Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு மலரின் பயணம்!
ஒரு மலரின் பயணம்!
ஒரு மலரின் பயணம்!
Ebook141 pages53 minutes

ஒரு மலரின் பயணம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடித்து முடித்து காலி கோப்பையை டீப்பாய் மீது வைத்த சிவராமன், பவ்யமாய் பைலை எடுத்து கையெழுத்துப் போட வேண்டிய இடங்களை காட்டினார்.
 புஷ்பலிங்கம் போட்டார்.
 "இன்னைக்கு பாங்க்லேர்ந்து பத்து லட்சம் எடுக்க வேண்டியிருக்கும்ணா"
 "ஈஸ்வரி பீரோவுல இண்டியன் பேங்க் செக்புக் இருக்கும். எடுத்துட்டு வா"
 ஈஸ்வரி எடுத்து வந்து கொடுத்ததும் நாலைந்து செக்கில் கையெழுத்துப் போட்டு தம்பியிடம் நீட்டினார்.
 "அடிக்கடி என்னை தொந்தரவு பண்ணாதேப்பா" என்றவர், "வேற எதிலேயாவது கையெழுத்து போட வேண்டியிருக்கா?"
 "இல்லேண்ணா... அவ்வளவுதான். நான் கிளம்பட்டுமா?"
 "ஏண்டா பறக்கிறே? சாப்பிட்டுப் போயேன்"
 "ஆச்சுண்ணா... முடிச்சிட்டுத்தான் வந்தேன்"
 "எங்கே ஹோட்டல்லதானே? போடா... எவ்வளவு சொன்னாலும் நீ திருந்த மாட்டே. கடல் மாதிரி வீடு இருக்கு இங்க வந்து இருன்னா கேக்கறதில்லே. தனி ரூம் எடுத்து தங்கியிருக்கே. நாப்பது வயசுக்கு மேலேயே ஆயாச்சு. கல்யாணம் பண்ணிக்கடான்னாலும் இப்ப வேணாண்ணா நான் நல்ல உயர்ந்த இடத்துக்கு வரணும். அதுவரைக்கும் அந்த பேச்சே எடுக்காதீங்கன்றே. ஏன் இப்ப நான் கம்பெனி பொறுப்புக்கள் அத்தனையும் கொடுத்து நல்ல பொஸிஷன்ல தானே வச்சிருக்கேன்? என்னமோ போ!"
 "வரட்டுமாண்ணா டைமாயிடுச்சி" சிவராமன் எழுந்து கொண்டார்.
 "கழட்டிக்கறியா? நல்ல ஆளுப்பா நீ! சரி... போய் வா! நான் வரணுமா ஆபீசுக்கு?அவசியமில்லேண்ணா நான் பார்த்துக்கறேன்" என்றபடி போய் விட்டார் சிவராமன்.
 புகைத்து முடித்த பைப்பினுள்ளிருந்த சாம்பலை ஆஷ்ட்ரேயில் கொட்டி விட்டு வாட்சைப் பார்த்தார்.
 "என்ன பண்றா இன்னும்? வரச் சொல்லு ஈஸ்வரி. பசிக்குது" புஷ்பலிங்கம் குரலில் லேசாய் சலிப்பு தென்பட்டது.
 "தன்ராஜை பத்து மணிக்கு சோழாவுல மீட் பண்றதா சொல்லியிருக்கேன். கரெக்ட் டயத்துக்கு போய் சேரணும்"
 "ஹாய் டாடி... குட்மார்னிங் மம்மி குட்மார்னிங்" முயல் போல் மாடிப்படியில் குதித்தோடி வந்து கொண்டிருந்தாள் சௌம்யா.
 "வாடா... என்ன இவ்ளோ லேட்? டாடி காத்திருப்பேன்னு தெரியாதா?"
 "அவசரம்னா... நீங்க சாப்பிட்டு போயிருக்கலாமே டாடி! எனக்காக ஏன் வெய்ட் பண்றீங்க?"
 "என் அம்முவ விட்டுட்டு நான் என்னைக்காவது தனியா சாப்பிட்டிருக்கேனா?"
 செளம்யா அப்பாவின் அருகே அமர்ந்து செல்லமாய் கன்னத்தில் முத்தமிட்டவள் உடனடியாக முகம் சுளித்தாள்.
 "உவ்வே... ஒரே பேட் ஸ்மெல்! ஸ்மோக் பண்ணீங்களா?"
 "ஹி... ஹி... ஒண்ணே ஒண்ணுதான்"
 "ஒரு சிகரெட்டா? ஒரு பாக்கெட்டான்னு நீயே கேளு சௌமி! டாக்டர் என்னதான் அட்வைஸ் பண்ணாலும் கேக்கறதில்லே! நீ கேட்டாவது இந்த பழக்கத்தை விடறாரா பார்க்கலாம்" ஈஸ்வரி குறைபட்டுக் கொண்டாள்.
 "ஏம்ப்பா? இவ்ளோ நாத்தம் அடிக்கிற சிகரெட்டை பிடிக்கறதால உங்களுக்கென்ன லாபம்?"
 "ரொம்ப பெரிய மனுஷி! வா... வந்து உட்காரு... சாப்பிடலாம்! எடுத்து வை ஈஸ்வரி"
 "இந்த விஷயத்திலே மட்டும்தான் உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை டாடி! உடம்புக்கு கெடுதல்னு தெரிஞ்சும் செய்யறது தப்புதானே? மம்மி கூட கொஞ்சம் கெட்டுப் போயிட்டாங்கஏம்மா? அவளும் சிகரெட் பிடிக்கிறாளா?"
 "ஐயே... அதில்லேப்பா! மத்தவங்க எச்சிலை சாப்பிடறது பேட் ஹாபிட்தானே?"
 "ஆமாம்"
 "மம்மி... நீங்க சாப்பிட்டு மிச்சம் வைக்கறதை எல்லாம் சாப்பிடறாங்க... சீச்சீ!'' என்று சொல்லி விட்டு மாட்டிக்கிட்டியா? என்பது போல் அம்மாவைப் பார்த்து கண்ணடித்தாள்.
 "கடவுளே... ஏய் செளமி... எதையெதை சொல்றதுன்னு வெவஸ்தையே இல்லையா?" புவனேஸ்வரி அதட்டினாள்.
 பளீரிட்ட அந்த பொலிவான முகத்தில் நெற்றியிலும் வகிட்டிலும் இட்டிருந்த குங்குமம் போல் முகம் வெட்கத்தில் சிவந்து போனது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 13, 2023
ISBN9798223515852
ஒரு மலரின் பயணம்!

