்துல அமெரிக்காவில் நடக்கப் போகிற 'க்ராண்ட் மாஸ்டர்' பட்டத்தையும் நீதானே ஜெயிக்கப் போறே!"
 "அதுல என்ன சந்தேகம்?" என்றாள் வசந்தி அத்தை. பிறகு ஒரு சின்ன சிரிப்போடு பேச்சைத் தொடர்ந்தாள்.
 "நம்ம பொண்ணு சைதன்யாவைக் கை பிடிக்கப்போகிற நேரம் எல்லாமே கூடி வரும் குருவுக்கு!"
 குருபரன் குறுக்கிட்டான்.
 "ஸாரி அத்தே...! சைதன்யாவுக்கும் நான் ஜெயிக்கப் போகிற க்ராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வீணா ரெண்டையும் லிங்க் பண்ணிப் பேசாதீங்க...!"
 அதுவரைக்கும் ஒன்றும் போசமல் இருந்த குருபரனின் அப்பா ஞானமூர்த்தி குறுக்கிட்டார்.
 "குரு! உன்னோட அத்தையும் மாமாவும் இப்ப இங்கே வந்து இருக்கிறது எதுக்காகத் தெரியுமா...? உனக்கும் சைதன்யாவுக்கும் நடக்கப் போகிற கல்யாணத் தேதியை நிச்சயம் பண்ணிட்டுப் போகத்தான்.குருபரன் சோபாவுக்கு நன்றாக சாய்ந்துகொண்டு சிரித்தான். "அட.. பரவாயில்லையே...!"
 எல்லோரும் முகம் மாறினார்கள். அம்மா சத்தியபாமா குருவை ஒரு கோபப்பார்வை பார்த்தாள்.
 "ஏண்டா சிரிக்கிறே...?"
 "ஒண்ணுமில்லேம்மா...! போன வாரம் வரைக்கும் சின்ன அத்தை கோகிலாவும், ராஜாராம் மாமாவும் அவங்க பொண்ணு பவ்யாவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக்கால்ல நின்னு தவம் பண்ணிட்டு இருந்தாங்களே.. அவங்களுக்குத் தெரியாமே நாம இப்படி கல்யாண விஷயம் பேசறது சரியா?"
 "இனிமே உன்னோட சின்ன அத்தையும், மாமாவும் அவங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி உன்னைக் கட்டாயப்படுத்தமாட்டாங்க..."
 "ஏன்..?"
 "அது வந்து.. பவ்யா, யாரோ ஒரு பையனைக் காதலிக்கிற விஷயம் இப்பத்தான் அவங்களுக்குத் தெரிய வந்ததாம்."
 "அதனால போட்டியிலிருந்து விலகிட்டாங்க?"
 "அப்படியெல்லாம் கேலி பண்ணாதே... பவ்யா தனக்குப் பிடிச்ச ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு நினைச்சு சந்தோஷப்படு...!"
 "பெரிய அத்தையோட பொண்ணு சைதன்யாகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடறது நல்லது."
 "எதைக் கேட்கணும்ன்னு சொல்றே?"
 "சைதன்யாவும் யாரையாவது காதல் பண்ணிட்டு இருக்கலாமில்லையா?"
 வசந்தி அத்தை குறுக்கிட்டாள்.
 "எம் பொண்ணு அப்படிப்பட்டவ இல்லை... குரு! உனக்காகவே அவ காத்திட்டிருக்கா...  நீ சரின்னு சொன்னா கல்யாணத் தேதியை நிச்சயம் பண்ணிடலாம்..."
 "நான் சரின்னு சொல்லலைன்னா..?"ஞானமூர்த்தி ஆவேசமாய் எழுந்தார். "ஏண்டா! சைதன்யாவுக்கு என்ன குறைச்சல்?"
 "ஒரு குறைச்சலும் இல்லேப்பா.. சைதன்யா கண்ணுக்கு லட்சணமாய் அழகாய் இருக்கா. எம்.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு ஒரு ஹைடெக் கம்பெனியில் நல்ல 'கீ' போஸ்டில் இருக்கா. எல்லாத்துக்கும் மேலாய் எனக்கு அத்தை பொண்ணு. சொத்தும் சொந்தமும் கை விட்டுப் போயிடக்கூடாதுன்னு நினைச்சு எனக்கும் சைதன்யாவுக்கும் கல்யாணம் நடக்கணும்ன்னு ஆசைப்படறீங்க. இதுவும் நியாயமான ஆசைதான். இருந்தாலும்..."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223594956
சதுரங்க ராஜா and நள்ளிரவு வானவில்

