Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தட்டுங்கள் இறக்கபடும்...!
தட்டுங்கள் இறக்கபடும்...!
தட்டுங்கள் இறக்கபடும்...!
Ebook131 pages44 minutes

தட்டுங்கள் இறக்கபடும்...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரதான சாலையின் பெரும் பகுதியை அடைத்துக்கொண்டு விஸ்தாரமாக விரிந்து கிடந்தது அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்.
 காலை நேர சுறுசுறுப்பை அணிந்து கொண்டு, ஏராளமான பெண்களைப் பிரதிபலித்தது அந்தக் கடை.
 அப்போதுதான் வந்து நின்ற பல்லவனிலிருந்து இறங்கினாள் சரண்யா.
 'நெடுநெடு' வென்ற உயரமும், நல்ல சிகப்புமாக ஒரு பந்தயக் குதிரை போல இருந்தாள். சல்வார் கமீஸ் அணிந்திருந்தாள்.
 அவளுடன் இரண்டு பெண்கள்.
 "சல்வார் கமீஸ் அட்டகாசம். யார் உனக்கு!"
 "ப்ஸ்! எனக்குப் பிடிக்கலை. அம்மா தொந்தரவு பண்ணினதால போட்டுக்கிட்டேன். ஸாரில இருக்கற அழகு வேற எதுல இருக்கு?"
 "ஷாம்பூ, பவுடர் அப்புறம் வீட்டுக்குத் தேவையான அயிட்டங்கள்."
 உள்ளே நுழைந்தார்கள்.
 விற்பனையில் இருந்த அத்தனை ஆண்களின் கண்களும் ஒரு சேர சரண்யாவின் பக்கம் தாகத்துடன் திரும்பிப் பார்க்க -
 அதை அலட்சியப் படுத்திவிட்டு பார்வையிட்டுக்கொண்டே வந்தாள் சரண்யா.
 ஷாம்பூ செக்ஷனில் அவள் நுழைந்து ஷாம்பூக்களை கடை பரப்பினாள்.
 "அந்த செல்புல இருக்கிற 'எக்ஷாம்பூ' எடுங்க"எடுத்த அந்த இளைஞன், இவளை இச்சையுடன் பார்த்துக்கொண்டே, இவள் பக்கம் ஷாம்பூவை நீட்டும் நிமிடம், இவளைத் தாண்டிய அவன் பார்வை பயத்தில் உறைய, சரண்யா அதைப் பிடித்துக் கொள்வதற்கு முன்பே கையை எடுத்துவிட்டான்.
 தவறிய ஷாம்பூ பாட்டில் சடுதியில் தரை தொட்டு, 'ஜலீ'ரெனச் சிதற, மஞ்சளான அந்த கொழ கொழுப்பான திரவம், சரண்யாவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த புடவையில் சிதறித் தெறித்தது.
 "இடியட்" சொன்னவள் கீதா.
 அவளது நீல பட்டுப் புடவையில் மஞ்சள் ஷாம்பூ.
 "ஏன் இதை உடைச்ச?" சரண்யாவுக்கு வந்து சேர்ந்த கேள்வி.
 "மேடம்! கேள்வியை மாத்துங்க. நான் பிடிச்சுக்கறதுக்கு முன்னால தவறவிட்டது சேல்ஸ் மென். ஆமா, ரொம்ப உரிமையா, ஒருமைல கேள்வி கேக்கற நீ யாரு?"
 "இந்தக் கடைக்கு ஓனர்!"
 "மாத்த வேண்டியது சேல்ஸ் மெனை இல்லை. ஓனரைத்தான்!" சரண்யா சொல்ல, கூடவந்த இரண்டும் 'கலீ'ரெனச் சிரித்தன.
 விற்பனை இளைஞர்கள் அத்தனை பேரும் சிரிப்பை அடக்க பிரயத்தனப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது.
 கீதாவின் ஆத்திரம் உச்சந்தலை வரை எகிறியது.
 "மரியாதையா இதுக்குண்டான கேஷை கட்டிட்டு இடத்தைக் காலிசெய்!"
 "என்னது கேஷா? விட்டா உனக்கே ஒரு விலை நிர்ணயம் பண்ணி பில் போடுவ போலிருக்கு. வேற ஆளைப்பார்!"
 "மரியாதையா பேசு!"
 "முதல்ல அதை நீ கத்துக்கோ. அப்புறம் மத்தவங்களுக்குச் சொல்லிக்குடு. வாங்கடி போகலாம்!"
 "நில்லு!" தோளில் கை வைத்தாள் கீதாகையை எடு. நீ கடை ஓனரா இருந்தா இதுக்கு சமம்!"
 கூந்தலில் ஒரு இழையை உருவிக் காண்பித்தாள் சரண்யா.
 "என்னடீ சொன்ன?" கீதா யோசிக்காமல் 'ப்ளீ'ரென சரண்யாவை அறைந்தாள். கடையே ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனது.
 கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அசையாமல் சரண்யா நின்றாள்.
 கீதாவை உறுத்துப் பார்த்தாள் சில நொடிகள்.
 மெல்லச் சிரித்தாள்.
 "உடைஞ்ச ஷாம்பூவுக்கான பில்லைப் போடுப்பா. ஐ வில் பே ஃபர் தட்"
 கீதா வெற்றி பெருமிதத்துடன் பார்த்தாள். நமட்டுச் சிரிப்பாக ஒரு முறை சிரித்தாள். 'சட்'டென அங்கிருந்து விலகி, சரேலென வெளிப்பக்கமாக நடந்தாள். கண்ணாடிக் கதவுக்கு வெளிப்புறம் மௌன இயக்கம் தெரிந்தது. கீதா தன் 'பத்மினி'யில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்வது தெரிந்தது.
 "மேடம் ஸாரி. தப்பு என்னுதுதான். நாங்க பில் போடலை அதுக்கு. நீங்க வேற ஷாம்பூ எடுத்துக்குங்க" அந்த இளைஞன் பவ்யமாகச் சொன்னான்.
 கல்லாவிலிருந்த மேனேஜர் ஓடி வந்தான்.
 "எக்ஸ்ட்ரீமிலி ஸாரி மேடம். எங்க ஓனர் இருந்ததால, உங்களுக்கு ஆதரவா எங்களால பேச முடியலை. ஆனா நியாயம் உங்க பக்கம்தான். ஆனா நாளைக்கும் நாங்க வேலைக்கு வரணுமே, ப்ளீஸ்!"
 "ஆனாலும் கை நீட்டி உங்களை அவங்க அடிச்சது தப்பு!" இன்னொருவன்.
 "ஓ ஸ்டாப் இட்! உடைஞ்ச ஷாம்பூவுக்கான பில்லை தயவுசெஞ்சு போடுங்க. நோ மோர் டாக்ஸ்."
 அவர்கள் செயல்பட -
 "உங்க மேடத்துக்கு இந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர் மட்டும் சொந்தமா?"