Read more from R.Manimala

Related to ஒரு மலரின் பயணம்!

Related ebooks

Related categories

Reviews for ஒரு மலரின் பயணம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு மலரின் பயணம்! - R.Manimala

    1

    மழை சீறலாய் பூமியை குதறிக் கொண்டிருந்தது. கார் வைப்பர் தண்ணீரை இப்படியும் அப்படியும் தள்ளி விட்டும் விடாப்பிடியாய் மறுபடி நனைத்துக் கொண்டிருந்ததை குதூகலம் கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் சௌம்யா! ஆவலில் கண்கள் விரிய, பூஞ்சிரிப்பில் உதடு பிளந்து பற்கள் மின்ன... வெளியே கையை நீட்டினாள். மழை முத்துக்கள் ஒரு கையளவு சேர்ந்ததும் அதை அப்படியே பக்கத்திலிருந்த மிருதுளா மீது விசிறி அடித்தாள்.

    ஏய்... என்ற செல்லக் கோபத்தோடு செளமியின் தொடையில் தட்டினாள்.

    என்ன செளமி விளையாட்டு இது? போதும் வண்டிய எடு! டைமாகுது. டிக்கெட் கிடைக்காமப் போயிடும். அப்புறம் கிளாசை கட் அடிச்சதுக்கு எந்த பலனும் இல்லாமப் போயிடும் பின் சீட்டிலிருந்த செலின் கெஞ்சலாய் கேட்க...

