Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்மணி கண்டுபிடி..!
கண்மணி கண்டுபிடி..!
கண்மணி கண்டுபிடி..!
Ebook337 pages1 hour

கண்மணி கண்டுபிடி..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எடிட்டர் அறைக்குள் வசந்த் நுழைந்தபோது மாலை ஏழு மணி.
 "வா வசந்த்! உட்காரு!"
 "இன்னிக்கு போஸ்ட்ல வந்த லெட்டர் சார்!"
 "யாருது?"
 "நீங்களே எதிர்பாராத ஆள். படிச்சுப் பாருங்க!"
 அதை வாங்கி தன் மேஜையின் மேல் வைத்த எடிட்டர், அவனைப் பார்த்தார்.
 "கள்ளிப்பூ' படம் ஓடாததுக்கு நம்ம விமர்சனம்தான்னு ஒரு பேச்சு பரவலா இருக்கு வசந்த்!"
 "அதனாலதான் டைரக்டருக்கு மாரடைப்பா?"
 "நல்ல காலம் பிழைச்சிட்டார். அவர் உயிருக்கு ஆபத்து உண்டாகியிருந்தா, ஜனங்க நம்மைக் குற்றம் சாட்டுவாங்க!"
 "போங்க சார். பத்திரிகைனா பாராட்டிகிட்டே இருக்க முடியுமா? படத்துல ஒண்ணுமில்லை சார். அண்ணாமலைகிட்ட சரக்கு தீர்ந்து போச்சு. லெட்டரை படிங்க."
 கிழித்தார், பிரித்தார்.
 நடிகை நர்மதா எழுதியிருந்தார்.
 'உங்கள் விமர்சனத்தை படித்த மறுநாள் 'கள்ளிப்பூ' படம் பார்க்கும் வாய்ப்பு வந்தது.'
 'என்ன ஒரு அற்புதமான படைப்பு. ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குனருக்கு தனித்தனியாக முத்தம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நல்ல படத்தை நான் பார்த்ததேயில்லை. பிரபல பத்திரிகையாக இருந்தும் ரசனையில்இத்தனை கீழே இருக்கும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ரசிகர்களை திசை திருப்பி விடும் உங்களை கலைஞர்களின் சார்பாக எச்சரிக்கிறேன் - நர்மதா.'
 வசந்தைப் பார்த்தார் எடிட்டர்.
 "நர்மதா ஸ்டில் இருந்தா போட்டு, இந்த லெட்டரையும் வெளியிடு! போஸ்டர்ல இதையே நியூசா போடு."
 வசந்த் சிரித்தான்.
 "இனி படத்துக்கு பப்ளிசிட்டி கிடைச்சு உபயோகமில்லை. தியேட்டரை விட்டுத் தூக்கியாச்சு."
 "நர்மதா ஏன் இதுல தலையிடறா?"
 "விளம்பரத்துக்குத்தான்!"
 "இந்தச் செய்தி மூலம் நர்மதாவுக்கு விளம்பரம் தேடற அவசியம் இல்லை சார். நம்பர் ஒன் நடிகை. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கற ஸ்டார்."
 "சரி விடு! அண்ணாமலையை போய் பார்த்தியா?"
 "நான் போனப்ப தூங்கிட்டு இருந்தார்."
 டெலிபோன் ஒலித்தது.
 எடுத்தார் எடிட்டர்.
 "சார் நான் திலிப் பேசறேன். டைரக்டர் அண்ணாமலையை பார்க்க நர்சிங் ஹோமுக்கு நர்மதா வந்திருக்காங்க."
 "நடிகை நர்மதாவா? எப்ப?"
 "இப்பத்தான் உள்ளே போய்க்கிட்டே இருக்காங்க..."
 "சரி! ரெண்டு பேரையும் அங்கேயே வச்சு ஒரு ஸ்டில் எடுக்க முடியுமானு பாரு!."
 "வசந்த் இருந்தா நல்லாருக்கும்.""வேண்டாம். வசந்த் 'பாரிஜாத' நிருபர்னு டைரக்டருக்குத் தெரியும். உன்னைத் தெரியாது நமக்குனா ஸ்டில் தரமாட்டாங்க. வேற ஏதாவது சொல்லி படம் எடு. முடிஞ்சா நர்மதாகிட்ட சின்னதா ஒரு பேட்டி வாங்கிடு."
 எடிட்டர் - சொல்லிக் கொண்டிருந்த நேரம், நர்மதா டைரக்டரின் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.
 டைரக்டரை சாய்த்து உட்கார்த்தி மருந்து கொடுத்துக் கொண்டிருந்தாள் நர்ஸ்.
 "வணக்கம் சார்!"
 "நீங்க... நீ..."
 "நர்மதாவேதான்!"
 அவருக்கு ஆச்சரிம் தாளவில்லை.
 "அபி! அந்தச் பேனை போடு."
 கட்டிலுக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள் நர்மதா.
 வெளியே ரசிகர்களின் கூச்சலில் டாக்டர்கள் லேசாக முகம் சுளிக்கத் தொடங்கி விட்டார்கள்.
 "நீ... எ... எப்படீம்மா?"
 "ஏன் சார் வரக்கூடாதா? உங்க படத்துல நடிக்காம இருக்கலாம். ஆனா, உங்க ரசிகையாவும் இல்லாம இருக்கணுமா?"
 "இ... இல்லைமா! அப்படி சொல்லலை நான்."
 "நீங்க அதிகம் பேச வேண்டாம் சார். களைப்பு வந்திரும்." சொல்லிவிட்டு தன் கையில் இருந்த 'பொக்கே'யை அவரிடம் தந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798223969341
கண்மணி கண்டுபிடி..!

