Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavil Mithantha Kavithai
Kanavil Mithantha Kavithai
Kanavil Mithantha Kavithai
Ebook222 pages1 hour

Kanavil Mithantha Kavithai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கை ஆச்சர்யமும், அதிர்ச்சியும் கலந்தது தானே. லேப் அசிஸ்டென்ட் ஆன ஸ்வப்னா, அவளுடைய ஹெ. ஓ. டி. மேடமான புவனாவிற்கு ரிசர்ச் உதவியாளராக அவருடையாக வீட்டிற்கு வருகிறாள்.

அங்கு ஜீயாலஜிஸ்ட் ஆன நரேனை சந்திக்கிறாள். இருவருக்கும் இடையே பல மோதல்கள் ஏற்படுகின்றது.

பல சந்தர்ப்பங்களுக்கு பிறகு நரேன், ஸ்வப்னா மீது காதல் கொள்கிறான். நரேனின் காதலை ஸ்வப்னா ஏற்பாளா? இவர்களுடைய மோதல் காதலில் கூடியதா? பார்ப்போம்....

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580140906975
Kanavil Mithantha Kavithai

Read more from Lakshmi Sudha

Related to Kanavil Mithantha Kavithai

Related ebooks

Reviews for Kanavil Mithantha Kavithai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavil Mithantha Kavithai - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    கனவில் மிதந்த கவிதை

    Kanavil Mithantha Kavithai

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    உன்னை

    நான்

    சரண்

    அடைந்தேன்!

    என்

    வாழ்வின்

    இருள்

    நீங்கியது!

    கதிரவனைப்

    போல்

    நீ என்

    வாழ்வின்

    இருளை

    அகற்றினாய்!

    என்னுள்

    இருந்த

    இருளையும்

    அகற்றினாய்!

    நான்

    இப்பொழுது

    புதிதாகப்

    பிறந்திருக்கிறேன்!

    ஒரு அழகான காலைப் பொழுது. பூமிப் பெண் வண்ண மலர்களால் ஆன ஆடையை உடுத்தியபடி, தன் காதலன் சூரியனுக்காகக் காத்து இருந்தாள்.

    பூக்கள் பனியில் குளித்துவிட்டு நறுமணத்தைப் பரப்பிக்கொண்டிருந்தன.

    இயற்கையை ரசித்தபடி பால்கனியில் நின்றுகொண்டு இருந்தாள் ஸ்வப்னா, பெயருக்கு ஏற்றாற்போல் கனவில் மிதக்கும் அழகான கண்கள். கோதுமை நிறம்.

    திருத்தமான முகம். ஐந்தரை அடி உயரம். பார்ப்பவர்களை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டும் அழகான பொம்மை போன்ற முகம்.

    ஸ்வப்னா... எவ்வளவு அழகு! அழகோடு சேர்ந்த புத்திசாலித்தனம். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது, அடுத்தவர்களுக்கு உதவுவது என மகளைப் பற்றிப் பெருமையாக நினைத்தபடியே அவளுக்குக் கோப்பையில் காபி எடுத்துச் சென்றாள் சுபா.

    ஸ்வப்னா... இந்தா... காபி எடுத்துக்கோ, என்று அவளிடம் கோப்பையை நீட்டினாள் சுபா.

    அம்மா... அங்க பாருங்களேன், ஒரு சிட்டுக் குருவி, அதோ, அந்த மரத்துக் கிளையில. எவ்வளவு நாளாச்சு இல்ல, சிட்டுக் குருவியைப் பார்த்து! என்றாள் சிறு குழந்தையின் உற்சாகத்தோடு ஸ்வப்னா.

    ஆமாம் ஸ்வப்னா. எப்பவும் மைனாதான் வரும். இன்னிக்கு என்னவோ அதிசயமா இந்தக் குருவி வந்திருக்கே! என்றாள் சுபா ஆச்சரியமாக.

    ம்... ம்... இந்தச் சிட்டுக் குருவியைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம்ன்னு ஆசையாதான் இருக்கு. ஆனால் காலேஜிற்குக் கிளம்பணும்! என்றாள் ஸ்வப்னா.