    பிக்சர் போயே ஆகணுமா? அதோ பார்! மழை எவ்ளோ அழகா பெய்யுது! இந்த நேரத்துல பீச்சுக்குப் போனா எப்படியிருக்கும்?

    பார்க்கறவங்க இதுங்க மெண்டல் ஆஸ்பிடல்லேர்ந்து தப்பிச்சு வந்ததுங்கன்னு நினைச்சுக்கப் போறாங்க... அய்யோ, டைமாறதும்மா... ப்ளீஸ்... சீக்கிரம் போயேன் மிருதுளா கெஞ்சவும்... மனசேயின்றி ஸ்டீரியங்கைப் பற்றினாள்.

    பொதுவாகவே இதுபோன்று தோழிகளோடு சினிமாவிற்கு வரும் ரகமில்லை செளம்யா. பீச், ஓட்டல் என்று மட்டும் சுற்றுவாள். தியேட்டருக்கு வந்து படம் பார்க்கவெல்லாம் பிடிக்காது. நிறைய கூட்டத்தைப் பார்த்தாலே அவளுள் ஒரு சலிப்பு ஏற்படுவது உண்டு. எந்த சந்தோஷமான விஷயம் அவளை பாதித்தாலும் கைதட்டி. பலமாய் சிரிப்பாள். ஆனால் வெளியில் இப்படி சிரித்தால் பலரின் கேலி பார்வைக்கும் ஆளாவதால்... அந்த வெளிப்படையான சந்தோஷமெல்லாம் தன் வீட்டோடு வைத்துக் கொள்வாள்.

    பெற்றவர்களுக்கு பிள்ளைகளால், முக்கியமாய் பெண்ணை பெற்றவர்களுக்கு ஏற்படும் பெரிய நிம்மதி கன்னி மனது கல்லடிப்படாது இருப்பதில்தான்.

    பனிரெண்டு வயதிலேயே பாய் பிரண்ட் இடுப்பில் கைபோட்டு செல்லும் மாடர்ன் யுகத்தில் தன் மகள் கிளீன் சிலேட்டாய் இருப்பதில் புவனேஸ்வரிக்கு மகா பெருமை!

    மத்த பெண்களைப் போல் ஒரு ஆபாச பேச்சு இல்லை. டி.வி.யில் ஆணும் பெண்ணும் கட்டிப் பிடித்து பாட்டுப் பாடினால் கூட முகம் சுளிக்கும் பால் மனம். ஒருநாள் கவனக்குறைவால் இவள் கார் சக்கரத்தில் அரைபட்டு இறந்த வெள்ளாட்டுக் குட்டிக்காக ஒருநாள் முழுக்க சாப்பி டாமல் கண்ணீர் வடித்த இரக்க சுபாவம். அதனாலேயே... தன் மகளைப் பற்றி அதிகமாய் பயமின்றி இருந்தாள்.

    செளம்யா... நல்ல அழகு! சிவப்பும் வெளுப்பும் கலந்த நிறம். பெண்களுக்கு உடல் மறைக்க நகை போடுவதில் உள்ள ஆபத்தை விட, பளீரென அடிக்கும் அழகில்தானே விபரீதமே வருகிறது. செளம்யாவின் மனதை அவள் வயதுக்கேற்றபடி பக்குவப்படுத்த அவள் விரும்பியதே இல்லை. அந்தக் குழந்தைத்தனம்தான் செளம்யாவிற்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்!

    கல்லூரி விட்டு வீட்டிற்கு வந்தால் தன் செல்ல நாய்க்குட்டி பப்பியோடு பொழுதை போக்குவாள். அம்மாவோடு கேரம் விளையாடுவாள். படிப்பாள், சாப்பிடுவாள். சாப்பிட்டதும் தூங்கி விடுவாள். பணக்கார பெண்களுக்கே உரிய ஆணவமோ, அடாவடியோ... எதுவுமே அவளை தொட்டதில்லை.

    அப்படிப்பட்டவளை தியேட்டரில் போய் உட்கார வைத்தால்? அதுவும் காதல் படம்!

