Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திசை மாறாத பறவை...
திசை மாறாத பறவை...
திசை மாறாத பறவை...
Ebook256 pages1 hour

திசை மாறாத பறவை...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் என்பார்களே அதை நேரிடையாக உணர்ந்து கொண்டிருந்தாள் மீரா. இந்த இடம் நிச்சயம் காடாகத்தான் இருக்கவேண்டும். பூக்களின் மணமும் குளிர்ந்த காற்றும் தன் மீது உராய்ந்த செடிகொடிகளும் கரடுமுரடான பாதைகளும் அவளுக்கு அதை உணர்த்தியது. 

காதைக் கூர்மையாக்கினாள். எங்கோ சலசலத்து ஓடிய ஆற்றின் சங்கீதமும் அதற்குப் போட்டியாக ஒலித்த பறவைகளின் இன்னிசைக் குரல்களும் தெளிவாய்க் கேட்டது. குபீரென குளிர்ந்த காற்று வீசியதும் உடல் நடுங்க சற்று தயங்கி நின்றுவிட்டாள். 

அவள் நின்றதும் அவளுக்கு வலப்புறம் இருந்து சற்று அதட்டலான குரல் கேட்டது. ஆணின் குரல். சற்று இளமையான இனிமையான குரல்தான். ஆனால் வேண்டுமென்றே தன் குரலை மிரட்டலாக்கிக் காட்டியது போல தோன்றியது. 

"என்ன நின்னுட்ட? சீக்கிரம் நட" - குரல் வந்த திசையில் திரும்பினாள் மீரா. காய்ந்து போன உதட்டை  ஈரமாக்கிக்கொண்டு துணிவைத் திரட்டிக் கேட்டாள். 

"என்னை ஏன் காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போறீங்க? எனக்கு காடுன்னா ரொம்ப பயம்" 

அவளை அழைத்து வந்த நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களின் பார்வையில் எச்சரிக்கை தொனித்தது. 

"இது காடென்று உனக்கு யார் சொன்னது?" - இடப்பக்கமிருந்து வேறொரு குரல் கேட்டது. 

"எனக்குத் தெரிகிறது. நிச்சயம் இது காடுதான்" - அவள் உறுதியாகச் சொல்ல, ஒருவன் அவசரமாக அவளது கண்ணில் போடப்பட்டிருந்த கட்டைப் பரிசோதித்தான். அது இறுக்கமாகத்தான் கட்டப்பட்டிருந்தது. உச் கொட்டினாள் மீரா. 

"கட்டு இறுக்கமாகத்தான் இருக்கு. எல்லாமே இருட்டாகத்தான் தெரியுது." 

"பிறகெப்படி இது காடென்று சொன்னாய்?" - இது புதிய குரல். 

"இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. காற்றும் பறவைகளின் ஒலியும் இந்தக் குளுமையும் சொல்கிறதே. இது பசுமையான காடென்று" 

"ம். கொஞ்சம் புத்திசாலிதான்" - இது முதலில் கேட்ட குரல். 

"இப்ப எதுக்கு அவளைப் பாராட்டுற? இவ புத்திசாலியா இருக்கிறது நமக்குத்தான் ஆபத்து. உன் வாயைக் கொஞ்சம் மூடிட்டு வா" - இது அடுத்த குரல். 

"நடக்காத காரியத்தைப் பேசாதே அஜய்" - என்றதும் "ஷ்"- என மொத்தமாய் எச்சரிக்கை செய்தனர் மற்றவர்கள். 

மீராவிற்கு புரிந்தது. அவர்களின் பெயர் தனக்கு தெரிந்துவிடக்கூடாதாம். பயமோ எச்சரிக்கையோ இருக்கத்தானே செய்யும். சும்மா பேருந்து நிலையத்தில் நின்றவளை பேச்சுக் கொடுப்பது போல் அருகே நின்று திடீரென ஏதோ ஸ்பிரே அடித்து மயக்கப்படுத்தி... இதோ கண்களைக் கட்டி விட்டு எங்கோ அழைத்து... இல்லை கடத்திச் செல்கிறார்களே! எச்சரிக்கையோடுதானே இருப்பார்கள். 

ஆனால் இப்போது அது முக்கியமல்ல. இவர்கள் ஏன் தன்னைக் கடத்த வேண்டும்? நிச்சயமாக இவர்கள் காமவெறியர்கள் அல்ல. மொத்தமாய் நடந்து வந்த போதும் தன்மீது நால்வரில் ஒருவனின் கைகூடப் பட வில்லை. தெரியாமல் படுவதுபோல் உரசியதும் இல்லை. 