    ஆமாம். காபியைக் குடிச்சுட்டுக் குளிச்சுட்டு வா. இன்னிக்கு உனக்குப் பிடிச்ச லன்ச், அடை அப்புறம் அவியல்... சரியா? என்றாள் சுபா.

    ஓ... அம்மா. யூ ஆர் ஸோ ஸ்வீட்! என்று அம்மாவின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சலாகக் கிள்ளிவிட்டுக் காபியைக் குடிக்கத் தொடங்கினாள் ஸ்வப்னா.

    காபியைக் குடிக்கும் பொழுதே புவனா மேடம் கேட்டது மனதைக் குடைந்தது. அம்மாவிடம் இப்பொழுது பேசலாமா அதைப்பற்றி என ஒரு நிமிடம் யோசித்தாள்.

    பின் வேண்டாம், காலையில் பேச வேண்டாம். நிதானமாகச் சாயங்காலம் பேசலாம் என முடிவு செய்தாள்.

    குளியல் அறை நோக்கி விரைந்தாள். குளித்துவிட்டு ஒரு ஆரஞ்சு வண்ண காட்டன் புடவையை அணிந்தாள்.

    தலை முடியை ஒற்றைப் பின்னலாக மாற்றினாள். லேசான ஒப்பனை செய்துகொண்டாள். பின் பூஜை அறையில் விளக்கேற்றிக் கண்மூடிப் பிரார்த்தனை செய்தாள்.

    மனம் அமைதியாக இருந்தது அவளுக்கு. பின் சமையல் அறை நோக்கி நடந்தாள்.

    அம்மா... டிபன் என்ன இன்னிக்கு? இட்லி சாம்பாரா... வாசனை மூக்கைத் துளைக்குது! என்றாள் உற்சாகமாக.

    ம்... ம்... கரெக்டா சொல்லிட்ட ஸ்வப்னா. இட்லி, சட்னி, சாம்பார். மதியம் அடை அவியல், உனக்குத்தான் அரிசிச் சாப்பாடே பிடிக்கலையே! என்றாள் சுபா.

    ஆமாம் அம்மா. எப்ப பார் ரைஸ். இல்ல ரைஸ் பேஸ்ட் அயிட்டம்ஸ், ஃபுல்லா கார்போஹைட்ரேட் தான் அதில் இருக்கு. அதைத் தவிர வேற ஏதும் சத்து இல்லை! என்றாள் ஸ்வப்னா சலிப்பான குரலில்.

    ஏய், கார்போஹைட்ரேட்டும் உடம்புக்குத் தேவை. யூ நீட் எனர்ஜி! என்றாள் சுபா.

    அம்மா... அதெல்லாம் நல்லா உடல் உழைப்பு இருக்கிறவங்களுக்குத்தான் தேவை. எனக்கு என்ன வேலை? காலேஜ் லேப் அஸிஸ்டெண்ட் தானே...

    அதுக்கு எதுக்கு இவ்வளவு எனர்ஜி? என்றாள் ஸ்வப்னா விடாமல்.

    "உன்கிட்டே பேச்சுக்கொடுத்துப் பிழைக்க முடியுமா? எல்லாத்துக்கும் சரியா பதிலுக்குப் பதில் பேசறதுதானே உன் வழக்கம்.

    ஆனா நீ பேசறதில லாஜிக் இருக்கும் எப்பவும். சாப்பிடு. சாப்பாட்டைக் கவனிச்சுச் சாப்பிடு" என்றாள் சுபா அக்கறையாக.

    ஸ்வப்னா கடகடவென இட்லி சாம்பாரைச் சாப்பிட்டு முடித்தாள்.

    அம்மா... சங்கீதாவுக்கும் ஒரு பாக்ஸ் பேக் செஞ்சிடுங்க. அவளுக்கு அடை ரொம்பப் பிடிக்கும்! என்றாள் கை கழுவியபடியே ஸ்வப்னா.

    நீ சொல்லவே வேண்டாம். நான் ரெடியா சங்கீதாவிற்கும் ஒரு பாக்ஸ்ல பேக் செஞ்சிட்டேன்! என்றாள் சுபா.

