Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மஞ்சள் வெயில்..!
மஞ்சள் வெயில்..!
மஞ்சள் வெயில்..!
Ebook138 pages47 minutes

மஞ்சள் வெயில்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை ஆறு மணிக்கே ஜோதி எழுந்து குளித்து சாமி கும்பிட்ட பிறகு, சமையல் கட்டுக்குள் நுழைந்து விட்டாள்!
 முதலில் காபி தயாரித்தாள்!
 கதிர் பின்னாலேயே வந்து விட, காபியைத் தந்தாள்!
 "உன் காபிக்கு ஈடு இணை எதுவும் இல்லை ஜோதி!"
 "காலைல புகழ்ச்சியா?"
 "இந்த கதிர் பேசற எதுவுமே பாசாங்கு இல்லை! நிஜம்னு உனக்கே தெரியும்?"
 "பொங்கல், வடை, பூரி, கிச்சடி போதுமா?"
 "எதுக்கு இத்தனை அயிட்டங்கள்?"
 "அண்ணன், அண்ணியும் வர்றாங்க இல்லையா?"
 "அவங்க நம்ம வீட்டு மனுஷங்க இல்லையா? எதுக்கு தடபுடல?"
 "அண்ணன் எதிர்பார்ப்பார்"
 "எங்கக்கா எதிர்பாக்கமாட்டா!"
 "சரி! அண்ணிக்கு உள்ள மனப் பக்குவம் மத்தவங்களுக்கு வருமா? நான் டிபனை ரெடி பண்றேன்!"
 "நீ சமையல்காரியை வச்சுக்கோணு சொன்னா கேக்கறியா?"
 "எதுக்கு? எனக்கு சமைக்கப் பிடிக்கும்! எந்த உயரத்தைத் தொட்டாலும் ஒரு பெண் மறக்கக்கூடாதது ரெண்டு! ஒண்ணு தாய்மை! அடுத்தது சமையல் கட்டு!""காலைல தொடங்கியாச்சா?"
 "ஆமாங்க! ஒரு அவசரத்துக்கு பரவாயில்லை ஆள் வச்சுக்கலாம். ஓட்டல்ல சாப்பிடலாம்! ஆனா அடிப்படைனு ஒண்ணு இருக்கே! அதை எப்படி மறக்கலாம்?"
 "ஒப்புக்கறேன்!"
 "சரி நீங்க குளிச்சிட்டு வாங்க!" "பத்து மணிக்கு புறப்படணும்!"
 "இன்னிக்குக் கொஞ்சம் தள்ளிப் போடுங்க! வந்தவங்க போன பிறகு புறப்படலாம்!"
 "அவங்க புதுசா? எப்பவும் வர்றவங்கதானே?"
 "எப்பவும் வர்ற மாதிரி இன்னிக்கு வரப்போறதில்லையே?"
 "ஜோதி?"
 "அதையும் தாண்டி ஒண்ணு இருக்குனு சொன்னவர் நீங்க?"
 "இப்ப நானும் அதைத்தான் வேற மாதிரி சொல்றேன்!"
 கதிர் கண்களை அகலமாகத் திறக்க,
 "போங்க! உங்ககூட இருபத்தி நாலு வருஷங்களா குடித்தனம் - நடத்தறேன்! எனக்குத் தெரியாதா?"
 கதிர் சிரித்தார்!
 "பொல்லாத பொம்பளைடி நீ! சரி! அரவிந்த் வர்றானா?"
 "அஞ்சலிகிட்ட கேளுங்க!"
 கதர் ஒரு நொடி நின்று ஆழமாக ஜோதியைப் பார்த்துவிட்டு உள்ளே போனார்!
 அஞ்சலி காலை எட்டு மணிக்குத்தான் எழுந்தாள்!
 மெதுவாக பல்துலக்கி, குளித்து விட்டு வருவதற்குள் ஒன்பது மணியாகி விட்டது!
 அதே நேரம் அங்கே அத்தை கமலியும், மாமா கஜேந்திரனும் தயாராகிக் கொண்டிருக்க,எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டியா?"
 "ம்! இப்ப இதெல்லாம் வேணுமா!"
 "இப்ப செய்யாம? அதுக்கான நேரம் வந்தாச்சு இல்லை?"
 "அரவிந்த்கிட்ட சொல்லலை!"
 "அவனுக்குத் தெரியாதா என்ன? சரி! நான் போய் ஆட்டோ எடுத்துட்டு வர்றேன்!"
 அவர் வாசலுக்கு வர,
 அரவிந்த் உள்ளே நுழைந்தான்!
 "என்னடா இத்தனை சீக்கிரம் வந்துட்டே?"
 "நானும் மாமா வீட்டுக்கு வர்றேன்!"
 "பாத்தியா கமலி? பய சரியா ஆஜராயிட்டான். நாங்க அங்கே போறதை உனக்கு யார் சொன்னது?"
 "அஞ்சலிதான்!"
 "போதுமா! சொல்ல வேண்டியவங்க சொல்லியாச்சு! நம்ம வேலை சுலபமாச்சு!"
 கமலி மகனைப் பார்க்க,
 அரவிந்த் எதுவும் பேசவில்லை!
 "காபி தரட்டுமா அரவிந்த்?"
 "எதுக்குமா! மாமா வீட்ல இன்னிக்கு தடபுடல விருந்தா இருக்கும்! வயிறு காலியா இருக்கட்டும்!"
 "சரி புறப்படலாமா?"
 "பய அவசரப்படறான் பாரு!"
 மூவரும் காரில் ஏற,
 அரவிந்த் காரை எடுத்தான்!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798215145470
மஞ்சள் வெயில்..!