தன்னோடு பேசிய நால்வருமே இளைஞர்கள். பார்ப்பதற்கு கம்பீரமாகவும் படித்த களையோடும் தெரிந்தார்கள். பேச்சில் கண்ணியமும் இருந்தது. பிறகேன் தன்னை இப்படிக் கடத்திவந்தார்கள்? பணத்திற்காகவா? 

பணத்திற்காக என்றால் அது அவர்களின் பகல் கனவாகத்தான் இருக்கும். தன் தந்தையிடம் இருந்து பத்து பைசாகூட வராது. அது தெரியாமல் தன் தோற்றத்தைப்  பார்த்து கடத்தத் திட்டமிட்டுவிட்டார்களா? இப்போது எங்கே அழைத்துப்போகிறார்கள்? எப்போது வீட்டிற்கு விடுவார்கள். நான் எவ்வளவு நேரமாய் மயங்கிக் கிடந்தேன். இப்போது மணி என்ன? ஆறுமணிக்குள் வீடு போய்ச் சேரவில்லையென்றால் அம்மா பயந்துவிடுவார்களே. இவர்களின் நோக்கம் என்ன? எதற்காக என்னைக் கடத்தினார்கள்? ஆயிரம் கேள்விகள் வரிசையாய் தோன்றி பயமுறுத்த அசையாமல் நின்றுகொண்டிருந்தாள் மீரா. 

"இப்படியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்? நட" -மிரட்டலாய் ஒலித்தது ஒரு குரல்.

"எதற்காக என்னைக் கடத்துறீங்க. நான் வீட்டுக்குப் போகணும். அம்மா தேடிட்டு இருப்பாங்க" 

"தேடட்டும். நீ நட"

"மாட்டேன். எனக்கு வீட்டுக்குப் போகணும்" 

"உன்னை நோகாம வீட்டுக்கு அனுப்பவா வாடகைக் கார் எடுத்து உன்னை ஃபாலோ பண்ணி மயக்கப்படுத்தி இவ்வளவு தூரம் அழைச்சிட்டு வந்தோம். பேசாம வா. பொழுது இருட்டிப்போச்சு. இனிமே இங்கே நின்னா ஆபத்து" 

"என்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்க?"

"சேரவேண்டிய இடத்திற்குப் போனதும் சொல்றோம்   வா" 

"இன்னும் எவ்வளவு தூரம் போகணும். என்னால நடக்கமுடியல்ல" 

"ஏன் என் அப்பன் உனக்கு சாப்பாடே போடமாட்டானா? அதுக்கும் கணக்குப் பார்ப்பானா?" - அலட்சியமாய்க் கேட்டது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 15, 2023
ISBN9798223961697
திசை மாறாத பறவை...

Read more from Kalaivani Chokkalingam

Related to திசை மாறாத பறவை...

Related ebooks

Reviews for திசை மாறாத பறவை...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திசை மாறாத பறவை... - Kalaivani Chokkalingam

    1

    கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் என்பார்களே அதை நேரிடையாக உணர்ந்து கொண்டிருந்தாள் மீரா. இந்த இடம் நிச்சயம் காடாகத்தான் இருக்கவேண்டும். பூக்களின் மணமும் குளிர்ந்த காற்றும் தன் மீது உராய்ந்த செடிகொடிகளும் கரடுமுரடான பாதைகளும் அவளுக்கு அதை உணர்த்தியது.

    காதைக் கூர்மையாக்கினாள். எங்கோ சலசலத்து ஓடிய ஆற்றின் சங்கீதமும் அதற்குப் போட்டியாக ஒலித்த பறவைகளின் இன்னிசைக் குரல்களும் தெளிவாய்க் கேட்டது. குபீரென குளிர்ந்த காற்று வீசியதும் உடல் நடுங்க சற்று தயங்கி நின்றுவிட்டாள்.

    அவள் நின்றதும் அவளுக்கு வலப்புறம் இருந்து சற்று அதட்டலான குரல் கேட்டது. ஆணின் குரல். சற்று இளமையான இனிமையான குரல்தான். ஆனால் வேண்டுமென்றே தன் குரலை மிரட்டலாக்கிக் காட்டியது போல தோன்றியது.

