Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தேவதையே... திருமகளே...
தேவதையே... திருமகளே...
தேவதையே... திருமகளே...
Ebook263 pages3 hours

தேவதையே... திருமகளே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'அயிகிரி நந்தினி நந்தி தமேதினி விஸ்வ விநோதினி...' - மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் மெல்லிய குரலில் ஒலித்துக் கொண்டிருக்க, கையில் பூஜைக் கூடையுடன் கோவிலை நெருங்கினாள் உஷா. கூடவே வந்த தங்கையிடம் திரும்பினாள். 

"உமா! சாமிக்குப் பூ வாங்கிட்டுப் போயிடலாமா?" 

"ம்... வாங்குக்கா." 

"பாட்டி ஏதோ பூ சொன்னாங்களே... என்னவோ ஒரு மாலை..." 

"ஏதாவது ஒரு பூவை வாங்குக்கா. எனக்குக் காலேஜுக்கு டயமாகுது..." 

"இருடி. நாம கிளம்பும்போதே பத்து தரம் சொல்லி விட்டாங்க. நாம ஏதாவது ஒரு பூவை வாங்கினோம்னு தெரிஞ்சது வேற வினையே வேண்டாம். இன்னிக்குப் பூரா திட்டு வாங்கிட்டே இருக்கணும்..." 

"சரி. அப்படி என்னதான் பூ சொன்னாங்க?" 

"அது... ஏதோ சிவந்த மாலையாம். வெள்ளிக் கிழமை அம்மனுக்குச் சிவந்த மாலை சாத்தினா ரொம்ப நல்லதாம்." 

"அப்படின்னு பாட்டி சொன்னாங்களாக்கும்?" 

"ம்..." 

"வர வர இந்தப் பாட்டியைச் சமாளிக்கவே முடியலை. எப்பப் பாரு எதையாவது நொய் நொய்ன்னுகிட்டு..." 

"ஷ்... உமா! தப்பு. பெரியவங்களை அப்படி யெல்லாம் மரியாதைக் குறைவா பேசக் கூடாது..." - தங்கையைக் கண்டித்தாள் உஷா. 

"முதல்ல பெரியவங்க மாதிரி நடக்கட்டும். பிறகு மரியாதை கொடுத்துக்கலாம்..." - அலட்சியமாய்க் கூறிய உமாவும் உஷாவும் இரண்டு வருட இடைவெளியில் பிறந்த சகோதரிகள். இருவரும் இரு துருவங்கள். 

உருவ அமைப்பில் ஒற்றுமையாய்த் தெரியும் இவர்களின் குணநலன்கள் நேரெதிர். அதிர்ந்து பேசக்கூட தயங்கும் மூத்தவள். எதையுமே பளிச்செனக் கணீரென்று பேசுபவள் இளையவள். 

பெற்றவர்கள்... பெரியவர்கள் எதைச் சொன்னாலும் தலையாட்டும் உஷாவையும் எதற்கெடுத்தாலும் குறைந்தது பத்து கேள்வியாவது கேட்டு விடும் உமாவையும் பெற்றவர் ராமச்சந்திரனால் மட்டுமே சமாளிக்க முடியும். 

ம்... என்றால் அழுது விடுவாள் உஷா. 

எத்தனை துயரம் வந்தாலும் கண்களில் துளி நீரைக் காட்ட மாட்டாள் உமா. 

"பெண் பிள்ளைக்கு அப்படி என்னடி அழுத்தம்? கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கியே? கண்ணுல ஒரு சொட்டுத் தண்ணி வருதா பார்..." - என்பாள் ரங்கநாயகி. ராமச்சந்திரனின் தாய். 

"அவசியம் இல்லாம ஒரு சொட்டுக் கண்ணீரைக்கூட வீணாக்கக் கூடாது பாட்டி. அழுவதுதான் பெண்களின் பலவீனம்!" என்பாள் உமா. 

எந்த வார்த்தைக்கும் பதில் சொல்லி வாயடைத்து விடுவாள் என்பதால் ரங்கநாயகிக்கும் உமாவுக்கும் ஒருபோதும் ஒத்துப் போகாது. பாட்டி என்ற சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயைக் கடித்தது போல முகம் சுளிப்பாள் உமா. 