Read more from Rajeshkumar

Related to சதுரங்க ராஜா and நள்ளிரவு வானவில்

Related ebooks

Related categories

Reviews for சதுரங்க ராஜா and நள்ளிரவு வானவில்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சதுரங்க ராஜா and நள்ளிரவு வானவில் - Rajeshkumar

    சதுரங்க விளையாட்டுக்கு இன்னொரு பெயர் ‘அரசர்களின் விளையாட்டு’. மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமின்றி ஒரு கலையாகவும், அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவது உண்டு. இந்த பலகை விளையாட்டில் பக்கத்துக்கு 16 காய்கள் வீதம் 32 காய்கள் பயன்படுகின்றன. 64 கட்டங்களைக் கொண்டது. கறுப்பு, வெள்ளை காய்களோடு விளையாடப்படும் இந்த விளையாட்டுக்கு மதியூகமும், தந்திரமும் தேவை. ஏழாம் நூற்றாண்டில் ரஷ்யாவில் பிரபலமான இந்த விளையாட்டு இந்தியாவுக்கும் பரவியது. பிரபலமடைந்தது.

    1

    குருபரன் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களின் நடுவே ஏராளமான மைக்குகளுக்கு முன்னால் வசமாய் மாட்டியிருந்தான்.

    நான்கு திசைகளிலிருந்தும் கிளம்பிய கேள்விக்கணைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நனைந்து அவனுடைய காதுகளை உரசியது.

    இந்த யுவரத்னா செஸ் இன்ட்டர்நேஷனல் சேம்பியன் போட்டியில் இப்படியொரு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா? - இந்தக் கேள்வியைக் கேட்டு 27 வயது குருபரனின் அழகிய முகம் - அவன் உதிர்த்த புன்னகையின் காரணமாய் மேலும் அழகாக மாறியது. மென்மையான குரலில் பேசினான்.

    நான் எந்த செஸ் போட்டியில் கலந்து கொண்டாலும் ‘தோல்வி’ என்ற வார்த்தையை நினைத்துக்கூடப் பார்ப்பது இல்லை. வெற்றியை மட்டுமே நினைத்துப் பார்ப்பவன். என் பள்ளி வாழ்க்கையில் நேசித்த இந்த செஸ் விளையாட்டில் நான் இதுவரை 69 போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். இதில் மாநில போட்டிகள் 37; ஆசிய அளவில் 32 போட்டிகள். இந்த 69 போட்டிகளில் நான் 64 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். 3 போட்டிகளை ‘ட்ரா’ செய்து இருக்கிறேன். இரண்டில் மட்டும் தோல்வி. அந்தத் தோல்வியும் கூட என்னுடைய உடல் நலம் பாதிக்கப்பட்ட போது அதைப் பொருட்படுத்தாமல் ஆடியதால்தான்.

    இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்...?

    முதல் காரணம் என்னுடைய அம்மாவும், அப்பாவும் தான். என்னுடைய டீன்ஏஜ் பருவத்தில் எனக்கு கிரிக்கெட் விளையாட்டில்தான் ஒரு பெரிய ஆர்வம் இருந்தது. ஆனால் ஒரு முறை என் பள்ளி வளாகத்தில் ஜுனியர் சேம்பியன்ஷிஜுப் செஸ் போட்டி ஒன்று நடந்தது. அந்தப் போட்டியை நான் ஒரு பார்வையாளனாக இருந்து பார்த்தபோது அது ஒரு மதியூகமான, மூளைத்திறனை அதிகப்படுத்தக்கூடிய விளையாட்டு என்பதைப் புரிந்து கொண்டேன். அதற்குப்பிறகு கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு இருக்கும் ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டு ‘செஸ்’ஸில் கவனம் செலுத்த விரும்பினேன். என்னுடைய பெற்றோர்களும் என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு செஸ் ஆட்ட பயிற்சி நிறுவனமான ‘புடிங் டேலன்ட்ஸ்’ எனப்படும் ஒரு அமைப்பில் சேர்த்தார்கள்.

    அப்போது உங்களுக்கு என்ன வயது?

    "பதினைந்து. ஜான் பீட்டர் கான்வென்ட்டில் டென்த் ஸ்டேண்டர்ட் படித்துக் கொண்டிருந்தேன்.