Read more from Devibala

Related to மஞ்சள் வெயில்..!

Related ebooks

Related categories

Reviews for மஞ்சள் வெயில்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மஞ்சள் வெயில்..! - Devibala

    1

    அஞ்சலிக்கு கல்லூரி வளாகத்தில் நேர்முகம் அன்றைக்கு, குடும்பமே படபடப்பாக இருந்தது!

    அஞ்சலி அண்ணா பல்கலை கழகத்தோட இணைந்திருந்த அந்த பொறியியல் கல்லூரியில் பிடெக் நாலாவது வருஷம் படித்துக் கொண்டிருக்கிறாள்!

    அழகான பெண் - புத்திசாலி - முதல் மாணவி!

    வீட்டுக்கு ஒரே பெண்! உடன் பிறப்புகள் கூட இல்லை!

    அப்பா பிரபலமான தொழிலதிபர் - அம்மாவும் பிஸினஸில் அவருடன் இணைந்த பெண்மணி!

    எந்த நேரமும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுழலும், சுறுசுறுப்பான குடும்பம்!

    அப்பா கதிரேசன் பிஸினஸ் மானேஜ்மென்ட் படித்தார்!

    அம்மா ஜோதி எம்பிஏ படித்தவள்!

    பல ஐடி கம்பெனிகள் படையெடுக்கும் கல்லூரி. அஞ்சலிக்கு விறுவிறுப்பான நேர்முகம் நடக்க,

    அன்று இரவுக்குள் ஒரு பெரிய நிறுவனம் அவளைத் தேர்ந்தெடுத்து விட்டது! உடனே முடிவும் தெரிந்து விட, அஞ்சலி சந்தோஷமாக வெளியே வந்தாள்! மெரிட்டில் அவளை தேர்ந்தெடுத்ததாக அந்த நிறுவனம் அறிவித்தது! சென்னையில்தான் பயிற்சி காலம் என அறிவித்து விட, இரட்டிப்பு மகிழ்ச்சி!

    வெளியே வர தோழிகள், தோழர்கள் வாழ்த்து மழை பொழிந்தார்கள்.

    உனக்கு வேலையே தேவையில்லை உங்கப்பா கம்பெனியே இருக்கு!

    இல்லை! சொந்தக் கம்பெனில வேலை செய்ய நான் விரும்பலை! என் படிப்புக்கு வெளில என் திறமையைக் காட்டணும்!

    வீடு திரும்பும்போது இரவு பத்துமணி!

    அதிசயமாக அப்பா, அம்மா இருவரும் இருந்தார்கள்!

    விவரம் சொல்ல, இருவரும் உற்சாகத்தின் எல்லைக்கே போனார்கள்.

    ஒரு ரவுண்ட் வெளில போய் அனுபவத்தை சேகரிச்சிட்டு வா! அப்புறமா நம்ம கம்பெனி பொறுப்பை நீ எடுத்துக்கலாம்!

    எதுக்குப்பா?

    நீ வந்துதானேமா ஆகணும்! எனக்கும் ஐம்பது கடந்தாச்சு படிப்படியா பொறுப்புகளை உன்கிட்ட ஒப்படைக்கணுமில்லையா?

    அதுக்குத்தான் அர்விந்த் இருக்கானே?

