Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பாப விமோசனம்
பாப விமோசனம்
பாப விமோசனம்
Ebook107 pages33 minutes

பாப விமோசனம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பேருந்தை விட்டு இறங்கினாள் வாணி! சாலையைக் கடந்தாள்.
சற்றே அமைதியான சூழலில் இருக்கும் ஊட்டியிலிருந்து ஆரவாரமாக மாறுபட்டிருந்தது சென்னை!
அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன் நின்றாள்
இவள் வர விரும்பிய ஆபீஸ் ஐந்தாவது மாடியில்!
லிஃப்ட்டுக்குள் நுழைந்து, ஐந்தாவது மாடியில் வெளிப்பட்டடள்.
அது இசைத்துட்டு விற்கும் நிறுவனம் சமீப காலத்தில் காஸெட், ஸீடீ என தன் தொழிலுக்கு நாகரீக மெருகு சேர்த்துக் கொண்டுவிட்டது! உலக அரங்கில் நிற்குமளவுக்கு சர்வதேச சந்தையில் இடம் பிடித்த நிறுவனம்.
அந்தரங்கச் செயலாளர் பதவி…! சம்பளம் ஆரம்பத்தில் ஏழாயிரம்! ஒரு வருட பயிற்சி காலம். வேலை ஊர்ஜிதமானால் பத்து ரூபாய்க்குமேல சம்பளம்.! மற்ற வசதிகளும் உண்டு.
நேர்முகத்துக்கு அழைப்பு வரும் என்று வாணி நினைக்கவே இல்லை!
விஸ்தாரமான, ஏஸி செய்யப்பட்ட ஹாலில், ஏராளமான அலங்காரத்துடன் ஏழெட்டு பெண்கள்!
இவளை ஒரு மாதிரி ‘நல்ல தங்காளைப்’ பார்ப்பதைப்போல பார்த்தார்கள்.
புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்தியிருந்தாள் வாணி! பத்தரை மணிக்குள் அந்த ஹாலில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம்!
“எத்தனை வேகன்ஸி?” ஒருத்தி ப்யூனைக் கேட்டாள்.
“ஒரு இடம்தான்மா!”அந்தப் பெண் நம்பிக்கை இழந்தாள்.
பதினொரு மணிக்கு எம்.டி. வந்து விட்டதாக ஒரு பரபரப்பு தென்பட்டது!
ஒவ்வொருத்தியாக அழைக்கப்பட்டனர்.
ஐந்தாவதாக,
“வாணி!”
வாணி எழுந்தாள். மெல்ல நடந்தாள்.
“மணிமேகலை போறா பாரு!” பின்னாலிருந்து குரல் துரத்தியது!
கதவைத் தள்ளித் திறந்தாள்.
“யெஸ் கம் இன்!”
நிமிர்ந்தாள். தூக்கி வாரிப் போட்டது!
‘ரயிலில் பார்த்த அவன்!’
‘பால் கொண்டு வந்த அவன்!’
‘பரிவோடு பேச நினைத்து, முகம் வாடி, சொல்லாமல் போன அவன்!’
அவனும் இவளை எதிர்பார்க்கவில்லை என்பதை அதிர்ந்த முகம் சொன்னது!
“ஒக்காருங்க!”
லேசான நடுக்கத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள் வாணி!
‘கண்டிப்பாக எனக்கு இந்த வேலை கிடைக்காது!’
‘இவனை நான் அலட்சியப் படுத்தியிருக்கிறேன். மறக்க மாட்டான் நிச்சயமாக’
குனிந்த தலையோடு அமர்ந்திருக்கும் அவளையே ஓரிரு நொடி பார்த்தான்.
சட்டென எழுந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
பாப விமோசனம்

Read more from தேவிபாலா

Related to பாப விமோசனம்

Related ebooks

Related categories

Reviews for பாப விமோசனம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பாப விமோசனம் - தேவிபாலா

    1

    அந்த இரவு நேர சப்தத்தை கிழித்துக் கொண்டு ரயில் அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்தது;

    சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் – மேட்டுப் பாளையத்திலிருந்து!