Read more from Devibala

Related to கண்மணி கண்டுபிடி..!

Related ebooks

Related categories

Reviews for கண்மணி கண்டுபிடி..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்மணி கண்டுபிடி..! - Devibala

    1

    டைரக்டர் அண்ணாமலை டென்ஷனில் இருந்தார். ப்ரீவ்யூ தியேட்டரின் வாசலில் நகம் கடித்தபடி பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தார்.

    பத்திரிகை, சினிமா மற்றும் முக்கியமானவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேகக் காட்சி.

    ஏறத்தாழ எல்லோருமே வந்து விட்டார்கள். ஒரு ஆளுங்கட்சிப் பிரமுகருக்காகக் காத்திருந்தார்.

    ஒரு முக்கியப் பத்திரிகையாளர் அருகில் வந்தார்.

    படத்தைப் பற்றி எந்தச் செய்தியும் வெளில வராம காப்பாத்திட்டீங்களே சார்!

    இது என் லட்சியப் படம். நிறைய செலவும் பண்ணியிருக்கேன். ஆனா, ஒவ்வொரு பிரேமும் செதுக்கி செதுக்கிக் கொண்டு வந்திருக்கேன்.

    அவார்டை குறி வச்சு எடுத்த படம்னு பேசிக்கிறாங்க!

    எனக்கு அவார்ட்ல நம்பிக்கை இல்லை. ரசிகர்கள் ஒத்துகிட்டா, அதைவிடப் பெரிய அவார்ட் என்ன இருக்கு?

    இதுக்கு முன்னால உங்களோட மூணு படங்கள் வியாபார ரீதியா பயங்கர அடி வாங்கியிருக்கே சார். இதுல நீங்க நின்னே ஆகணும் செய்தி வருது.

    அதை நீங்களும், ரசிகர்களும் தீர்மானம் பண்ணுங்க...

    அந்த கட்சிக்காரர் வந்து விட்டார்.

    இயக்குனர் அவரை உள்ளே அழைத்துப் போனார்.

    ஆளுங்கட்சியைப் பிடிச்சாத்தான்பா அவார்டு வாங்க முடியும். தேர்வு கமிட்டியில இந்த எம்.எல்.ஏ யோட தம்பி ஒரு ஜூரி!

    அரங்கம் நிரம்பிவிட, விளக்குகள் அணைக்கப்பட்டு படம் ஆரம்பமானது.

    இந்த நேரத்தில் இயக்குனர் அண்ணாமலை பற்றி கொஞ்சம் அறிமுகம்.

    கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சினிமா உலகை தாங்கிக் கொண்டிருப்பவர். இவரது பிரவேசம் அந்தக் கால கட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த ஏழெட்டு இயக்குனர்களை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது.

    அன்றிலிருந்து இன்று வரை எடுக்கும் ஒவ்வொரு படமும் மாறுதலாக, சற்றே வித்தியாசமாக சமூகத்தை பிரதிபலிப்பதாக என்று ஒன்றிலிருந்து மற்றொன்று விலகி நிற்கும்.

