Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அதே இரவு... அதே உறவு..!
அதே இரவு... அதே உறவு..!
அதே இரவு... அதே உறவு..!
Ebook84 pages28 minutes

அதே இரவு... அதே உறவு..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"பாம்ப்...ப்..."
 ஹாரன் ஓசை கேட்டதுமே, கை நிறைய புத்தகங்களை மார்போடணைத்து நடந்து வந்த சூர்யா புடவையின் ஃபால்ஸ் சரசரக்க நடையில் வேகம் கொடுத்தாள்.
 ஐம்பதடி தூரத்தில் தெரிந்த மெயின் சாலையில் அலுமினிய மினுமினுப்போடு டவுன் பஸ் பதினாலு. பஸ்ஸின அருகாமைக்கு வரவர கொஞ்சம் ஓட்டத்தையும் கலந்து... பளபளத்த கம்பியை அவசரமாய்ப் பற்றி காலைப்பாவி மூன்று படிகளையும் கடந்த பின் மெல்லமாய் ஊர்ந்து பின் ஓட ஆரம்பித்தது பஸ்.
 இடநிலையை நோட்டம் விட்டவளைப் பார்த்து எல்லா ஸீட்களுமே உதட்டைப் பிதுக்கிக் காண்பித்தன. சொற்ப அளவில் நின்றுகொணடும் இருந்தார்கள்.
 நகர்ந்து போய் பானட் அருகே கம்பியைப் பற்றி நின்றதும் சட்டென காரணமேயில்லாமல் ஒரு தடவை ஹாரன் அடித்தபடி திரும்பினான் ரதீஷ், காக்கி பேண்ட் சர்ட்டில் கனமாய்ப் பொதிந்திருந்தான். சட்டையின் வலது மார்பில் டிரைவர் லைசென்ஸ் நம்பரை உலோக வட்டத்தில் பொறித்து மாட்டியிருந்தான் பெரிய ஆர ஸ்டியரிங்கை அனாயசமாயக் கையாளும் ரதீஷ அழகான இளைஞன். எந்தப் பெண்ணையுமே சுண்டும் இளைஞன்.
 திரும்பினான் சூர்யாவிடம்.
 "என்னங்க, உங்களுக்காக இத்தனை பாஸன்ஞ்சர்ஸின் பொன்னான் சில நிமிஷங்களை வீணடிச்சுக் காத்திருந்து இருக்கேன். ஒரு தேங்கஸ் கூட இல்லியா?"
 பதிலுக்கு சூர்யா சிரித்துவிட்டுக் கேட்டாள்.
 "இவ்வளவு கஷ்டப்பட்டு உங்க பஸ்ஸில் ஏறியிருக்கேன் உக்கார ஒரு ஸீட் இல்லே? சே மோசமான பஸ்ப்பா!"ஸி... ஸீட்?" கேட்ட விநாடி கண்டக்டர் 'டங்' என் ஒற்றை அடி அடித்து வைக்க பிரேக் பெடலை மிதித்தான்.
 சிலர் ஏறி, சிலர் இறங்கினதைத் தொடர்ந்து அவன் ஆக்ஸலரேட்டரில் காலைப் பரப்ப மீண்டும் நகர்ந்தது
 "என்ன, இந்த ஸ்டாப்பிங்லே உங்க ஃபரெண்ட் ஒருத்தர் ஏறுவாங்க...?"
 "லவ் போல இருக்கு"
 "அடிக்கடி காலேஜுக்கு கட் அடிக்க வேண்டாம்னு அட்வைஸ் பண்ணுங்க" சொல்லிக்கொண்டே எதிர் பஸ்ஸுக்காக வலதில் ஒதுங்கி மறுபடியும் நடுசாலைக்கே வந்தான்.
 முறைத்த சூர்யா, "சரி, சரி பேச்சை மாத்தாதீங்க... ஸீட் இல்லாம உங்க பஸ்லே நான் நின்னுட்டு வர்றேனில்லே?"
 "அடக் கடவுளே, அத விடவே மாட்டீங்களா?"
 அடுத்த ஸ்டாப்பிங் வந்து விட நிறுத்தினான் பானட்டோர சைட் ஸீட்டில் இருந்த அறுபது வயதுக் கிழவி கண்ணில் பட அதட்டினான்.
 "ஏம்மா, எந்திரிம்மா..."
 கிழவி உள்ளடங்கிய கண்களால் முறைத்தாள்.
 "டேய்... எம்மவனே, உன்னோட ஆட்டப்பாட்டமெல்லாம் எங்கிட்ட செல்லாது. இந்த சிறுக்கி உக்காருகிறதுக்கு நாந்தான் கெடச்சனா?"
 ரத்தம் வராமல் மூக்குடைந்த ரதீஷைப் பார்க்க 'பக்'கென சிரிப்பு வந்தது சூர்யாவுக்கு
 "இல்லே பாட்டி. இப்படி பானட்மேலே சௌகரியமா உக்காந்துக்கோயேன்... பாவம் சின்னப்பொணணு, உம்மக மாதிரி... படிக்கற காலத்திலேயே இப்படி நின்னுட்டுப் போனா, எதிர்காலம் என்னாகறது.?"
 அவனின் உருக்கமான வேண்டுகோளில் மனமிறங்கின கிழவி, பக்கத்திலிருப்பவர்களின் முகச்சுளிப்பை வாங்கிக்கொண்டு இடித்து பிடித்து நகர்ந்து கொஞ்சமாய்க் காலியிடம் பண்ணி,
 "ம் இப்படி பணிஞ்சு கேட்டா நடக்கும்! உக்காரு தாயே!வாயில் சிரிப்பை அடக்கினபடி அமர்ந்த சூர்யாவை பார்த்துக் காலரை உயர்த்தி விட்டுக்கொண்டான், ரதீஷ்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224748914
அதே இரவு... அதே உறவு..!