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798223718420
தட்டுங்கள் இறக்கபடும்...!

Read more from Devibala

Related to தட்டுங்கள் இறக்கபடும்...!

Related ebooks

Related categories

Reviews for தட்டுங்கள் இறக்கபடும்...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தட்டுங்கள் இறக்கபடும்...! - Devibala

    1

    இரவு மணி பத்து.

    இருட்டு தன் பெரிய போர்வையால் ஊர் முழுக்க அவசரமாக மூடிக் கொண்டிருந்தது.

    மேகம் கறுத்து, வானம் மை பூசிக் கொண்டிருந்தது.

    ‘பொட்’டென்று ஓரிரு மழைத்துளிகள் தன் வரவை அறிவித்தன.

    குளிர்காற்று வீசத் தொடங்கிய அந்த நேரம் -

    தன் வீட்டு பால்கனியில், எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, இருட்டில், ஜமுக்காளத்தின் மேல் மல்லாந்திருந்தான் க்ருஷ்ணா.

    பக்கத்தில் டூ-இன்-ஒன் நேஷனல் பானஸோனிக்.

    அதிலிருந்து புறப்பட்ட பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசை.

    மெலிதான சோகம் கலந்த இசையில் நெஞ்சைப் பறிகொடுத்துவிட்டு, கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தான் க்ருஷ்ணா.

    இந்த நேரம் க்ருஷ்ணாவை நாம் அறிமுகப்படுத்திக் கொண்டு விடலாம்.

    பாட்டு கேட்கும் இந்த நிமிடம் க்ருஷ்ணாவின் வயது முப்பத்திரெண்டு முடிந்து நாலு மாதங்கள் 17 நாட்கள். வசீகரமான இளைஞன். சிறு வயதில் தாய், தகப்பனைப் பறிகொடுத்துவிட்டு, தாய்மாமனின் தயவில் வளர்ந்தவன்.

    கூச்சமும் பயந்த சுபாவமும் கூடப் பிறந்த குணங்கள். மாமா லட்சாதிபதி அந்தஸ்த்தைக் கடந்து கோடீஸ்வர வாசலுக்குள் நுழைந்துக் கொண்டிருந்த பணக்காரர். க்ருஷ்ணாவை அயல்நாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்து, ஒரு மூட்டை டிகிரிகளோடு தாயகத்துக்குக் கொண்டு வந்தவர்.