    பயிற்சி எளிதாக இருந்ததா...?

    முதலில் செஸ் ஆட்டம் எனக்குப் பிடிபட மறுத்தது. நிறைய தவறுகள் செய்தேன். இந்த விளையாட்டில் நம்மால் பிரகாசிக்க முடியாது என்று நினைத்தபோதுதான் என்னுடைய அம்மாவும் அப்பாவும் சனி, ஞாயிறுகளில் என்னோடு உட்கார்ந்து ‘செஸ்’ விளையாட ஆரம்பித்தார்கள். காய் நகர்த்துதல்களை எப்படி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள். வீட்டிலும், வெளியிலும் முறையாய் பயிற்சிகள் எடுத்துக் கொண்டதால் நான் பள்ளியளவில் நடை பெற்ற ஒரு செஸ் போட்டியில் முதல் வெற்றி பெற்றேன். அதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கிடையேயான செஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டு ஒவ்வொரு வெற்றியாய் பெற்று வந்தேன். என்னுடைய கல்லூரி வாழ்க்கையின் போது முதல் முதலாக மாநில அளவில் நடைபெற்ற செஸ்போட்டியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரைக்கும் முன்னேறி அந்தக் காலத்தில் நடப்புச் சாம்பியனாக இருந்த ‘அகிலேஷ்’ என்பவரை தோற்கடித்தேன். அந்த வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டு எல்லா ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. இரண்டு ஆங்கில இதழ்கள் என்னுடைய போட்டோவை பெரிய அளவில் வெளியிட்டு என்னுடைய செஸ் போட்டியின் வெற்றியை ஒரு பிரதான செய்தியாகப் போட்டார்கள். அதன் மூலம் இந்தியா முழுவதும் என்னுடைய பெயர் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டது. ‘இதோ! இன்னொரு விஸ்வநாதன் ஆனந்த்’ என்று ‘ஆனந்த விகடன்’ இதழ் என்னை அட்டைப்படமாகப் போட்டது.

    உங்களுடைய அடுத்த வெற்றி இலக்கு என்ன?

    க்ராண்ட் ஸ்லாம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதுதான்.

    அந்தப் போட்டியில் எப்போது கலந்து கொள்ளப் போகிறீர்கள்...?

    என்னுடைய பெயர் இந்தியாவின் சார்பாக சென்னை செஸ் க்ளப் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு வந்த பிறகு தான் - அதைப்பற்றி நான் பேச முடியும்... இப்போதைக்கு அதுபற்றிப் பேசுவது சரியில்லை...!

    நிச்சயமாய் உங்களுடைய பெயர்தான் பரிந்துரைக்கப்படும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    நன்றி குருபரன் ஒரு புன்னகையோடு சொல்லிக் கைகளைக் குவித்துவிட்டு நகர முயன்ற விநாடி, மூத்த நிருபர் ஒருவர் இடை மறித்தார்.

    மே ஐ ஆஸ்க் சம் பர்சனல் கொஸ்டியன்ஸ்?

    ஒய் நாட்.. ப்ளீஸ்?

    உங்க மேரேஜ் எப்போ...?

    அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு.

    யாரையாவது காதலிக்கறீங்களா?

    அந்தத் தப்பை நான் பண்ணத் தயாராய் இல்லை....

    ஏன்... காதல் உங்களுக்குப் பிடிக்காதா...?

    அந்த வார்த்தையே எனக்குப் பிடிக்காது.

    காரணம்?

    காய்கறிகளில் எனக்கு கத்திரிக்காய் பிடிக்காது. அதுக்கு என்ன காரணம்ன்னும் எனக்குத் தெரியாது. வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?

    ஒன் மோர் கொஸ்டியன் - அந்த இளவயது நிருபர் ஆட்காட்டி விரலை உயர்த்தினார்.

    என்ன...?

    நடிகை வர்ணாவும் நீங்களும் சமீபகாலமாய் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒண்ணாய் கலந்துக்கறீங்க. அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?

    ஸாரி! அதுக்கு ஒரு காரணம் இல்லை.. ரெண்டு காரணங்கள்.

    சொல்லுங்கள்...!

