Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

செவ்வரளிப்பூ...
செவ்வரளிப்பூ...
செவ்வரளிப்பூ...
Ebook108 pages42 minutes

செவ்வரளிப்பூ...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வானத்தில் நட்சத்திரப் பூக்களும் பூமியில் விளக்குப் பூக்களும் பூக்கத் தொடங்கிய பின் மாலைப்பொழுது... 

மாலை பலகாரத்துக்கு மொறுமொறுவென பக்கோடா செய்து டப்பாவில் போட்டு மூடின சரசு கணவரும் மகளும் வந்ததும் காபி கலந்து கொள்ளலாம் என முடிவு செய்து கூட்டத்துக்கு வந்தாள். வழக்கமாக ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிடும் கீர்த்தியை இன்னும் காணோம். வாசலுக்குப் போய் நின்றாள்.

'வயசுப் பெண் வழக்கமாக வரும் நேரத்தைவிடக் கொஞ்சம் தாமதமாக வந்தாலும் என்னவோ ஏதோ என்று ஒரு பயம் வரத்தான் செய்கிறிது. அதிலும் கீர்த்தி மகா துணிச்சல்காரி. வெளியில் போனால் பாதி நாட்கள் தப்பு செய்பவர்களை அடித்து உதைத்து காவல் துறையில் ஒப்படைத்துவிட்டு வந்தால்தான் தின்ன சோறுப் பருக்கை செரிக்கும் அவளுக்கு. 

"எதுக்குடி இப்படி வம்பை விலைக்கு வாங்கிட்டு வர்றே?"ன்னு கேட்டால், "என்னம்மா இப்படி பேசறீங்க? கண்ணுக்கு எதிரில ஒரு பெண்ணை தப்பா உரசறான். அதைப் பார்த்துக்கிட்டு என்னை சும்மா இருக்கச் சொல்றீங்களா? நீங்க அதைப் பார்த்தா பேசாமலா இருப்பீங்க?" என்று மடக்குவாள். அப்பறம் அவளை எப்படி கோபித்துக் கொள்வது? 

"இல்லைடா... எதுக்கும் நீ முன்ன நிற்காதேன்னுதான் சொல்றேன். என்ன இருந்தாலும் நீ பெண் பிள்ளைடா... அதுதான் பயமா இருக்கு..." சரசு சொல்லும்போது கீர்த்தி 'பகபக' வென சிரிப்பாள். "முன்னால் நிற்கிறவன் சரித்திரத்தில் நிலைப்பான். பின்னால் நிற்கிறவன் பயத்தில் சாவான். உங்களுக்கு எது வேண்டும்? சரித்திரமா? இல்லை சாவா?"

"அம்மா தாயே எனக்கு மாமியார் இல்லாதக் குறையைத் தீர்க்க வந்த மகளே... இனிமே எதுவும் சொல்லலை. நீ ஆளைவிடு..." என்று கைகளைத் தூக்கி கும்பிடு போட்டு சரசு சரண்டர் ஆகிவிடுவாள். நீண்ட நேரம் நிற்க முடியாமல் சரசு உள்ளே போனாள்.

இரவு பொதுவாக பலகாரம்தான். இன்றைக்கு - உப்புமா செய்ய நினைத்து வெங்காயம் உரிக்கும்போது –

வாசல் கேட்டு திறக்கும் சத்தம் கேட்டது.

"இந்தா... உன்னைத்தான்... யாரு வந்திருக்காங்கன்னு பாரு..." சஞ்சீவியின் உற்சாகக் குரல் கேட்டது. 

சமையலறையிலிருந்து வெளியே வந்த சரசு கணவருடன் நின்றிருந்த குடும்ப நண்பர் சிகாமணியைப் பார்த்து புன்னகைத்து மலர், "வணக்கம்" சொன்னாள். "வாங்க... வாங்க... சவுக்கியமா இருக்கீங்களா? வீட்டுல எப்படி இருக்காங்க? உட்காருங்க... இதோ வரேன்." 

தட்டில் பக்கோடாவை நிறைத்து அவள் எடுத்து வருவதற்குள் சஞ்சீவி உடைமாற்றி வந்து உட்கார்ந்திருந்தார். குட்டை மேசை மீது தட்டை வைத்துவிட்டுத் தானும் உட்கார்ந்து கொள்ள பேச்சு களை கட்டியது. 

சஞ்சீவி சொன்னார். "சரசு... இப்ப சிகாமணி எதுக்கு வந்திருக்கார் தெரியுமா? நம்ம கீர்த்தி விஷயமா பேசத்தான். அவளுக்கு ஒரு நல்ல வரன் கொண்டு வந்திருக்கார். நமக்குத்தான் இன்னும் குழந்தை. ஆனா மத்தவங்க அவங்களைப் பார்க்கறது வேறாய் இருக்கும்மா..."

ஒரு நிமிடம் சரசு திகைத்தாள்.

'அதுதானே? அன்றைக்கு குட்டி கவுன் போட்டுக்கொண்டு இரட்டை சடை துள்ளத் துள்ள ஓடிவந்து குட்டி ராட்டினம் சுற்றியவளா இன்றைய இளம்பெண் கீர்த்தி?' கண்ணில் சின்ன ஈரம் எட்டிப் பார்த்தது.

