Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கால் முளைத்த சிற்பம்!
கால் முளைத்த சிற்பம்!
கால் முளைத்த சிற்பம்!
Ebook98 pages33 minutes

கால் முளைத்த சிற்பம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பவானி அலுவலகம் வந்துவிட்டாள்.
 அது ஒரு தனியார் நிறுவனம்.
 சாதாரண ஒரு டைப்பிஸ்டாக சேர்ந்த பவானி, இந்த பத்து வருஷ காலத்தில் தேர்வுகளை எழுதி, படிப்படியாக எல்லாம் கற்றுக் கொண்டு, செக்ஷன் ஆபீசர் ஆகிவிட்டாள். ஐந்து இலக்கச் சம்பளம் வருகிறது!
 அதனால்தான் குடும்பம் ஓடுகிறது!
 பவானிக்கென ஒரு தனி அறை உண்டு. ஆபீசில் கண்டிப்பும், கறாருமாக இருப்பாள்!
 யாரும் அத்தனை சுலபமாக நெருங்கி விடமுடியாது!
 வேலையில் ஒரு குறை வைக்க மாட்டாள். பொது மேலாளருக்கு அவள் மேல் ஒரு மரியாதை உண்டு!
 அவளை நம்பி பல பொறுப்புகளை அவர் ஒப்படைத்து விட்டுப் போவார்!
 அவருக்கு அடுத்த மாதம் ரிடையர்மெண்ட்!
 அவரது தலைமைப் பொறுப்புக்கு புதிதாக ஒருவர் வருவார் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
 பவானியை அவர் அழைத்தார்.
 வணங்கிவிட்டு உட்கார்ந்தாள்.
 "ஹெட் ஆபீஸ்லேயிருந்து ஃபேக்ஸ் வந்திருக்கு பவானி!"
 "என்னவாம் சார்?"
 "என் இடத்துக்கு மித்ரானு ஒருத்தர் வர்றாராம்! மும்பைல இப்ப இருக்காராம். அவருக்கு மாற்றல் கொடுத்து இங்கே அனுப்பறாங்களாம்!""இந்திக்காரரா?"
 "ஆமாம்! ஆனா எல்லா பாஷையும் பேசுவாராம்! சின்னவர். வயசு முப்பத்திஅஞ்சு. திறமை சாலி!"
 "அப்படியா?"
 "நாளைக்கு இங்கே வர்றாராம். ஒருநாள் நம்மகூட இருந்து, இந்த ஆபீஸ் நிலவரங்களைத் தெரிஞ்சுகிட்டு போயிடுவாராம். பத்து நாள்ல குடும்பத்தோடு வந்துடுவாராம். நான் இருக்கும்போதே, என்கூட அவர் வொர்க் பண்ணினாத் தானே நிலவரம் தெரியும்!"
 "ஆமாம் சார்!"
 "நீயும் கூடவே இரும்மா! யார் வந்தாலும் உன்னை நம்பித்தான் நான் பொறுப்புகளை ஒப்படைப்பேன்!"
 "சரி சார்!"
 "என் சர்வீஸ் முடியறதுக்குள்ளே உன்னை புருஷனோட பாக்கணும்னு நெனச்சேன். என் ஆசை பலிக்கலை."
 பவானி எதுவும் பேசவில்லை.
 "உன் உழைப்புக்கு முடிவே இல்லையா? நீ வாழ வேண்டாமா பவானி?"
 "சார்! ப்ளீஸ்"
 "இல்லேம்மா! உன் மனசை நோகடிக்க நான் விரும்பலை! கடவுள் உனக்கும் ஒரு வழியைக் காட்டட்டும்!"
 சொந்தக்காரர்களைவிட சில சமயம் நண்பர்களின் பாசம் பெரிதாக இருக்கிறது!
 பவானி எழுந்துவிட்டாள்.
 "ஆங்! பவானி! சர்வீஸ் ரெக்கார்ட் பார்த்தேன். இன்னிக்கு உனக்கு பர்த்டே! உனக்காக ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன்!"
 ட்ரா திறந்து ஒரு கைக்கடிகாரம் எடுத்துத் தந்தார்.
 "என் ஞாபகமா இதை எப்பவும் உன் கைல கட்டிக்கோ!எதுக்கு சார்?"
 "பேசக்கூடாது! உன் அடுத்த பிறந்த நாளுக்கு நான் இங்கே இருக்க மாட்டேன். கட்டிக்கோம்மா!"
 பவானி அதை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
 அவர் காலில் விழுந்தாள்.
 "நல்லா இரும்மா. எல்லாரையும் போல நீயும் வாழணும்."
 பவானி நன்றி கூறி, தன் இருப்பிடம் வந்தாள்.
 'ஜியெம் நல்லவர். அப்பா மாதிரி! இவர் போய், ஒரு இளைஞர். எப்படிப்பட்டவரோ?'
 பவானிக்கு லேசா கவலை வந்தது! ஒரு நொடிதான். சட்டென அழித்தாள்!
 'இந்த உலகில எதுவும், யாரும் நிரந்தரமில்லை! எதற்காகவும் கலங்கக் கூடாது!'
 சட்டென வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.
 மாலை ஆறுமணிக்குத் தான் புறப்பட்டாள். மறுநாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு, வீடு வந்து சேரும்போது ஏழு மணி!
 அம்மா மட்டும் இருந்தாள்.
 டீவி தொடரில் சுகன்யா ஆடிக் கொண்டிருந்தாள்.
 பவானி உடைமாற்றி, முகம்கழுவி, சமையல் கட்டுக்குள் புகுந்தாள்.
 அம்மா பின்னால் வந்தாள்.
 "நிகிலா இன்னும் வரலியே பவானி?"
 "ஓவர்டைம் போட்டிருப்பாங்க."
 "ஏழுமணி வரைக்கும் இருக்க மாட்டாளே!"
 "சரி! பஸ் கிடைச்சிருக்காது. வருவா. ஏன் கவலைப்படற... காஃபி வேணுமா?"வேண்டாம்."
 பவானி இரவு உணவுக்கான ஆயுத்தங்களை ஆரம்பித்தாள். நேரம் எட்டுமணி.
 சன் தொலைக்காட்சியில் செய்திகள்.
 அம்மா உள்ளே வந்தாள்.
 "நிகிலா வரலியே பவானி?"
 பவானி, எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு டயல்செய்தாள். சூபர்வைசர் எடுத்தார்.
 "அங்கே நிகிலான்னு ஒரு பெண் இருப்பா! அவளைக் கூப்பிடுங்க!"
 இரண்டு நிமிட இடைவெளி!
 "நிகிலா அஞ்சு மணிக்கே போயிடுச்சாம் மேடம்!"
 பவானி ரிசீவரை வைத்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223015376
கால் முளைத்த சிற்பம்!