    தேங்க்ஸ் அம்மா. யூ ஆர் வெரி ஸ்வீட்! என்று புன்னகைத்தபடியே சொன்னாள் ஸ்வப்னா.

    அம்மா நீட்டிய லன்ச் பேக்கை வாங்கிக்கொண்டு, கைப்பையைத் தோளில் மாட்டியபடி காலேஜிற்குக் கிளம்பத் தயாரானாள் ஸ்வப்னா.

    அம்மா... போயிட்டு வரேன். சீக்கிரம் சாப்பிடுங்க. பூஜை செய்ய ஆரம்பிச்சீங்கனாவே போதுமே... நேரத்தை மறந்திடுவீங்க என்று சொல்லியபடியே வாசலை நோக்கி நடந்தாள் ஸ்வப்னா.

    ஸ்வப்னா வேலை பார்க்கும் காலேஜ் மவுண்ட் ரோட்டில் உள்ளது. அது ஒரு பெண்கள் கல்லூரி. ஆர்ட்ஸ் - சயின்ஸ் காலேஜ்.

    ஐம்பது வருஷம் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க கல்லூரி அது. தொன்மையான கட்டடம். பசுமைச் சூழல் வாய்ந்த அந்த இடம் ஸ்வப்னாவிற்கு ரொம்பப் பிடிக்கும்.

    அவள் கடந்த ஐந்து வருடங்களாக அந்தக் கல்லூரியில் வேலை பார்க்கிறாள். அதற்கு முன்பு அதே கல்லூரியில் பி.எஸ்ஸி. பின் எம்.எஸ்ஸி. படித்தாள்.

    எம்.எஸ்ஸி.யில் காலேஜில் முதல் மாணவியாக வந்ததால் அவளுக்கு அதே கல்லூரியில் லேப் அஸிஸ்டெண்டாக வேலை கிடைத்தது.

    கணினித் துறையில் லேப் அஸிஸ்டெண்டாக அவள் இருப்பதால் எப்பொழுதும் எல்லா கம்ப்யூட்டர் மொழிகளும் டிப்ஸில் வைத்திருக்க வேண்டிய நிர்பந்தம்.

    சி, சி ப்ளஸ் ப்ளஸ், ஜாவா, பேசிக், பேங்கல், ஃபோட்ரான் என எல்லா மொழிகளிலும் இருக்கும் ப்ரோம்களைக் கணினியில் தவறுகள் இல்லாமல் மாணவிகள் சரியாக எழுதுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதே அவள் முக்கிய வேலை.

    அதோடு பரிட்சை வரும்பொழுது கணினியில் எல்லாம் சரியாக லோட் ஆகியிருக்குதா என செக் செய்ய வேண்டும். சில மாணவிகள் பதட்டத்தில் தப்பாக கமாண்ட்டைப் செய்துவிட்டு எங்கே தப்பு எனத் தெரியாமல் திண்டாடுவார்கள்.

    அவர்கள் என்ன தப்பு செய்திருக்கிறார்கள் எனப் பொறுமையாக வரி வரியாகப் பார்த்துத் தவறைச் சரி செய்வது அவளுடைய வேலையும் கூட.

    கணினியை விருப்பப் பாடமாக எடுத்ததால், அவள் செய்யும் எல்லா வேலையும் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். ‘மேடம் மேடம்’ என எப்பவும் மாணவிகள் கூட்டம் அவளைச் சுற்றி இருக்கும்.

    புவனா மேடம் கணினி டிபார்ட்மென்ட்டில் ஹெச்.ஓ.டி,யாகப் பொறுப்பேற்று ஒரு வருடம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.

    அதனாலேயே ஸ்வப்னாவிற்கு அவரை ரொம்பப் பிடிக்கும். லேப் - அஸிஸ்டெண்ட் தானே என்று அவளைத் தரக் குறைவாக ஒரு நாளும் நடத்தியது இல்லை.

    புவனா மேடம் மீட்டிங் நடத்தும் விதம், ஆசிரியைகளிடம் பழகும் முறை. மாணவிகளிடம் காட்டும் அன்பு கலந்த கண்டிப்பு என எல்லாமே அவளுக்குப் பிடிக்கும்.

