Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனதோடு பாடும் ராகம்!
மனதோடு பாடும் ராகம்!
மனதோடு பாடும் ராகம்!
Ebook136 pages47 minutes

மனதோடு பாடும் ராகம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அம்மா மாலதிக்கு பத்திரிக்கை தரணும். நாளைக்கு போய்ட்டு வரேன்"
 "அவ இருக்கிறது கிராமத்தில்... எப்படி போவே..."
 "இதென்னம்மா கேள்வி... பஸ்ஸில்தான் போகணும். இங்கேயிருந்து ஆட்டோவிலா போகமுடியும். அது நாற்பது கி.மீட்டருக்கு மேல் இருக்கு."
 "வேண்டாம் திவ்யா... போனில் சொல்லிட்டு. பத்திரிக்கையை கூரியரில் அனுப்பி வச்சுடு."
 "அது நல்லா இருக்காதும்மா. சின்ன வயசிலிருந்து என்கூட விளையாவை... இன்னைக்கு வரைக்கும் நட்பை மறக்காமல் இருக்கா. கல்யாணமான பிறகும், மாசத்துக்கொரு முறை... இந்த பக்கம் வந்தால் பார்க்காம போகமாட்டா... எப்படிம்மா போஸ்டில் அனுப்பமுடியும். காலையில் போனா... சாயிந்தரத்துக்குள் வந்துடுவேன்"
 "எனக்கென்னவோ உன்னை அனுப்ப இஷ்டமில்லை திவ்யா. அவ்வளவு தூரம் தனியா போகணும். கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு. அப்பாவை வேணுமினா... துணைக்கு கூட்டிட்டு போறியா"
 "நான் சின்ன குழந்தையா-அப்பாவுக்கு கல்யாண வேலை இருக்கு. போய்ட்டு வந்துடுவேன்மா. நீ கவலைபடாமல் இரு.
 முடிஞ்சா நல்ல படியா திரும்பணும்னு... உன் சாமியை வேண்டிக்க."
 "ஏன் திவ்யா... இப்படி அபசகுணமா பேசற"
 "சும்மா விளையாட்டுக்கு பேசினேன்மா. பத்திரமா வந்துடுவேன். எனக்கு பசிக்குது. சாப்பாடு எடுத்து வைம்மா."
 யோசனையுடன் உள்ளே போகிறாள் சாருமதி.
 பசுமை எழில் கொஞ்சும் கிராமம்.

கிராமத்திற்கே ஒரு தனி அழகு இருக்கிறது. பரபரப்பு இல்லாத அமைதியான சூழல்.
 சுத்தமான தெருக்கள். அடர்ந்து படர்ந்திருக்கும் மரங்கள் மரநிழலில் தின்னை அமைத்து... உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் பெரியவர்கள்.
 கம்பீரமாக தெரியும் கிராமத்து கோவில் கோபுரம்.
 சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
 ஆருரமர்ந்த அரசே போற்றி
 சீரார் திருவையாறா போற்றி
 அண்ணா மலையெம் அண்ணா போற்றி
 கண்ணார் அமுத கடலே போற்றி.
 அம்மாவாக இருந்தால், இத்தனை நேரம் இறைவனை துதிபாடி கையெடுத்து கும்பிட்டிருப்பாள்.
 திவ்யாவின் இதழ்களில் புன்முறுவல் தோன்றியது.
 மாலதி, கிராமத்து வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு, விவசாயம் பார்க்கும் கணவனின், இனிய இல்லத்தரசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
 "வா... திவ்யா... கல்யாண பொண்ணு எப்படியிருக்கே" சிநேகிதியை மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வரவேற்கிறாள் மாலதி.
 வடை, பாயசத்தோடு விருந்து சமைத்து அருகிலிருந்து சிநேகிதிக்கு பரிமாறி தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறாள்.
 "கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னாலேயே வந்துடறேன் திவ்யா. நீ சொல்லவேண்டாம். பொறுப்பாக இருந்து உங்கம்மாவுக்கு உதவியாக இருப்பது என் கடமை"
 "தாங்க்ஸ் மாலதி, உன்னை பத்தி எனக்கு தெரியாதா... உன் ஹஸ்பெண்டை மீட் பண்ணிடுவோம்னு பார்த்தேன். வெளியூர் போயிருக்கிறதாக சொல்றே. நான் கிளம்பறேன் மாலதிஇருட்டறதுக்குள் ஊர் போய் சேரணும். அம்மாவுக்கு என்னை பார்த்தால்தான் நிம்மதி வரும்.
 கல்யாண பெண் தனியாக போககூடாதுன்னு கண்டிஷன் போட ஆரம்பிச்சுட்டாங்க."
 "அவங்க சொல்றது சரிதான். நீ கிளம்பு திவ்யா. போனதும் எனக்கு போன் பண்ணு."
 தட்டில் வெத்திலை, பாக்குடன் புதுபுடவை வைத்து தருகிறாள்
 "இதெல்லாம் எதுக்கு மாலதி"
 "கல்யாண பெண், வீடு தேடி வந்திருக்கே... நீ சுமங்கலியாக சந்தோஷமாக வாழணும். எடுத்துக்க திவ்யா"
 கிராமத்தில் பஸ் புறப்பட,
 சிநேகிதியை பஸ் ஏற்றி, கையசைத்து விடை தருகிறாள் மாலதி.
 பஸ்ஸில் அதிக கூட்டமில்லை.
 ஜன்னல் ஓர சீட்டில் அமர்கிறாள். காற்றின் வேகத்தில் கற்றையாக முன் நெற்றியில் விழும் முடியை ஒதுக்குகிறாள்.
 மாலதி... இந்த கிராமத்து வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறாள்.
 அவளை போல நானும், எதுவாக இருந்தாலும் தீலிப்புடன் அனுசரித்து போக வேண்டும்.
 என் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அவர் மனம் கோணாமல் நடக்க வேண்டும்.
 எங்கள் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக... எனக்காக அவர்... அவருக்காக... நான் என்று... சந்தோஷ தென்றல் வீச... கற்பனை சிறகு விரிக்க...
 கண்களில் கல்யாண கனவு மிதக்க, லேசாக கண் அயர்ந்தவள், வேகமாக சென்ற பஸ்... ஒரு திருப்பத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோத,
 "அம்மா" என்ற அலறலுடன் வலியில் துடித்தவளாய் மயங்குகிறாள்.
 எந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பது எத்தனை உண்மை