பாட்டிக்காகப் பரிந்து கொண்டு தங்கையை அதட்டுவது உஷாவின் வழக்கம். இன்றும் அதே போல் மென்மையான குரலில் கடிந்தாள். 

"என்ன உமா நீ! எப்பப் பாரு பாட்டியைக் குறை சொல்லிட்டே இருக்கே. தப்பும்மா... வயசானவங்களை மதிக்கணும். அப்பத்தான்..." 

"அக்கா! நீ சாமி கும்பிட வந்தியா? எனக்கு டியூஷன் எடுக்க வந்தியா?" 

"ஒரு நல்லது சொன்னா... காது கொடுத்துக் கேட்க மாட்டியே!" 

"அதெல்லாம் பொறுமையாக் கேட்கலாம். இப்ப பூ வாங்கு. சாமி கும்பிட்டு வீட்டுக்குப் போகலாம்." 

"சரி வா..." - என்றவாறு இருவரும் வரிசையாய் இருந்த பூக்கடையை நெருங்கினர். 

சாமந்தி, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், கதம்ப மலர்கள் என அனைத்தும் புத்தம் புதிதாய் நறுமணத்தோடு வீற்றிருந்தது. 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 15, 2023
ISBN9798223229193
தேவதையே... திருமகளே...

Read more from Kalaivani Chokkalingam

Related to தேவதையே... திருமகளே...

Related ebooks

Reviews for தேவதையே... திருமகளே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தேவதையே... திருமகளே... - Kalaivani Chokkalingam

    1

    ‘அயிகிரி நந்தினி நந்தி தமேதினி விஸ்வ விநோதினி...’ - மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் மெல்லிய குரலில் ஒலித்துக் கொண்டிருக்க, கையில் பூஜைக் கூடையுடன் கோவிலை நெருங்கினாள் உஷா. கூடவே வந்த தங்கையிடம் திரும்பினாள்.

    உமா! சாமிக்குப் பூ வாங்கிட்டுப் போயிடலாமா?

    ம்... வாங்குக்கா.

    பாட்டி ஏதோ பூ சொன்னாங்களே... என்னவோ ஒரு மாலை...

    ஏதாவது ஒரு பூவை வாங்குக்கா. எனக்குக் காலேஜுக்கு டயமாகுது...

    இருடி. நாம கிளம்பும்போதே பத்து தரம் சொல்லி விட்டாங்க. நாம ஏதாவது ஒரு பூவை வாங்கினோம்னு தெரிஞ்சது வேற வினையே வேண்டாம். இன்னிக்குப் பூரா திட்டு வாங்கிட்டே இருக்கணும்...

    சரி. அப்படி என்னதான் பூ சொன்னாங்க?

    அது... ஏதோ சிவந்த மாலையாம். வெள்ளிக் கிழமை அம்மனுக்குச் சிவந்த மாலை சாத்தினா ரொம்ப நல்லதாம்.

    அப்படின்னு பாட்டி சொன்னாங்களாக்கும்?

    ம்...

    வர வர இந்தப் பாட்டியைச் சமாளிக்கவே முடியலை. எப்பப் பாரு எதையாவது நொய் நொய்ன்னுகிட்டு...

    ஷ்... உமா! தப்பு. பெரியவங்களை அப்படி யெல்லாம் மரியாதைக் குறைவா பேசக் கூடாது... - தங்கையைக் கண்டித்தாள் உஷா.

    முதல்ல பெரியவங்க மாதிரி நடக்கட்டும். பிறகு மரியாதை கொடுத்துக்கலாம்... - அலட்சியமாய்க் கூறிய உமாவும் உஷாவும் இரண்டு வருட இடைவெளியில் பிறந்த சகோதரிகள். இருவரும் இரு துருவங்கள்.

