Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தப்பாட்டம்
தப்பாட்டம்
தப்பாட்டம்
Ebook164 pages40 minutes

தப்பாட்டம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"வாங்க... சாரங்கன்...!"
 பொய்யாமொழி தனக்கு எதிரே இருந்த காலியான இருக்கையைக் காட்ட, அந்த முப்பது வயது சாரங்கன் ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு உட்கார்ந்தான். அன்பரசிக்கு ஒரு புன்னகையைக் கொடுத்தபடியே கேட்டான்.
 "ஸார் எல்லாத்தையும் சொன்னாரா?"
 "ம்.. சொன்னார்."
 "இதையெல்லாம் எப்படி நம்பறதுன்னு யோசனை பண்ணியிருப்பியே...?"யோசனை என்ன... தீர்மானமே பண்ணிட்டேன். மகாபாரத காலத்து சங்கதிகள் இன்னமும் இருக்குமா என்ன...? அதுவுமில்லாமே மகாபாரத சம்பவங்கள் உண்மையா... பொய்யான்னு ஒரு விவாதமே போய்ட்டிருக்கு.. அது உனக்குத் தெரியுமா சாரங்கன்...?"
 "சில விஷயங்களுக்கு என்னிக்குமே தீர்வு கிடையாது. நானும் உன்னை மாதிரியேதான் 'நாத முழங்கம்' சம்பந்தப்பட்ட இந்தக் கடிதத்தை யாரோ விளையாட்டுத்தனமாய் எழுதிப் போட்டு இருக்காங்கன்னு நினைச்சேன். ஆனா அதுல விஷயமும் இருக்குன்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்."
 "இப்ப.. நீ என்ன சொல்ல வர்றே சாரங்கன்?"
 "தென்காசியில் எனக்குத் தெரிஞ்ச ஒரு சரித்திரப் பேராசிரியரைப் பார்த்தேன். என்னோட என்கொய்ரியை முதல்முதலாய் அவர்கிட்டயிருந்துதான் ஸ்டார்ட் பண்ணினேன். இந்த லெட்டரைக் காட்டி இதுல சொல்லப்பட்டு இருக்கிற செய்திகள் உண்மையாய் இருக்குமான்னு கேட்டேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா...?"
 "என்ன சொன்னார்?"
 "உண்மையாய் இருக்கலாம்ன்னு சொன்னார். 'நாத முழங்கம்' கிராமம் சமஸ்தான மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததும், அவர்கள் எல்லோரும் கிருஷ்ணரின் பக்தர்களாக இருந்ததும், அவர்கள் சங்குகளை சேகரித்து வந்ததும் தனக்குத் தெரியும்ன்னு சொன்னார். சொன்னதோடு மட்டுமில்லை. அவர் எடுத்து வைத்து இருந்த சில சங்குகளின் போட்டோக்களைக் காட்டினார். அது மாதிரியான சங்குகளை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.. வெரி ரேர் ஸ்பெசிமன்ஸ். ஒவ்வொரு சங்குக்கும் ஒவ்வொரு பேர். நீயும் அதைப் பார்க்கணும்!" - சொன்ன சாரங்கன் தன் கைகளில் வைத்து இருந்த ஃபைலைப் பிரித்து உள்ளே சேமித்து வைக்கப்பட்டிருந்த போட்டோக்களைக் காட்டினான்.
 அன்பரசி அந்தப் போட்டோக்களை வாங்கிப் பார்த்தாள்.
 எல்லாமே பழமையான - புகை படிந்த மாதிரியான போட்டோக்கள். ஒவ்வொரு சங்கும் விதவிதமான கோணத்தில் வித்தியாசமாய் தெரிந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798223566472
தப்பாட்டம்

Read more from Rajeshkumar

Related to தப்பாட்டம்

Related ebooks

Related categories

Reviews for தப்பாட்டம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தப்பாட்டம் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அன்புடன் ராஜேஷ்குமார்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    கோயமுத்தூரிலிருந்து செல்போன் சிணுங்குகிறது!

    அன்பான வாசக உள்ளங்களுக்கு,

    வணக்கம்!

    அண்மையில் உலக அதிசயங்கள் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தபோது அதில் சொல்லப்பட்டு இருந்த விஷயங்கள் வியப்பாகவும் விசித்திரமாகவும் இருந்தது. ஏழு அதிசயங்களில் ஒன்றான பைசா கோபுரம் 177 வருடங்கள் செலவழித்து கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு கோபுரம் கட்டி முடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட வருடங்கள் ஏன் என்பதற்கு சொல்லப்பட்ட காரணமும், அது ஏன் சாய்வாக உள்ளது என்று விளக்கிய விதமும் படித்தவர்களின் புருவங்களைக் கண்டிப்பாய் உயர்த்தியிருக்கும்.

    இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் ஒரு அதிசயமாக மாறியதற்குக் காரணம் அது சரியான முறையில் கட்டப்படாததுதான். இந்தக் கோபுரத்தை முதலில் கட்டும்போது இதன் கீழே உள்ள மண்ணை சரியான முறையில் சோதிக்காமல் - - ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விஷயங்களைக்கூட கண்டுகொள்ளாமல் - கடைபிடிக்காமல் - கட்டிட அடித்தளத்தை மோசமாகக் கட்டினர். அதன் விளைவு... கோபுரம் மெள்ள மெள்ள சாயத்தொடங்கி எப்படியோ விழாமல் சமாளித்து நின்றுவிட்டது.

