Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காணும் விழி நான் உனக்கு!
காணும் விழி நான் உனக்கு!
காணும் விழி நான் உனக்கு!
Ebook101 pages34 minutes

காணும் விழி நான் உனக்கு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காயம் சுமந்த
கற்பனைகள்
இருட்டுக்குள் நுழைந்த
இதயம்
விரலை மறந்த வீணை
விதியின் மூத்த பிள்ளை
நான்.
அயர்ந்து போனாள் மாதவி. உணவு இடை வேளையில், வாரப் பத்திரிகையை புரட்டிக் கொண்டிருக்கும்போது, இடையில் இருந்தது மடிக்கப்பட்ட ஒரு காகிதம்.
பிரித்தால்,
சுகமான இந்தக் கவிதை!
“ஜனனி... இங்க வாயேன்!”
“என்ன மாதவி?”
“கவிதை எழுத வருமா உனக்கு?”
“அந்த மாதிரி தப்புகளையெல்லாம் செய்யறதுக்குன்னே பிறந்த ஒரு ஜீவன் எங்க வீட்ல இருக்கு. புத்தகத்துக்குள்ள இருந்ததா?”
“ம்! யாரது?சாட்சாத் எங்கண்ணன்.”
“வாவ்! அவரை நான் பார்கணுமே”
“நீ பார்க்கலாம். ஆனா அவனால உன்னைப் பார்க்க முடியாது. குருடன் அவன்.”
“ஷ்! ‘பார்வை இல்லாதவர்’னு நாசூக்கா சொல்லேன்.”
“சரி ஏதோ ஒண்ணு!”
“நிறைய எழுதுவாரா? அவரேவா?”
“ம்! ப்ரெய்ல் மூலம் படிக்க எழுத கத்துக்கிட்டான். வேலை பார்க்க வேற ஆசை. எங்கப்பா அனுமதிக்கலை. பிறவிக் குருடன் சந்துரு.”
“நான் அவரைப் பார்க்க முடியுமா?”
“எந்த நேரமும் வீட்ல உட்கார்ந்து எதையாவது கிறுக்கிட்டு இருப்பான். பத்திரிகைக்குப் போடச் சொல்லுவான். வேற வேலையில்லை. குப்பைத் தொட்டிக்கு நல்ல தீனி.”
உடம்பு திகுதிகுவென எரிந்தது மாதவிக்கு.
‘ச்சே! என்ன பெண் இவள்? கவிதை குணம் கொண்ட ஒருவனைப் புரிந்து கொள்ள ஏன் இவளால் முடியவில்லை? இவள் மட்டும்தான் இப்படியா? வீட்டில் எல்லாருமா?’
‘இருட்டுக்குள் நுழைந்த
இதயம்
விதியின் மூத்த பிள்ளை
நான்!’
காயத்தில் கசிந்த வரிகள்.
‘இவனை சந்திக்க வேண்டும்!மாலை மூன்று மணிக்கு வந்து, “நான் பர்மிஷன்ல போறேன் மாது.”
“வீட்டுக்கா ஜனனி?”
“ம்!”
“நானும் வரலாமா உன்னோட? உங்கண்ணனை நான் பார்க்கணும்.”
“பைத்தியமா உனக்கு? சரி வா.”
ஜனனியுடன் புறப்பட்டாள். வீடு ராஜா அண்ணாமலை புரத்தில் சற்று வசதியான பிரதேசத்தில் இருந்தது.
ஜனனியின் அம்மா மட்டும் இருந்தாள் வீட்டில்.
“அம்மா, இவ மாதவி. சந்துருவோட கவிதைகளைப் பாராட்ட வீடு தேடி வந்திருக்கா.”
“அவனுக்கு கண்ணு தெரியாதுனு சொன்னியா?”
“ம். வா மாதவி. நீ சந்துருகூட பேசிட்டு இரு. அதுக்குள்ள நானும், அம்மாவும் ஷாப்பிங் போயிட்டு வந்திர்றம்.”
உள்ளே நுழைந்தார்கள்.
“சந்துரு! உன்னைப் பார்க்க ஒரு பைத்தியம் வந்திருக்கு. உனக்கு கூட நாட்ல ஒரு ரசிகை. எல்லாம் நேரம். வர்றேன் மாதவி”
“வணக்கம். வாங்க.”
கரம் குவித்தான்.
திருத்தமாக இருந்தான். பார்வை மட்டும்தான் இல்லை. முகத்தில் களை இருந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
காணும் விழி நான் உனக்கு!