    என்ன நின்னுட்ட? சீக்கிரம் நட - குரல் வந்த திசையில் திரும்பினாள் மீரா. காய்ந்து போன உதட்டை ஈரமாக்கிக்கொண்டு துணிவைத் திரட்டிக் கேட்டாள்.

    என்னை ஏன் காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போறீங்க? எனக்கு காடுன்னா ரொம்ப பயம்

    அவளை அழைத்து வந்த நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களின் பார்வையில் எச்சரிக்கை தொனித்தது.

    இது காடென்று உனக்கு யார் சொன்னது? - இடப்பக்கமிருந்து வேறொரு குரல் கேட்டது.

    எனக்குத் தெரிகிறது. நிச்சயம் இது காடுதான் - அவள் உறுதியாகச் சொல்ல, ஒருவன் அவசரமாக அவளது கண்ணில் போடப்பட்டிருந்த கட்டைப் பரிசோதித்தான். அது இறுக்கமாகத்தான் கட்டப்பட்டிருந்தது. உச் கொட்டினாள் மீரா.

    கட்டு இறுக்கமாகத்தான் இருக்கு. எல்லாமே இருட்டாகத்தான் தெரியுது.

    பிறகெப்படி இது காடென்று சொன்னாய்? - இது புதிய குரல்.

    இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. காற்றும் பறவைகளின் ஒலியும் இந்தக் குளுமையும் சொல்கிறதே. இது பசுமையான காடென்று

    ம். கொஞ்சம் புத்திசாலிதான் - இது முதலில் கேட்ட குரல்.

    இப்ப எதுக்கு அவளைப் பாராட்டுற? இவ புத்திசாலியா இருக்கிறது நமக்குத்தான் ஆபத்து. உன் வாயைக் கொஞ்சம் மூடிட்டு வா - இது அடுத்த குரல்.

    நடக்காத காரியத்தைப் பேசாதே அஜய் - என்றதும் ஷ்- என மொத்தமாய் எச்சரிக்கை செய்தனர் மற்றவர்கள்.

    மீராவிற்கு புரிந்தது. அவர்களின் பெயர் தனக்கு தெரிந்துவிடக்கூடாதாம். பயமோ எச்சரிக்கையோ இருக்கத்தானே செய்யும். சும்மா பேருந்து நிலையத்தில் நின்றவளை பேச்சுக் கொடுப்பது போல் அருகே நின்று திடீரென ஏதோ ஸ்பிரே அடித்து மயக்கப்படுத்தி... இதோ கண்களைக் கட்டி விட்டு எங்கோ அழைத்து... இல்லை கடத்திச் செல்கிறார்களே! எச்சரிக்கையோடுதானே இருப்பார்கள்.

    ஆனால் இப்போது அது முக்கியமல்ல. இவர்கள் ஏன் தன்னைக் கடத்த வேண்டும்? நிச்சயமாக இவர்கள் காமவெறியர்கள் அல்ல. மொத்தமாய் நடந்து வந்த போதும் தன்மீது நால்வரில் ஒருவனின் கைகூடப் பட வில்லை. தெரியாமல் படுவதுபோல் உரசியதும் இல்லை.

    தன்னோடு பேசிய நால்வருமே இளைஞர்கள். பார்ப்பதற்கு கம்பீரமாகவும் படித்த களையோடும் தெரிந்தார்கள். பேச்சில் கண்ணியமும் இருந்தது. பிறகேன் தன்னை இப்படிக் கடத்திவந்தார்கள்? பணத்திற்காகவா?

    பணத்திற்காக என்றால் அது அவர்களின் பகல் கனவாகத்தான் இருக்கும். தன் தந்தையிடம் இருந்து பத்து பைசாகூட வராது. அது தெரியாமல் தன் தோற்றத்தைப் பார்த்து கடத்தத் திட்டமிட்டுவிட்டார்களா? இப்போது எங்கே அழைத்துப்போகிறார்கள்? எப்போது வீட்டிற்கு விடுவார்கள். நான் எவ்வளவு நேரமாய் மயங்கிக் கிடந்தேன். இப்போது மணி என்ன? ஆறுமணிக்குள் வீடு போய்ச் சேரவில்லையென்றால் அம்மா பயந்துவிடுவார்களே. இவர்களின் நோக்கம் என்ன? எதற்காக என்னைக் கடத்தினார்கள்? ஆயிரம் கேள்விகள் வரிசையாய் தோன்றி பயமுறுத்த அசையாமல் நின்றுகொண்டிருந்தாள் மீரா.

