Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வர்ணாவின் மரணம்
வர்ணாவின் மரணம்
வர்ணாவின் மரணம்
Ebook143 pages50 minutes

வர்ணாவின் மரணம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடுத்த பதினைந்தாவது நிமிட பயண முடிவில் மகாராணி அவென்யூ இருட்டில் ஒரே பொட்டல் காடாய் தெரிய, ஆங்காங்கே கட்டப்பட்டு இருந்த வீடுகள் முடிந்தும் முடியாத நிலையில் காட்சியளித்தன.
 இன்ஸ்பெக்டர் கேட்டார்:
 "உள்ளே இன்னமும் எவ்வளவு தூரம் போகணும்மா?"அதோ... வலது பக்கமா ஒரு ரோடு திரும்புதே... அந்த வழியா போகணும் ஸார்" மாதுரி சொல்ல, ஜீப் அந்த மண்பாதையில் தடுமாற்றமாய் பயணித்து ஹெட்லைட் வெளிச்சத்தோடு வலது பக்கமாய் திரும்பியது.
 "ஏரியா ரொம்பவும் ரிமோட்டடா இருக்கே! இது மாதிரியான இடத்தில் எல்லாம் ஏம்மா வீடு எடுத்து தங்கறீங்க...? நல்ல ரோடு கிடையாது. ஸ்ட்ரீட் லைட் இல்லை..."
 "நாளைக்கே ஏதாவது ஒரு ஹாஸ்டலுக்கு போயிடறேன் ஸார்..."
 "மொதல்ல அந்த வேலையைப் பண்ணும்மா."
 "ஸார்... என்னோட வீடு வந்தாச்சு... அதோ லெஃப்ட்ல வேப்பமரத்தோடு ஒரு வீடு தெரியுதே - அதுதான்."
 ஜீப் அந்த வீட்டு வாசலில் போய் நின்று ஹெட் லைட்டுகளை அணைத்து, என்ஜினின் மெலிதான இரைச்சலையும் நிறுத்திக் கொண்டது.
 சசிகுமார் எதிர்வீட்டை சுட்டிக் காட்டியபடி கேட்டார்:
 "அந்த வீடா?"
 "ஆமா... ஸார்..."
 "நீயும் கூட வாம்மா...!"
 "எனக்கு பயமாயிருக்கு ஸார்."
 "போலீஸ் இருக்கும்போது என்னம்மா பயம். தைரியமா வாம்மா."
 இன்ஸ்பெக்டர் சசிகுமார் சொல்லிக் கொண்டே எதிர்வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட, மாதுரி அந்தக் குளிரிலும் வியர்த்த முகத்தோடு பின் தொடர்ந்தாள்.
 எல்லோருமாய் ரோட்டைக் கடந்து அந்த வீட்டுக்குமுன் இருந்த சிறிய காம்பௌண்ட் கேட்டுக்கு முன்பாய் நின்றார்கள்.
 இன்ஸ்பெக்டர் தனக்குப் பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிளிடம் குரலைத் தாழ்த்தினார்.
 "சுப்புராஜ்... நீயும் தனகோடியும் வீட்டுக்குப் பின் பக்கமாய் நில்லுங்க."எஸ்... ஸார்..."
 கான்ஸ்டபிள்களில் இரண்டு பேர் இருட்டில் தெரிந்த சோகையான வெளிச்சத்தின் உதவியோடு குற்றுச் செடிகள் மண்டிய வழியில் நடந்து பின்பக்கத்தை நோக்கிப் போக, இன்ஸ்பெக்டர் வீட்டின் படிகளில் ஏறி கதவைத் தள்ளினார். மாதுரி பின்பக்கம் இருந்து குரல் கொடுத்தாள்:
 "ஸார்... வீடு பூட்டியிருக்கு."
 பூட்டை இழுத்துப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
 "ஆள் வெளியே போயிட்டான் போலிருக்கு!"
 கான்ஸ்டபிள் சொன்னார்.
 "ஸார்... சைடுல ஜன்னல் ஒண்ணு திறந்திருக்கு!"
 இன்ஸ்பெக்டர் ஜன்னலுக்குப் பக்கமாய்ப் போய் நின்று வீட்டுக்குள் எட்டிப்பார்த்தார். உள்ளே இருட்டு கொட்டப்பட்டு - பரப்பி வைத்த கறுப்புத்துணி போல் தெரிந்தது. தன்னுடைய செல்போனை எடுத்து டார்ச்சை உயிர்ப்பித்துக் கொண்டு அதனுடைய வெளிச்சத்தை உள்ளே அனுப்பி இருட்டைக் கழுவினார்.
 பொருள்கள் பார்வைக்குத் தட்டுப்பட ஆரம்பித்தன.
 டி.வி, கட்டில், கொடிக் கயிற்றில் தொங்கிய துணிமணிகள், கீழே இறைந்து கிடந்த செய்தித்தாள்கள், சுவரோரமாய் உருண்டு கிடந்த இரண்டு டம்ளர்கள், உடைந்த ஒரு பீங்கான் தட்டு, சிதறிக் கிடந்த வளையல் துண்டுகள், உதிரி மல்லிப்பூக்கள்.
 இன்ஸ்பெக்டர் மாதுரியிடம் திரும்பினார்.
 "நீ சொன்னது உண்மைதாம்மா... வீட்டுக்குள்ளே ஒரு கை கலப்பு நடந்திருக்கு..."
 இன்ஸ்பெக்டர்க்குப் பின்னால் நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மாதுரி பயக்குரலில் சொன்னாள்:
 "ஸார்... அந்த டி.வி.க்கு வலது பக்கம் இருக்கிற சுவரைப் பாருங்க..."பார்த்தார்.
 அந்தப் பகுதி முழுவதும் சிவப்பாய் சின்னச் சின்ன புள்ளிகள். சில புள்ளிகள் வழிந்து சிறிய கோடுகளாய் மாறியிருந்தது