    முதல் காரணம், வர்ணா என்னோட செஸ் ஆட்டத்துக்கு ரசிகை. ரெண்டாவது காரணம், நான் அவரோட நடிப்புக்கு ரசிகன். இந்த உண்மையை நான் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தேன். இந்த உண்மையைத் தெரிஞ்சுகிட்ட பல சமூக அமைப்புகள் தாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு எங்க ரெண்டு பேரையும் சீஃப் கெஸ்டா கூப்பிடறாங்க. தட்ஸ் ஆல்... எங்க ரெண்டு பேர்க்கும் இடையில் நல்ல நட்பு மட்டுமே இருக்கு. மீடியாக்களுக்கு ஏதாவது ஒரு பரபரப்பு செய்தி வேணும்ங்கிறதுக்காக எதையாவதை எழுதி உறவைக் கொச்சைப்படுத்த வேண்டாம்...!

    அந்த எண்ணம் எங்களில் யார்க்கும் இல்லை. உங்களுக்குக் காதல் பிடிக்காது என்று சொல்லிவிட்டீர்கள். ஸோ அரேன்ஜ்ட் மேரேஜ்தான்?

    நிச்சயமாய்.

    வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்களா?

    இல்லை.. இனிமேல்தான்...

    உங்களுக்கு ஒரு நல்ல பெண் மனைவியாக அமைய எங்களின் வாழ்த்துக்கள்.

    நன்றி - எல்லோரையும் பார்த்து பொதுவாய் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு கும்பலினின்றும் வெளியே வந்தான். சுத்தமான காற்று அவனுடைய முகத்தை அலம்பியது.

    அந்த ஹாலின் தூண் ஓரமாய் நின்றிருந்த குருபரனின் பி.ஏ. வில்லியம்ஸ் வேகமாய் அவனை நெருங்கினார். வில்லியம்ஸுக்கு நடுத்தர வயது. சற்றே தொப்பை தள்ளிய உடம்பு. தன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ‘டை’யை லேசாய் இழுத்துவிட்டுக் கொண்டே பேசினார்.

    ஸார்.. முன்பக்க வாசல் வழியாய் வேண்டாம். நூற்றுக்கும் மேற்பட்ட உங்க விசிறிகள் ஆட்டோகிராஃபுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. பில்டிங்கோட பின்பக்க வழியாய் போயிடலாம். காரை அங்கேதான் நிறுத்தியிருக்கேன்.

    நல்லவேலை பண்ணீங்க.. வில்லியம்ஸ். மீடியா பீப்பிள்ஸ்கிட்டேயிருந்து இப்பத்தான் விடுதலையாகி வெளியே வந்தேன்... வாங்க போலாம்...!

    குருபரன் நடக்க ஆரம்பித்துவிட வில்லியம்ஸ் அவனுக்கு இணையாய் நடந்து கொண்டே பேசினார்.

    ஸார்...

    என்ன வில்லியம்ஸ்?

    ஷர்மிலீ எனக்கு போன் பண்ணியிருந்தாங்க.

    உற்சாகமாய் நடை போட்டுக் கொண்டிருந்த குருபரன் சட்டென்று நின்றான்.

    எப்போ...? முகம் நொடியில் மாறியிருந்தது. வில்லியம்ஸ் தொடர்ந்தார். நீங்க பிரஸ் மீட்ல இருந்தப்ப... போன் பண்ணியிருக்காங்க. ஆனா உங்க போன் ‘ஸ்விட்ச் ஆஃப்’ல இருந்ததால ஷர்மிலீ என்னை காண்டாக்ட் பண்ணினாங்க.

    விஷயம் என்னான்னு கேட்டீங்களா?

    கேட்டேன் ஸார்.. உங்ககிட்டே பேசணும்ன்னு சொன்னாங்க...

    இட்ஸ் ஓ.கே.. நான் பேசிக்கறேன். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.. நாளைக்குப் பார்ப்போம்... காரை நானே ட்ரைவ் பண்ணிக்கிறேன்...!

    குருபரன் சொல்லிக் கொண்டே மறுபடியும் நடக்க முயல வில்லியம்ஸ் மறுபடியும் குறுக்கிட்டார்.

    ஸார்... இன்னொரு முக்கியமான விஷயம்!

    என்ன?

    அந்த ‘பயோ - ரோப்ஸ்’ கம்பெனி எம்.டி. சுபாஷ் உங்ககிட்டே அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருந்தாராமே?

    ஆமா...

