Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

புதிய பாடல் பாடு
புதிய பாடல் பாடு
புதிய பாடல் பாடு
Ebook138 pages31 minutes

புதிய பாடல் பாடு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அற்புதா அவளை எரிச்சலாய்ப் பார்த்தாள்.
“யார்... நீ... எதுக்காக என்னைச் சுத்திச் சுத்தி... வர்றே...? இந்த ரோமியோ வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுகிட்டா... செருப்பு பிஞ்சுடும். அவன் சிரித்தான்.”
“உன்னோட செருப்பு பிய்ஞ்சு போய் வேற ஒரு செருப் புக்கு செலவு வைக்க நான் தயாராயில்லை...”
“உனக்கு என்ன வேணும்...?”
“உண்மை வேணும்...”
“உண்மையா...?”
“ம்...”
“என்ன உண்மை...?”
“நான் யார்ன்னு உனக்கு நிஜமாவே தெரியலையா...?”
“தெரியலை...”
“நடிக்காதே...!”
இடது கை ஆள்காட்டி விரலை உயர்த்தினாள் அற்புதா.
“நீ. அளவுக்கு மீறி பேசிட்டு போறே. உன்னை எனக்குத் தெரியாது... இதுக்கு முந்தி உன்னைப் பார்த்ததில்லைன்னு... காலையில் பஸ் ஸ்டாப்ல பார்த்தப்பவே சொல்லிட்டேன். இப்ப மறுபடியும் அதேகேள்வியை கேட்டுகிட்டு... ஆபீஸுக்கு வந்திருக்கே... மரியாதையா இந்த இடத்தை விட்டு போயிடு... இல்லேன்னா நான் போலீஸைக் கூப்பிட வேண்டியிருக்கும்...!
அவன் கன்னத்தை சொறிந்து கொண்டு கோணலாய்ச் சிரித்தான்.
“போலீஸைக் கூப்பிடப் போறியா...? கூப்பிடு. உனக்கெப்படி போலீஸ் விவகாரமெல்லாம் அத்துபடியோ... அதே மாதிரிதான் எனக்கும்...”
அற்புதா நெற்றியைச் சுருக்கினாள்.
'இவன் என்ன சொல்கிறான்...?’
‘ஆள். ஏதாவது மெண்ட்டல் கேஸோ...?’
‘என்னோட பெயரைத் தெரிந்து வைத்திருக்கிறானே...?’
அவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு - குரலைத் தாழ்த்தியபடி கேட்டான்.
“இங்கே உனக்கு பேசறதக்கு சங்கோஜமா இருந்தா வெளியே போயிடலாமா?”
“டேய்ய்...!” கத்திய அற்புதா கையை வேகமாய் சுழற்றி - அவனுடைய கன்னத்தில் இறக்க முயன்ற விநாடி - கையை கப்பென்று பற்றிக் கொண்டான்.
“என்ன அழகா நடிக்கிறே...? நிஜமாவே என்னைத் தெரியாத மாதிரி உன்னோட முகத்துலதான்... என்ன ஒரு அழகான பாவம்... உண்மையை இன்னிக்கி நீ மறைச்சுடலாம்... ஆனா நாளைக்கு நீ சொல்லியே ஆகணும்... நான் இப்ப போறேன்... பேசறதுக்கு முன்னாடி பேரைச் சொல்லிட்டு போறேன்... என் பேரு பசவராஜ். நல்லா யோசனை பண்ணு. ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கிறேன்...”
சொல்லிட்டு அவன் எழுந்து வேகவேகமாய்ப் போக போகிற அவனையே வெறித்துப் பார்த்தாள் அற்புதா.
‘பசவராஜ்...?’
‘இப்படியொரு பெயரைக் கேள்விப் பட்டதேயில்லையே...?’
‘யாரிவன்...?குழப்பமாய் யோசித்துக் கொண்டே மறுபடியும் ஆபீஸுக்குள் நுழைந்தாள். நெற்றியைப் பிடித்துக் கொண்டு தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்தாள்.
'பசவராஜ்...!’
‘காலேஜ் நாட்களில் என்னோடு படித்தவனா...?’
‘இல்லையே... இப்படியொரு மூஞ்சியை பார்த்த மாதிரியே இல்லையே’
‘அடுத்த தடவை இவன் வந்தால் போலீஸில் ஹேண்ட் ஓவர் பண்ண வேண்டியதுதான்...ராஸ்கல்!’
“அம்மா... அற்புதா...!
ஹெட்க்ளார்க் தன் மேஜையிலிருந்து - கையில் ரிஸீவரை வைத்துக் கொண்டு கூப்பிட்டார்.
“உனக்கு போன்...”
வேகமாய் - எழுந்து போய் ரிஸீவரை வாங்கினாள்.
“ஹலோ...”
“அற்புதா...?”
“ஆமா...”
“நான் ஆனந்த் பேசறேன்...!”
அடுத்த மாசம் பதினோராம் தேதி அவளுடைய கழுத்தில் தாலி கட்டப் போகிற ஆனந்தின் குரலைக் கேட்டதும் உடம்பு முழுவதும் கும்மென்று வியர்த்துவிட்டது அற்புதாவுக்கு. ரிஸீவர் மெலிதாய் நடுங்கியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
புதிய பாடல் பாடு