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223991762
மனதோடு பாடும் ராகம்!

Read more from Parimala Rajendran

Related to மனதோடு பாடும் ராகம்!

Related ebooks

Related categories

Reviews for மனதோடு பாடும் ராகம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனதோடு பாடும் ராகம்! - Parimala Rajendran

    1

    எதிர் வீட்டிற்கு வந்திருக்கும் அந்த இளைஞன், திறந்திருந்த ஜன்னல் வழியாக, அழகு ரோஜாவாக பூத்திருக்கும் அந்த நிலா முகத்தை பார்க்கிறான்.

    குனிந்து டேபிலில் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். அவளின் அழகு, ஒளிவட்டமாக அந்த இடத்தை பிரகாசிக்க செய்கிறது.

    ஜன்னலில் பூத்த அழகு மலர்

    இவளை பார்த்துக் கொண்டிருந்தால் கவிதை பிறக்கும் போலிருக்கிறதே.

    அலைபாயும் அந்த நீள் விழிகள்,

    அளவோடு அமைக்கப்பட்ட நாசி... பவளத்தை தோற்கடிக்கும் உதடுகள். பிறை நிலாவாக நெற்றி, பிரம்மனின் படைப்பில்... அழகு தேவதையாக ஜொலிக்கிறாள்.

    வெளியே வருகிறாள் அந்த வீட்டின் பெண்மணி.

    என்னடா பார்த்துட்டு இருக்கே

    ஊரிலிருந்து வந்திருக்கும் மருமகனை விசாரித்தபடி, வந்தவள், அவன் கண் போன திசையை பார்க்கிறாள்.

    "யாரு... எதிர்வீட்டு திவ்யாவை பார்க்கிறியா... பாவம் அந்த பொண்ணு... அழகை அள்ளி கொடுத்த கடவுள்... அவளோட ஒரு காலை பறிச்சுட்டாரு.

    ஆக்ஸிடெண்ட்டில் ஒரு காலை இழந்து... செயற்கை காலோடு நடந்திட்டிருக்கா"

    அவன் உள்ளத்தில் ஆர்ப்பரித்த சந்தோஷ அலை அடங்க,

    சரி... வா... அத்தை சாப்பாடு போடு சாப்பிட்டு கிளம்பறேன். உள்ளே போகிறான்.

    எட்டி பார்க்கிறார் தீனதயளான்.

    உள்ளே வாங்கப்பா

    கண்களை திருத்தும் பேப்பரிலிருந்து எடுக்காமல், அப்பா வந்ததை உணர்ந்து கூப்பிடுகிறாள் திவ்யா.

    பசிக்கலையா திவ்யா. உன் வேலை இன்னும் முடியலையா

    இன்னும் நாலைஞ்சு பேப்பர் இருக்கு... திருத்திட்டா முடிஞ்சுடும்பா. ஒரு பத்து நிமிஷம் வந்துடறேன்.