    இப்படியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்? நட -மிரட்டலாய் ஒலித்தது ஒரு குரல்.

    எதற்காக என்னைக் கடத்துறீங்க. நான் வீட்டுக்குப் போகணும். அம்மா தேடிட்டு இருப்பாங்க

    தேடட்டும். நீ நட

    மாட்டேன். எனக்கு வீட்டுக்குப் போகணும்

    உன்னை நோகாம வீட்டுக்கு அனுப்பவா வாடகைக் கார் எடுத்து உன்னை ஃபாலோ பண்ணி மயக்கப்படுத்தி இவ்வளவு தூரம் அழைச்சிட்டு வந்தோம். பேசாம வா. பொழுது இருட்டிப்போச்சு. இனிமே இங்கே நின்னா ஆபத்து

    என்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்க?

    சேரவேண்டிய இடத்திற்குப் போனதும் சொல்றோம் வா

    இன்னும் எவ்வளவு தூரம் போகணும். என்னால நடக்கமுடியல்ல

    ஏன் என் அப்பன் உனக்கு சாப்பாடே போடமாட்டானா? அதுக்கும் கணக்குப் பார்ப்பானா? - அலட்சியமாய்க் கேட்டது அஜயின் குரல்.

    இதோ பாருங்க. எங்க அப்பாவை மரியாதைக் குறைவாப் பேசாதீங்க

    மரியாதையா? உன் அப்பனுக்கா? அவனுக்கு இனிமேத்தான் இருக்கு பூசை. நீ சும்மா பேசி நேரத்தை வீணாக்காதே. நேரம் தாண்டிப்போனா புதர்ல உள்ள பாம்பு தேளெல்லாம் நடமாட ஆரம்பிச்சிடும். நட - என்றவனின் மிரட்டலில் உடல் நடுங்கினாள் மீரா.

    ஐயோ! எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என் கட்டையாவது அவிழ்த்து விடுங்களேன். ரொம்ப இருட்டா இருக்கு

    ஏன் எங்களை அடையாளம் காட்டவா?

    இல்லை. அப்படியெல்லாம் இல்லை. நிஜமாவே எனக்கு பயமா இருக்கு. ப்ளீஸ் கட்டை அவிழ்த்து விடுங்க

    என்ன கண்ணா? அவிழ்க்கவா?

    வேண்டாம். இவளுக்கு இந்தப் பாதை தெரியக் கூடாது. அங்கே போய் அவிழ்த்தா போதும். வாங்க போலாம் - மெதுவாய் அதே சமயம் கடினமாய் ஒலித்த அந்தக் குரல் தனக்கு வெகு அருகே கேட்டது. குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள்.

    கண்ணன் ஸார். சத்தியமா நான் எதையும் காட்டிக் கொடுக்கமாட்டேன். எனக்கு இருட்டுன்னா ரொம்ப பயம். ப்ளீஸ். அவிழ்த்து விடுங்க ஸார்-அவளது கெஞ்சல் அனைவரையுமே அசைத்தது.

    ஒருகணம் அமைதியாக நின்றனர். மறுகணமே முகம் இறுகிப்போய்விட இதோ பார். அநாவசியமா உன்னைத் தொடவேண்டாம்னு பார்க்கிறோம். இந்தமாதிரி ஏதாவது பேசிட்டு இருந்தா கையைப் பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டுப் போக வேண்டியிருக்கும். உனக்கு எப்படி வசதி? என்றதும் மிரண்டு போனாள்.

    வே... வேண்டாம். நா...நானே வருகிறேன். ரொம்ப தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீராவது கொடுங்களேன்

    வா, தர்றோம் - என்றவாறு அவர்கள் நடக்க, மௌனமாய் சற்று பதட்டமாய் தானும் நடந்தாள் மீரா. மனம் வேகமாய் கணக்கிட்டது.

    மொத்தம் நான்கு குரல்கள் கேட்கிறது. நான்கு பேருமே நண்பர்களாக இருக்க வேண்டும். என்னை என்ன செய்யப்போகிறார்கள்? ஒருவேளை வேறு யாரேனும் சொல்லி என்னைக் கடத்தியிருக்கிறார்களா? இவர்கள் வெறும் அடியாட்களா? இந்தக் கும்பலின் தலைவர்களிடம் அழைத்துப் போகிறார்களோ?