    மூன்றடுக்கு பெட்டிகளில் பயணிகள் உறக்கத்தை அணைத்துக் கொண்டிருந்த நேரம் அது! நீல விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன..

    30வது பெர்த்தில் இருந்த வாணி மட்டும் உறங்கும் எண்ணத்தை உதறிவிட்டு, உடம்பை ஒருக்களித்து சாய்த்தபடி கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.

    ஜன்னலை லேசாகத் திறந்து வைத்திருந்தாள்.

    குளிர்காற்று உள்ளே நுழைந்து அவள் கேசத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது! அவளை அந்தக் காற்று கூட எதுவும் செய்ய முடியவில்லை.

    ஒரு மாதிரி உணர்வற்ற நிலையில் இருந்தாள் வாணி!

    ‘பாங்’ என்ற ஓசையுடன் ரயில் எதிர்ப்புறம் கடந்து சென்றது.

    என்னங்க! வாணி திரும்பவில்லை.

    என்னங்க! உங்களைத்தான்!

    அப்போதும் அந்தக் குரல் வாணியை ஈர்க்காமலே போக, அந்த ஆள் எழுந்து வந்து அவள் முன்னால் விரல்களை சொடுக்கினான்!

    சட்டெனக் கலைந்தாள்.

    ஒக்காந்துகிட்டே தூங்கறீங்களா?

    இ... இல்லை...

    படுக்க வேண்டியதுதானே?

    தூக்கம் வரலை!

    ஆனா எனக்குத் தூக்கம் வருதே!

    சட்டெனத் திரும்பினாள் வாணி! எரிச்சலோடு அவனைப் பார்த்தாள்!

    உங்களுக்குத் தூக்கம் வந்தா, தூங்குங்க சார்! அதுக்கு என்ன வேணும்?

    நீங்க மனசு வச்சாத்தான், நான் தூங்க முடியும்!

    மிஸ்டர்!

    ஸாரி! நான் மிடில் பர்த் ஆசாமி. நீங்க இடத்தை விட்டு எழுந்தாத்தானே அந்த பலகையை உயர்த்த முடியும்?

    தன் தவறு உடனே பிடிபட, சட்டென எழுந்து விட்டாள் வாணி!

    ஸாரி! நான் தப்பு பண்ணிட்டேன். கவனிக்கலை! ஐயாம் வெரி ஸாரி!

    எதுக்கு மேடம் பெரிய வார்த்தைகளெல்லாம்?

    அவள் எழுந்து வழிவிட, அவன் பலகையை உயர்த்தி, கொக்கிய மாட்டி, தன் படுக்கையை அமைத்துக் கொண்டான். தாவி ஏறினான்.

    தலைகாணியை உதறி உருவாக்கினான்!

    வாணி ஒரு மாதிரி முதுகை வளைத்தபடி உள் அடங்கி உட்கார்ந்து கொண்டாள்.

    அவன் குனிந்தான்!

    இனி நீங்க படுத்துத்தான் ஆகணும்! என்னால உங்களுக்குத் தொந்தரவா? நானும் மன்னிப்புக் கேட்டுக்கறேன் குட்நைட்!

    படுத்துக் கொண்டான்!

    வாணி ஷட்டரை இறக்கினாள். புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு, பெட்டியை தலைக்கு அண்டங்கொடுத்தபடி படுத்துக் கொண்டாள்.

    ரயிலின் ஓசை மட்டும் தடக்தடக்கென தாள லயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது!

    வாணி!

    என்ன?

    நீ போகத்தான் வேணுமா? எந்த நம்பிக்கைல நீ சென்னைக்குப் போகப் போறே?

    மனுஷ வாழ்க்கையே நம்பிக்கையை அடித்தளமா வச்சு அமைஞ்சதுதானே? எனக்கும் அது உதவட்டுமே!

    தடக்… தடக்!

    அவன் – மேல பெர்த் – மெல்லக் குனிந்தான்.

    வாணி மல்லாந்து படுத்தபடி கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.