    உருவ அமைப்பில் ஒற்றுமையாய்த் தெரியும் இவர்களின் குணநலன்கள் நேரெதிர். அதிர்ந்து பேசக்கூட தயங்கும் மூத்தவள். எதையுமே பளிச்செனக் கணீரென்று பேசுபவள் இளையவள்.

    பெற்றவர்கள்... பெரியவர்கள் எதைச் சொன்னாலும் தலையாட்டும் உஷாவையும் எதற்கெடுத்தாலும் குறைந்தது பத்து கேள்வியாவது கேட்டு விடும் உமாவையும் பெற்றவர் ராமச்சந்திரனால் மட்டுமே சமாளிக்க முடியும்.

    ம்... என்றால் அழுது விடுவாள் உஷா.

    எத்தனை துயரம் வந்தாலும் கண்களில் துளி நீரைக் காட்ட மாட்டாள் உமா.

    பெண் பிள்ளைக்கு அப்படி என்னடி அழுத்தம்? கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கியே? கண்ணுல ஒரு சொட்டுத் தண்ணி வருதா பார்... - என்பாள் ரங்கநாயகி. ராமச்சந்திரனின் தாய்.

    அவசியம் இல்லாம ஒரு சொட்டுக் கண்ணீரைக்கூட வீணாக்கக் கூடாது பாட்டி. அழுவதுதான் பெண்களின் பலவீனம்! என்பாள் உமா.

    எந்த வார்த்தைக்கும் பதில் சொல்லி வாயடைத்து விடுவாள் என்பதால் ரங்கநாயகிக்கும் உமாவுக்கும் ஒருபோதும் ஒத்துப் போகாது. பாட்டி என்ற சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயைக் கடித்தது போல முகம் சுளிப்பாள் உமா.

    பாட்டிக்காகப் பரிந்து கொண்டு தங்கையை அதட்டுவது உஷாவின் வழக்கம். இன்றும் அதே போல் மென்மையான குரலில் கடிந்தாள்.

    என்ன உமா நீ! எப்பப் பாரு பாட்டியைக் குறை சொல்லிட்டே இருக்கே. தப்பும்மா... வயசானவங்களை மதிக்கணும். அப்பத்தான்...

    அக்கா! நீ சாமி கும்பிட வந்தியா? எனக்கு டியூஷன் எடுக்க வந்தியா?

    ஒரு நல்லது சொன்னா... காது கொடுத்துக் கேட்க மாட்டியே!

    அதெல்லாம் பொறுமையாக் கேட்கலாம். இப்ப பூ வாங்கு. சாமி கும்பிட்டு வீட்டுக்குப் போகலாம்.

    சரி வா... - என்றவாறு இருவரும் வரிசையாய் இருந்த பூக்கடையை நெருங்கினர்.

    சாமந்தி, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், கதம்ப மலர்கள் என அனைத்தும் புத்தம் புதிதாய் நறுமணத்தோடு வீற்றிருந்தது.

    ரோஜா மாலை, சாமந்தி மாலை, சம்பங்கி மாலை என வரிசையாய்த் தொங்க விடப்பட்டிருந்த மாலையைப் பார்த்தாள் உஷா. ‘இதில் எது சிவந்த மாலை? இந்த ரோஜா மாலையாய் இருக்குமோ?’

    இன்னாம்மா வோணும்? - வெற்றிலை வாயோடு கேட்ட பூக்கார அம்மாளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

    வந்து... சிவந்த மாலைன்னா... எது?

    செவ்வரளி மாலை. எத்தினி வேணும்?

    ரெண்டு கொடுங்க...

    முப்பது ரூபா கொடும்மா... என்றவாறு பூக்களோடு கவரில் சுற்றி வைத்திருந்த செவ்வரளி மாலைகளில் இரண்டை எடுத்து வாழை இலையில் மடித்துக் கட்டி நீட்டினாள்.

    என்னம்மா இது? இந்த அரளி மாலையா முப்பது ரூபா? ஒரு முளம் நீளம் கூட இல்லையே? என்றாள் உமா.

    இன்னிக்கு வெள்ளிக்கிழமைம்மா. சிவந்த மாலை யாருகிட்டயும் கிடைக்காது. அவ்வளவு கிராக்கி.