    இயக்குனர் அண்ணாமலை என்றாலே மேல் தட்டு ரசிகர்களுக்கு வெல்லம்.

    ஐம்பது கடந்த அண்ணாமலை பார்க்க சுமாராகத்தான் இருப்பார். ஆனால், அவர் உருவாக்கிய நட்சத்திரங்கள் தான் இன்று திரைவானில் முன்னணியில் -

    சமீப காலமாக மூன்று படங்கள் படு தோல்வி வியாபார ரீதியாக அடைய, அண்ணாமலை சற்றே உடைந்து போயிருந்தார். இந்த ‘கள்ளிப்பூ’ படம் அவரது வெகு நாளைய லட்சியம். முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து எடுத்த படம். அவரது சொந்தப் படம்.

    இனி –

    பிரத்யேகக் காட்சி முடிந்துவிட்டது. சகலரும் வளியே வர பத்திரிகைக்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள் அவரை. அவர்களின் வார்த்தைகளை எதிர்பார்த்து இயக்குனரின் செவிகள் காத்திருக்க, வெல் டன் சார்! ஒவ்வொரு பிரேமும் கவிதை! உங்க உழைப்பு படம் முழுக்க பிரமாதமா தெரியுது!

    ஹாட்ஸ் ஆப் அண்ணாமலை. புது முகங்களை பிரமாதமா வேலை வாங்கியிருக்கீங்க!

    அபாரம், திரைக்கதையும், எடிட்டிங்கும் கை கோர்த்துகிட்டு படம் முழுக்க ரொம்ப ஜோரா வந்திருக்கு.

    அண்ணாமலைக்கு சந்தோஷம் தாள முடியவில்லை.

    அந்தப் பிரபல இதழின் நிருபர் மட்டும் எதுவும் பேசாமல் இருப்பதை அண்ணாமலை கவனித்தார்.

    அருகில் வந்தார்.

    என்ன ஒண்ணும் சொல்லலை?

    அந்த நிருபர் பேசவில்லை.

    கமான். உங்க அபிப்ராயம் எனக்கு முக்கியமா வேணும்.

    அவர் மெல்வச் சிரித்தார்.

    கொஞ்சம் பொறுங்க! இன்னும் ரெண்டு நாள்ல விமர்சனம் வந்திரும். அதுவரைக்கும் சஸ்பென்ஸ்...

    கூட்டம் கலைந்து போனது.

    அண்ணாமலை வீடு திரும்பும்போது இரவு பன்னிரண்டைக் கடந்திருந்தது...

    உடை மாற்றிக்கொண்டு பால்கனிக்கு வந்து விட்டார்.

    மனைவி அபிராமி அருகில் வந்தாள்.

    என்னங்க சாப்பிட வரலையா?

    எனக்குப் பசிக்கலை.

    நடு ராத்திரில இங்கே வந்து உட்கார்ந்தா எப்படி? தூங்க வேண்டாம்.

    தூக்கம் வரலை... நீ போய்ப் படு.

    அவள் திரும்பினாள்.

    அபி! ஒரு நிமிஷம்.

    ஏன்னா?

    படம் வெற்றியடையுமா?

    தெரியல. சினிமா பத்தி எனக்கென்ன தெரியும்?

    அப்படி சொல்லாதே... உனக்கு வீட்ல போட்டுக் காமிச்சிட்டேன். இதுவரைக்கும் நீ ஒண்ணும் சொல்லல!

    ரசிகர்கள் சொல்லட்டும். அதுதானே முக்கியம்.

    நோ... உன் கருத்து அவசியம் எனக்கு. வா இப்படி...

    அவளை இழுத்து அருகில் உட்காரவைத்துக் கொண்டார்.

    சொல்லு...

    என் அபிப்ராயம் முக்கியமில்லீங்க...

    நோ... நீ சொல்லித்தான் ஆகணும்.

    சாரிங்க... எனக்கு படம் பிடிக்கலை. ரொம்ப மெதுவா நகர்ற மாதிரி இருக்கு. உங்க முந்தைய படங்கள்ல இருந்த சுறுசுறுப்பு இதுல இல்லை. கலைக் கண்ணோட்டத்துல பார்க்கிறவங்க ஒருவேளை ரசிக்கக்கூடும். எனக்கு அந்த அறிவு கம்மிதான்.