Languageதமிழ்
Release dateDec 14, 2023
ISBN9798223356745
வர்ணாவின் மரணம்

Read more from Rajeshkumar

Related to வர்ணாவின் மரணம்

Related ebooks

Related categories

Reviews for வர்ணாவின் மரணம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வர்ணாவின் மரணம் - Rajeshkumar

    ஏடு இட்டோர் இயல்

    பேரன்புமிக்க பெருந்தகைகளே...!

    வணக்கம்!

    நான் நலம். உங்கள் நலமும் மேன்மையாய் இருக்கும்.

    சிறகுகள் விரிந்து எண்ணங்களைத் தூக்கிச் செல்கிறது.

    ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் கடல் அளவு வாழ்க்கையை விட தெள்ளத் தெளிவாய் ஓடும் சிறிய நீரோடை வாழ்க்கைதான் சுகம்.

    கடலில் ஆழமும் தெரியாது; காலமும் தெரியாது.

    ஆளைக் கொல்லும் சுறாக்கள் நடுவில் - சுருட்டிப் போடும் சுனாமியை சொந்தமாகக் கொண்ட கடலைவிட - கால்அளவு நீர், பன்னீர் போன்ற சுவை.

    குஞ்சு மீன்கள் நம் கால்களில் கிச்சுகிச்சு மூட்ட - கடிக்கும் மீன்குஞ்சுகளின் சுறுசுறுப்பு, கண்கள் மூலம் இரத்தத்திற்கு சுறுசுறுப்பை... சுத்திகரித்து அனுப்புகிறது.

    கடல் அளவு பரந்த அந்த வனாந்தரத்தில் கொன்று - கொத்திச் செல்ல இராட்சச கழுகுகள்தான் தெரியும்.

    இங்கே... நீரோடையில் - குயில், கரிச்சான் குஞ்சு, கிளிகள், அதைச் சுற்றி வண்ணப் பூக்கள் இதமான காற்றில் ஆடுவது நர்த்தகிகளின் நாட்டியம் போல் இருக்கும்.

    இன்சுலின் போட்டாலும் இறங்காத சர்க்கரைக் கொதிப்பு, இந்த நீரோடை ஓசைக்கு - மகுடிக்கு மயங்கியதுபோல - மனம் அடங்கி, உள் உடம்பின் இரசாயன மாற்றங்களை செம்மைப் படுத்தி விடும்.

    ஓடையின் ஓசையும், பறவைகளின் கானங்களும், கர்நாடக இசையையும் மிஞ்சும் இளையாராஜவின் - ஏர்.ஆர்.ரகுமானின் இசைக்கு எசப்பாட்டு பாடும்...

    அந்த ரம்மியமான இடத்தில் இல்லம் கொண்டவன்தான் நிஜ கோமகன்.

    நானும் அண்ணன் ராஜேஷ்குமாரும், பர்லியாறு பழத்தோட்டத்தின் உள்ளே ஓடும் நீரோடையை அனுபவித்திருக்கிறோம்.

    கோவை - பாலக்காடு சாலையில் ஆள் அரவம் இல்லாத இடத்தில் காரில் கணக்கு வழக்கு இல்லாமல் பேசுவது...