    இருந்தாலும்? சரி! அரவிந்துக்கு தகவல் சொல்லிட்டியா?

    வாட்ஸ் அப்ல தகவல் தெரிவிச்சாச்சு!

    போன்ல பேசும்மா!

    சரிம்மா! பசிக்குது!

    எத்தனை வசதிகள் இருந்தாலும் அம்மா ஜோதிதான் சமைப்பாள்! இரவு உணவுக்கு முடிந்தவரை அனைவரும் ஆஜாராகிவிடுவார்கள். ஜோதி ஒரு மணி நேரம் முன்னதாக வந்து உணவைத் தயாரித்து விடுவாள்!

    இன்றைக்கும் இவர்கள் குளித்துவிட்டு வருவதற்குள் உணவு தயாராகி விட்டது!

    பேசிக்கொண்டே உற்சாகமாக சாப்பிட்டார்கள்.

    உங்க அக்காவுக்கு சொல்லியாச்சா?

    ராத்திரி நேரத்துல எழுப்ப வேண்டாமே?

    போன் அடிக்க, அஞ்சலி பார்த்தாள்.

    அத்தைதான்!

    எடுத்தாள்!

    அத்தே! உனக்கு நாலு தடவை முயற்சி செஞ்சேன். கிடைக்கலை! வேலை கிடைச்சிருச்சு, அத்தே!

    அர்விந்த் சொன்னான் அஞ்சலி! ரொம்ப சந்தோஷம்!

    நானும் அரைமணி முன்னாலதான் வீட்டுக்கு வந்தேன்! இனிதான் சாப்பிடணும்!

    உங்க மாமா பக்கத்துலதான் இருக்கார். பேசு!

    குடு அத்தே!

    அஞ்சலி வாங்கிக் கொள்ள,

    சந்தோஷம் மருமகளே! பிரமாதமான வேலை கிடைச்சிருக்கு உனக்கு! என் பையன் அர்விந்த் உங்கப்பா கம்பெனில வேலை பாக்கறான்! நீ வெளியே தேடிக்கிட்டே! நீயும் சீக்கிரமா உள்ளே வந்துடு!

    வேண்டாம் மாமா!

    அதெப்படி உன்னை விட முடியும்? அது போகட்டும்! காலைல வீட்ல இருப்பியா?

    இருப்பேன்!

    உங்கம்மாகிட்டக் குடு!

    அஞ்சலி தர,

    சொல்லண்ணே!

    ஜோதி! நாங்க ரெண்டு பேரும் நாளைக்கு காலைல வீட்டுக்கு வர்றோம். எங்களுக்கு அங்கேதான் டிபன்! தடபுடலா ரெடி பண்ணி வை! மருமகள் சாதிச்சிட்டு வந்திருக்கா!

    நிச்சயமா அண்ணே!

    கதிர்கிட்டக் குடு!

    ஜோதி தர,

    வாழ்த்துக்கள் கதிர்! மருமகள் சாதிச்சிட்டா! சந்தோஷத்தைக் கொண்டாட காலைல வர்றோம்!

    வாங்க மாமா!

    உணவு தயாராக சாப்பிட்டு முடித்தார்கள்!

    ஜோதி! இந்த மாசம் கடைசில நான் ஆஸ்திரேலியா போக வேண்டியிருக்கும்!

    எத்தனை நாளைக்கு?

    மூணு மாசத்துக்கு! பெரிய ப்ராஜக்ட் ஒண்ணு வருது! அதை கரெக்டா புடிச்சா, பல கோடிகள் நம்ம பக்கம்!

    எதுக்கு?

    என்ன பேசற நீ?

    உங்க உடம்பு- முன்னயமாதிரி இல்லை! பீப்பி ஷுகர்னு எல்லாமே இருக்கு! பழைய தெம்பு உங்ககிட்ட இல்லை! எங்களை விட்டுட்டு நீங்க இருக்க வேண்டாமே!

    அதுக்காக பெரிய ப்ராஜக்டை விட முடியுமா ஜோதி?

    எதுக்கு விடணும்? உங்கக்கா பையன் உங்க வலது கை! நம்ம அரவிந்துதான்! அவனுக்கு எல்லா திறமைகளும் இருக்கு! படிப்பும் இருக்கு! அவனை அனுப்புங்க!

    ஆமாம்பா! அரவிந்த் திறமைசாலி! படிக்க வச்சு ஆளாக்கினதே நீங்க? இன்னிக்கு கம்பெனியோட சகல சங்கதிகளையும் விரல் நுனில வச்சிருக்கான்! அவனை அனுப்புங்கப்பா!