    என்ன அநியாயம் இது? அக்கா! இந்தப் பூதான் நம்ம தெரு முனையில் உள்ள குழாயடி பக்கத்திலயே ஏராளமாப் பூத்துக் கிடக்குதே... நாம அதையே பறிச்சிக் கட்டிட்டு வந்திருக்கலாமே...

    எனக்குச் சிவந்த மாலைன்னா செவ்வரளி மாலைன்னு தெரியாது உமா. பாட்டி தொடர்ந்து அஞ்சு வாரம் இந்த மாலையைச் சாமிக்குச் சாத்தச் சொன்னாங்க. அடுத்த வாரம் வரும்போது நாமளே கொண்டு வந்திடலாம்.

    என்ன... பூ வேணுமா? வேண்டாமா? வாங்கிக்கலன்னா இடத்தைக் காலி பண்ணும்மா. வியாபாரம் கெடுதில்ல...?

    ஆமா! நூறு பேர் லைன்ல நிக்கிறாங்க. ரொம்ப அலுத்துக்காதம்மா. அக்கா! நீ காசைக் கொடு.

    ஆத்தி! இது என்னா வாய் பேசுது பாரேன்...?

    இதோ பாரும்மா. பேசாம காசை வாங்கினோமா வியாபாரத்தைப் பார்த்தோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு ஏதாவது பேசின... என்ற தங்கையை அதட்டினாள் உஷா.

    ஏய்! சும்மா இருக்க மாட்ட? போய் அர்ச்சனைத்தட்டு வாங்கு. நான் காசு கொடுத்திட்டு வர்றேன்.

    ம்... ம்... என்றவாறு உமா கடுப்பாய் நகர...

    நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள் உஷா.

    இந்தாங்க...

    என்னம்மா... காலையில முழு நோட்டா நீட்டுற? சில்லரையாக் கொடுத்திடு. இன்னும் போணியே ஆகலை.

    அடடா! என்கிட்டயும் சில்லரை இல்லையே...

    அர்ச்சனை சாமான் வாங்குறல்ல...? அவன்கிட்ட சில்லரை மாத்திட்டு எனக்குக் கொடு.

    சரிம்மா... என்று கூறிவிட்டு கூப்பிடு தூரத்தில் இருந்த அர்ச்சனைப் பொருட்கள் இருந்த சிறு கடையை உஷா நெருங்க... அவள் மீது நம்பிக்கையின்றியோ என்னவோ பூக்கார அம்மாளும் அவளைப் பின் தொடர்ந்தாள்.

    உஷாவின் இதழ்களில் புன்னகை நெளிந்தது. ‘கோவில் வாசலில் வைத்து அதுவும் சுவாமிக்கு வாங்கிய மாலைக்கா காசு கொடுக்காமல் ஏமாற்றி விடுவேன்? அடிக்கடி வந்து போகும் கோவில்தான். எப்போதும் பார்க்கிற பெண்மணிதான். இருந்தும் எப்படி நம்பிக்கை இல்லாமல் போகிறது?’

    கடையை நெருங்கியதும் உமாவிடம் கேட்டாள்.

    வாங்கியாச்சா?

    ம்...

    நூறு ரூபாய்க்குச் சில்லரை இருக்கா?

    கொடும்மா... - என்றதும் அவரிடம் பணத்தை நீட்டி... சில்லரையைப் பெற்றுக்கொண்டு, மூன்று பத்து ரூபாய் தாள்களை எண்ணிப் பூக்காரப் பெண்மணியிடம் நீட்டினாள்.

    அவள் வாங்கிக் கொண்டு நகர... அர்ச்சனைப் பொருட்களைப் பூஜைக் கூடையில் அடுக்கிக் கொண்டு, அதன் மேலாக, செவ்வரளி மாலையையும் வைத்துக் கையில் எடுத்துக் கொண்டு கோவிலை அடைந்தனர்.

    வாசலருகே இருந்த குழாயைத் திருகி... கால்களை அலம்பி விட்டு... கோவிலுக்குள் நுழைந்து அர்ச்சகரிடம் பூஜைக் கூடையை நீட்டினாள் உஷா.