    அவர்க்கு எப்போ டயத்தை ஃபிக்ஸ் பண்ணலாம்? இதுவரைக்கும் ‘ஜென்டில் ரிமைண்டர்’ன்னு போட்டு நாலைஞ்சு தடவை எஸ்.எம்.எஸ் பண்ணிட்டார்...!

    நாளைக்கு என்னோட ஃப்ரீ டைம் எது?

    லெவன் டூ டுவெல்வ் ஸார்.

    அந்த டயத்தையே அவர்க்கு கொடுத்துடுங்க.

    ஒ.கே.. ஸார்... சொல்லிவிட்டு வில்லியம்ஸ் தள்ளி நின்று கொள்ள குருபரன் கட்டிடத்தின் பின்பக்கக் கதவை நோக்கிப் போனான். அங்கே காத்திருந்த செக்யூர்ட்டி சல்யூட் ஒன்றைக் கொடுத்து விட்டு கதவைத் திறந்து விட்டான்.

    வெளியே குருபரனுக்கு பிடித்தமான அந்த வெளிநாட்டு கார் செர்ரிப்பழ நிறத்தில் மினுமினுப்பாய்த் தெரிய, சென்ஸார் ரிமோட் உதவியால் காரை உயிர்ப்புக்குக் கொண்டு வந்து அதில் ஏறி உட்கார்ந்தான்.

    காதுகளுக்கு ஸ்பீக்கர்ஸை பொருத்திக் கொண்டவன் காரை மெதுவாய் நகர்த்தியபடி செல்போனில் காண்டாக்ட் ஆப்ஷனுக்குப் போய் ஒரு எண்ணைத் தேய்த்தான்.

    மறுமுனையில் ரிங் போயிற்று. பத்து விநாடிகள் முடியும் முன்பு மறுமுனையில் இருந்து குரல் கேட்டது.

    ஒரு பெண்ணின் ஐஸ்க்ரீம் குரல்.

    என்ன ஸார்.. யுவரத்னா செஸ் இண்ட்டர்நேஷனல் சேம்பியன் போட்டியில் ஜெயிச்சுட்டீங்க போலிருக்கு. ஜெயிச்ச சந்தோஷத்துல எனக்கு போன் பண்ணி அந்த சந்தோஷத்தை ‘ஷேர்’ பண்ணிக்கக்கூட ஸார்க்கு தோணலை போலிருக்கு... ஸார்க்கு என்னோட ஞாபகம் இருக்கா...?

    குருபரன் சிரித்தான். ஷர்மிலீ! நீ இப்படி ஏகப்பட்ட ‘ஸார்’ போட்டு பேசினாலே என்மேல உனக்கு கோபம்ன்னு நல்லாவே புரியுது.

    படு பயங்கரமான கோபம்ன்னு சொல்லுங்க ஸார்

    ஸாரி... ஷர்மிலீ... ‘ப்ரஸ் மீட்’ இருந்ததால போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன். வில்லியம்ஸ் இப்பத்தான் சொன்னார். உடனே உனக்கு போன் பண்றேன்.

    வில்லியம்ஸ் சொல்லாமே இருந்திருந்தா போன் பண்ணியிருக்க மாட்டீங்க.. அப்படித்தானே?

    குருபரன் சிரித்தான்.

    இதோ பார் ஷர்மிலி... உனக்கு இப்ப இருக்கிற கோபத்துல நான் எது பேசினாலும் அது உன்னோட கோபத்தை இன்னமும் அதிகமாக்கத்தான் செய்யும். நான் என்ன பண்ணினா உன்னோட கோபம் இப்ப குறையும்ன்னு சொல்லு...!

    நீங்க உடனடியாய் என்னைப் பார்க்க வரணும்.

    என்ன ஷர்மிலீ... விளையாடறியா...? நான் இப்ப எங்கே போயிட்டிருக்கேன்னு தெரியுமா...?

    சொன்னாத்தான் தெரியும்.

    இன்னும் ரெண்டு மாசத்துல க்ராண்ட் ஸ்லாம் போட்டி நியூயார்க்ல நடக்கப் போகுது. அது சம்பந்தமாய் அமெரிக்க தூதரத்தில் இருக்கிற ஒரு முக்கியமான அதிகாரியைப் பார்த்து சில டெஸ்டிமோனியல்ஸைக் கொடுக்க வேண்டியிருக்கு..!

    உடனே கொடுக்கணுமா?

    அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. இன்னும் ஒரு வாரம் டயம் இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் எர்லியாவே கொடுத்துட்டா பரவாயில்லைன்னு நினைச்சேன்.