    அதனால்தான் வழி தெரிந்தால் போலீஸிடம் காட்டிக் கொடுத்துவிடுவேன் என்று பயப்படுகிறார்களோ. இருட்டி விட்டது என்றானே. அப்படியென்றால் அம்மா தேடத் துவங்கி இருப்பார்களே - மனம் பதற மெல்ல குரல் கொடுத்தாள்.

    ஸார்! இப்போ மணி என்ன?

    எதுக்கு?

    ப்ளீஸ் ஸார். சொல்லுங்களேன்

    மணி ஆறே கால் - என்ன இப்போ?

    ஐயோ! என் அம்மா தேடுவாங்களே. என்னைக் காணலன்னா உடனே அழ ஆரம்பிச்சிடுவாங்களே. நான் என்ன பண்ணுவேன் -மீரா சத்தமாய் அழ ஆரம்பித்தாள்.

    ஏய்! வாயை மூடு. சத்தம் வெளியே கேட்கக் கூடாது

    ஏன் ஏன்?

    என்ன ஏன்? உன் சத்தத்தில ஒய்வெடுக்கிற சிங்கம் புலியெல்லாம் நம்மளத் தேடி வந்திடும்

    ஐயோ - கப்பென வாயை மூடிக்கொண்டாள்.

    ம். இதே பொஸிஷன்ல வா. இன்னும் பத்து நிமிஷம் தான். ஊருக்குள்ள போயிடலாம்

    நாம எந்த ஊருக்கு போறோம்

    ஏய். வாயில கை வை

    கண்ணன் ஸார். நீங்க ஸ்கூல் வாத்தியாரா?

    இல்லையே. ஏன்?

    வாயில கைவைக்கச் சொல்றீங்களே. அதான் கேட்டேன்

    கொழுப்பு. உடம்பு முழுக்கக் கொழுப்பு

    இருக்காதா கண்ணா? ஒரு வீட்டு துட்டா இரண்டு வீட்டு துட்டா? ஊர்ல உள்ளவன் எல்லா துட்டும் இவன் அப்பன்கிட்டதானே முடங்கிக்கிடக்கு. அந்த பணக் கொழுப்பு மகளுக்கு இல்லாமலா இருக்கும்? - கசப்பாய் கூறினான் விஷ்வா.

    கவலைப்படாதே விஷ்வா. இவளுக்குப் போடுற போடுல இவ அப்பன் அலறியடிச்சிட்டு வரப்போறான். அப்போ இவங்க கொழுப்பை இறக்கிடலாம்

    எக்ஸ்கியூஸ்மி ஸார். ஒருத்தரைப் பத்தி அவர் இல்லாத நேரம் விமர்சிக்கக் கூடாது. அது பெரிய பாவம் - என்றாள் மீரா.

    "பார்ரா. பாவத்தைப் பத்தி இவ பேசுறா. ஏம்மா இதெல்லாம் உன் அப்பன்கிட்ட சொல்ல மாட்டியா?

    சொல்வேனே. ஒவ்வொரு நாளும் இதுக்காகவே எங்க வீட்ல சண்டை வரும். ஆனா அப்பா எதுக்குமே அசையமாட்டார்

    அவரை அசைக்கத்தான் உன்னைத் தூக்கியிருக்கோம் -என்றான் கோபி.

    என்னைக் கடத்தி எங்கப்பாகிட்ட பணம் கேட்கப் போறீங்களா ஸார்?

    கேட்டா கொடுத்திடுவானா?

    என் உயிரே போனாலும் பத்துபைசா தரமாட்டார். எங்கப்பாவுக்கு என்னை விட பணம் தான் பெரிசு - என்றாள் சற்று அவமானத்தோடு.

    அனைவரும் அமைதியாயினர். அந்த அமைதி இன்னும் பயமுறுத்த, ஏதாவது பேசிட்டே வாங்க ஸார். காட்டுப்பூச்சியோட சத்தம் கேட்டா பயமா இருக்கு என்றாள் மீரா.

    நீ எதுக்குத்தான் பயப்பட மாட்டே?