    அதே வேளையில் இத்தாலியில் போர் மூண்டதால் அதன் கட்டுமானம் சிறிதுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பணி ஆரம்பிக்கப்பட்டது. கோபுரம் சாய்ந்து நின்றபோதும் அதனுடைய அஸ்திவாரம் பூமிக்கு கீழே இருக்கும் ஒரு பாறையின் ஆதரவில் வலுவாய் நின்று தாக்குப் பிடித்தது. அதன் காரணமாய் அன்றைய காலகட்டத்தில் இருந்த இத்தாலியின் கட்டிடக் கலைஞர்கள் துணிச்சலாய் இரண்டாவது தளத்தைக் கட்டினர். தளத்தைக் கட்டி முடித்ததும் கோபுரம் சாயாமல் இருக்கவே மூன்றாவது தளத்தையும் கட்ட ஆரம்பித்தனர். மூன்றாவது தளத்தைக் கட்டும் போது கட்டிடத் தொழிலாளர்கள் உயிர்களைக் கைகளில் பிடித்துக் கொண்டு பணியாற்றினர். ஆனாலும் கட்டிடம் சாயவில்லை.

    கோபுரம் சாய்ந்த நிலையில் இருக்கும்போதே அதை ஒரு அதிசயமாக மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து 4, 5, 6, 7, 8 என்று மாடிகளைக் கட்ட ஆரம்பித்தார்கள். இது கட்டப்பட்ட ஆண்டு கி.பி. 1173. நூறு வருடங்கள் கழித்து 1273-ம் ஆண்டு கோபுரம் தென்மேற்குப் பக்கமாய் லேசாய் சாய ஆரம்பித்தது. இதன்பின் அடித்தளத்தை சிறிது சரி செய்து கட்டுமானத்தைத் தொடர்ந்தனர். எனினும் சாய்வு நிற்கவில்லை. 1920-ம் ஆண்டில் அடித்தளத்தை நவீன தொழில் நுட்பம் மூலம் சரி செய்தனர். 2001-ம் ஆண்டில் 14500 டன் எடையுள்ள கோபுரத்தின் அஸ்திவாரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு ஸ்டீல் கேபிள்கள் அமைக்கப்பட்டன. இந்தத் திட்டத்துக்கு 210 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆரம்பத்தில் 38 செ.மீ. அளவுக்கு கோபுரத்தை நிமிர்த்த திட்டமிடப்பட்டாலும் இறுதியில் 2.5 செ.மீ. அளவுக்கு மட்டுமே நிமிர்த்தப்பட்டது. இந்த பைசா கோபுரம் தொழில் நுட்பக் கோளாறினால் கட்டப்பட்டு இன்றைக்கு உலக அதிசயங்களில் ஒன்றாய் இடம் பிடித்து விட்டது.

    இந்தக் கோபுரத்தைக் காண ஆண்டுதோறும் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதன் எட்டாவது மாடி வரை செல்வதற்கு சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வருடத்திற்கு 270 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

    ஒரு மோசமான கட்டுமானத்துக்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்பட்டியலில் உள்ளது. ஆனால் தஞ்சையில் உள்ள - கட்டிடக் கலைக்கு பெயர் போன - ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட - 216 அடி உயர கோபுரம் 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை மட்டும் 80 டன் எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் - 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் - இந்தக் கட்டிடம் எந்த ஒரு தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்ற வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இடம் பெறாதது நமக்கு அதிசயமாகவே உள்ளது.

    தஞ்சை கோபுரம் மட்டுமல்ல - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களிலும், அதன் அழகும், கட்டுமானமும் வியப்புக்கும் அதிசயத்துக்கும் அப்பாற்பட்டது. வெளிநாடுகளில் உள்ள நவீன கட்டிடக்கலையைப் பார்த்து பிரமித்துப் போகும் நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள எத்தனையோ நம் பண்பாட்டுச் சின்னங்களை மறந்து விடுகிறோம்.

    இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் நம்முடைய கோயில் பிரகாரங்களைப் பார்த்து விழிகளை விரிக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் அந்தக் கோயில்தூண்களுக்கு சாய்ந்து கொண்டு காகிதத்தைச் சுருட்டி காதுகளைக் குடைந்து கொண்டு இருக்கிறார்கள்.

    கட்டுமான கோளாறினால் பைசா நகரத்து கோபுரம் ஒரு உலக அதிசயமாய் மாறிவிட்டது போல், நம்முடைய அற்புதமான, துல்லியமான கட்டுமானத்தால் ஆயிரம் ஆண்டுகளாய் கம்பீரமாய் நிற்கும் தஞ்சை கோபுரமும், 700 ஆண்டுகளாய் எழிலார்ந்து நிற்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரங்களும் உலக அதிசயங்களில் இடம் பெறும் நாள் விரைவிலேயே வர வேண்டும். அதற்கான முயற்சிகளை நமது தமிழக அரசும், இந்திய அரசும் இணைந்து எடுக்க வேண்டும்.

    சூப்பராய் சொன்னீங்க ஸார்!

    க்ராஸ்டாக்ல யாரு...?

    ஸார்...! நான் காரைக்கால் தங்கமணி!

    "க்ரைம் நாவல்

    Enjoying the preview?
    Page 1 of 1