    யார் பேருக்கும்மா அர்ச்சனை?

    அம்பாள் பேருக்கே பண்ணிடுங்க! - என்றதும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அவர் கர்ப்பகிரகத்தை அடைய, இருவரும் கைகூப்பி அம்பாளை வணங்கினர்.

    சிரித்த முகத்தோடு மஞ்சள் அலங்காரத்தில் மின்னிய முத்துமாலையம்மனை மலர்ந்த முகத்தோடு கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் உஷா. கண்களை மூடவோ விலக்கவோ மனமில்லை.

    அப்படி ஒரு தெய்விக முகம். புன்னகையும் சாந்தமும் நிரம்பிய கண்கள்.

    உஷாவின் கண்களுக்கு ஒரு கற்சிலையாகத் தோன்றவில்லை. அந்த அம்மனே உயிர் பெற்று அமர்ந்திருப்பதைப் போல் தோன்றியது.

    ‘கோவிலுக்குப் போனதும் நல்லா வேண்டிக்கோ. இந்த வரனாவது நல்லபடியா முடியணும். இன்னிக்கு வரப்போற மாப்பிள்ளைக்கு என்னைப் பிடிச்சிருக்கணும். இந்தச் சம்பந்தம் கண்டிப்பா கைகூடணும்னு வேண்டிக்க...’

    என்ற ரங்கநாயகியின் வார்த்தைகள் தோய்ந்து போனது.

    இந்த முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாலே போதுமே... வேறு என்ன கேட்பது? பெற்றவளுக்குத் தெரியாதா? பிள்ளைக்கு எப்போ எதைச் செய்ய வேண்டும் என்று? தனக்கான துணையை இவளே தேர்ந்தெடுத்து அனுப்ப மாட்டாளா?

    நான் ஏன் கேட்க வேண்டும்? பாட்டி சொல்லி அனுப்பியது போல் எதுவும் வேண்டப் போவதில்லை. எனக்கு எது நடக்கணும்னு இருக்கோ அது நடக்கட்டும்.

    கற்பூரத் தட்டோடு வந்தார் அர்ச்சகர். கற்பூரத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டதும்... பூஜைக் கூடையை அவளிடம் கொடுத்தார்

    சிவந்த பூ வந்திருக்கு. பாட்டிகிட்ட சொல்லிடும்மா... எல்லாம் நல்லதாவே நடக்கும்னு...

    சாமி! என்ன சொல்றீங்க?

    பாட்டி காலம்பற வந்து... பூ கட்டி போடச் சொன்னாம்மா... போட்டதுல சிவந்த மலர் வந்திருக்கு. சுப சகுனம்.

    உமாவின் முகம் கடுகடுத்தது. இந்தக் கிழவி ஊர் முழுக்கச் சொல்லி வெச்சிருக்குதா? - பற்களைக் கடித்தவாறே முணுமுணுத்த தங்கையை அதட்டினாள் உஷா.

    ஷ்... சும்மாயிரு! சரிங்க சாமி. நான் சொல்லிடுறேன்...

    நல்லதும்மா... - என்றவாறே விபூதி, குங்குமம் தர... அதைப் பெற்றுக் கொண்டே கோவில் பிரகாரத்தில் அமர்ந்த தமக்கையிடம் சீறினாள் உமா.

    இந்தப் பாட்டிக்கு வரவர ஏன்தான் புத்தி இப்படிப் போகுதோ? ச்சே!

    ஏன்டி?

    பின்னே என்னக்கா? பொண்ணு பார்க்க வர்றதை ஊர் பூரா சொல்லி தம்பட்டம் அடிக்கணுமா? அப்புறம் இது கைகூடலைன்னா கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியுமா? துக்கம் கேட்கிற மாதிரியில்ல கேட்பாளுங்க...

    உமா! பாட்டி பழமையில ஊறினவங்க... பூ கட்டிப் போட்டுப் பார்க்கணும்னு விரும்பினது அவங்க விருப்பம்.