    படம் முடிந்ததும் தலை பாரமாய் வலித்தது. மௌனமாய் நடந்து வந்து காரில் அமர்ந்தாள்.

    சூப்பர் படம்ப்பா

    நம்பறதுக்கு கஷ்டமா இருந்தாலும்... அதை முரண்பாடே இல்லாம ஏத்துக்க வச்சுட்ட சாமர்த்தியம் கதையில இருக்கு. ஆனா இப்போ உள்ள காதலெல்லாம் கண்கள்ல ஆரம்பிச்சி உதட்டுலதான் முடியுது. இல்லையா செலின்? மிருதுளா உதடு மடித்து குறும்பாய் கேட்கவும் செலின் முகம் இருண்டது.

    அதை ஏன் என்கிட்ட கேக்கறே?

    ஓரளவு நம்ம குரூப்ல லவ் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவ நீதானே! ஏதோ அறியா பசங்க நாங்க. சொன்னா எங்களுக்கும் ஹெல்பா இருக்குமில்லையா?

    ச்சை! இந்த உலகத்துல சந்து பொந்துல உக்காந்து லவ் பண்ணாலும் கண்டுபிடிச்சிடறாளுங்கப்பா

    நொந்துக்காதே! நீ பிரேமை கிஸ் அடிச்சப்ப. சத்தியமா நான் பார்க்கலப்பா! ச்சீ... ரொம்ப மோசம். இப்படியா கடிக்கறதுன்னு நீ சொன்னதுக் கூட எங்காதுல விழவேயில்லை

    ஏய்... என்றாள் பயமாய். எப்ப... எப்ப பார்த்தே இதெல்லாம்?

    போன வாரம் ஈவினிங் ஷோ ஆனந்த்ல படம் பார்க்க மம்மி டாடி யோட வந்தப்ப எங்க சீட்டுக்கு முன்னாடி சீட்ல உக்காந்திட்டிருந்தியா இல்லையா? ஹும்... படமெங்கேப் பார்த்தேன்? அங்கே இங்கே அசையாம இண்டர்வெல்லுக்கு கூட எழுந்து போகாம இருந்த உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணலை. தவிர என் பாரென்ட்ஸ் முன்னால ஒரு டிவைன் லவ்வர்ஸ டிஸ்டர்ப் பண்ண மனசே கேக்கலை. ஆனாலும் ரொம்ப கடியோ?

    ஓ ஜீஸஸ் என்றபடி வெட்கமும் அவமானமுமாய் சீட்டில் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

    ஏய் என்ன ஆச்சு? மிருதுளா பதறினாள்.

    .....

    "எனக்கு தெரிஞ்சு போச்சுன்னு பீல் பண்றியா? இங்கே பார் செலீன்! நான் உன்னை கிண்டல் பண்ணேனேயொழிய அதை தப்புன்னு சொல்லலை. நிறைய பேர் காதல், செக்ஸ்னாலே அலர்றாங்கப்பா! திஸ் இஸ் பேட்... கல்யாணத்துக்கு முன்னால நம்மோட லைப் பார்ட்னரோட குணம் நம்ம டேஸ்டுக்கு ஒத்து வருதான்னு பார்க்கறதோட கழுத்தை நீட்டி திருமதியாயிடறது சரியில்லை. எத்தனை திருமணங்கள் பொருத்தமில்லாத, திருப்தியில்லாத செக்ஸால கோர்ட்ல டிவோர்ஸ் வரைக்கும் போறாங்க தெரியுமா? இது ரொம்ப முக்கியம் செலின். ரெண்டாம் பட்சம்னு ஒதுக்கற இதுதான் தாம்பத்யத்தோட தலைவிதியையே மாத்துது. ஐ பிராமிஸ்... நிச்சயமா நானும் லவ் பண்ணுவேன். உறவும் வச்சுப்பேன். அதுல திருப்தி ஏற்பட்டா மட்டுமே...’’