    அதனால்தான் புவனா மேடம் விடுத்த வேண்டுகோளைத் தட்ட முடியாமல் தவித்தாள். புவனா மேடம் ஒரு ஆராய்ச்சியில் முக்கால்வாசி சதவீதம் முடித்துவிட்டார்.

    இன்னும் கால்வாசி தான் மீதம். அது முடிப்பதற்கு ஸ்வப்னா உதவ முடியுமா என்றுதான் வேண்டுகோள் விடுத்தார்.

    ஸ்வப்னாவிற்கு அவர் கேட்டதைத் தட்ட மனசு இல்லை. ஆனால் புவனா மேடமின் வீட்டில் தங்குவதற்கு அம்மா ஒத்துக்கொள்வாளா என்ற சந்தேகம்தான் அவள் மனதை அரித்தது.

    அதுவும் ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. ஒரு மாதம் கிட்டே தங்க வேண்டியிருக்கும். புவனா மேடமின் வீடு பள்ளிக்கரணையில்தான் உள்ளது.

    சென்னையிலே இருப்பதால் அம்மாவை எப்படியாவது கன்வின்ஸ் செய்ய வேண்டும். ‘சனி ஞாயிறு வீட்டிற்கு வந்து விடுவேன் அம்மா’ என்று எப்படியாவது தாஜா செய்து அம்மாவைச் சம்மதிக்க வைக்கணும் என்று நினைத்தபடியே காலேஜிற்குள் ஸ்கூட்டியை நிறுத்தினாள் ஸ்வப்னா.

    குட்மார்னிங் மேடம்! என்று ஒரு மாணவி அவளை விஷ் செய்தபடி நடந்து சென்றாள்.

    குட்மார்னிங்! என்று ஒரு புன்முறுவலோடு தலை அசைத்தாள் ஸ்வப்னா.

    அந்த மாணவி எந்த வகுப்பு என்று ஞாபகம் இல்லை. பெயரும் தெரியவில்லை. இது ஒரு கஷ்டமான காரியம்தான். ஒவ்வொரு வகுப்பிலும் எண்பது பேர் கிட்டே இருப்பதால் பெயர் ஞாபகம் வைத்துக்கொள்வது இயலாத காரியம்தான்.

    ஒன்று படிப்பில் படு சுட்டியாக மாணவிகள் இருந்தால் அவர்கள் பெயர் நினைவில் இருக்கும். இல்லை, ரொம்ப மட்டமாக இருந்தால் அவர்கள் பெயரும் நினைவில் இருக்கும்.

    இரண்டும் இல்லாமல் இடையில் இருக்கும் மாணவிகள் ஏராளம். அவர்கள் பெயர்களை நினைவில் வைப்பது கஷ்டம்தான் என்று நினைத்தபடியே ஸ்டாஃப் ரூம் நோக்கி நடந்தாள் ஸ்வப்னா.

    ஸ்டாஃப் ரூமிலிருந்த ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டுவிட்டுக் கம்ப்யூட்டர் லேப் நோக்கிச் சென்றாள் ஸ்வப்னா.

    மாணவிகள் மரத்தடியில் கும்பல் கும்பலாகப் படிப்பது தெரிந்தது. இப்பொழுது தேர்வுச் சமயம். அதனால் எல்லார் முகத்திலும் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.

    தேர்வு எப்பொழுதுமே எல்லாருக்கும் பதட்டமாகத்தான் இருக்குமா? இந்தியாவின் கல்வி சிஸ்டம் அப்படித்தான் அமைந்துள்ளது.

    கல்லூரியிலாவது பரவாயில்லை. பள்ளியில் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கும் மாணவ மாணவியர் படும் அவஸ்தை ரொம்ப அதிகம்.

    எப்பவும் ஸ்பெஷல் கிளாஸ், எக்ஸ்ட்ரா கோச்சிங், டியூஷன் எனப் புத்தகமும் கையுமாக அலைய வேண்டும்.

    பெற்றோர்கள் வேறு அவர்களை இன்னும் டென்ஷனாக்கி விடுவார்கள்.