    அதை வீட்டுலயே கட்டிப் போட்டு பார்க்கலாமில்ல... ஏன் கோவில்ல வந்து சொல்லணும்?

    இப்ப எதுக்கு நீ இவ்வளவு கோபப்படுற உமா? எனக்கொண்ணும் இதுல தப்பு இருக்கிறதா தோணலை. பெரியவங்க ஒரு காரியம் செய்தா அதுக்கு அர்த்தம் இல்லாம இருக்காது...

    ம்... இப்படி அவங்க பண்ற கூத்துக்கெல்லாம் தலையாட்டிட்டு இரு. அவங்க உன்னை மாசத்துக்கு ரெண்டு நாள் நல்லா அலங்கரிச்சி... போற வர்றவனை எல்லாம் கூப்பிட்டு உட்கார வெச்சி காபி, டிபன் கொடுத்து உன்னைக் காட்சிப் பொருளா கொண்டு வந்து நிறுத்தட்டும்.

    உமா!

    உனக்கென்ன முப்பது வயசா ஆகிப் போச்சி? இருபத்தி மூணு வயசுதானே ஆகுது. அதுக்குள்ள ஏன் இப்படிப் பறக்கிறாங்க?

    நான் என்ன பண்ணுவேன் உமா? அப்பாவும் பாட்டியும் செய்யுற ஏற்பாடு இது. நான் மறுக்கவா முடியும்?

    "நான் மறுக்கச் சொல்லலைக்கா. ஆனா எதுக்காக இத்தனை மாப்பிள்ளையை வரச் சொல்லணும். நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி ஒருத்தனைப் பார்த்து எல்லாம் பேசி முடிச்சிட்டுப் பெண் பார்க்க வரச் சொல்லலாமில்ல?

    சும்மா வந்து வயிறு முட்டத் தின்னுட்டு உன்னை நிக்க வச்சிக்கிட்டே பேரம் பேசுறாங்க. அசிங்கமா இல்லக்கா? பேரம் படியலைன்னா வேற இடம் பார்த்துக்கிறோம்னு கிளம்பிடுறானுங்க..."

    இதெல்லாம் காலம் காலமாத் தொடர்ந்து வர்ற சங்கடம். இதை நீயோ நானோ மாத்த முடியாது.

    மாத்தணும்க்கா. என் ஃப்ரெண்டோட அக்காவை இப்படித்தான் மாப்பிள்ளை வீட்டுல இருந்து பொண்ணு பார்க்க வர்றோம்னு சொன்னாங்களாம். அதுக்கு அவங்க சம்மதிக்கவே இல்லையாம்.

    ஏன்?

    போட்டோவையோ இல்லன்னா வெளியிடங்கள்ல எங்கேயாவது வெச்சிப் பார்த்திட்டு... பிடிச்சிருந்தா மட்டும் வீட்டுக்கு வந்து நிச்சயம் பண்ணட்டும்னு சொல்லிட்டாங்களாம்.

    ஓஹோ!

    அக்கா! இது சூப்பரான ஐடியா இல்ல?

    ம்... கேட்க நல்லாத்தான் இருக்கு.

    நாமளும் இதே டெக்னிக்கை யூஸ் பண்ணினா என்ன?

    நம்ம வீட்டுலயா? இதெல்லாம் நடக்கிற காரியமா உமா!

    ஏன்? ஏன் நடக்காது? நான் அப்பாகிட்ட பேசுறேன்.

    வேண்டாம் உமா. ஏற்கனவே உன்னை வாயாடின்னு பாட்டி கரிச்சிக் கொட்டுறாங்க. இதுல உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்?

    யாரது? ரங்கநாயகி பேத்திகளா? - வயதான அம்மாள் தனது மூக்குக் கண்ணாடியை நிமிர்த்திக் கொண்டே கேட்க... உமா வாய்க்குள் முணுமுணுத்தாள்.

    ம்க்கும்! இது ஒரு இம்சை... என்றவளை நறுக்கெனக் கிள்ளினாள் உஷா. எதிரில் நின்ற பெண்மணியிடம் சின்னதாய்ப் புன்னகைத்தாள்.