    மனுஷங்ளைப் பார்த்தா பயப்படமாட்டேன்

    இது பெரிய விஷயம்தான். தண்ணி கேட்டியே. இதோ நீரோடை போகுது பார். குடிச்சுக்க. ரொம்ப சில்லுன்னு இருக்கும் - என்றவாறு மற்றவர்கள் நிற்க, காலைக் குளிர்ச்சியாய் நனைத்துவிட்டுச் சென்ற நீரோடையில் நீரை அள்ளிக் குடித்தாள் குளிர்ச்சியாய் சுவையாய் இருந்த நீரை வயிறு முட்டக்குடித்துவிட்டு புடவைத் தலைப்பால் வாயைத் துடைத்துக்கொண்டாள்.

    ரொம்ப தேங்க்ஸ் ஸார். வயிறு நிறைஞ்சிடுச்சு! சரியான பசி எனக்கு

    கண்ணன் சற்றே பதறினான். நீ... நீ மத்யானம் சாப்பிடலையா?

    ம்ப்ச்! இல்ல ஸார். இன்னிக்கு காலையிலேயே வீட்ல பெரிய சண்டை அதனால ஆபீசுக்கு சாப்பாடே எடுத்திட்டுப் போகல்ல

    அப்படியென்ன பெரிய சண்டை? - விஷ்வா கேட்டான்.

    யாரோ சில பசங்க அப்பாகிட்ட பணம் வாங்கி அது மூலமா படிச்சிருக்காங்க. இப்போ வேலை தேடிட்டு இருக்காங்களாம். இந்த நேரம் பார்த்து இந்த அப்பா தன்னோட கடனுக்காக அவங்களோட சர்டிபிகேட்ஸ் எல்லாம் அபகரிச்சு வெச்சுகிட்டார். அந்தப் பசங்க பாவமில்லையா?

    பாவம் தான் - என்றனர் கோரஸாய்.

    சர்டிபிகேட் இருந்தாத்தானே வேலை கிடைக்கும்? வேலை கிடைத்தால்தானே அவங்களால கடனை அடைக்க முடியும். இது இந்த அப்பாவிற்கு புரியவே இல்லை. எடுத்துச் சொன்னால் கேட்பதும் இல்லை

    யார் எடுத்துச் சொன்னது?

    நானும் அம்மாவும் தான். நாங்கள் தான் அப்பாவுடன் வாதாடுவோம் கடைசியில் தோற்றுப் போயிடுவோம் - என்றாள் வருத்தமாய்.

    உன் மீது உன் அப்பாவிற்கு அன்பு கிடையாதா?

    ம்ஹும். கௌரி தான் அவர் செல்லம். அப்பா செய்யும் எல்லாத் தப்பிற்கும் நன்றாய் தாளம் போடுவாள்

    அது யார் கௌரி? - யோசனையாய்க் கேட்டான் கண்ணன்.

    என் தங்கை. எம்.பி.ஏ. படிக்கிறா

    "தப்பு பண்ணிட்டோம்பா. என்றான் மற்றவர்களைப் பார்த்து.

    ஏன்டா?

    இவ ஒரு யூஸ்லெஸ் பெல்லோ. பேசாம அந்த கௌரியையே கடத்தியிருக்கலாம் என்றான் விஷ்வா கோபமாய்.

    மீராவின் முகம் வாடியது. கண்களில் ஈரம் சுரந்து கட்டியிருந்த துணியை நனைத்தது. அஜய்யும் கோபியும் விஷ்வாவைக் கடிந்துகொண்டனர்.

    விஷ்வா! உனக்கு ஆயிரம் கோபம் இருக்கலாம். அதுக்காக மத்தவங்க மனசு புண்படுறமாதிரி பேசலாமா.? தப்பு விஷ்வா.

    நான் இப்போ என்ன தப்பா பேசிட்டேன். உள்ளதைத்தானே சொன்னேன். இவளே சொல்லிட்டா இவ உயிர் போனாக்கூட பத்துபைசா தேறாதுன்னு. பிறகேன் இவளை இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டிட்டுப் போகணும்?

    ஸார்! அப்போ... பணத்துக்காகத்தான் என்னைக் கடத்துனீங்களா?

    அப்படின்னு சொல்லமுடியாது

    பின்னே?"

    அதைவிடப் பெரிய விஷயம்.

    என்ன? தங்கம்... வைரம்னு ஏதாவது கேட்கப் போறீங்களா?

    அதெல்லாம் எங்களுக்கு எதுக்கு? கையில காதுல மாட்டிக்கவா?

    வேற... வேற எதுவும் அப்பாகிட்ட இல்லையே ஸார்

    இருக்கு, நிறைய இருக்கு

    என்ன ஸார் சொல்றீங்க?