    கதிர் யோசிக்க,

    என்னப்பா யோசனை?

    மூணு மாசம் வெளிநாட்ல இருக்கணும்! உங்கத்தையோட அனுமதி கேக்கணும்!

    எதுக்குப்பா? இது தொழில் - எதிர்காலம் வாழ்க்கை! அரவிந்த் சம்மதம் மட்டும் போதாதா?

    அப்படி இல்லைம்மா! உங்க மாமாவோட மூட் எப்படி இருக்கும்னு தெரியாது!

    அண்ணன் இதுல எல்லாம் தலையிடவே மாட்டார்!

    நாளைக்குக் காலைல இங்கே எதுக்கு வர்றார் தெரியுமா?

    அஞ்சலிக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்தைக் கொண்டாட! நம்ம கூடச் சேர்ந்து சாப்பிட! வேற எதுக்கு?

    அது மட்டும் இல்லை! அதையும் தாண்டி ஒண்ணு இருக்கு!

    என்னப்பா?

    அதை நான் இப்ப எதுக்குப் பேசணும்! அவரே பேசட்டும்! பதிலை நீங்க சொல்லிக்குங்க!

    அஞ்சலி திரும்பி அம்மாவைப் பார்த்தாள்!

    சரி நேரமாச்சு! போய்ப் படுங்க!

    அஞ்சலி தன் அறைக்குள் நுழைந்து உடைமாற்றிக் கொண்டாள். வாட்ஸ் அப்பில் வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணம் இருக்க,

    அப்பா பேசியது ஒருபுறம் இருக்க,

    வாட்ஸ் அப் சிணுங்கியது!

    எடுத்தாள்!

    அரவிந்த் அவளை வாழ்த்திவிட்டு நீளமாக தகவல் அனுப்பியிருந்தான்!

    அஞ்சலி பொறுமையாக அதைப் படித்தாள்!

    அவளுக்குள் ஆச்சர்யம் பூத்தது!

    நன்றாக யோசித்து அத்தை மகனுக்கு அழகான, நீளமான ஒரு பதிலை அனுப்பினாள்!

    விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள்.

    நன்றாக உறங்கத் தொடங்கினாள்!

    அஞ்சலி எதற்கும் கவலைப்படமாட்டாள்.

    மனதைப் போட்டு உழப்பிக் கொள்ள மாட்டாள்.

    படுத்ததும் உறங்கி விடுவாள்!

    அது ஒரு வரம்!

    2

    காலை ஆறு மணிக்கே ஜோதி எழுந்து குளித்து சாமி கும்பிட்ட பிறகு, சமையல் கட்டுக்குள் நுழைந்து விட்டாள்!

    முதலில் காபி தயாரித்தாள்!

    கதிர் பின்னாலேயே வந்து விட, காபியைத் தந்தாள்!

    உன் காபிக்கு ஈடு இணை எதுவும் இல்லை ஜோதி!

    காலைல புகழ்ச்சியா?

    இந்த கதிர் பேசற எதுவுமே பாசாங்கு இல்லை! நிஜம்னு உனக்கே தெரியும்?

    பொங்கல், வடை, பூரி, கிச்சடி போதுமா?

    எதுக்கு இத்தனை அயிட்டங்கள்?

    அண்ணன், அண்ணியும் வர்றாங்க இல்லையா?

    அவங்க நம்ம வீட்டு மனுஷங்க இல்லையா? எதுக்கு தடபுடல?

    அண்ணன் எதிர்பார்ப்பார்

    எங்கக்கா எதிர்பாக்கமாட்டா!

    சரி! அண்ணிக்கு உள்ள மனப் பக்குவம் மத்தவங்களுக்கு வருமா? நான் டிபனை ரெடி பண்றேன்!

    நீ சமையல்காரியை வச்சுக்கோணு சொன்னா கேக்கறியா?

    எதுக்கு? எனக்கு சமைக்கப் பிடிக்கும்! எந்த உயரத்தைத் தொட்டாலும் ஒரு பெண் மறக்கக்கூடாதது ரெண்டு! ஒண்ணு தாய்மை! அடுத்தது சமையல் கட்டு!

    காலைல தொடங்கியாச்சா?

    "ஆமாங்க! ஒரு அவசரத்துக்கு பரவாயில்லை ஆள் வச்சுக்கலாம். ஓட்டல்ல சாப்பிடலாம்!

    Enjoying the preview?
    Page 1 of 1