    ஆமா பாட்டி...

    இதுல யாரு மூத்தவ?

    நான்தான் பாட்டி... என்ற உஷாவை முழுவதுமாய் ஒரு முறை பார்த்து விட்டுத் தலையாட்டினாள் அந்த அம்மாள்.

    ம்... பார்க்க லட்சணமாத்தான் இருக்கிற. பிறகேன் வர்ற வரனெல்லாம் தட்டிப் போகுது?

    உமாவின் முகம் சினந்தது. இதைக் கேட்கத்தான் காலங்கார்த்தால புறப்பட்டுக் கோவிலுக்கு வந்தீங்களா?

    என்னடியம்மா... இப்படிக் கேட்கிற?

    பின்னே... கோவிலுக்கு வந்தா சாமியை மட்டும் கும்பிடுங்கோ. அடுத்தவா விஷயத்தை அலசி ஆராயாதீங்கோ...

    ஷ்... உமா! வாயை மூடு.

    நீ சும்மா இருக்கா. இதுங்களுக்கெல்லாம் இப்படி நறுக்குன்னு நாலு கேள்வியாவது கேட்கணும்...

    அம்மாடி! ரங்கநாயகி சொன்னது எவ்வளவு உண்மை. சின்னப் பேத்தி சரியான வாயாடின்னு சொல்வாளே... அது சரிதான் போலிருக்கு! - வக்கனையாய் நீட்டி முழக்கியவளிடம்... உமா ஏதோ கடுப்பாய்ப் பேசத்துவங்க... அவளைத் தடுத்தாள் உஷா.

    இதோ பாருங்கம்மா! நாங்க சாமி கும்பிட வந்தோம். சச்சரவுக்கு வரலை. வந்த வேலையைப் பாருங்களேன்... ப்ளீஸ்! என்று மென்மையாகவும் அழுத்தமாகவும் சொல்ல... அந்த அம்மாள் சலிப்பாய் விலகினாள்.

    என்னவோம்மா! இந்தக் காலத்துப் பெண் பிள்ளைங்ககிட்ட ஒரு வார்த்தை கூடப் பேச முடியுறதில்லை. பாவம்தான் ரங்கநாயகி! - முனகிக் கொண்டே அவள் போய் விட...

    கோபமும் அவமானமுமாய் தமக்கையை ஏறிட்டாள் உமா.

    பார்த்தியா! இதுங்ககிட்ட எல்லாம் நாம பேச்சுவாங்க வேண்டியிருக்கு? எல்லாம் நம்ம வீட்டுல இருக்கிற பெரிசால வந்தது...

    உமா! இது என்ன பேச்சு? அவங்க நம்ம பாட்டி. அவங்களுக்கு நாம மரியாதை கொடுக்கணும்...

    மரியாதையா! என்னைப் பத்தி என்ன சொல்லி வெச்சிருக்கு பார்த்தியா?

    அவங்க என்கிட்டதானே கேட்டாங்க. நீ ஏன் கோபமாப் பேசின?

    அப்போ... அது கேட்டது தப்பில்லையா? - சீற்றமாய்க் கேட்ட தங்கையின் வலக்கரத்தைப் பற்றி மென்மையாய் அழுத்தியவாறே... வறட்சியாய் புன்னகைத்தாள் உஷா.

    தப்பில்லை உமா... ஒரு பொண்ணை நாலு பேர் வந்து பார்த்துட்டுப் போறதும்... எந்த இடமும் அமையலைன்னா அக்கம் பக்கம் உள்ளவங்க கேட்கிறதும்...! இதுல கோபப்பட என்ன இருக்கு?

    அக்கா! அப்போ... உனக்கு வருத்தமே இல்லையா?

    "ம்ப்ச்! வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது? நமக்குப் பிடிக்காத விஷயத்தையோ... நம்ம மனசைக் கஷ்டப்படுத்தற வார்த்தைகளையோ யாராவது பேசினா... நாம பதிலேதும் பேசாம ஜஸ்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1