    என்னாங்க! தூங்கலியா நீங்க? ரகசியக் குரலில் கேட்டான்.

    சடாரென வாணி பார்வையை உயர்த்த,

    ஸாரிங்க! திரும்பிப் படுத்துக் கொண்டான் கண்களை மூடிக்கொண்டான்!

    வாணியின் வட்டமுகம் அவன் விழிகளில் பதிந்து போயிருந்தது தெளிவாக!

    அழகான, அம்சமான பெண்!

    ‘ஏன் உறங்காமல் வருகிறாள்? முகத்தில் சிரிப்பு இல்லை! உணர்ச்சியைத் தொலைத்து விட்டு இறுகிப்போன முகம்!’

    ‘தனியாக வருகிறாளா?’

    ‘அப்படித்தான் இருக்க வேண்டும்!’

    ஏதேதோ நினைத்தபடி உறங்கிப் போனான் அவன்.

    தடக்கென ரயில் நின்றது போலத் தோன்ற, விழித்துக்கொண்டான்!

    மொத்தப் பெட்டியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.

    வெளியே காபி, தேனீர் வியாபார ஓசை மெலிதாகக் கேட்டது!

    குனிந்தான்!

    வாணி விழித்துக் கொண்டுதான் இருந்தாள்.

    என்னங்க... என்ன ஸ்டேஷன்?

    ஈரோடு!

    கீழே இறங்கினான். லுங்கியை இறுகக் கட்டிக் கொண்டு நடந்தான்.

    அவன் திரும்பி வரும் போது கையில் இரண்டு கோப்பை பால் இருந்தது.

    இந்தாங்க பால்!

    நே... தேங்க்ஸ்!

    உங்களுக்காகத்தான் வாங்கினேன்!

    மிஸ்டர்! நான் பால் வேணும்னு கேக்கலை! எனக்கது அவசியமும் இல்லை! அதிகப் பிரசங்கித்தனம். இதெல்லாம் சுத்தமா எனக்குப் புடிக்காது!

    மேல பெர்த்திலிருந்து எந்த ஊருமா? என்றார் ஒருவர். பதில் எதிர்பாராமல் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

    அவன் ஒரு நிமிஷம் அப்படியே நின்றான்.

    பாலைக் கீழே வைத்து விட்டு, அவள் பக்கத்து ஜன்னலைத் திறந்தான்.

    இரண்டு பாலையும் ஜன்னல் வழியாக வீசினான்.

    ஜன்னலை மூடிவிட்டு கோப்பையை எடுத்துக் கொண்டு திரும்பி நடந்தான்!

    சார்! ஒரு நிமிஷம்!

    என்ன?

    இதுக்கு என்ன அர்த்தம்?

    எதுக்கு?

    இப்ப, இந்தப் பாலை வெளியே கொட்டினதுக்கு!

    திரும்பி அவளைப் பார்த்தான்.

    வெளியே கொட்டப்பட்டது பால் இல்லை! நல்ல ஒரு ரயில் ஸநேகம்! நான், நீங்க நினைக்கற மாதிரி, விடலைத்தனமான ஆண் இல்லை! உறக்கத்தைத் தொலைச்ச உங்க முகத்துல உணர்ச்சியே இல்லை! நட்பை பகிர்ந்துக்க நினைச்ச தோழன் நான். தட்ஸ் ஆல். எனிவே, குட்நைட்!

    கோப்பையை திருப்பித் தந்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.

    ரயில் நகரத் தொடங்கியது!

    வாணி சுத்தமாக உறங்கவில்லை!

    அதிகாலையில் ரயில் அரக்கோணத்தில் தன்னை அழைத்துக் கொண்டது!

    அவன் எழுந்துவிட்டான்.

    வாணி பல் தேய்த்து, முகம் கழுவி, தன்னைத் திருத்தி அமைத்துக்கொண்டு, ஜன்னலோரம் இருந்தாள்!

    அவனும் பாத்ரூம் போய் வந்தான்.

    கால் சட்டைக்குள் நுழைந்தான். பெட்டியைப் பூட்டினான்.

    Enjoying the preview?
    Page 1 of 1