    நல்ல காலம் அம்மா அந்த மாதிரி எல்லாம் கிடையாது. ‘உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த எனர்ஜியைப் படிப்பதற்குப் பயன்படுத்து. அதற்காக உன் உடம்பை வருத்திக்கொள்ளாதே!’ என்று ஆதரவாகப் பேசுவாள்.

    தன்னுடைய தோழிகளின் அம்மாக்கள் யாரும் அப்படி அமையவில்லை. ‘படிக்கலைன்னா உருப்படமாட்ட. அவ்வளவுதான் உன் எதிர்காலம். பொட்டிக் கடைதான் வைக்கணும்!’ என்று ஏதேதோ திட்டுவார்கள் போல.

    அந்த விஷயத்தில் ‘நான் லக்கிதான்’ என்று தன்னையே மெச்சிக்கொண்டாள் ஸ்வப்னா. அம்மா எவ்வளவு இனிமையானவள்!

    அப்பா ஹார்ட் அட்டாக்கில் சட்டென இறந்தது ஞாபகம் வந்தது. அப்பொழுது அவள் ஏழாவது படித்துக்கொண்டிருந்தாள். அப்பா மட்டுமே வேலைக்குப் போய் வந்தார்.

    ஆனால் அப்பாவின் மறைவுக்குப் பின் ‘கம்பேஷனேட் க்ரவுண்டில்’ அம்மாவிற்கு அப்பா வேலை செய்த ஆபீஸிலேயே வேலை தரப்பட்டது.

    அம்மா ப்ளஸ் டூ வரை படித்திருந்ததால் ஸ்டோர் கீப்பிங் டிபார்ட்மெண்ட்டில் வேலை கிடைத்தது. அம்மா தன்னைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேகவேகமாக பஸ் ஸ்டாண்டிற்கு ஓட்டமும் நடையுமாகச் செல்வது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

    ஒரு வழியாக அவள் கல்லூரிப் படிப்பை முடித்த பின் அம்மாவின் சுமையைக் குறைக்க முடிந்தது. இனி அம்மா வேலைக்குப் போக வேண்டாம் எனப் பிடிவாதமாக இருந்தாள் ஸ்வப்னா.

    அம்மாவை வற்புறுத்தி வாலண்டரி ரிடையர் மெண்ட் வாங்கச் செய்தாள் ஸ்வப்னா. இன்னிக்கு என்ன இவ்வளவு ஃபிளாஸ்பேக் எனக்கு எனத் தனக்குள்ளே சிரித்தபடி கம்ப்யூட்டர் லேப் உள்ளே சென்றாள் ஸ்வப்னா.

    ஏய் ஸ்வப்னா. குட்மார்னிங். நீ வந்திட்டயா? அப்ப இப்ப மணி கரெக்டா எட்டு முப்பது. சரிதானே? என்றாள் வசந்தா.

    மேடம், காலையிலேயே கிண்டலை ஆரம்பிச்சிட்டீங்களா... என்றாள் புன்முறுவலோடு ஸ்வப்னா.

    "நான் சொல்றதில என்ன தப்பு? நான் இங்கே வேலைக்கு வந்து இரண்டு வருடமாகுது. அடாது மழை பெஞ்சாலும் சரி, கொளுத்தும் வெயில் அடித்தாலும் சரி, நீ டாண்ணு எட்டரை மணிக்கு லேப்பிற்கு வந்திடுறே.

    அதைப் பெருமையா சொல்றேன் நான். கரெக்ட்தானே?" என்றாள் வசந்தா.

    ஓ... போதும். காலையிலேயே ஐஸ். இன்னிக்கு எந்த கிளாஸ் லேப்புக்கு வராங்க? என்றாள் ஸ்வப்னா.

    தன் கையில் இருந்த ரிஜிஸ்டரைப் பார்த்தாள் வசந்தா.

    இன்னிக்கு மதியம் முதலாம் ஆண்டு மாணவிகளுக்குத்தான் எக்ஸாம். இப்ப கம்ப்யூட்டர் எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கலாமா? என்றாள் வசந்தா.

    "சரி... நான் இந்த வரிசையில இருக்கற கம்ப்யூட்டர் எல்லாம் பார்க்கறேன். நீங்க

    Enjoying the preview?
    Page 1 of 1