Read more from Rajeshkumar

Related to அதே இரவு... அதே உறவு..!

Related ebooks

Related categories

Reviews for அதே இரவு... அதே உறவு..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அதே இரவு... அதே உறவு..! - Rajeshkumar

    1

    பச்சை நிற பிரியதர்சினி சின்ன சிணுங்கலில் ஆரம்பித்து அடுக்கடுக்காய் ‘டரிங்’ சொல்ல ஆரம்பித்த நேரம் - சரியாக ஓடும் இந்திய வாட்சுகள் எல்லாமே பதினொன்றிலிருந்து பதினொன்று ஐந்தைக் காட்டின நேரம்.

    கிச்சனுக்குள் பிரஷர் குக்கர் கிளப்பின நீராவிக்கிடையே - பிளக்கிலிருந்து ஒயர் வழியே வழிந்த மின்சாரத்தை எடுத்துக்கொண்டு ‘ர்வொய்ங்ங்’ ஓசையோடு ஓடும் மிக்ஸியின் தலையைத் திறந்து விடாமல் பிடித்திருந்த சூர்யாவின் சிங்கிள் ட்ராப் அணிந்திருந்த பவுன் நிற காதுகள் மிகக் கஷ்டப்பட்டு கிரகித்தன முன்னறையில் ஒலித்த டெலிபோன் ஓசையை.

    அவளின் பாலிஷ் போட்ட மாதிரியான நீள நீள விரல்களில் ஒன்று நீண்டு போய் ஸ்விட்சைத் தட்டிவிட மிக்ஸிக்கு தொண்டை கட்டிப்போய்... கடைசியில் ஊமையாகி நின்றது கேஸ் ஸ்டவ்வை அடைந்து கறுப்பு நாபைத் திருப்பி SIMல் வைக்க - குக்கர் மெல்ல மெல்லத் தன் வால்யூமைக் குறைக்க ஆரம்பித்தது.

    டெலிபோன் சத்தம் தெளிவாய் வந்து விழுந்தது.

    ‘யாராயிருக்கும்...’ என்ற யோசிப்போடு நடந்து போன சூர்யா, கட்டியிருந்த பிரிண்டட் சைனா சில்க் மாதிரியே மினுமினுத்தாள். பிங்க் நிற ரப்பர் மோல்டட் பெரிய சைஸ் குழந்தை பொம்மைக்கு ஆர்வமாய் முத்தம் கொடுக்கும் - ஆசை நிரம்பிய சூர்யா நிஜமாகவே குழந்தையைக் கொஞ்ச காத்திருக்க வேண்டிய நாட்கள் -இன்னும் நூற்றி ஐம்பத்தி மூன்று நாட்கள் மட்டுமே!

    மிதமாய் வயிறு பம்மியிருந்த சூர்யா போனை அடைந்தபோது. அது சலிப்போடு கடைசிக் கத்தலை வெளியிட நினைக்க - சட்டென ரிஸீவரைக் கையிலெடுத்தாள்.

