Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அக்மார்க் மர்டர்
அக்மார்க் மர்டர்
அக்மார்க் மர்டர்
Ebook101 pages35 minutes

அக்மார்க் மர்டர்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஃபேக்ஸ் தாளில் வரி வரியாய் ஓடியிருந்த எழுத்துக்களின் மேல் மறுபடியும் பார்வையைப் போட்டார் வர்மா.
இது அவசரம் மற்றும் இரகசியச் செய்தி.
சமஜ்பூர் தொகுதி எம்.பி. துளசிராம் கன்யாலால் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். ஆனால் அவருடைய உருவத் தோற்றத்தோடு வேறு ஒரு நபர் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளான். அவன் எதற்காகப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளான் என்று தெரியவில்லை. ஒருவேளை அவன் தீவிரவாதியாக இருக்கக்கூடும்... பாராளுமன்ற செக்யூரிட்டி விங்க் திறமையாகச் செயல்பட்டு அவனை மடக்க வேண்டும். விபரீதம் நிகழ்வதற்கு முன் விரைந்து செயல்படுவது அவசியம்.
- டெல்லி போலீஸ்.
வர்மாவின் முகத்திலும் இப்போது வியர்வை. பக்கத்தில் நின்றிருந்த மார்ஷலை ஏறிட்டார்.
“பாபட்லால்...”
“ஸார்...”
“சமஜ்பூர் எம்.பி. துளசிராம் கன்யாலால் மாதிரி உருவத் தோற்றத்தோடு யாரோ ஒருவன் சபைக்குள்ளே போயிருப்பதாகச் செய்தி... நீங்கள் சபை வாயிலில்தானே நின்றிருந்தீர்கள்...?”
“ஆமாம் ஸார்...”
“பின்னே எப்படி அந்த நபர் உள்ளே போனார்...?”
“ஸார்... நாங்கள் ஒவ்வொருவரையும் உன்னிப்பாய்க் கவனித்துத்தான் உள்ளே அனுப்பி வைத்தோம். எங்கள் ஸ்கேன் கண்களை ஏமாற்றிவிட்டு யாரும் உள்ளே போயிருக்க முடியாது.“அப்படியால் ஃபேக்ஸ் செய்தி பொய் என்று சொல்ல வருகிறீர்களா...?”
“டெல்லி போலீஸ் கொடுத்திருக்கும் - ஃபேக்ஸ் செய்தி பொய்யாய் இருக்க முடியாது. ஸார். ஏதோ ஒரு குளறுபடி நடந்துள்ளது. அது என்ன என்பதை இப்போது கண்டுபிடித்து விடலாம். கம்ப்யூட்டர் அறைக்குப் போய் அந்த பர் துளசிராம் கன்யாலாலை ஸ்க்ரீன்னில் மானிடர் செய்து பார்க்கலாம். ஐடென்டிஃபிகேசன் ஃபிளாப்பியை கம்ப்யூட்டருக்குக் கொடுத்தால் அதுவே சபைக்குள் இருப்பது சமஜ்பூர் தொகுதி எம்.பி. துள்சிராம் கன்யாலாலா இல்லையா என்பதைச் சொல்லிவிடும்...”
“சபாநாயகர் உள்ளே போய் விட்டார். சபை இன்னமும் ஐந்து நிமிஷங்களில் ஆரம்பமாகிவிடும்.”
“சபை நடந்து கொண்டு இருக்கட்டும் ஸார். நாம் அந்த நபரின் நடவடிக்கையைக் கம்ப்யூட்டரில் மானிட்டர் செய்து பார்ப்போம்...”
செக்யூரிட்டி விங் சீஃப் ஆபீஸர் தேசாயும் மார்ஷல் பாபட்லாலின் பேச்சை ஆமோதிக்க, மூன்று பேரும் கம்ப்யூட்டர் அறைக்குப் போனார்கள்.
சில நிமிஷ நடை.
கம்ப்யூட்டர் செஷன் வந்தது.
‘அந்நிய நபர்களுக்கு அனுமதியில்லை’ என்ற வாசகம் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் தெரிய, கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனார்கள். அந்தப் பெரிய அறையின் மூன்று பக்க சுவர் ஓரமாய் ஃபைபர் மேஜைகள் தெரிய, அதன் மேல் பெண்டியம் கம்ப்யூட்டர்கள் வரிசையாய் உட்கார்ந்து அதன் மானிட்டர்’ திரைகளில் பாராளுமன்ற நிகழ்ச்சிகளை வெவ்வேறு கோணங்களில் காட்டிக் கொண்டிருந்தன.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிரமோத் குழப்பமாய் அவர்களைப் பார்க்க, தேசாய். சொன்னார்.
“மிஸ்டர் பிரமோத்...! சமஜ்பூர் எம்.பி. துள்சிராம் கன்யாலாலை மானிட்டர் ஸ்க்ரீனில் க்ளோஸப்புக்கு கொண்டு வாருங்கள்...”“ஏன் ஸார்... ஏதாவது பிரச்சனையா...? நீங்கள் மூன்று பேருமே இவ்வளவு பதட்டமாய் இருந்து நான் பார்த்தது இல்லை...”
தேசாய் சொன்னார்... “பெரிய பிரச்சனைதான்! சமஸ்பூர் எம்.பி. துள்சிராம் கன்யாலால் வீட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல். ஆனால் பாராளுமன்ற சபைக்குள்ளே துள்சிராம் கன்யாலால் மாதிரியான உருவத் தோற்றத்தோடு யாரோ போயிருக்கிறார்கள். அது யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மானிட்டர் திரைக்கு துள்சிராம் கன்யாலால் முகத்தை க்ளோசப்புக்குக் கொண்டு வாருங்கள் மிஸ்டர் பிரமோத்...”
பிரமோத்தும் பதட்டமாகி கம்ப்யூட்டருக்கு முன்பாகப் போய் உட்கார்ந்தார். கம்ப்யூட்டரின் ஜூம் பட்டனைத் தட்ட சபையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ காமிராவின் கோணம் மாறி, எம்.பி.க்கள் முகங்களைப் பெரிது பெரிதாய்க் காட்ட ஆரம்பித்தது.
சமஜ்பூர் எம்.பி.யின் இருக்கை எண் எதுவென்று கம்ப்யூட்டரிடம் பிரமோத் கேட்க, இருக்கை எண் 267 என்று. மானிட்டரின் மையத்தில் உற்பத்தியாகி, பின் காமிராவின் கோணம் நகர்ந்து 267 எண்ணை நோக்கி மெதுவாய் நகர்ந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
அக்மார்க் மர்டர்