    அம்மா என்ன செய்யறாங்க.

    காதில் விழலையா... அம்மா லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சாமி கும்பிட்டுட்டு இருக்கா

    அன்றவர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி!

    அலைகடல் அமுதமாக அவதரித்தெழுந்தாய் போற்றி!

    குன்றிடா அமுதத்தோடு கூடவே பிறந்தாய் போற்றி!

    குளிர்ந்த மாமதியினோடும் குடிவந்த உறவே போற்றி!

    மன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி!

    மாயவன் மார்பில் நின்றுமயிலென சிரிப்பாய் போற்றி!

    என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி!

    எளியவன் வணங்குகின்றேன். இன்னருள் போற்றி! போற்றி!

    அம்மாவின் கணீரென்ற குரலில் இனிய நாதமாக ஒலிக்கிறது பூஜைமணியின் ஓசை. தீபாராதனை நடக்கிறது.

    அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லையாப்பா

    இந்த நிமிஷம் வரை, இத்தனை கஷ்டங்கள் வந்தும் அந்த கடவுளின் காலடியை விடாமல் பிடிச்சுட்டுதானே இருக்கா.

    கண்ணுக்கு தெரியாத சக்தி, நம்மையெல்லாம் இயக்கிட்டுதான்பா இருக்குது. அதைதான் விதின்னு சொல்றோம். கஷ்டங்களிலிருந்து விடுபட கடவுள் நம்பிக்கை தேவைதான்பா திருத்திய பேப்பர்களை ஒழுங்குபடுத்தி எடுத்து வைக்கிறாள்.

    அவிழ்த்து ஓரமாக வைக்கப்பட்டிருந்த இடதுகாலை, மாட்டிக்கொண்டு எழுந்து நிற்கிறாள்.

    என்னப்பா பார்க்கிறீங்க

    கலங்கும் கண்களை துடைத்தவர், ஒண்ணுமில்லம்மா... வா போகலாம் அப்பாவின் அருகில் வந்து, அவர் தோளை தொட்டவள்,

    கஷ்டமா இருக்காப்பா. உங்க மகள் கால் இழந்து இப்படி செயற்கை காலோடு நடக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சேன்னு வருத்தப்படறீங்களாப்பா.

    பெத்தமனசு... துடிக்கதான்மா செய்யுது. ஒவ்வொரு நிமிஷமும் உன்னை நினைச்சு கவலைப்படறேன் திவ்யா

    அப்பா... என்னப்பா இது... உங்ககிட்டே எத்தனை முறை சொல்லிட்டேன். ஆக்ஸிடெண்ட்டில் காலை மட்டும் இழந்து, முழுசா உங்க முன்னால் நிக்கிறேனே... அதை நினைச்சு சந்தோஷப்படுங்கப்பா... இதையெல்லாம் அனுபவிக்கணும்னு விதி இருக்கும்போது அதை மாத்தமுடியுமா...

    நெற்றியில் விபூதி, குங்குமம் பளிச்சிட வெளியே வருகிறாள் சாருமதி.

    "நடந்ததை இன்னும் மறக்கலையா இப்ப என்ன ஆயிடுச்சி. நம்ப திவ்யாகிட்டே எந்த மாற்றமும் இல்லை.

    செயற்கை கால் பொருத்தியிருக்குன்னு சொன்னாதான் தெரியும். லேசா தாங்கி நடக்கறா... அவ்வளவுதான்.

    எதுக்கு அதை பத்தியே பேசி, நீங்களும் சங்கடப்பட்டு... அவளையும் கஷ்டப்படுத்தாதீங்க...

    நான் கடவுளை நம்பறேன். நிச்சயம் அவர் நம் திவ்யாவுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தருவாரு."

    சொன்னவள், திவ்யாவின் கண்களை நேருக்கு நேர் பார்க்கிறாள்.

    இன்னும் அந்த தீலிபனை நினைச்சுட்டு இருக்கியா திவ்யா

    இல்லம்மா... ஆனா... மறக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்

    மறந்துடு திவ்யா... உனக்கான வேலை வாழ்க்கை இதைவிட நல்லதாக கடவுள் அமைச்சு கொடுப்பாரு

    செல்போன் அழைக்கிறது.