Read more from Devibala

Related to கால் முளைத்த சிற்பம்!

Related ebooks

Related categories

Reviews for கால் முளைத்த சிற்பம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கால் முளைத்த சிற்பம்! - Devibala

    1

    குளித்து முடித்து பூஜை செய்துவிட்டு தலையில் ஈர டவலுடன் வெளியே வந்தாள் பவானி! காலை அஞ்சரை மணி. நேராக சமையல் கட்டுக்குள் நுழைந்தாள். பரபரவென செய்யத் தொடங்கினாள்.

    அரிசி கழுவி, காய்கறிகளை நறுக்கி, குக்கரில் வைத்து மூடினாள். பால் வந்துவிட்டது.

    அதைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தாள்.

    ஃபிரிட்ஜ் திறந்து இட்லி மாவை எடுத்து, இட்லித் தட்டுகளில் ஊற்ற ஆரம்பித்தாள்.

    அப்பா எழுந்து வந்தார்.

    காஃபி ரெடியா பவானி?

    பால் காயுது. பத்து நிமிஷம் ஆகும்!

    அவர் பாத்ரூம் பக்கமாக நகர்ந்து விட்டார். பத்து நிமிடங்களில் காஃபியை தயார் செய்துவிட்டாள்.

    அப்பா வந்து வாங்கிக் கொண்டார்.

    ராத்திரி பூரா அம்மாவுக்கு இருமல்! எனக்கு வலது கால் குடைச்சல். ரெண்டு பேரும் தூங்கலை!

    பவானி எதுவும் பேசவில்லை!

    பவானி! உங்கிட்டத்தான் சொல்றேன்!

    பவானி படக்கென திரும்பினாள்.

    அம்மாவுக்கு இருமலுக்கு மருந்து இருக்கு! உங்களுக்கு மூட்டு வலிக்குத் தைலம் இருக்கு! வேறென்ன வேணும்?

    கொஞ்சம் அதிகமா இருக்கு! டாக்டர்கிட்டே போயிட்டா நல்லது!

    இது மாசக்கடைசி! கைல சல்லிக் காசு இல்லை! ஒண்ணாம்தேதி பிறந்து சம்பளம் வந்ததும் டாக்டர்கிட்ட போகலாம்!

    வியாதி ஒண்ணாம் தேதி வரைக்கும் காத்திருக்குமா?

    கைல காசு இல்லேன்னா, காத்திருக்கத்தான் வேணும்! வேற வழியில்லை!

    அம்மா இருமிக் கொண்டே எழுந்து வந்தாள்.

    என்ன பிரச்னை?

    ஒடம்பு முடியலன்னு சொன்னேன். டாக்டர்கிட்ட போகணும்னு கேட்டேன். வழக்கம்போல சுருக்குனு பேசறா. வயசாயிட்டாலே வேதனைதான்!

    அம்மா நிமிர்ந்து பவானியைப் பார்த்தாள்.

    என்ன பவானி இது?

    பவானி திரும்பினாள்.

    அம்மா! சண்டை போட எனக்கு நேரமில்லை. வீட்டு வேலைகளை முடிச்சிட்டு ஆபீசுக்கு போகணும். சாயங்காலம் வந்து சண்டை போடலாம் புரியுதா?

    ஏண்டீ இப்படி நெருப்பாக் கொட்டற?