    அண்ணாமலையின் முகம் விழுந்து விட்டது.

    எல்லா பத்திரிகைக்காரர்களும் பிரமாதமா பாராட்டினாங்களே.

    அதான்... எனக்கு போதாதுனு சொல்லிட்டேனில்லை? என் விமர்சனத்தை நீங்க பொருட்படுத்த வேண்டாம்.

    எழுந்து போய் விட்டாள்.

    அவர் எழுந்து நடக்கத் தொடங்கினார்.

    ‘நாளை படம் வெளியாகும் நாள். ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா? பல லட்சங்கள் இதில் முடக்கப்பட்டு விட்டது. லட்சங்கள் மட்டுமல்ல. லட்சியம், வாழ்க்கை சகலமும்... சகலமும்...’

    அதிகாலை உறங்கிப் போனார்.

    மறுநாள் பகல் காட்சிக்கு மையத்தில் இருந்த திரையரங்கம் ஒன்றுக்கு படம் தொடங்கிய பின்பு சென்றார்.

    அது தான் முதல் காட்சி.

    ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நேரடி விமர்சனம் அறிய ஆசை.

    டைட்டில் ஓடி முடிந்து படம் தொடங்கிவிட்டது. கை தட்டலுக்கும், சின்ன விமர்சனங்களுக்கும் காதுகளைத் தீட்டிக் கொண்டிருந்தார் அண்ணாமலை.

    டக்கர்டா மச்சான்... காட்சிக்குக் காட்சி ஒருவன் கை தட்டினான்,

    சுத்த சொதப்பல் தான் படம். இன்டர்வல் எப்ப வரும்னு இருக்கு. வெளில போய் ஒரு ‘தம்’ மாவது அடிக்கலாம்.

    இன்னொரு கமென்ட்.

    படம் முடிந்து வெளியே வர, ஒரு ரசிகர் டைரக்டரை அடையாளம் கண்டு சூழ்ந்து கொண்டார்கள்.

    எப்படி இருக்கு படம்?

    உங்க உழைப்பு அபாரமா இருக்கு சார் படம் முழுக்க. ஆனா, ஓடாது சார்.

    ஏன்?

    பொழுதுபோக்கு அம்சம் குறைவு சார். விறுவிறுப்பும் கொஞ்சம் கம்மிதான்.

    என்னா சார் நீர், ஜாலியா ரெண்டு மணி நேரம் இருக்க வந்தா, போட்டு அறுத்திட்டியே!

    பாடம் நடத்தினா யாருக்கும் புடிக்காது சார்.

    டைரக்டர் தன் காரில் வந்து உட்கார்ந்து கொண்டார்.

    ‘பாராட்டுக்களை விட எதிர்ப்பே அதிகம். ஏன்?’

    மூன்றாவது நாள் அந்தப் பிரபல பத்திரிகை வந்து விட்டது. முதல் பக்கமே ‘கள்ளிப்பூ’ விமர்சனம்.

    ‘அண்ணாமலையே! உன் பேர் ஆமையா?’ என்று ஆரம்பித்து படத்தைக் கிழிகிழி என்று கிழித்திருந்தார்கள்.

    அண்ணாமலை பத்திரிகையை தூக்கி எறிந்தார்.

    திமிர்... அதிக சர்குலேஷன் போகுதுன்னு கொழுப்பு. ரசனையில்லாத காட்டுமிராண்டிகள்.

    அபிராமி காபியுடன் வந்தாள்.

    அதை எட்டி உதைத்தார் காலால்.

    காபி ஸ்லோமோஷனில் சிதறிக்கொண்டு தரை தொட்டது.

    யார்மேல கோவம்?

    உன் மேலதான். படம் பிடிக்கலைனு நீ பிள்ளைாய் யார் சுழி போட்டே! ‘பாரிஜாதம்’ பத்திரிகைல நார் நாரா படத்தைக் கிழிச்சிருக்கான்.

    அவன் எழுதிட்டா ஆச்சா?

    ஜனங்க அவன் விமர்சனத்தை மதிப்பாங்க; அது பாதிப்பை உண்டாக்கும் நமக்கு...

    டெலிபோன் ஒலித்தது.