Read more from தேவிபாலா

Related to காணும் விழி நான் உனக்கு!

Related ebooks

Reviews for காணும் விழி நான் உனக்கு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காணும் விழி நான் உனக்கு! - தேவிபாலா

    1

    கொஞ்சம் ஒயின், கொஞ்சம் விஸ்கி என்று சகல ரக உயர் பானங்களையும் முறையான விகிதத்தில் கலக்கத் தொடங்கினான் உம்மர். அந்தக் கண்ணாடி கோப்பை ஒரு மாதிரி தங்க நிற மதுவை அணிந்து ப்ளாரசன்ட் வெளிச்சத்தில் கண் சிமிட்டியது.

    இந்தா மயூர் சாப்பிடு!

    .....

    மயூர் உன்னைத்தான்! என்ன யோசனை?

    விரலை சுட்ட சிகரெட் மிச்சத்தை வீசிவிட்டு உம்மரை உற்றுப் பார்த்தான்.

    நல்ல ஒரு கதை வேணும் உம்மர்.

    முதல்ல காக்டெய்லை சாப்பிடு. கதை கிளம்பும்.

    கண்ணாடிக் கிண்ணத்தை கையில் பெற்றுக் கொண்டு இதழ்களை அதன் விளிம்பில் பதித்தான்.

    அடுத்த படத்துக்கா?

    ம்! டெல்லியிலேருந்து ஒரு பார்ட்டி, கொழுத்த பணத்தோட நேத்து வந்திருக்கான். பிலிம் ஃபெஸ்டிவல்ல நம்ம படத்தைப் பார்த்திருக்கான். கமல் கால்ஷீட்கூட வாங்க ரெடியா இருக்கான். நான் ஒரு படம் பண்ணித் தரணும்னு சொல்றான். இன்ஃபாக்ட், கெஞ்சறான்.

    உங்கிட்ட ஆயிரம் மசாலாக் குப்பைகள் இருக்கே. ஒண்ணை எடுத்து விடேன். கமலை வச்சு கொஞ்சம் ‘ரிச்’சா செஞ்சிட்டா, பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.

    நோ.

    ஆகாதுங்கறியா?

    ஆகும். பட்... எனக்கு இஷ்டமில்லை.

    பார்ட்டிக்கு பணம்தானே பிரதானம்?

    பட் எனக்கில்லை. இதுவரைக்கும் நான் டைரக்ட் பண்ணின இருபது படம், வசதியான ஒரு எல்லைக்கு என்னைக் கொண்டு வந்தாச்சு. கரன்சிகளைப் பார்த்து களைச்சுப் போயாச்சு. நான் ஸம்திங் வித்தியாசமா செய்யணும். உலக அரங்குல கொண்டு போய் நிறுத்தணும் அதை.

    இப்பத்தானே தொடங்கின... அதுக்குள்ள ‘கிக்’ கா?

    இல்லை உம்மர். எனக்குள்ள ‘அறிவு ஜீவி’ ஸ்நேகம் நீ மட்டும் தான். நீதான் அப்படியொரு கதையை எனக்கு காட்டணும். பார்ட்டிக்கு பதினைஞ்சு நாள்ல நான் பதில் சொல்லியாகணும்.

    உம்மர் சிகரெட் பற்ற வைத்தான்.

    யோசனையோடு மயூரைப் பார்த்தான்.

    மயூர்...

    கடந்த பத்தாண்டுகளாக தமிழ் திரைப்பட உலகில் வெற்றிவாகை சூடிவரும் ஒரு பிரபல இயக்குநர்.

    தனது இருபத்தி நாலாவது வயதில் உள்ளே நுழைந்தான் மயூர். தனக்கென ஒரு தனி பாணி அமைத்துக் கொண்டு இயங்கி வரும் மனிதன்.

    பெரும்பாலான படங்கள் மசாலா ரகமாக இருந்தாலும், நேர்த்தியாக படத்தை நகர்த்துவதில் வல்லவன். அதனால்தான் இருபது படங்களில் பத்து நூறு நாள் படங்கள், ஆறு வெள்ளி விழா, ஒன்று பொன் விழா. அடிபட்ட படங்கள் மூன்றுதான்.