    சூடா இல்லைனா, சாம்பல்னு நெனச்சு சாக்கடைல கொட்டிடுவாங்களே!

    அம்மா முறைத்துவிட்டு உள்ளே போய் விட்டாள்.

    அப்பா, அம்மா பின்னால் போய்விட்டார். பவானி வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டாள்!

    ஏழுமணிக்குள் சமையல், டிஃபன் எல்லாம் தயாரித்து முடித்து, அவசரமாக புறப்பட ஆயத்தமானாள்.

    தங்கை நிகிலா, பவானியிடம் வந்தாள்.

    அக்கா! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பவானி படக்கென திரும்பினாள்.

    இன்னிக்கு எனக்கு பர்த்டேயா?

    ஆமாக்கா! நீ மறந்துட்டியா? உனக்காக ஒரு சேலை வாங்கி வச்சிருக்கேன்! இந்தா!

    பார்சலைக் கையில் கொடுத்தாள் நிகிலா!

    பவானி பிரித்துப் பார்த்தாள்.

    என்ன விலை?

    நானூறு ரூபா!

    எதுக்குடி நிகிலா வீண் செலவு?

    இல்லைக்கா! இந்தக் குடும்பத்தையே நீ தாங்கறே! உனக்காக இதைக் கூடச் செய்யலைனா எப்படி? இதைக்கூட தவணைக்குத் தான் எடுத்திருக்கேன். நாலு மாசமா கட்டிடுவேன். என் கைச் செலவுக்கு தர்ற பணத்துல கடனை அடைச்சிர்றேன்!

    பவானி நிகிலாவை கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

    இதை இன்னிக்கு ஆபீசுக்கு கட்டிட்டுப்போ!

    பவானி புதுச்சேலையைக் கட்டிக் கொண்டு, தன்னை லேசாக அலங்கரித்துக் கொண்டாள்.

    இன்று பிறந்த நாள்.

    முப்பது வயது முடிகிறது.

    காதோரம் சின்னதாய் வெள்ளை முடிகள் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டன.

    கண்ணடியில் மிகச் சன்னமான கறுப்பு வளையம்...

    கல்யாண வயதைக் கடந்து கொண்டிருப்பதற்கான சகல அறிகுறிகளும்!

    பவானி அந்தக் குடும்பத்தில் மூத்த மகள்.

    பட்டதாரி. படிப்பு முடிந்ததும் வேலை கிடைத்துவிட்டது.

    அதுவரை இழுத்துப் பிடித்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்த அப்பா அதை விட்டுவிட்டார்.

    எந்த சேமிப்பும் இல்லை!

    காரணம் - எதிலும் ஒரு வருஷம் கூட நிரந்தரமாக இருக்கமாட்டார். முன்கோபம், உழைக்க சோம்பேறித் தனம், திமிர் எல்லாம் உள்ளவர். எங்கே போனாலும் சண்டை, பிரச்னை!

    பாதி நாட்கள் வேலை இல்லை!

    அம்மா ஊறுகாய், அப்பளம், எடுப்புச் சாப்பாடு என கட்டினாள். குடும்பம் தத்தளித்தது!

    பவானி தலையெடுத்து, வேலை கிடைத்ததும் அப்பா போவதையே நிறுத்திவிட்டார்.

    அம்மா மேலும் மூன்று வருட காலங்கள் சமாளித்தாள்.

    அதன் பிறகு இருமல், மூச்சிரைப்பு என ஆஸ்த்மாவில் கொண்டு போய்விட, அம்மா உழைப்பதும் நின்று போனது!

    பவானிக்கு பிறகு ஆறு வருஷம் கழித்து பரணி!

    அவன் பள்ளிக்கூடப் படிப்பைத் தாண்டவில்லை!

    அதன் பிறகு வேண்டாத சகவாசங்கள் நிறைய!

    இருபத்திரெண்டு வயது வரை ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்!

    பவானிக்குத் தாளமாட்டாமல் ஒருநாள் பிடித்து நன்றாகத் திட்டிவிட்டாள். அன்று வீட்டை விட்டுப் போனவன்தான். ரெண்டு வருஷமாச்சு! வீடு திரும்பவில்லை!

    ‘கண்டபடி பேசி என் மகனை விரட்டிவிட்டது நீதான்’ என பவானியைக் குற்றம் சாட்டும் அம்மா!

    ‘கொள்ளி போடப் பிள்ளையில்லை’ என அப்பாவின் வசவு!

    முதலில் ஆத்திரப்பட்ட பவானி, இப்போது அதைப் பெரிசு படுத்தவில்லை!

    ஏதோ தப்பை செய்து விட்டு ஆறுமாசம் ஜெயிலில் இருந்த பரணி, கொஞ்ச நாள் ஆட்டோ ஓட்டிவிட்டு, இப்போது தென்காசிப் பக்கம் ஒரு ட்ராவல்ஸில் வண்டி ஓட்டுகிறான்

    என தகவல்.

    அடுத்த படியாக நிகிலா!

    Enjoying the preview?
    Page 1 of 1