Read more from ராஜேஷ்குமார்

Related to புதிய பாடல் பாடு

Related ebooks

Related categories

Reviews for புதிய பாடல் பாடு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    புதிய பாடல் பாடு - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    அற்புதா!

    அம்மா அழைக்கிற குரல் கேட்டு - டிபன் பாக்ஸில் தயிர் சாதத்தை வைத்து அடைத்துக் கொண்டிருந்த அற்புதா, திரும்பாமலேயே கேட்டாள்.

    என்னவாம்...?

    தனம் பெருமூச்சு விட்டாள்.

    உன்னோட ஆபீஸ் எம்.டி.கிட்டே இன்னிக்காவது லோனைப் பத்தி பேசி... கல்யாணத்துக்கு சரியா இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு...

    ம்...ம்...

    ம்...ம்ம...ன்னா என்னடி அர்த்தம்...?

    சரி கேக்கறேன்னு அர்த்தம்.

    அலமாரியில் ஊறு காய் பாட்டிலை எடுத்து - ஸ்பூனினால் ஒரு பத்தையை அள்ளி தயிர் சாதத்தின் மேல் போட்டு மூடினாள்.

    கேட்ட லோன் இருபதாயிரமும் கிடைக்குமா?

    அவ்வளவெல்லாம் எதிர்பார்க்க முடியாது... பத்தாயிரத்திலிருந்து பதினஞ்சாயிரத்துக்குளே கிடைக்கும்...

    போதாதுன்னா என்ன பண்றது...?

    "இருக்கிறதை வெச்சுட்டு சமாளிக்க வேண்டியதுதான். இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்... ரெண்டு வருஷம் போகட்டும்ன்னு தலை தலையா அடிச்சுகிட்டேன். நீ கேக்கலை... இப்ப கல்யாணத்தை நிச்சயம் பண்ணிட்டு லோனை வாங்குன்னு என்னை கிளறிட்டிருக்கே... எம்.டி. வெளிநாட்டுக்கெல்லாம் போய்ட்டு நேத்துதான் வந்தார். வாங்கிட்டு வந்த எக்ஸ்போர்ட் ஆர்டர்ஸ் சம்பந்தமா மானேஜர்கிட்டேயும் - ப்ரொடக்ஷன் இன்ஜினியர்கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணவே நேரம் அவர்க்கு சரியா இருக்கு... லோனைப் பற்றி மானேஜர் கிட்டே கேட்டா... ‘பொறும்மா! ஃபைல் எம்.டி. டேபிள் மேலே இருக்கு... அவர் பார்த்து கையெழுத்து போட்டுட்டார்ன்னா... உடனே உனக்கு பணத்தை குடுக்க ஏற்பாடு பண்ணிடுவேன்’னு சொல்றார். அற்புதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே - பெருமூச்சுவிட்டபடி - அம்மாக்காரி தனம், சமையறைக்குள் நுழைந்தாள்.