    அபிராமி போய் எடுத்தாள்.

    ஒரு வினியோகஸ்தர் தான்.

    சொல்லுங்க ரமணமூர்த்தி!

    ரெண்டாவது ஷோவுக்கே தியேட்டர் காலி சார். ஒரு வாரம்கூட படம் போகாதுன்னு பேசிக்கிறாங்க!

    நிஜமாவா?

    ஆனா நிச்சயமா பெஸ்ட் டைரக்ட் அவார்ட் உங்களுக்குக் கிடைக்கும் சார்!

    தேங்க்யூ!

    ரிசீவரை வைத்தார்.

    பெஸ்ட் டைரக்டர் அவார்ட் வாங்கி பெட்டிலதான் பூட்டி வைக்கணும்!

    என்ன சொல்றார்?

    அபி மெல்ல கேட்டாள்.

    நீ என் எதிர்லே நிக்காதே! உன்னைப் பார்க்கப் பார்க்க பத்திக்கிட்டு வருது. கெட் லாஸ்ட்!

    அபி உள்ளே போய் விட்டாள்.

    அடுத்த நாலு நாட்களில் மற்ற எல்லா பத்திரிகைகளிலும் விமர்சனம் வந்து விட்டது.

    ஆகா... ஓகோ என்று சிகரத்தில் தூக்கி வைத்திருந்தார்கள் இயக்குனரை.

    ‘பாரிஜாதம்’ தவிர மீதி அத்தனை பேரும் அற்புதமான விமர்சனம் தந்திருந்தார்கள்.

    டெலிபோனிலும், மேல் மட்டத்திலும், சினிமா முக்கியப் புள்ளிகளிடமிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருந்தன.

    ஒரே வாரத்தில் பல இடங்களில் தியேட்டரில் படத்தை எடுத்து விட்டார்கள்.

    பத்தே நாளில் படம் ‘படுதோல்வி’ எனத் தெரிந்துவிட்டது அண்ணாமலைக்கு.

    போட்ட பணம் அத்தனையும் அம்பேல்!

    பத்திரிகைகள் படத்தின் தோல்வி பற்றி எழுதி விட்டு, மக்கள் ரசனையை காட்டமாக விமர்சனம் செய்ய, ‘நாலாவது படமும் விழுந்தாச்சு. இனி அண்ணாமலை எழுந்து நிற்க முடியாது. அவர் சகாப்தம் முடிகிறது!’

    அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருந்த அண்ணாமலை அதைக்கூட ரத்து செய்துவிட்டு, வீட்டுக்குள் தன் அறைக்குள் முடங்கிக் கிடந்தார்.

    ஒரு வாரமாக வெளியே வரவேயில்லை.

    அன்று அதிகாலை எழுந்து வாக்கிங் போகலாம் என்று தீர்மானித்து படுக்கையைவிட்டு எழுந்தார்.

    மார்பின் இடது புறம் ‘சுள்’ளென்று ஒரு வலி. பொருட்படுத்தாமல் நடந்தார் பாத்ரூமை நோக்கி. வாஷ்பேசினுக்குக் குனிய அடுத்த ‘சுருக்’ லேசான அந்த வலி மெல்ல பெரிதாகத் தொடங்கியது. உடனே வியர்வை ஆரம்பமாகிவிட, அண்ணாமலை மிரண்டு போனார்.

    இதயத்தை ஏதோ கவ்விப் பிடிப்பதைப் போல இருந்தது அடுத்த நொடிகளில் வலி அதிகமாகி, மூச்சுவிட முடியாமல் திணறி, பாத்ரூமை விட்டு வெளி வர முயன்று முடியாமல் படிகளில் மடிந்து அப்படியே மல்லாந்து விழுந்தார்.

    உள்ளே நுழைந்த அபி அலறி விட்டாள்.

    என்னங்க! என்ன செய்யுது உங்களுக்கு?

    டாக்டரை... டாக்...

    அபி வெளியே ஓடினாள்.

    வலி நொடிக்கு நொடி அதிகமாகி, கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.

    வீட்டின் பணியாளர்கள் அத்தனை பேரும் கூடிவிட்டார்கள்.

    டாக்டர் வந்து விட்டார்.

    அண்ணாமலை நினைவை இழந்து விட்டார்.