Read more from ராஜேஷ்குமார்

Related to அக்மார்க் மர்டர்

Related ebooks

Related categories

Reviews for அக்மார்க் மர்டர்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அக்மார்க் மர்டர் - ராஜேஷ்குமார்

    1

    டெல்லி. பாராளுமன்றக் கட்டிடம் காலை மணி 10.15.

    குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க இன்னும் அரைமணி நேரம் அவகாசம் இருக்க கார்களிலும், மாருதி வேன்களிலும் வந்த எம்.பி.க்கள் வீடியோ காமிராக்களுக்கும், போட்டோகிராஃபர்களுக்கும் வலுக்கட்டாயச் சிரிப்பைக் கொடுத்தபடி பாராளுமன்ற முகப்புக் கட்டிட படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

    ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி மொழிகளில் வார்த்தைகள் சிதறிக் கொண்டிருந்தன.

    என்ன யஷ்வந்த்... பாராளுமன்றத்திற்கு வந்திருக்கிறாய். வழி தவறி வந்துவிட்டாயா...?

    வீட்டில் பெண்டாட்டியின் தொல்லை தாங்க முடியவில்லை. சாயந்தரம் நான்கு மணி வரைக்கும் இங்கே நிம்மதியாய் இருந்துவிட்டுப் போகலாமே...

    ஹலோ மிஸ்டர் பண்டார்... நேற்றைய பேப்பர்கள் எல்லாவற்றிலும் நீங்கள்தான் ஹாட் நியூஸ் போல் இருக்கிறதே...?

    அது பொய்யான நியூஸ். இன்கம்டாக்ஸ் பீப்பிளும் சரி... சி.பி.ஐ. ஆட்களும் சரி, யாருமே என் வீட்டுப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் செய்கிற விஷமத்தனமான வேலைகள். இன்றைக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நாரகேஸ்வரரை ஒரு பிடி பிடிக்கிறேன் பாருங்கள்.

    என்ன மிஸ்டர் பூபேஷ்வர்மா... தொகுதிப் பக்கம் மும்முரமாய்த் திரிந்து சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் போலிருக்கிறதே...?

    பின்னே...? பாராளுமன்றத்திற்கு எந்த நிமிஷத்திலும் இடைத்தேர்தல் வரக்கூடிய வாய்ப்பு உருவாகிக்கொண்டு இருக்கிறதே...!

    இடைத் தேர்தல் இப்போதைக்கு வராது...

    அந்த பூபேஷ்வர்மா தொப்பை குலுங்க பகபகவென்று சிரித்துவிட்டு சொன்னார்.

    இந்தக் கட்சி, ஆட்சியில் இருப்பதும், இல்லாததும் எங்கள் கட்சித் தலைவரின் கையில் இருக்கிறது. அவர் ஆதரவு வாபஸ் என்று சொன்னால் போதும். அடுத்த நிமிடமே பிரதமர் ஆசாத் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

    இந்தப் பேச்சுக் குரல்களுக்கு மத்தியில் வாசலில் சின்னதாய் ஒரு பரபரப்பு அரும்பியது. போலீஸ் சார்ஜெண்ட்கள் பூட்ஸ் சத்தம் ஒலிக்க அந்த வெள்ளை நிற காண்ட்டஸா காரை நோக்கி வேக நடை போட்டு சூழ்ந்தார்கள்.