    கீதா, மாமாவின் ஒரே பிடிவாத மகள். அடிக்கோடிட்ட வார்த்தையை கவனியுங்கள். அதுதான் இந்தக் கதை.

    மாமா இதய நோயாளி. மூன்றாவது ஸ்ட்ரோக் வந்தால் மாமாவின் கதை முடிந்துவிடும் என்று டாக்டர் திட்டவட்டமாகச் சொல்லிவிட, மாமா மிரண்டார்.

    க்ருஷ்ணாவை அழைத்துப் பேசினார்.

    உடனே நாள் பார்த்தார்.

    கீதா, க்ருஷ்ணாவுக்கு மனைவியாகிவிட்டாள்.

    கீதா பெயருக்கு சொத்து முழுவதும் எழுதப்பட்டது.

    போர்ட் மீட்டிங் அவசரமாகக் கூட்டப்பட்டு, சேர்மனாக கீதா தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

    மானேஜிங் டைரக்டராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டான் க்ருஷ்ணா.

    சகல கம்பெனிப் பொறுப்புகளும் க்ருஷ்ணா வசம் ஒப்படைக்கப்பட்டது.

    அத்தனையும் நிறைவேறிய இருபத்தி எட்டாவது நாள் மாமாவை அழைத்துப் போக எமன் வந்து விட்டான்.

    மாமா மறைந்து, துக்கம் கொண்டாடி... ஓ அதெல்லாம் ஒரு வருடத்துக்கு முந்தைய கதை.

    இப்போது க்ருஷ்ணா -

    மெல்லிய ரசனை கொண்ட மிருதுவான குணம் க்ருஷ்ணாவுக்கு. ஒரு பணக்கார பந்தாவோ, போலித்தனமோ அறவே இல்லாத குழந்தை குணம்.

    கம்பெனியின் கடைநிலை ஊழியன்வரை க்ருஷ்ணாவை வெகுவாக நேசித்தது இதனால்தான்.

    இனி கதை.

    ஷெனாய் முடிந்ததும், அந்தக் காஸெட்டை வெளியே எடுத்தான். தயாராக வைத்திருந்த ஹிந்துஸ்தானி ஸோலோவை (வயலினில்) நுழைத்து, இயக்கினான்.

    மழைத்துளி பெரிதாக இருந்தது.

    தோள், முதுகு, இடுப்பு என்று மானாவரியாக நேசித்தது.

    மெலிதான மண் மணத்தை ரசித்துக்கொண்டே, வயலினைப் பருகினான் க்ருஷ்ணா.

    ‘பட்’டென நின்றது இசை.

    திரும்பினான் க்ருஷ்ணா.

    சின்னக் குடையோடு சீதா.

    எழுந்திருங்க க்ருஷ்ணா!

    ஏன் கீதா?

    ஏனா? மழைத்துளி பெரிசா இருக்கு. உறைக்கலியா? எருமைத் தோலா உங்களுக்கு?

    எழுந்து உட்கார்ந்தான்.

    குடையோடு அவளைப் பார்த்ததும் ‘பக்’ கென்று சிரித்து விட்டான்.

    என்ன சிரிப்பு?

    அர்த்த ராத்திரில நீ குடை பிடிச்சப்ப, ஒரு பழமொழி ஞாபகம் வந்தது.

    சரி, சரி. எழுந்து உள்ளே வாங்க. ஒரு கம்பெனியோட எம்.டி, பால்கனில திறந்த மாரும், லுங்கியுமா மல்லாந்து படுத்துட்டு, அதுவும் மழைல... மானம் போகுது எனக்கு!

    உள்ளே வந்தான் க்ருஷ்ணா.

    ரூம் ‘மென்று ஏ.ஸி மெலிதாக இயங்கிக் கொண்டிருந்தது.

    வெளில குளிரும், மழையுமா இருக்கு. எதுக்கு கீதா ஏ.ஸி?

    அவள் பதில் பேசவில்லை.

    ஸாட்டின் ஹவுஸ் கோட்டோடு வந்தாள்.

    லுங்கியை அவிழ்த்துட்டு இதைப் போட்டுட்டு படுங்க!

    என்ன கீதா நீ... பெட்லகூட மேக்கப்பா? காற்று உள்ளே நுழையாது கீதா. புழுக்கமா இருக்கும் எனக்கு!