    காரை ரெடி பண்ணச் சொல்லுங்க. பலமான ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. இதுதான் முதல் அட்டாக்கா?

    ஆமாம் டாக்டர்... அவர் உயிருக்கு...

    ஆபத்து இருக்காது!

    நாலு பேராக பிடித்து காரில் ஏற்றினார்கள்.

    கார் ஓடத் தொடங்கியது.

    அரைமணி நேரத்தில் தனியறை தரப்பட்டு டாக்டர்கள் சிகிச்சையை தரத் தொடங்கி விட்டார்கள்.

    அன்றைய மாலைப் பதிப்பில் தலைப்பு செய்தியாக வெளியாகியிருந்தார் அண்ணாமலை.

    "பிரபல இயக்குனர் அண்ணாமலைக்கு, மாரடைப்பு!

    இன்று காலை மிக பலமான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விட்டார். உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் நம்பிக்கை!

    அவர் மிகவும் எதிர்பார்த்த அவரது சொந்த. லட்சியப் படமான ‘கள்ளிப்பூ’ வின் படுதோல்விதான் அவரது மாரடைப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது."

    மறு நாள் விடிந்ததும் ஏறத்தாழ இதே பாணியில் எல்லா பத்திரிகைகளும் செய்தி வெளியிட -

    அண்ணாமலை கண் விழித்தார்.

    அபி கண்ணீரோடு அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

    என்னங்க! பயப்படாதீங்க. உங்களுக்கு ஒண்ணும் நேராது. எனக்கு மாங்கல்ய பலமிருக்கு!

    இப்படி வாங்க, உங்களால அவர் உணர்ச்சிவசப் படக்கூடாது. அது அவருக்கு நல்லதில்லை. ஓய்வு எடுக்க விடுங்க!

    சிஸ்டர் கண்டிக்க அபி விலகினாள்.

    ஏராளமான சினிமாக்காரர்கள் அவரைப் பார்க்க வந்து கொண்டே இருந்தார்கள்.

    மாலை ஏழு மணி சுமாருக்கு மருத்துவமனை வாசலில் அந்த ஸ்டாண்டர்ட்-2000 கார் வந்து நின்றது.

    டிரைவர் இறங்கி, கார் கதவை திறந்து விட, இறங்கிய நபரைப் பார்த்ததும் தூரத்தில் நின்றவர்கள் எல்லாம் ஓடி வந்தார்கள்.

    நீங்களா? இங்கேயா?

    பல குரல்கள்.

    தயவு செஞ்சு எனக்கு வழி விடுங்க. நான் டைரக்டரைப் பார்க்க வந்திருக்கேன்! ப்ளீஸ்!

    அந்தச் சொல்லுக்கு மதிப்பு தந்து எல்லாரும் வழிவிட, அண்ணாமலையே சற்றும் எதிர்பாராத அந்த பிரபல புள்ளி அவரது அறையை நோக்கி நடக்கத் தொடங்கியதை பல ஜோடிக் கண்கள் ஆச்சரியத்துடன் குறித்துக் கொண்டன.

    2

    எடிட்டர் அறைக்குள் வசந்த் நுழைந்தபோது மாலை ஏழு மணி.

    வா வசந்த்! உட்காரு!

    இன்னிக்கு போஸ்ட்ல வந்த லெட்டர் சார்!

    யாருது?

    நீங்களே எதிர்பாராத ஆள். படிச்சுப் பாருங்க!

    அதை வாங்கி தன் மேஜையின் மேல் வைத்த எடிட்டர், அவனைப் பார்த்தார்.

    கள்ளிப்பூ’ படம் ஓடாததுக்கு நம்ம விமர்சனம்தான்னு ஒரு பேச்சு பரவலா இருக்கு வசந்த்!

    அதனாலதான் டைரக்டருக்கு மாரடைப்பா?

    நல்ல காலம் பிழைச்சிட்டார். அவர் உயிருக்கு ஆபத்து உண்டாகியிருந்தா, ஜனங்க நம்மைக் குற்றம் சாட்டுவாங்க!

    போங்க சார். பத்திரிகைனா பாராட்டிகிட்டே இருக்க முடியுமா? படத்துல ஒண்ணுமில்லை சார். அண்ணாமலைகிட்ட சரக்கு தீர்ந்து போச்சு. லெட்டரை படிங்க.

    கிழித்தார், பிரித்தார்.