    நம்ம... ஆத்திரமும் அவசியமும் அவங்களுக்கு எங்கே புரியப்போகுது... லோன் பணம் கைக்கு வந்தா... பேங்க்ல வெச்சிருக்கிற நகையை மீட்டுடலாம்ன்னு பார்க்கிறேன்...

    இன்னிக்கு... எப்படியும் எம்.டி.யைப் பார்த்து லோன் விஷயமா பேசிடறேன். டிபன் பாக்ஸை வயர் பையில் எடுத்து வைத்துக் கொண்டாள் அற்புதா. சிறிய வாட்டர் கேனையும் உள்ளே சொருகினாள்.

    அம்மா... நான் வர்றேன்...

    பஸ்ஸுக்கு சில்லரை எடுத்துகிட்டியா...?

    எடுத்துகிட்டேன்...

    இப்படி பக்கத்துல வா...

    எதுக்கு...?

    வா... சொல்றேன்... வந்தாள். தனம் தன் இரண்டு கைகளால் - அற்புதாவின் முகத்தை வருடி நெட்டி முறித்தாள்.

    என் கண்ணே பட்டுடும் போலிருக்கு...

    போம்மா... உனக்கு வேற வேலை இல்லை...

    நில்லுடி! திருஷ்டி பொட்டு வெச்சுடறேன்...

    நீ ஒண்ணையும் வெக்க வேண்டாம்... எனக்கு பஸ்ஸுக்கு நேரமாச்சு... இந்த பஸ்ஸை கோட்டைவிட்டா... அரைமணி நேரம் பஸ் ஸ்டாண்ட்ல தவம் இருக்க வேண்டியதுதான்.

    அற்புதா பையை தோளில் மாட்டிக் கொண்டு - கால்களில் செருப்பை பொருத்திக் கொள்வதற்காக - முன்பக்கம் வந்த பொழுது - வாசலில் அந்த காண்டஸா க்ளாஸிக், க்ரீம் நிற உடம்போடு வந்து நின்றது.

    கார் யாருடையது என்பது சட்டென்று தனத்துக்கு புரிந்துபோக - அவள் சன்னமான குரலில் பதறினாள்.

    அற்புதா... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க... கார்ல வர்றாங்க

    அற்புதா கார்க்குள் பார்வையைக் கொண்டு போனாள். பின் சீட்டில் யாருமில்லை. டிரைவர் மட்டும் கீழே இறங்கி வந்தான்.

    வணக்கம்மா...

    உள்ளே வாப்பா... தனம் கூப்பிட்டாள்.

    மாப்பிள்ளை வீட்டிலிருந்து டிரைவர் என்ன தகவலைக் கொண்டு வந்திருக்கிறான் - என்று தெரிந்து கொள்வதற்காக நின்றாள் அற்புதா. அவன் தனத்திடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

    உங்க பொண்ணோட கை வளையல் அளவு வேணுமின்னு முதலாளியம்மா சொல்லிட்டிருக்காங்க...

    எதுக்கு...?

    கல் வெச்சு வளையல் பண்ணணுமாம்... தனம், அகலமாய் மலர்ந்தாள். இருந்தாலும் சந்தோஷத்தைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.

    இப்ப எதுக்கு...?

    "எனக்கு அதைப்பத்தியெல்லாம் தெரியாதும்மா... முதலாளியம்மா உங்க பொண்ணோட கைவளையல்

    Enjoying the preview?
    Page 1 of 1