Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vendru Vaa Bharath
Vendru Vaa Bharath
Vendru Vaa Bharath
Ebook93 pages34 minutes

Vendru Vaa Bharath

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காசிநாதனின் தங்கை நளினி. நளினி தற்கொலை செய்து கொண்ட விஷயத்தில் சந்தேகம் இருப்பதாக காசிநாதன் பரத்தின் உதவியை நாடுகிறார். நளினி தற்கொலை செய்தாளா? அல்லது கொலை செய்யப்பட்டாளா? அவள் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாள் என்பதை பரத், சுசிலா எவ்வாறு கண்டறிந்தார்கள்? பட்டுக்கோட்டை பிரபாகரின் வென்று வா பரத்தில் படித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580100908094
Vendru Vaa Bharath

Read more from Pattukottai Prabakar

Related to Vendru Vaa Bharath

Related ebooks

Reviews for Vendru Vaa Bharath

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vendru Vaa Bharath - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வென்று வா பரத்

    Vendru Vaa Bharath

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    இந்தக் கதையின் முதல் வரியிலேயே ஆஜராகிவிட்ட பரத் கம்ப்யூட்டரில் மும்முரமாக இருந்தான்.

    ஒரு கேஸ் தொடர்பாக வெடிகுண்டுகளை இணைக்கும் லேட்டஸ்ட் டிட்டனேட்டர்கள் பற்றிய தகவல்கள் அவனுக்குத் தேவையாக இருந்தது.

    வலையில் சறுக்கி ஃபிரான்ஸ் நாட்டின் ஒரு தனியார் ஆயுத வியாபாரி திறந்து வைத்திருந்த கடையைப் பிடித்தான்.

    அந்த ஆசாமி பொருள்களை கண்ணில் காட்டாமல் வண்டி வண்டியாய் தகவல்கள் மட்டும் வைத்திருந்தான். என் சரக்கு பிரத்தியேகமானதாகும். இந்த இந்த நாட்டுக்கெல்லாம் நான் சப்ளை செய்கிறேனாக்கும் என்று தம்பட்டம்தான் அதிகமிருந்தது. இதில் இத்தனை மெஷின்கள் வாங்கினால் இத்தனை தோட்டாக்கள் இலவசம் என்று ஸ்கீம் வேறு.

    பரத்திற்கு படங்கள் முக்கியமாகத் தேவைப்பட்டது.

    இந்த ஆள் சரிப்படமாட்டானென்று எலியை நகர்த்தி மீண்டும் சறுக்க ஆரம்பித்தபோது யதேச்சையாக ‘SEXY GIRLS’ தலைப்பு பார்த்து நோக்கம் மறந்து சிகரெட் பற்றவைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக உள்ளே நுழைந்தான்.

    வரவேற்பு வாசலில் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருந்தது. உனக்கு கீழ்க்கண்ட எந்த நாட்டுப் பெண்கள் பார்க்க வேண்டும்? அதில் என்ன வயசு இருக்க வேண்டும்? என்று ஏக கேள்விகள்.

    பிரேசில் தேர்வு செய்தான். எச்சில் விழுங்கிக்கொண்டு பதினெட்டிலிருந்து இருபது வயதென்று தேர்வு செய்தான்.

    பேங்கிற்குப் போயிருக்கும் சுசிலா இன்னும் வந்துவிடவில்லையே என்று ஒரு தரம் அறைக்கதவைத் திரும்பிப் பார்த்துக்கொண்டான்.

    இப்போது திரையில் ‘உன் கிரெடிட் கார்டு நம்பர் என்ன?’ என்று கேள்வி கேட்கப்பட... வெறுத்துப் போனான் பரத். ‘காசு கொடுத்து பார்க்கறதாயிருந்தா நான் ஆட்டத்துக்கு வரலைப்பா’ என்று திரையிடம் சொல்லிக்கொண்டு வெளியே வர…

    ‘ஓசியில் பார்க்க விரும்பற ஆசாமியா நீ. அப்படின்னா இந்த வெப்சைட்டுக்குப் போ. தனி ஆசாமிங்களோட பிரைவேட் கலெக்ஷனைப் போட்டு வெச்சிருக்காங்க’ என்று தகவல் சொன்னது.