    நடிகை நர்மதா எழுதியிருந்தார்.

    ‘உங்கள் விமர்சனத்தை படித்த மறுநாள் ‘கள்ளிப்பூ’ படம் பார்க்கும் வாய்ப்பு வந்தது.’

    ‘என்ன ஒரு அற்புதமான படைப்பு. ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குனருக்கு தனித்தனியாக முத்தம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நல்ல படத்தை நான் பார்த்ததேயில்லை. பிரபல பத்திரிகையாக இருந்தும் ரசனையில் இத்தனை கீழே இருக்கும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ரசிகர்களை திசை திருப்பி விடும் உங்களை கலைஞர்களின் சார்பாக எச்சரிக்கிறேன் - நர்மதா.’

    வசந்தைப் பார்த்தார் எடிட்டர்.

    நர்மதா ஸ்டில் இருந்தா போட்டு, இந்த லெட்டரையும் வெளியிடு! போஸ்டர்ல இதையே நியூசா போடு.

    வசந்த் சிரித்தான்.

    இனி படத்துக்கு பப்ளிசிட்டி கிடைச்சு உபயோகமில்லை. தியேட்டரை விட்டுத் தூக்கியாச்சு.

    நர்மதா ஏன் இதுல தலையிடறா?

    விளம்பரத்துக்குத்தான்!

    இந்தச் செய்தி மூலம் நர்மதாவுக்கு விளம்பரம் தேடற அவசியம் இல்லை சார். நம்பர் ஒன் நடிகை. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கற ஸ்டார்.

    சரி விடு! அண்ணாமலையை போய் பார்த்தியா?

    நான் போனப்ப தூங்கிட்டு இருந்தார்.

    டெலிபோன் ஒலித்தது.

    எடுத்தார் எடிட்டர்.

    சார் நான் திலிப் பேசறேன். டைரக்டர் அண்ணாமலையை பார்க்க நர்சிங் ஹோமுக்கு நர்மதா வந்திருக்காங்க.

    நடிகை நர்மதாவா? எப்ப?

    இப்பத்தான் உள்ளே போய்க்கிட்டே இருக்காங்க...

    சரி! ரெண்டு பேரையும் அங்கேயே வச்சு ஒரு ஸ்டில் எடுக்க முடியுமானு பாரு!.

    வசந்த் இருந்தா நல்லாருக்கும்.

    வேண்டாம். வசந்த் ‘பாரிஜாத’ நிருபர்னு டைரக்டருக்குத் தெரியும். உன்னைத் தெரியாது நமக்குனா ஸ்டில் தரமாட்டாங்க. வேற ஏதாவது சொல்லி படம் எடு. முடிஞ்சா நர்மதாகிட்ட சின்னதா ஒரு பேட்டி வாங்கிடு.

    எடிட்டர் - சொல்லிக் கொண்டிருந்த நேரம், நர்மதா டைரக்டரின் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

    டைரக்டரை சாய்த்து உட்கார்த்தி மருந்து கொடுத்துக் கொண்டிருந்தாள் நர்ஸ்.

    வணக்கம் சார்!

    நீங்க... நீ...

    நர்மதாவேதான்!

    அவருக்கு ஆச்சரிம் தாளவில்லை.

    அபி! அந்தச் பேனை போடு.

    கட்டிலுக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள் நர்மதா.

    வெளியே ரசிகர்களின் கூச்சலில் டாக்டர்கள் லேசாக முகம் சுளிக்கத் தொடங்கி விட்டார்கள்.

    நீ... எ... எப்படீம்மா?

    ஏன் சார் வரக்கூடாதா? உங்க படத்துல நடிக்காம இருக்கலாம். ஆனா, உங்க ரசிகையாவும் இல்லாம இருக்கணுமா?

    இ... இல்லைமா! அப்படி சொல்லலை நான்.

    நீங்க அதிகம் பேச வேண்டாம் சார். களைப்பு வந்திரும். சொல்லிவிட்டு தன் கையில் இருந்த ‘பொக்கே’யை அவரிடம் தந்தாள்.

    தேங்க்யூ மா.

    கள்ளிப்பூ’ படம் பார்த்ததுமே, உங்களை நேர்ல சந்திச்சு பாராட்ட ஆசைப்பட்டேன். முதல் சந்திப்பு இங்கேயா நிகழும்?