    காரின் கதவுகள் ஒரு பூவின் இதழ்கள் மாதிரி திறக்கப்பட, உள்துறை மந்திரி கீர்த்தி பட்டேல் மின்னும் வழுக்கைத்தலையோடு கைகளில் ஒரு தடிமனான ஃபைலோடு கீழே இறங்கினார்.

    பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கேள்விகள் பறந்தன்.

    பரபரப்பான ஒரு சூழ்நிலையில் இந்த குளிர்கால பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. விவாதத்துக்கு என்னென்ன விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன என்பதைச் சொல்ல முடியுமா...?

    கீர்த்தி பட்டேல் தன் நரை மீசைக்குக் கீழே பலமாய்ச் சிரித்தார்.

    இது குளிர்கால பாராளுமன்றக் கூட்டம். ஆனால் உள்ளே அனல் பறக்கும் சூடான விவாதங்கள் நடைபெற உள்ளது. விவாதங்கள் சூடாக இருந்தாலும் முடிவில் எல்லாமே சுமூகமாகத்தான் இருக்கும்...

    எதிர்க்கட்சியில் ஒரு பிரிவினர் பாராளுமன்றத்தைப் புறக்கணிக்கப் போவதாக சொல்லியுள்ளார்களே?

    அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டதே மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசத்தான். அதை அவர்கள் மறந்துவிட்டு பாராளுமன்றத்தைப் புறக்கணித்தால் இனி வரும் தேர்தல்களில் மக்கள் அவர்களைப் புறக்கணிப்பார்கள். அற்ப விஷயத்திற்கெல்லாம் பாராளுமன்றத்தை ‘பாய்காட்’ செய்தால் அவர்கள் எம்.பி.க்களாக இருக்கவே தகுதியற்றவர்கள்.

    உங்கள் ஆட்சி நீடிக்குமா...?

    ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்...?

    இல்லை... ஆளும் கட்சியான உங்களோடு, உங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணி கட்சிகள் நல்ல உறவோடு இருக்கிற மாதிரி தெரியவில்லையே...?

    இது எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரச்சாரம். கூட்டணிக் கட்சிகளோடு எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. இந்த அரசு ஐந்து வருஷம் நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசையும். ஏனென்றால் இன்னொரு பொதுத் தேர்தலைச் சந்திக்க நாட்டு மக்கள் தயாராக இல்லை...

    உங்கள் ஆட்சியில் மந்திரிகளில் சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு... அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் உத்தேசம் ஏதாவது உண்டா...?

    அதெல்லாம் கற்பனைக் குற்றச்சாட்டுகள். இட்டுக் கட்டிய பொய்கள். அதற்கெல்லாம் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் சட்டமும், நீதியும் கேலிக்குரிய விஷயங்கள் ஆகிவிடும்...

    கீர்த்தி பட்டேல் பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் வாசலில் பரபரப்பு.

    ஒரு நிருபர் சொன்னார்...

    ஸார்... பிரைம் மினிஸ்ட்டர் வந்துவிட்டார். வழக்கத்தைவிட இன்றைக்கு சீக்கிரமாகவே வந்துவிட்டார்.

    வெள்ளை நிற அம்பாசிடர், கும்பலின் நடுவே மிதந்து வர ஒரே மாதிரியான நிறத்தில் சபாரி அணிந்த பாதுகாப்பு அதிகாரிகள் காரோடு சேர்ந்து ஓடி வந்தார்கள்.

    வாசலுக்கு வந்து கார் நிற்க, பாதுகாப்பு அதிகாரியால் திறக்கப்பட்ட கார்க் கதவின் வழியாக பளீரென்ற வெள்ளைக் கதராடையில் தலையில் குல்லாயுடன் பிரதமர் ஆசாத் கைகூப்பிக்கொண்டே இறங்கினார். பிரதமருக்கு எழுபது வயது. ஆனால் பத்து வயதைக் குறைத்து மதிப்பிடும் அளவுக்கு யோகா மூலமாகவும், உடற்பயிற்சி மூலமாகவும் உடம்பைப் பளிங்காய் வைத்திருந்தார்.

    உள்துறை மந்திரி கீர்த்தி பட்டேலிடம் மொய்த்துக்கொண்டிருந்த பத்திரிகை நிருபர்கள், இப்போது பிரதம மந்திரியை நோக்கி ஓடிவர, அவர் இரண்டு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டார்.

    நோ... கொஸ்டியன்ஸ் ப்ளீஸ்...

    இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் ஸார்...

    நோ... நோ... மதிய உணவு இடைவேளையின் போது பி.எம். சேம்பருக்கு வாருங்கள். சின்னதாய் ஒரு பிரஸ் மீட் வைத்துக் கொள்வோம்...

    "ஸார்...

    Enjoying the preview?
    Page 1 of 1