"என்ன தங்கச்சி? பேச்சையே காணோம்? நான் சொல்ற பையன் எம்.பி.ஏ. படிச்சிருக்கான். நல்ல வேலையில் இருக்கான். ஒத்தைக்கு ஒரே பையன். பெத்தவங்களும் நல்லவங்க. யார்கூடவும் வம்பு தும்பு கிடையாது. வசதிக்கும் குறையில்லை. அவங்க வீட்டில் கீர்த்தி மகாராணியா வாழலாம்" சிகாமணி சொன்னதைக் கேட்ட சரசு சொன்னாள்.

"அண்ணே நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா நீங்க இப்ப சொல்ற ஆளுங்க எந்த வகையிலும் நமக்கு உறவில்லை. மொத்தமாவே வெளி ஆளுங்க. அவங்களைப் பத்தி யார்கிட்டே விசாரிக்கிறது? எந்த ஊர்க்காரங்களோ... என்னமோ... கல்யாண காரியமாச்சே... அவசரப்பட முடியுமா? ஒரே ஒரு பெண்ணை தவமிருந்து பெத்து முத்துச் சுடராட்டம் வளர்த்து வைச்சிருக்கோம். நாம இருக்க வேண்டிய கவனத்தில் இருக்கணுமில்லே? பின்னால பிள்ளைக்கு ஏதாவதுன்னா முறையிடக்கூட முகம் தெரிஞ்சவங்க இருக்கமாட்டாங்களே... அதான் பார்க்கறேன்..." சரசு இழுத்ததைக் கேட்டு சிகாமணி தலையசைத்தார். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 30, 2023
ISBN9798223789666
செவ்வரளிப்பூ...

Read more from Megala Chitravel

Related to செவ்வரளிப்பூ...

Related ebooks

Reviews for செவ்வரளிப்பூ...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    செவ்வரளிப்பூ... - Megala Chitravel

    hebook_preview_excerpt.html[Kn#JV^ ii@l*p1\ *~0U>/"H͆"/"S?_p>ps}$Ϝrlgs:7ܼewfKO\|:7xo~nvtn7Z?^xʽ5]l~ax.bQ M?/}\]SP>N}\:k"+s,|EIxBUnʰURY;T6n/eOͳ.EUblrvkAK}0{v/メDM$²iaM=|Gu7Q%'=6Ҫ}iujrvlT>B<{PBOC8syvM]W.:OTqq/NRgb&@pWUY˥/q'C~%I)ZHH0>GH.ǀ,AW T !8ɼV] ?\o1WՖ-)oLhK^FĔj}+ҍq{7<0-go9DDTɏ.$r?>D7CZK oL*I[MT^);r1)/ -C4qEI$zl~r}%~NsFA)-%$Y{n(K7X9{(ׁug?#^~qR2A" F/\#Hؙ7MsWА l8DѽG&&͠E ď&'!o 1Q{>=jWW=p@&5nE%Fc7q8-d[Cpp[JJ'&H)*$ U$(||pFAyݧq]UP!Nxco„ Y0DuGZ 9,I abA1q3vDtI5{/,gH`c'MLAC5cO 4 &nD@NE֑49Bk@xę^Qɱ;U+GKEDrQ~Yh-R*H/"3n N+(5*Цvl0.\DQQUV6]U-M+Re+休@HBGn>f?+hѠ8q{єFHߥ6MSdyuAIxz{2AOؤUꇍun`7=v.݈ML.wg:Btbrk¥,kL`xY{47*О5Ra!%pOY9;zIbS+Gq^ 'ླྀmpY)[u&7b?d{YmCMX5B0:UZ$eN5ܚ-KAy4L<@{x'DC?* rRfIjHTX[ bof$(a}:x9&a:fCJd{d*u`+;ˠ,93Y?JO̩H4SlwZ~p,Y$X,mNBbFP>=UxIwЋLX+ctrҥ#P@!H.4lgdVk훜\Xڽ'ˆ|?@CF"f:?_R]b38$ikM;HxnWS|^z4X n H}pkvLؑ$ Ƚ.!@ؖԬ,t,MbÆ7ܟʠ]JUS e U P kSA,v3;>CX.3N8Wr)t5,RåPAMg:aul/a[YQiB:g}x 0i6׺M$\ ':"o"F'dṞX6 `%o 8+,yj}9XX5e*Wm" hDU m<}a%ٲgܹXwjIz5tm_).-k8"`AX5EF$w6KIL-=^C+lUnQ*ONxaM܂ZG3GM 5Rmv_j%m(ا-?kRY1Y_CC~}?AjCҦV͎?[ Xd.,uyP[oҰQY7!5Q3FN'$v*o$;לODΆJ#zPmҤ=+9960X$hCԱ_cp7w44{$U oeMbTs)upV;vPL>%O;^P*biۛs|[{+EJJ6z rSMT"m`pŽ׬& B=@>JOls'f38oGCnPw;f n\m,;S~VlKsV]'Ns;|@U,v*w~y*\zewq:cFĺʏ6 {?Ʒc=I OlP+GA_?ad67
    Enjoying the preview?
    Page 1 of 1