    சிறுவாணி அணைக்கு சென்ற போது - நான் பத்திரிகையாளன் என்பதால் அனுமதிக்கப்படவில்லை. காரணம், நான் எதையும் எழுதிவிடுவேனாம். மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் – அதை ஒட்டிய பகுதிகளில் பலமணி நேரம் பேசியது...

    ஈஷாவும், கார்னியாவும் வியாபிக்காத அந்தக் காலத்தில் நாங்கள் வலம் வந்த அந்தத் தடங்கள் பசுமையானது.

    நான் இருந்தால் அந்த இடம் நகைச்சுவையாயிருக்கும். அண்ணன் ராஜேஷ்குமார் இருந்தால் அன்பு அன்னநடை போடும். இருவரும் சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமா!

    சொல்ல மறந்து விட்டேன். நான் சொன்னது கேட்டு ‘நானும் வரட்டுமா?’ எனக் கேட்டுவிடாதீர்கள்.

    நாங்கள் இருவரும் இருக்கும்போது மற்றவர்களை மறந்து விடுவோம்...

    அங்கே - எங்கள் நினைவுகள் எல்லாம் க்ரைம் நாவல் பற்றியும் அதன் வாசகர்களாகிய உங்களைப் பற்றியும் தான்...!

    அதே லவ்வுடன்,

    ஜி. அசோகன்

    ராஜேஷ்குமாரின் முகநூல்

    அன்பிற்குரிய வாசக உள்ளங்களே!

    வணக்கம்

    இன்றைக்கு நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிற விஷயம் நம் உடம்பின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. சென்ற மாதம் சென்னிமலையைச் சேர்ந்த டாக்டர் கோவிந்தராஜ் அவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்வி கேட்டார்:

    என்ன ராஜேஷ்குமார்... நம்முடைய உடம்பில் உள்ள எந்த உறுப்புக்கு ‘மெடிக்கல் ஷாப்’ என்று பெயர்?

    நான் கணையம் என்று சொன்னதும் அவர் மெள்ளச் சிரித்தார்.

    கணையம் அல்ல - கல்லீரல் என்றார்.

    எப்படி?

    "தினசரி நாம் நூறு பர்சென்ட் சுகாதாரமாய் சாப்பிடும் உணவில் கூட குறைந்த பட்ச நச்சுப் பொருட்கள் இருக்கவே செய்கிறது. உதாரணமாக காப்பியில் காபின், புகையிலையில் நிகோடின், ஆல்கஹால் நச்சு, மெடிக்கல் வேஸ்டேஜ் போன்றவை அப்படியே ரத்தத்தில் கலந்து சென்றால் இதயம் ஒரு கழிவுக் கூடமாக மாறிவிடும். இந்த நச்சுக்கள் எல்லாம் இதயத்திற்கு போவதற்கு முன்பாக புத்திசாலித்தனமாய் கல்லீரல் ஃபில்டர் செய்து விடுகிறது. அதோடு ரத்தமும் ‘திமு திமு’வென்று நுழைந்து இதயத்தைத் திணறடித்து விடாதிருக்க, அதிகப்படியான ரத்தத்தை ஸ்பாஞ்ச் போல் உறிஞ்சி உப்பிக் கொண்டு ரத்த ஓட்டத்தை ரெகுலேட் செய்கிறது. தவிர ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துதல், ஹார்மோன் சுரப்பிகளைக் கண்காணித்தல், ரத்தம் உறைதல் போன்ற 500க்கும் மேற்பட்ட வேலைகளை சின்சியராகக் கல்லீரல் செய்துகொண்டு இருக்கிறது. அதுவும் ஒரு கேஷுவல் லீவுகூட போடாமல் கர்மமே கண்ணாக தீவிரமாய் பணியாற்றிக் கொண்டு இருக்கிறது.

    மேலும் குடிமகன்கள் விஸ்கி, பிராந்தி, சாராயம் போன்ற உற்சாக பானங்களை குவார்ட்டர் குவார்ட்டராய் விழுங்கி கல்லீரலுக்கு ஓவர்லோடு கொடுப்பார்கள். அதுவும் முக்காமல், முனகாமல், சலித்துக் கொள்ளாமல் ஓவர் டைமில் வேலை பார்த்து ரசாயனக் கழிவுகளைத் தள்ளுகிறது. ஒரு ஸ்டேஜில் தன்னால் தாள முடியாத வேலைப்பளுவின் காரணமாய் பிரிக்க முடியாத நச்சுக்களை - வேறு வழியில்லாமல் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு - ரத்த ஓட்டத்தில் கலக்க விட்டு விடுகிறது.