    அதுக்குத்தான் ஏ.ஸி. ம்...! கழட்டுங்க! ‘திடீர்’ னு ஒரு எமர்ஜன்ஸி! ட்யூட்டி ஆபீசர் வீடு வரைக்கும் வந்துட்டா இதே நிலைலயா நீங்க அவரை சந்திக்க முடியும்? லுங்கியும், திறந்த மாருமா கூலிக்காரனாட்டம். ச்சே... வெக்கமால்லை உங்களுக்கு? யூ ஹேவ் டு மெய்ன்டெய்ன் யுவர் ஸ்டேட்டஸ். யு நோ!

    எரிச்சலாக வந்தது க்ருஷ்ணாவுக்கு. தொண்டை வரை கசந்தது.

    ஒன்றும் பேசவில்லை. பேசமாட்டான். பேச முடியாது.

    விருப்பம்போல சுவாசிக்கக்கூட முடியாது. பணம், பதவி, அந்தஸ்த்து.

    தங்கக் கூண்டுக்குள் (அதுவும் ஏ.ஸி கூண்டுக்குள்) கிளி.

    கீதா ஒரு ராட்சஸி.

    அவளை எதிர்க்க முடியாது.

    ஹவுஸ் கோட்டை அணிந்து கொண்டு, படுக்கையில் விழுந்தான்.

    தொண்டை வறண்டு போகுது. ‘ஜில்’லுனு தண்ணி தா கீதா!

    பிரிட்ஜ் வாட்டரா? நெவர்! மழைக்காலம், ராத்திரி நேரம். தொண்டை கட்டிக்கிட்டா? ப்ளாஸ்க்ல வென்னீர் இருக்கு. தரவா?

    கொண்டு போய் கொட்டு!

    திரும்பிப் படுத்துக் கொண்டான்.

    லேசான சங்கட உணர்வு அடி வயிற்றைப் பிசைந்தது.

    ‘எதற்காக இவள் சொல்லுக்கு இத்தனை தூரம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.’

    ‘சொத்துக்களின் மேல் ஆசையா...’

    ‘நிச்சயமாக இல்லை.’

    ‘பின்பு!’

    மாமா எதிரே வந்து நின்றார்.

    அந்த இரவு எட்டரை மணி.

    இன்னமும் மறக்கவில்லை க்ருஷ்ணாவுக்கு.

    உட்காரு க்ருஷ்ணா!

    பரவால்லை மாமா!

    மரியாதை மனசுல இருந்தா போதும்!

    உட்கார்ந்தான்.

    சொல்லுங்க மாமா!

    நீ கீதாவைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நான் ஆசைப்படறேன் க்ருஷ்ணா!

    க்ருஷ்ணா ஒன்றுமே பேசவில்லை.

    ஏன் க்ருஷ்ணா பேசலை? அதை நீ விரும்பலையா?

    அந்த மாதிரியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை மாமா. வாழ்க்கைல முன்னுக்கு வர, நீங்க போட்டுத் தந்த பாதைல எப்படி நடக்கலாம்னு யோசினை ஒண்ணுதான்!

    நான் ஆசைப்பட்டா, கீதாவை நீ கல்யாணம் செஞ்சுபியா க்ருஷ்ணா?

    உங்க வார்த்தைகள் எதையும் நான் மறுத்ததில்லை மாமா.

    தேங்க் யு... தேங்க் யு வெரி மச்! ஆனா ஒண்ணு க்ருஷ்ணா. கீதாவுக்கு எக்கச்சக்க பிடிவாதம். துர்குணம் நிறைய உண்டு. உன்னைத்தவிர வேற யாரும் அவளோட பொறுமையா வாழமுடியாது. இத்தனை நாள் நான் உனக்கு செஞ்ச உதவிக்கு, ஏதாவது நன்றி காட்டணும்னு நினைச்சா, கீதாவை ஏத்துக்கோ. செய்வியா க்ருஷ்ணா?

    சரி மாமா! யோசிக்காமல் பதில் சொன்னான்.

    எந்தக் காரணத்தைக் கொண்டும் அவளை விட்டு விலகிட மட்டும் செய்யாதே!

    அதற்கும் தலையசைத்தான்.

    தூரத்தில் லாரியின் ஹாரன் கேட்டது. படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். திரும்பிப் பார்த்தான். கீதா சுகமான நித்திரையில் இருந்தாள்.

    மெல்ல எழுந்து பிரிட்ஜை நெருங்கினான். ஐஸ் வாட்டர் எடுத்து ‘மடக்... மடக்’கென்று குடிக்கத் தொடங்கினான்.

    மீறிவிட்டதில் ஒரு அல்ப சந்தோஷம் இருந்தது.

    அல்ப சந்தோஷத்துக்காக அடிக்கடி மீறும் நேரம் வரும்.

    Enjoying the preview?
    Page 1 of 1