    ஸ்டாப்... ஸ்டாப்... நீ நிஜமாவே இண்டியன் லேடிதானா? இது மோசமான டாபிக் மிருதுளா! எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். பிடிச்ச எந்த பொருளையும் சின்ன குறையிருந்தாலும் ஏத்துக்கறதுக்கு மனசு பக்குவப் படணும். சப்போஸ், உனக்கு அந்த பிரண்டோட அப்ரோச் பிடிக்கலேன்னா வேற ஒருத்தர்கிட்டேயும் டெஸ்ட் பண்ணுவியா? செலின் கோபமாய் கேட்டாள்.

    வொய் நாட்? அதிலென்ன தப்பு?

    தப்புதான். எல்லாமே தப்புதான். நான் லவ் பண்றவதான். பார்க், தியேட்டர்னு சந்தர்ப்பம் அமையற இடங்கள்ல சின்ன சின்ன உரசல்களோட சந்தோஷப்பட்டுக்கறோம். தட்ஸ் ஆல்! ஆனா எந்த சந்தர்ப்பத்திலேயும் லிமிட் மீற மாட்டோம். அந்த விஷப்பரீட்சையில இறங்கவும் மாட்டோம் என்று ஆணித்தரமாய் கூறிவிட்டு அப்போதுதான் செளம்யாவைப் பார்த்தாள்.

    திடுக்கிட்டாள்.

    முகமெல்லாம் சிவந்து, கண்கள் பளபளத்துக் கொண்டிருந்தது.

    செளமி... அழுதியா என்ன?

    ம்ஹூம்...

    பார்த்தா அழுத மாதிரிதான் இருக்கு. என்னாச்சு உனக்கு?

    பச்... விடு

    சொல்லாம விடப் போறதில்லை மிருதுளா அவள் தோளைப் பிடித்து அழுத்தினாள்.

    பாவமில்லே அவ.

    யாரு?

    படத்திலே அவனை உயிருக்குயிரா காதலிச்சா. ஆனா அவன் அவளைக் கட்டிக்காம வேற ஒருத்திய கட்டிக்கிட்டானே... அவ மனசு என்ன பாடுபடும்? வேதனைப்படும்?

    அட ராமா! தலையில் கை வைத்துக் கொண்டாள் மிருதுளா.

    அதுக்கா அழுதே? நீயென்ன சின்னக் குழந்தையா? நிஜத்துக்கும் சினிமாவுக்கும் வித்தியாசமில்லையா? பதினெட்டு வயசுப் பொண்ணு! பணக்காரி... அழகான காலேஜ் ஸ்டூடன்ட்! சினிமாவில வர்ற டிராஜடி சீனைப் பார்த்து அழுதான்னு சொன்னா... அவமானம் தாங்காம எல்லா காலேஜ் ஸ்டூடன்சும் ஸ்டிரைக் பண்ணி உனக்கு டிஸ்மிஸ் ஆர்டர் தர்ற வரை ஓய மாட்டாங்க. வயசுக்கேத்த மனப்பக்குவமே உனக்கில்லே... பயமா இருக்குடி உன்னைப் பார்த்தா. நீ நிறைய தெரிஞ்சிக்கணும் சௌமி! அதுக்கு முதல் காரியமா... நீ யாரையாவது லவ் பண்ணு கவலையும் கிண்டலுமாய் குரல் ஒலிக்க...

    வேணாம்ப்பா! அவ இப்படியே இருக்கட்டும். உன் பாரீன் கல்ச்சரெல்லாம் அவளுக்கு சொல்லித் தந்துடப் போறே? அவ மனசுல நஞ்சை கலக்காதே செலின் தடுத்தாள்.

    சௌம்யா சில கணங்கள் கண் மூடினாள்.

    இதயத்தில் புதைந்திருந்த அந்த உருவம் மிக மங்கலாய்... எழுந்து கண்களில் வந்து நின்றது.

    செளமி... சௌக்கியமா? என்றான் கரகரப்பாய்!

    2

    குடித்து முடித்து காலி கோப்பையை டீப்பாய் மீது வைத்த

    Enjoying the preview?
    Page 1 of 1