    மேலே உயர்த்தி காதருகே கொடுத்த பின், ஹலோ சொன்னாள்

    26968- தானே அது...? கரகரப்பான அந்தக்குரல் கேட்க -

    ஆமா... யாரு வேணும்...?

    யாரு... சூர்யாவா பேசறது?

    மறுமுனை கேட்டதுமே திகைத்தாள்.

    ரொம்பப் பழக்கப்பட்ட தொனியில் தன் பெயரைக் கேட்கும் அந்தப் பரிச்சயமில்லாத ஆண் குரலுக்கு வியந்து. நீங்க யாரு...-கேட்டாள்.

    மறுபடியும் மறுமுனை, நீ சூர்யாதானே? என்றதும் கொஞ்ச அளவில் எரிச்சல் வந்தது

    ஆமா. கோபத்தோடு சொன்னாள். போன் பண்ணினா முதல்ல இன்னார் பேசறேன், இன்னார் வேணும்னு கேட்டுப்பழகுங்க

    குரல் ஒரு சன்னச் சிரிப்பை உதிர்த்துவிட்டு. அட்வைஸுக்கு தேங்க்ஸ் சூர்யா. இன்னும் உன்கிட்டே நான் ரசிச்ச பழைய சிறப்பம்சங்கள் எல்லாமே மாறாம அப்படியே இருக்கு!

    திகைப்போடு திடுக்கிடலும் சேர, விரல்கள் ரிஸீவரை இறுக்கப்படுத்தியது

    என் குரல் தெரியல்லே?

    சூர்யா யோசிப்பில் இறங்கின மறு விநாடியே எதிர்முனை சொன்னது

    நான் ரதீஷ்… சூர்யா...!

    ர...தீ.ஷ்...?

    சட்டென ஞாபகம் சிலிர்த்துக்கொண்டது. பழைய நினைவுகள் ஸ்லோமோஷனில் பின்னோக்கி நழுவியது.

    2

    பாம்ப்...ப்...

    ஹாரன் ஓசை கேட்டதுமே, கை நிறைய புத்தகங்களை மார்போடணைத்து நடந்து வந்த சூர்யா புடவையின் ஃபால்ஸ் சரசரக்க நடையில் வேகம் கொடுத்தாள்.

    ஐம்பதடி தூரத்தில் தெரிந்த மெயின் சாலையில் அலுமினிய மினுமினுப்போடு டவுன் பஸ் பதினாலு. பஸ்ஸின அருகாமைக்கு வரவர கொஞ்சம் ஓட்டத்தையும் கலந்து... பளபளத்த கம்பியை அவசரமாய்ப் பற்றி காலைப்பாவி மூன்று படிகளையும் கடந்த பின் மெல்லமாய் ஊர்ந்து பின் ஓட ஆரம்பித்தது பஸ்.

    இடநிலையை நோட்டம் விட்டவளைப் பார்த்து எல்லா ஸீட்களுமே உதட்டைப் பிதுக்கிக் காண்பித்தன. சொற்ப அளவில் நின்றுகொணடும் இருந்தார்கள்.

    நகர்ந்து போய் பானட் அருகே கம்பியைப் பற்றி நின்றதும் சட்டென காரணமேயில்லாமல் ஒரு தடவை ஹாரன் அடித்தபடி திரும்பினான் ரதீஷ், காக்கி பேண்ட் சர்ட்டில் கனமாய்ப் பொதிந்திருந்தான். சட்டையின் வலது மார்பில் டிரைவர் லைசென்ஸ் நம்பரை உலோக வட்டத்தில் பொறித்து மாட்டியிருந்தான் பெரிய ஆர ஸ்டியரிங்கை அனாயசமாயக் கையாளும் ரதீஷ அழகான இளைஞன். எந்தப் பெண்ணையுமே சுண்டும் இளைஞன்.

    திரும்பினான் சூர்யாவிடம்.

    என்னங்க, உங்களுக்காக இத்தனை பாஸன்ஞ்சர்ஸின் பொன்னான் சில நிமிஷங்களை வீணடிச்சுக் காத்திருந்து இருக்கேன். ஒரு தேங்கஸ் கூட இல்லியா?

    பதிலுக்கு சூர்யா சிரித்துவிட்டுக் கேட்டாள்.

    இவ்வளவு கஷ்டப்பட்டு உங்க பஸ்ஸில் ஏறியிருக்கேன் உக்கார ஒரு ஸீட் இல்லே? சே மோசமான பஸ்ப்பா!

    Enjoying the preview?
    Page 1 of 1