    அழகான இளைஞன்.

    மது, மாது என்று அவ்வப்போது தொட்டுக் கொள்பவன். நாலு வருடங்கள் முன்னால் கல்பனாவைக் கல்யாணம் செய்து கொண்டு இதுவரை குழந்தைகள் இல்லாமல்- எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன்.

    உம்மர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்து சேர்ந்தவன்தான். அவனிடமிருந்த அறிவு வெளிச்சம் சட்டென மயூரின் பார்வையில் விழ,

    உம்மர் கூட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டான்.

    ஏறத்தாழ சம வயது.

    யாருமில்லாத மனிதன்.

    தன்னுடனேயே வைத்துக் கொண்டான் மயூர். இன்று மயூருக்கு எல்லாமே உம்மர்தான்.

    உம்மர் எழுந்தான்.

    எழுந்திரு மயூர். இப்ப மிட் நைட். நாளைக்கு எட்டு மணிக்கு நீ அவுட்டோர் புறப்படணும். கம்மான்!

    கதையை மறக்காதே. பை த பை, கதாநாயகியும் புதுசு வேணும்!

    நம்ம பக்தன் ஒரு ஆல்பம் தந்திருக்கார். பாக்கறியா?

    நோ. தொழில்னு வந்துட்ட பொண்ணுக்கு ஒரு வேசித்தனம் வந்துடும் முகத்துல. இது வேற மாதிரி இருக்கணும்.

    நான் பார்த்துக்கறேன். குட்நைட்!

    லேசான தள்ளாட்டத்துடன் விலகினான் மயூர்.

    உம்மர் அவனைத் தொடர்ந்தான்.

    தன்னறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான் உம்மர்.

    தமிழ் பத்திரிகைகளை அள்ளிக் கொண்டு வந்து படுக்கையில் போட்டான்.

    ஒற்றை விளக்கை அமைத்துக் கொண்டு படுக்கையில் சரிந்தவன், பத்திரிகைகளை நோட்டம் விட்டான்.

    வாரப் பத்திரிகைகள்,

    மாத நாவல்கள் என்று சகலமும் அங்கே முற்றுகையிட்டியிருக்க, பிரபலங்களை ஒதுக்கிவிட்டு, வாரப் பத்திரிகையை எடுத்துப் புரட்டத் தொடங்கினான்.

    அறுபது நிமிடங்களின் தேடலின் முடிவில், அது அவன் கண்ணுக்குள் விழுந்தது.

    ‘சிந்தனைக்குரிய சிறுகதை - அறிமுக எழுத்தாளர்-6’

    ஜெயராஜ் ஓவியம் வரைந்திருக்க, மெல்ல அதைப் படிக்கத் தொடங்கினான். அரைப் பக்கம் படிப்பதற்குள் நிமிர்ந்து உட்கார்ந்தான் படக்கென்று.

    சொப்னா என்ற துணிச்சல்கார பெண்ணை மையமாகக் கொண்ட கதை. தனி மனித சுதந்திரத்துக்கு முன்னுரிமை தரும், ஆண்மை கலந்த பெண் அவள். வெளியுலக விமர்சனத்தை விலக்கிவிட்டு வித்தியாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்.

    சிறுகதைதான்!

    சட்டென முடிந்து போயிருந்தது.

    ஐந்தே பக்கங்கள். ஆனால், அபாரமான பாத்திரப்படைப்பு. சொல்லும் முறையில் அற்புதமான அழகு. மறுபடியும் படித்தான் உம்மர்.

    ஒரு சிறுகதையில் இத்தனை அழுத்தம் தரமுடியுமா?

    கடுகைப் பிளந்து கொண்டு கடல் வெளிப்பட்டது போல குபீரென ஒரு வேகம்...

    ‘யாரிது?’

    ‘ஜ்வாலா’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

    ‘ஆண் எழுத்தாளரா? இல்லை பெண்ணா?’

    ‘மயூர் கேட்டது இது மாதிரி ரகக் கதைகளைத்தான். இந்த எழுத்தாளரிடம் கிடைக்குமா? இல்லை இந்த கதையில் மட்டும்தான் வேகமா?’

    ‘நாளைக்குப் பார்த்துவிட வேண்டும்.’

    உம்மர் கண்களை மூடிக்

    Enjoying the preview?
    Page 1 of 1