    திவ்யா என்ன பண்றே

    ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருக்கேன்

    உன்னை வேலையை விட்டுடுன்னு சொல்றேன். கேட்க மாட்டேன்கிறியே

    ப்ளீஸ்... தீலிப்... கல்யாணம் வரைக்கும் போறேனே... கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு மாசம் இருக்கே... வீட்டில் இருந்தால் பொழுது போகாது தீலீப்

    "சரி, உன் இஷ்டம். ஆனா கல்யாணத்துக்கு பிறகு உன்னை வேலைக்கு அனுப்பமாட்டேன்.

    நீ பிள்ளைகளுக்கு பாடம் நடத்தினவரை போதும். என்னோடு எப்படி குடும்பம் நடத்தணும்னு கத்துக்க"

    என்ன தீலீப் கிண்டலா... அந்த ஸ்கூலில்தான். என்னை பார்த்து... என் மேல் ஆசைபட்டு காதலிக்க ஆரம்பிச்சிங்க...

    ஆமாம்... பக்கத்து வீட்டு பையனை, பைக்கில்" இறக்கி விட வந்தேன்.

    லேட்டா வந்ததுக்கு வாசலில் நிக்கவச்சு எத்தனை கேள்வி கேட்டே உன் மேல் கோபம் வந்துச்சு... ஆனா படபடக்கும் அந்த இமைகள்... பட்டாம்பூச்சியாக அலைபாயும் கண்கள் அதிலே மயங்கினவன்தான்... இன்னைக்கு வரைக்கும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறேன்"

    தீலீப் சொல்ல, வாய்விட்டு சிரிக்கிறாள்.

    "நான் மட்டும் என்னவாம்... இந்த இரண்டு வருஷமா உங்க பின்னாடிதானே திரியறேன்.

    ஒரு வழியாக நம்ப இரண்டு குடும்பமும், நம்ப கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் காண்பிச்சுட்டாங்க. இப்பதான் நிம்மதியா இருக்கு."

    இன்விடேஷன் பிரிண்ட் ஆகி வந்துடுச்சா திவ்யா

    நாளைக்குதான் வரும். அப்பா குலதெய்வம் கோவிலுக்குதான் முதல் பத்திரிக்கை வைக்கணும்னு சொன்னாங்க. அதற்கு பிறகுதான் எல்லாருக்கும் தரணும்

    "எங்க வீட்டில் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா வழி, அம்மா வழி சொந்தம்னு நிறைய பேர் இருக்காங்க.

    என்னோட ப்ரெண்ட்ஸ்ங்களுக்கு மட்டும்தான் நான் தர போறேன். அவங்களை இன்வைட் பண்ணும்போது நீயும் வரணும்"

    நானா... நான் எதுக்கு தீலீப்

    "ரொம்ப நல்லாயிருக்கே... இரண்டு வருஷமா ஜோடி போட்டுகிட்டு சுத்தியிருக்கோம். அது இந்த உலகத்துக்கே தெரியும். இரண்டு பேரும் நேரில் போய் அழைச்சால்தான் வருவாங்க. அதுக்கு இப்ப ஒண்ணும் அவசரமில்லை.

    கல்யாணத்துக்கு பத்து நாள் இருக்கும்போது கொடுக்க ஆரம்பிக்கலாம்."

    சரி, நான் வரேன். அதே மாதிரி என் ப்ரெண்ட்ஸ்களுக்கு தர... நீங்க என்னோடு வருவீங்களா

    அது என் பாக்கியம். ரம்யா, ஊர்வசி, மேகலான்னு எத்தனை பெண்களை பார்க்கலாம். கூடவே வந்து ‘சைட்’ அடிக்க வசதியாக இருக்கும்.

    "ஆசையை பாரு. கண்ணை தோண்டிடுவேன்.

    இந்த திவ்யாவை தவிர யாரையும் ஏறெடுத்து பார்க்ககூடாது. கல்யாணமாகட்டும். மொத்தமா என் கண்ட்ரோலில் வச்சுக்கிறேன்"

    ஆவலுடன் சேர்ந்து தீலீப் சிரிக்கிறான்.

    "திவ்யா... உன் மாமியார் தனிக்குடித்தனம் வைக்க தேவையான சாமான்களை வாங்க சொல்லிட்டாங்க.

    தீலீப் வீடு பார்க்கிறாராம். கல்யாணம் முடிஞ்சு பத்து நாளில் குடித்தனம் வைக்கலாம்ணு சொல்லிட்டாங்க."

    ஆமாம்மா. தீலீப்பும் என்கிட்டே சொன்னாரு.

    "ப்ரிஜ், டி.வி. பீரோ, கட்டில், வாஷிங்மெஷின்னு அப்பா எல்லாத்துக்கும் ஆர்டர் கொடுத்திட்டாரு திவ்யா... எனக்குதான் தலைக்கு மேலே

    Enjoying the preview?
    Page 1 of 1