    .....

    கள்ளிப்பூ’ படம் பார்த்தப்ப பொறாமையா இருந்தது சார். அஞ்சுகம்’ காரக்டர் எனக்கு கிடைக்கலையேனு நொந்து போனேன்...

    படம் படு தோல்வி நர்மதா.

    பணத்தை வச்சு வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்பட்டா, இதுவும் தோல்வியா இருக்கலாம் சார். ஆனா, தரத்துல இது மாதிரி ஒரு படம் சமீப வருஷங்கள்ல வரலை. பாரிஜாதம் கன்னா பின்னானு எழுதியிருந்தான். மனசு பொறுக்கலை சார் எனக்கு. சுடச்சுட எழுதி விட்டுட்டேன்.

    அப்படியா?

    பின்ன என்ன சார்?

    காபி குடிப்பியாம்மா?

    எதுக்கு சார் கஷ்டம்?

    அபி! காபி எடுத்துக் குடு நர்மதாவுக்கு.

    விமர்சனம் படிச்சிட்டு, படத்தைத் தோல்வியடைய வச்சிட்டாங்க ரசிகர்கள்னு நான் ஒப்புக்கமாட்டேன். பத்து சதவீதம் தான் விமர்சனம் காரணம். படத்துல என்ன பிடிக்கலைன்னு எனக்குப் புரியலை!

    விடுங்க சார்... பரீட்சை பண்ணும்போது சோதனைகள் வரத்தான் செய்யும்.

    திலிப் உள்ளே நுழைந்து விட்டான்.

    சார்! ஒரு ஸ்டில் எடுத்துக்கலாமா ரெண்டு பேரையும்.

    எந்தப் பத்திரிகை நீங்க?

    விடுங்க சார், பத்திரிகை எதுவானா என்னா? நீங்க படம் எடுங்க.

    நர்மதா அனுமதி அளித்த பின் டைரக்டரால் பேச முடியவில்லை.

    அவன் நாலைந்து கோணங்களில் படமெடுத்தான்.

    உங்ககூட சின்னதா ஒரு பேட்டி மேடம்!

    இங்கே வேண்டாம். சார் ஓய்வெடுக்கணும். வெளில வாங்க எழுந்து கொண்டாள்.

    சார்! நான் புறப்படறேன்.

    உன்னை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்மா!

    உங்க படத்துல இதுவரைக்கும் நான் நடிக்கலைன்னாலும், நானும் உங்க மாணவிகள்ல ஒருத்தி சார்...

    பெருமையா இருக்கும்மா!

    வெளியேறினாள் நர்மதா.

    பின் தொடர்ந்தான் திலிப்.

    ஆச்சரியா இருக்குங்க! நர்மதா உங்களைப் பார்க்க வருவானு நினைக்கவே இல்லை.

    நானும் தான்! நான் வளர்த்த கழுதைகள் நிறைய இருக்கே. ஒண்ணுகூட எட்டிப் பாக்கலை. என்ன ஒரு நன்றியுணர்ச்சி? இந்தப் பொண்ணு இதுவரைக்கும் எங்கிட்ட வொர்க் பண்ணலை.

    ஏன்?

    இவ கமர்ஷியல் கதாநாயகி. நடிப்பு கிடையாது. வெறும் கிளாமர் ப்ளஸ். எல்லா பெரிய ஹீரோக்களும் இவளைத்தான் சிபார்சு செய்வாங்க தன் படத்துல. மசாலா ஹீரோயின், நமக்கு சரிப்படாதுன்னு நான் இவளை அணுகவே இல்லை.

    டாக்டர் உள்ளே நுழைந்தார்.

    பரிசோதித்தார்.

    நவ் யூ ஆர் ஆல் ரைட்! நாளைக்கே வீட்டுக்குப் போகலாம். ஆனா, பூர்ண ஓய்வு தேவை. இன்னும் மூணு மாத காலம் சினிமா பற்றி யோசிக்கவே கூடாது புரியுதா?

    சரி டாக்டர்.

    அவர் போய் விட்டார்.

    ‘இந்த அடிலேருந்து நான் மீண்டு வரணும். எப்படி?’

    ஆயாசமாக இருந்தது.

    கண்களை மூடிக்கொண்டார்.

    Enjoying the preview?
    Page 1 of 1