    அப்பறம் என்ன... அதையெல்லாம் அப்புறமா கொடுத்துடலாம். மொதல்ல என்னைப் பார்க்க வாங்க...!

    ஷர்மிலீ...! நான் என்ன சொல்ல வர்றேன்னா..?

    நீங்க ஒண்ணையும் சொல்ல வேண்டாம். என்னை இப்ப பார்க்க வரமுடியுமா முடியாதா...?

    சரி.. வர்றேன்...

    வேண்டா வெறுப்பாய் சொல்ற மாதிரி இருக்கு.

    அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.. நானே உன்னை நாளைக்குப் பார்க்க வரலாம்ன்னு இருந்தேன்... அதுக்குள்ளே நீயே போன் பண்ணிட்டே!

    நாளைக்கும் வாங்க...!

    நாளைக்குமா...? சரி.. சரி.. வர்றேன்!

    கோபமாய் சொல்ற மாதிரி இருக்கு...!

    குருபரன் சிரித்தான். இதோ பார் ஷர்மிலீ! உன் மேல எனக்கு என்னிக்குமே கோபம் வராது. நீயும் நானும் ரெண்டு வருஷமாய் ஒருத்தரை ஒருத்தர் உயிர்க்கு உயிராய் விரும்பிட்டு இருக்கோம். நம்ம காதலுக்கு குறுக்கே நிக்கிறது மதம் ஒண்ணுதான்... உன்னோட பக்கம் எந்தப் பிரச்னையும் இல்லை. உனக்கு அம்மா அப்பாவோ சொந்த பந்தங்களோ இல்லை. ஆனா என்னோட விஷயத்துல அப்படியில்லை... என்னோட அப்பா வகையிலேயும் சரி, அம்மா வகையிலேயும் சரி ஏகப்பட்ட சொந்த பந்தங்கள். அதிலும் அப்பாவுக்கு ரெண்டு சிஸ்டர்ஸ். அந்த ரெண்டு பேர்க்கும் கல்யாணத்துக்கு தயாராய் இருக்கிற பெண்கள். அத்தைங்க பத்து நாளைக்கு ஒரு தடவையாவது என்னோட அப்பாவுக்கு போன் பண்ணி ‘குருபரனோட கல்யாண விஷயத்துல என்ன முடிவு எடுக்கப் போறீங்க?’ன்னு கேட்டுகிட்டு இருக்காங்க... நிலைமை இப்படி இருக்கும் போது நான் எப்படி நம்ம காதலை எங்க வீட்ல தைரியமாய் டிக்ளேர் பண்ணமுடியும்.?

    இது நூத்தியோராவது தடவை...

    எது?

    இப்படி நீங்க கீறல் விழுந்த பிளேட்டாய் புலம்பறது. நீங்க செஸ் ஆட்டத்துலதான் ராஜா. ஆனா சாதாரண வாழ்க்கையில் நீங்க ஒரு சிப்பாய்... காதல் பண்றது தப்பான விஷயமா என்ன...? நான் கிறிஸ்டியனாய் இருக்கிறதும் நீங்க இந்துவாய் இருக்கிறதும் பாவமா என்ன? எப்படியும் என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க... அந்த முடிவை இப்பவே வீட்ல சொன்னா என்ன?

    இந்த வாரத்துல ஒரு நாள் சொல்லிடறேன்.

    இப்படித்தான் ஒரு வருஷமாய் சொல்லிட்டு இருக்கீங்க!

    இல்ல ஷர்மிலீ.. இந்த வாரத்துல என் அம்மா, அப்பா ‘வெட்டிங் டே’ வருது. அன்னிக்கு அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கும்போது ‘உனக்கு என்ன வேணும்?’ன்னு கேட்பாங்க. ஒவ்வொரு வருஷமும் வழக்கமாய் கேட்கிற கேள்விதான் இது. அப்படி அவங்க கேட்கும்போது நானும் வழக்கமாய் ‘உங்க ஆசீர்வாதம் மட்டும் போதும்’ன்னு சொல்வேன். ஆனா இந்த தடவை நான் கேட்கப் போறது நம்ம காதல் கல்யாணத்துக்கான சம்மதத்தைத்தான்...!

    மறுமுனையில் சிரித்தாள்.

    உங்க தைரியத்தைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன? நீங்க நம்ம காதலைப் பற்றி வாயைத் திறக்கப் போறதில்லைங்கிறதுதான் நிஜம்.

