Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vacha Kuri Thappathu
Vacha Kuri Thappathu
Vacha Kuri Thappathu
Ebook63 pages19 minutes

Vacha Kuri Thappathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நடிகை வசுமதியும், அவளது கணவர் வராகன், டைரக்டர் ராஜீவ் அனைவரும் படப்பிடிப்புக்காக கிளியோபாட்ரா எஸ்டேட்டுக்கு செல்கிறார்கள். அங்கு நடிகன் அமரேஷ்க்கு ஏற்பட்ட சோகம் என்ன? யாருக்கு யாரோ வச்சகுறியால் ஒவ்வொரு நொடியும் திக்... திக்... திகிலோடு வச்சகுறி தப்புமா? தப்பாதா? வாசித்தால் விடைக் கிடைக்கும்...

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580100608142
Vacha Kuri Thappathu

Read more from Devibala

Related to Vacha Kuri Thappathu

Related ebooks

Reviews for Vacha Kuri Thappathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vacha Kuri Thappathu - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வச்சகுறி தப்பாது

    Vacha Kuri Thappathu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    இந்தப் படத்தை ஒப்புக்க வேண்டாம்னு நான் பாக்கறேன்!

    அவள் சொன்ன பதிலைக் கேட்டு எரிச்சல் வந்தது வராகனுக்கு.

    ஏன்?

    நானே படிப்படியா படங்களைக் குறைச்சிட்டு வர்றன். இதுல எதுக்கு 40 நாள் தொடர்ச்சியா வெளியூர்ல கால்ஷீட் தரணும்? பிடிக்கலை எனக்கு!

    என்ன தப்பு மதி?

    மனசுகுள்ள ஒரு நெருடல் வேண்டாம்னு தோணுது.

    உன் எண்ணம் எனக்குப் புரியலை கிளியோபாட்ரா உனக்குப் பழக்கமான டீ எஸ்டேட் ஏறத்தாழ நீ வளர்ந்த இடம் இது சினிமா உலகத்துல எல்லாருக்கும் தெரியும். உன் சொந்த ஊர்ல ஒரு முழுப்படமும் தயாராகுதுன்னா, சென்டிமெண்டலா நீ ஒப்புக்குவேன்னுதானே, உன்னை ஹீரோயினா போட்டார் டைரக்டர்

    "வேணாங்க!''

    மறுக்காதே மதி! டைரக்டர் ராஜீவ் இன்னிக்கு தமிழ் சினிமால கிங் மேக்கர். அவரோட ஒரு படத்துல நடிச்சா மார்க்கெட்டே வேற உனக்குப் புரியாதா இதெல்லாம்?

    நான் யோசிக்கணும்!

    ''அதுக்கெல்லாம் நேரமில்லை. நான் சரின்னு சொல்லியாச்சு இன்னும் நாலு நாள்ள அவுட்டோர் புறப்படறோம். மற்ற தேதிகளை சரி பண்ணித் தந்தாச்சு நான் நாப்பது நாள் எந்தப்படமும் இல்லை உனக்கு!"

    இப்ப நான் டப்பிங் புறப்படணும் சாயங்காலம் வந்து பேசிக்கலாம்!

    மதி காரில் ஏறினாள்.

    வசுமதி என்ற இவள் ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னாள் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சினிமாவுக்குள் நுழைந்தாள். க்ரூப் டான்ஸ், டூயட்டில் கும்பலில் ஆடும் பெண் என ஆரம்பமாகி, ஏதோ ஒரு படத்தில் கேரக்டர்ரோலில் செய்ய வாய்ப்புக் கிடைக்க, கவனிக்கப்பட்டாள். அடுத்து வரும் படம் ஒன்றில் இரண்டாவது கதாநாயகி வேஷம் அது ஹீரோயினா மிஞ்சி நின்று விட,

    புது இயக்குநர் ஒருவர் துணிந்து கதாநாயகியாகப் போட்டுவிட்டார். சூடு பிடித்துவிட்டது அந்தப்படம், அது வெள்ளிவிழாவைக் கடந்துவிட மளமளவென புது ஒப்பந்தங்கள்…

    இந்த நாலு வருடங்களாகச் சுழன்று கொண்டிருக்கிறாள் மதி, பம்பரமாக.

    சகல முன்னணி கதாநாயகர்களிடமும் நடித்தாயிற்று. இன்று நம்பர் ஒன் கதாநாயகி மதிதான்.

    அவர் ராசியோ என்னவோ, பெரும்பாலான படங்கள் நூறு

    Enjoying the preview?
    Page 1 of 1