    உருப்படியாக வேலை பார்க்கவிடாது போலிருக்கே என்று உள்ளுக்குள் பொய்யாக சலித்துக்கொண்டு சொல்லப்பட்ட சைட்களில் ஒன்றின் கதவைத் தட்டினான் பரத்.

    ஒரு மொட்டைத்தலை நீக்ரோ இளைஞன் புகைப்படத்தில் புன்னகைத்து தன் பெயர் டினால்டோ என்றும், தான் ஒரு ரசனையான ஜென்மம் என்றும், உலகத்திலேயே அழகான படைப்பு பெண் என்பது தன் கருத்தென்றும் வரிவரியாய் விளக்கவுரை கொடுக்க.....

    யப்பா! நீ ரசனைக்காரன். ஒத்துக்கறேன். உன் கலெக்ஷனைக் காட்டு ராஜா! சீக்கிரம்டா! சுசிலா வந்துடுவா! என் அவசரம் புரியாம அறுக்கறியேடா மொட்டைத்தலையா டினால்டோவைக் கெஞ்சினான் பரத்.

    ஒரு வழியாக டினால்டோவின் கலெக்ஷன் துவங்கியது.

    ஒரு படத்தை பகுதி பகுதியாக உருவாக்க ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டது. உருவானதும் விசிலடித்தான் பரத்.

    தலைகீழ் v போல கால்களை வைத்துக்கொண்டு நின்றிருந்த அந்தப் பெண்ணின் உடம்பில் செயற்கையான பொருள் ஒன்றே ஒன்றுதான். அது அவள் தொப்புளில் மாட்டியிருந்த மோதிரம்.

    டினால்டோவின் கலெக்ஷன் ஒவ்வொன்றும் பரத்திற்குள் அனல் வீசச் செய்தது.

    சர்வதேச அளவில் டினால்டோ எவ்வளவு பெரிய சமூக சேவை செய்து வருகிறான்.

    பரத் முதல் காரியமாக டினால்டோவின் கலெக்ஷன் முழுவதையும் தன் கம்ப்யூட்டரின் சொந்த ஃபைலில் ‘TINALTO’ என்று தலைப்பு கொடுத்து டவுன்லோட் செய்யச்சொல்லி உத்தரவு கொடுத்தான்.

    டினால்டோவின் ‘E’ மெயில் விலாசம் பிடித்து, ‘அசத்திட்டே கண்ணா! உன் ரசனையே ரசனை. உன் கலெக்ஷன்ல புதுசா ஏதாச்சும் சேர்ந்தா உடனே எனக்கு தப்பாம தகவல் கொடு ராஜா’ என்று செய்தி அனுப்பி வைத்தான்.

    சொந்த ஃபைலில் பதிவாகிவிட்ட பெண்களை சுசிலா இல்லாத சமயமாகப் பார்த்து பிரிண்டரில் வடித்தெடுத்து ஃபைல் செய்து படுக்கையறையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த பரத் பேசாமல் வலையை விட்டு வெளியே வந்திருக்கலாம்.

    ஏகப்பட்ட ரசனை மன்னன்களின் முகவரி கொடுத்ததே, ஒரு டினால்டோவின் கண்காட்சியைத் தானேப் பார்த்தோம்... இதெல்லாம் சைவம்தானே? பெண்ணோடு ஆணும் உள்ள அசைவ கலெக்ஷனை எந்த ரசனை மன்னனாவது வைத்திருக்கிறானா என்றுப் பார்த்து விடலாமே.

    அடுத்து ‘ரிபுக்கா’ என்கிற பெயர் பெண்ணா, ஆணா என்று புரியாமல் உள்ளே சென்றான் பரத்.

    தன்னைப்

    Enjoying the preview?
    Page 1 of 1