    அடுத்த வாரம் இந்நேரம் என்னோட தைரியம் உனக்குத் தெரியும்... ஷர்மிலி.

    உங்களுக்கு தைரியம் வந்தாகணும். ஏன்னா நான் இப்போ சொல்லப் போகிற விஷயம் அப்படிப்பட்டது.

    என்ன... சஸ்பென்ஸ் வெக்கிறே?

    சஸ்பென்ஸாய் இருந்த விஷயம்தான் இப்போ ஒரு ரிப்போர்ட்டாய் வெளியே வந்துடுச்சு...

    ரிப்போர்ட்டா...?

    ம்... ரிப்போர்ட்தான்.. மெடிக்கல் ரிப்போர்ட்.

    ஷர்மிலீ...! நீ என்ன சொல்றே.. யார்க்கு என்ன உடம்பு?

    எனக்குத்தான்.

    உனக்கு என்ன பிரச்னை?

    இது பிரச்னையில்லை. ஒரு சந்தோஷமான விஷயம்... உங்க வாரிசு இப்போ என்னோட வயித்துக்குள்ளே.

    நீ.. நீ.. என்ன சொல்றே?

    உங்க வாரிசுக்கு வயசு ரெண்டு மாசம்ன்னு சொல்றேன். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் டாக்டர் யசோதாதேவிகிட்ட போயிட்டு வந்தேன். அவங்க என்னை செக் பண்ணிப் பார்த்துட்டு கிரிஸ்டல் க்ளீயராய் ரிப்போர்ட்டையும் கையில குடுத்துட்டாங்க.

    குருபரன் அதிர்ந்து போனவனாய் காரின் வேகத்தைக் குறைத்து சாலையோரமாய் ஒதுக்கி நிறுத்திக் கொண்டு கேட்டான்.

    ஷ.. ஷ.. ஷர்மிலீ... இது.. இது.. எப்படி...?

    ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கோவாவில் இருக்கிற ஒரு ரிசார்ட்டுக்கு போய் மூணு நாள் ஸ்டே பண்ணினோம். அப்ப என்ன நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா...?

    இ.. இ.. இருக்கு...

    அன்னிக்கு நடந்ததை ஃப்ளாஷ்பேக்ல மறுபடியும் ரீவைண்ட் பண்ணிப் பாருங்க.. நான் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லியும் நீங்க கேட்கலை.

    .................

    என்ன பேச்சையே காணோம்?

    எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.

    நீங்க இப்ப செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

    சொல்லு...

    திருவான்மியூர் வழியாய்தானே வருவீங்க?

    ஆமா...

    திருவான்மியூர் பஸ் டெர்மினலுக்கு எதிரில் ‘அய்யர் ஸ்வீட்ஸ்’ கடை ஒண்ணு இருக்கு தெரியுமா?

    தெரியும்.

    அங்கே இந்நேரத்துக்கு ‘ஹாட்’டாய் கோதுமை அல்வா கிடைக்கும். ஒரு அரைக்கிலோ வாங்கிட்டு வாங்க.. ரெண்டு பேரும் சாப்பிட்டு இந்த ஹேப்பி அக்கேஷனை செலிபரேட் பண்ணுவோம்.... - ஷர்மிலீ படபடவென்று பேசிவிட்டு செல்போனை அணைத்துவிட, குருபரன் நெற்றியைப் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்தான்.

    ஒரு ஐந்து நிமிஷம் அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு காரை நகர்த்த முயன்ற விநாடி மறுபடியும் செல்போன் முணுமுணுத்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

    அப்பா ஞானமூர்த்தி.

    செல்போனை காதுக்கு ஒற்றிப் பேசினான்.

    அப்பா...!

    குரு...! இவ்வளவு நேரம் யார்கிட்டே பேசிட்டிருந்தே. உன்னோட போன் என்கேஜ்டாவே இருந்தது.

    ஒரு ஃப்ரண்ட்ப்பா...!

    யுவரத்னா செஸ் சேம்பியன்ஷிஃப் போட்டியில் நீ ஜெயிச்சிருக்கே. அந்த சந்தோஷத்தை ‘ஷேர்’ பண்ணிக்க எனக்கு நீ போன் பண்ண வேண்டாமா?

    ஸாரிப்பா! நான் ப்ளே சேம்பரை விட்டு வெளியே வந்ததும் பிரஸ் பீப்பிள்கிட்டே மாட்டிகிட்டேன்...