    ஊர்ல உள்ள கஷ்டப்பட்டவன் வீட்டுப்பத்திரம். நிலப்பத்திரம் ஏன் ரேஷன்கார்டைக் கூட விடாம வாங்கி வெச்சிருக்கானே

    நடந்து கொண்டிருந்த மீரா சட்டென நின்றாள்.

    உங்க வீட்டுப் பத்திரம் மேல கடன் வாங்கினீங்களா? இப்போ கடனை அடைக்க முடியாம பத்திரத்தை வாங்கத்தான் என்னைக் கடத்திட்டு வந்தீங்களா?

    வீட்டுப் பத்திரம் இல்ல. எங்க எதிர்காலத்தையே உங்கப்பன் பறிமுதல் பண்ணிக்கிட்டான். நாலுபேரோட வாழ்க்கையும் திக்குதிசையில்லாம காத்துல பறந்திட்டு இருக்கு - கோபக் குமுறலாய் விஷ்வா கூறினான்.

    விஷ்வா ஸார். கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன் - மீரா பரிதாபமாய்க் கேட்க, கண்ணன் தொண்டையைச் செருமிக்கொண்டான்.

    மீரா! உனக்கு உன் அப்பாவைப்பற்றி எல்லாமே தெரிந்திருப்பதால் உன்னிடம் சொன்னால் தப்பில்லை இப்பக் கொஞ்சம் முன்னால சொன்னியே ஏதோ பசங்க கிட்ட இருந்து சர்டிபிகேட்ஸ் எல்லாம் வாங்கி வெச்சிருக்கான்னு

    ஆமா

    அந்தப் பசங்க வேறு யாரும் இல்ல. நாங்கதான்.

    என்ன? - அதிர்ந்து போனாள் மீரா.

    ஆமா! அந்த சர்டிபிகேட்ஸ் எல்லாம் எங்க கைக்கு வந்தாகணும். அதுக்காகத்தான் வேறு வழியில்லாம இந்த கடத்தல் வேலையைச் செய்யவேண்டியதாகிப் போச்சு - கண்ணனின் குரலில் சற்றே வருத்தம் தொனித்தது.

    இது எங்களுக்கே பிடிக்கல்லதான், டிகிரி முடிச்சிட்டு வேலையில ஜாயின் பண்ற உற்சாகத்துல இருந்த எங்களை என்ன காரியம் பண்ணவைத்து விட்டான் உன் அப்பன் கோபி.

    "கல்விக்கடன்தானே. தாராளமாத் தரேன்னு வலிய வந்து பணம் தந்தப்போ பெரிய கடவுள்னு நினைச்சோம். இப்பத்தானே அவன் புத்தி தெரியுது -விஷ்வா.

    இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன். எங்க சர்டி பிகேட்ஸ்ஸ வெச்சு அவன் என்ன பண்ணப்போறான்! வேலையா தேடப்போறான். ஸ்டுப்பிட் அஜய்.

    ஸார்! உங்க கோபமெல்லாம் புரியுது. ஆனா... இதையெல்லாம் என் அப்பாகிட்ட நயமா பேசியிருக்கலாமே

    அதெல்லாம் மூணுமாசமா பேசிப்பார்த்தாச்சு. உன் அப்பன் மசியலை. அதான் இந்தத் திட்டமே எங்களுக்கு தோணிச்சு.

    அது சரி ஸார். ஆனா என்னால எதுவும் பண்ண முடியாதே

    நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். நாங்க சொல்றதை உன் அப்பன்கிட்ட பேசு. மத்தது தானா நடக்கும்

    என்ன பேசணும்?

    இப்போ நாம ஒரு இடத்துக்கு போறோம். அங்கே போய் சேர்ந்ததும் சொல்வோம். பேசாமல் வா - அனைவரும் நடக்கத் தொடங்கினர்.

    அதுவரை இயல்பாக பேசிக்கொண்டு வந்தவர்கள் அதன்பிறகு பேசவில்லை. காட்டைவிட்டு விலகி ஏதோ ஊருக்குள் நுழைந்துவிட்டது புரிந்தது. தன்னைக் கடந்து ஒரிருவர் சென்று கொண்டிருக்க, அவர்கள் ஏதோ பேச, அந்த பாஷை புரியவில்லை. வெகுதூரம் வந்து விட்டிருப்பது புரிந்துவிட மீராவின்

    Enjoying the preview?
    Page 1 of 1