    அந்த சமயத்தில்தான் கல்லீரல் பாதிப்பு அடைந்து ஜாண்டீஸ் எனப்படும் காமாலை நோயாக மாறுகிறது. உண்மையில் காமாலை என்பது நோயே அல்ல. அது கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறி.

    பொதுவாக லிவர் ‘டிஸ் ஆர்டர்’களுக்கு ஆங்கில மருத்துவம் உதவாது என்கிற ஒரு தவறான நம்பிக்கை இருந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் இயற்கை மருத்துவம் என்று சொல்லிக் கொண்டு கீழாநெல்லிச் செடியைத் தேடிப் போவது கூட பரவாயில்லை. ஆனால் பலர் கீழாநெல்லி வேரை ரிஸ்ட் வாட்ச் போல் மணிக்கட்டில் கட்டிக் கொள்வதும், தண்ணீரை மந்திரித்துக் குடிப்பதும்தான் ஹைலைட் சோகம்.

    உண்மையில் கீழாநெல்லி வேர், அதன் இலைகள், காய்கள் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவைதான். இதை உட்கொண்டால் ‘ரீஜெனரேஷன்’ வேகம் அதிகமாகி காமாலை நோயைக் குணப்படுத்துவது உண்மைதான். இந்த உண்மையை மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

    எலிகளுக்கு கார்பன் டெட்ரோ குளோரைடு மூலம் கல்லீரல் பாதிப்பை உண்டாக்கி காமாலை நோயை வரவழைத்து பின் கீழா நெல்லி பவுடரைத் தண்ணீரில் கலந்து கொடுக்கப்பட்டதில் மேற்படி உண்மை கண்டறியப்பட்டுள்ளது."

    சூப்பர்.

    க்ராஸ்டாக்ல யாரு?

    ஸார்... நான் சுவாமிநாதன்.

    மன்னை சுவாமிநாதனா?

    ஆமா ஸார்.

    சுவாமிநாதன்! நீங்க எனக்கு எழுதின நீண்ட லெட்டர் வந்து சேர்ந்தது. உங்க அன்புக்கு நன்றி.

    ஸார்... நன்றியை அப்படி தள்ளி ஓரமா வெச்சுட்டு அடுத்த க்ரைம் நாவலோட டைட்டிலைச் சொல்லுங்க.

    டைட்டில்தானே... இதோ...

    சொல்லுங்க ஸார்...

    யுத்த சத்தம்.

    என்ன ஸார் ராணுவக் கதையா?

    வெயிட் அண்ட் ஸீ.

    மிக்க அன்புடன்

    ராஜேஷ்குமார்

    ராஜேஷ்குமாரிடம் கேளுங்கள்

    * கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் பேசிக் கொள்வதற்கும், இரண்டு மாணவிகள் பேசிக் கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

    (பா.செங்குட்டுவன், நாமக்கல்)

    ** மாணவிகள் பேசிக் கொண்டால்....

    ‘ப்ரீத்தி... இன்னிக்கு நீ ரொம்பவும் அழகாயிருக்கே.’

    ‘தேங்க்ஸ்... ரேகா... நீயும் இன்னிக்கு அசத்தறே...ஹேர்ஸ்டைல் பிரமாதம்.’

    மாணவர்கள் பேசிக் கொண்டால்...

    ‘என்னமோ தெரியலைடா மச்சி...நீ இன்னிக்கு இந்த டிரஸ்ல அழகாயிருக்கே’

    ‘ஸாரிடா... மாப்ளே...கையில காசு இல்ல’

    * நம்முடைய வாழ்க்கை என்னும் திரைப்படத்தின் இடைவேளை எது?

    (கிருஷ்ணகுமார், விசாகப்பட்டினம்)

    ** மூக்குக் கண்ணாடியை எங்கே வைத்தோம் என்று தேடும் நேரம்.

    * ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாரதி பாடியும் ஜாதி இன்னமும் ஒழியவில்லையே?

    (வி.சாரதி, உதகை)

    ** ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவர் குழந்தைகளுக்குத்தான் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்.

    பெரியவர்களுக்கு சொன்னால் அவர்கள் கேட்கமாட்டார்கள் என்று பாரதியாருக்குத் தெரியாதா என்ன?

    * ஏடாகூடமாய் ஒரு பொன்மொழி சொல்ல முடியுமா?

    ( நவநீதகிருஷ்ணன், சென்னை)

    ** தூண்டிலில்

    Enjoying the preview?
    Page 1 of 1