    சரி.. உடனே நீ புறப்பட்டு வீட்டுக்கு வா...

    அப்பா... அது வந்து...

    என்ன?

    ஒரு முக்கியமான ஃப்ரண்டை மீட் பண்ண வேண்டியிருக்கு. நான் வீடு திரும்ப எப்படியும் ரெண்டு மணி நேரமாயிடும்.

    அந்த ஃப்ரண்டை நாளைக்கு பார்த்துக்கலாம். நீ அரைமணி நேரத்துக்குள்ளே வீட்டுக்கு வா. உன்னோட வசந்தி அத்தையும், ரகு மாமாவும் வந்து உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க...

    எதுக்கு..?

    உன்னோட கல்யாண விஷயமாய் பேசி ஒரு முடிவு எடுக்கத்தான்...!

    1972-ம் ஆண்டில் நடைபெற்ற உலக சதுரங்க சேம்பியன் போட்டி கிராண்ட் மாஸ்டர் (GRAND MASTER) செவட்டோர் சார் கிளிகோரிக் எனப்பட்ட யூகோசிலேவியா நாட்டைச் சேர்ந்தவரால் நூற்றாண்டின் சதுரங்கப் போட்டி என்று வர்ணிக்கப்பட்டது. உலகம் முழுவதுமே சதுரங்க விளையாட்டானது முதன் முதலாக பிரபலமாகியது - ஸ்பாஸ்கி, பிஷர் ஆகியோரிடையே நடந்த உலக சதுரங்கப் போட்டியின் போதுதான். அப்போது அது மிகவும் பிரதானமாக சொல்லப்பட்டது.

    சதுரங்க விளையாட்டின் வரலாற்றில் கப்ளிங்கர், லஸ்கர், கெரஸ், நிம்சோவிச், பொட்வினிக், மார்ஷல், கார்போவ் என்று பல ஜாம்பவான்கள் காணப்பட்டாலும் ‘பாபி பிஷர்’ தான் சூப்பர் ஸ்டாராக விளங்கினார். 1943-ம் ஆண்டு ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த ‘பாபி பிஷர்’ தன்னுடைய 6-வது வயது முதலே செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டி விளையாட ஆரம்பித்தார். அதன் விளைவு 13-வது வயதில் அமெரிக்க ஜுனியர் சேம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார். அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளில் அதாவது தன்னுடைய 15-வது வயதில் கிராண்ட் மாஸ்டர் (GRAND MASTER) பட்டத்தையும் வென்றார்.

    2

    வாட்ச்மேன் கேட்டைத் திறந்து விட காரை உள்ளே கொண்டு போய் நிறுத்தினான் குருபரன்.

    மனசுக்குள் ஓர் இனம் புரியாத கலக்கம் பரவியிருக்க, காரினின்றும் இறங்கி போர்டிகோ படிகளில் ஏறி ஹாலுக்குள் நுழைந்தான்.

    ஹாலின் நடுவே போட்டிருந்த சோபாக்களில் அப்பாவின் முதல் தங்கையான வசந்தி அத்தையும், ரகு மாமாவும் எதையோ மென்றபடி சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். குருபரனைப் பார்த்ததும் ஒருசேர மலர்ந்தார்கள்.

    அதோ.. குருவும் வந்தாச்சே...!

    வாங்க.. அத்தே.. வாங்க மாமா...!

    எப்படியிருக்கே குரு...? - ரகுமாமா கேட்டார்.

    ஃபைன் மாமா! - சொல்லிக் கொண்டே குருபரன் அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் - தன்னுடைய அப்பா ஞானமூர்த்திக்கு அருகில் உட்கார்ந்தான். அம்மா சத்தியபாமா காப்பி நிரம்பிய டம்ளர்களை ட்ரேயில் ஏந்தியபடி உள்ளேயிருந்து வெளிப்பட்டாள்.

    குரு...! நீ என்ன சாப்பிடறே?

    எனக்கு ஒண்ணும் வேண்டாம்மா... இப்ப ஏதாவது சாப்பிட்டா.. நைட் டின்னரை சரியாய் சாப்பிட முடியாது.

    ரகுமாமா எழுந்து குருபரனின் கைகளைப் பற்றிக் குலுக்கினார். "கங்கிராட்ஸ் குரு...!

    Enjoying the preview?
    Page 1 of 1