Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கோவையில் ஒரு குற்றம்
கோவையில் ஒரு குற்றம்
கோவையில் ஒரு குற்றம்
Ebook161 pages41 minutes

கோவையில் ஒரு குற்றம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரஸ்ட் காலேஜிற்கு கொஞ்சம் தள்ளி - ஏராளமான சவுக்கு மரங்களுக்கு மத்தியில் காவி நிற டிஸ் டெம்பரோடு - அந்த ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் தெரிந்தது. மெயின் ரோட்டிலிருந்து உள்ளே போன - அந்த பத்தடி அகல மண்பாதை கூட வெகு புராதனமாய் வளைந்து வளைந்து போயிருந்தது. 'புதை பொருள் ஆராய்ச்சி நிலையம்' என்கிற வார்த்தைகளை இந்தியிலும் இங்கிலீஷிலும் மொழிபெயர்த்துச் சொன்ன அந்த போர்டு சமீபத்திய மழையிலும் வெய்யிலிலும் வெகுவாய் பாதிக்கப்பட்டிருந்தது. - உள்ளே இருந்த ரீடிங் ஹாலில் -வரிசையாய் நாற்காலிகள் போடப்பட்டிருக்க - ஏழு நாற்காலிகளில் ஜெசிந்தாவிலிருந்து - ஊர்மிளா வரை நிரம்பியிருந்தார்கள். பக்க வாட்டு நாற்காலிகளில் தேவாமிர்தமும் - அகிலா நாராயணனும் மோவாய்களைத் தாங்கி தெரிந்தார்கள். அவர்களுக்கு முன்புறமாய் இருந்த மேடையின்மேல் புரபசர் லிங்கப்பா தன் குறுந்தாடியை இடது கையால் சொறிந்து கொண்டே - வலது கையிலிருந்த குச்சியை சுவரில் மாட்டியிருந்த ஒரு மேப்பின் மேல் நகர்த்திக் கொண்டிருந்தார். மேப்பின் நெற்றியில் சிறுவாணி - வெள்ளியங்கிரி காடுகள் என்று எழுதியிருந்தது. மேப் பூராவும் சிவப்பு புள்ளிகள்.
லிங்கப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.
“நீங்கள் புறப்பட்டு போக வேண்டிய இடம் சிறுவாணிக்கும் வெள்ளியங்கிரிக்கும் இடைப்பட்ட பாரஸ்ட்... அந்தப் பகுதியை புல்லு மேடுன்னு சொல்லுவாங்க... அடர்த்தியான பாரஸ்ட்... பாரஸ்ட்டுக்குள்ளே தோல் பதனிடுகிற தொழிற்சாலையொண்ணு பல வருஷமா மூடியிருக்கு. அதுல வேலை நடந்தப்போ லேசா ஜனநடமாட்டம் இருந்து வந்தது... ஆனா இப்போ நடமாட்டமே இல்லை...”
ஜெசிந்தா எழுந்து நின்றாள்“ஸார்... ஒரு சந்தேகம்?”
“என்ன?”
“அந்த இடத்துல போய் தோல் பதனிடற தொழிற்சாலையை யார் ஸார் கட்டினாங்க?”
“ரோத்மான் என்கிற ஒரு வெள்ளைக்காரன்... ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தஞ்சுல கட்டின தொழிற்சாலை அது... அவனுக்கப்புறம் எத்தனை பேர்கிட்டே அது கைமாறி இப்போ கோயமுத்தூர் மில் ஓனர் ஒருத்தர் கிட்டே இருக்கு... அஞ்சு வருஷம் தொழிற்சாலையை அவரும் நடத்திப் பார்த்தார். முடியலை. மூடிட்டார்...”
இதயா எழுந்தாள்.
“நாங்க போக வேண்டிய இடம் எது ஸார்...?”
“புல்லுமேடு பாரஸ்ட்... பேர்தான் புல்லு மேடு... ஆனா உள்ளே பூராவும் ராட்சச மரங்கள். சூரிய வெளிச்சம் ஒரு சொட்டு கூட கீழே விழாத பூமி... நீங்க தேடிப் போற காளி கோயில் அங்கேதான் இருக்கு. அந்த காளி கோயிலோட பேர் என்ன தெரியுமா...?”
புரபசர் லிங்கப்பா நிறுத்திவிட்டு - எல்லோருடைய முகங்களையும் பார்த்தார். அவருடைய இடது கை தாடையில் இருந்த சொற்ப தாடியை சட்சட்சென்று வருடிக் கொண்டிருந்தார். அரை நிமிஷ நேரம் ஹால் முழுவதும் நிசப்தம்... பிறகு அந்த நிசப்தத்தை புரபசர் லிங்கப்பாவே கலைத்தார்.
“உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க நியாயமில்லை... அந்தக் காளியம்மனோட கோயில் பேரு குடல் வாங்கி காளியம்மன் கோயில்... ரொம்பவும் உக்கிரமான காளி... ஒவ்வொரு அமாவாசையன்னிக்கும்தான் பூசாரி அங்கே போவார். உச்சி நேர பூஜையை முடிச்சுகிட்டு உடனே தன்னோட செம்மேட்டு கிராமத்துக்கு போயிடுவார். அந்த கோயிலுக்குன்னு ஒரு ஜனம் கூட போகாது...”
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு - காஞ்சனா மெள்ளமாய் எழுந்து நின்றாள்.
“அந்த கோயில் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது ஸார்...?“பதினாறாம் நூற்றாண்டு... சேரன் இரும்பொறை காலத்துல அந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம்... எல்லாமே கருங்கல்... காளி சிலையோட உயரம் ஏழடி. உக்கிரம் அதிகம். ஏந்தியிருக்கிற சூலத்துல குடல் தொங்குகிற கோரம்...”
சில விநாடிகள் பேச்சை நிறுத்திவிட்டு - மறுபடியும் தொடர்ந்தார் லிங்கப்பா...” உங்களுக்கு அந்த காளி சிலையோ... காளி கோயிலோ முக்கியமில்லை... அதைச் சுற்றி இருக்கிற ஐநூறு மீட்டர் தூரம்தான் முக்கியம்... கடந்த அஞ்சு வருஷ காலத்துல மூணு கல்வெட்டுக்களை அங்கிருந்து தோண்டி எடுத்திருக்கோம். நீங்க எப்படியாவது ஒரு கல்வெட்டையாவது கொண்டு வரணும்... உங்க குழு தலைவர் மிஸ்டர் தேவாமிர்தமும் - திருமதி அகிலா நாராயணனும் இந்த ஆர்க்கியாலஜி துறையில் பல வருஷமா ஈடுபட்டு இருக்கிறவர்கள். கல்வெட்டை கொண்டு வர்ற முயற்சியில் உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க...”
“நாங்க எப்போ புறப்படணும்... ஸார்...?” இதயா மறுபடியும் எழுந்து கேட்க - லிங்கப்பா சொன்னார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
கோவையில் ஒரு குற்றம்

Read more from ராஜேஷ்குமார்

Related to கோவையில் ஒரு குற்றம்

Related ebooks

Related categories

Reviews for கோவையில் ஒரு குற்றம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கோவையில் ஒரு குற்றம் - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    என்றைக்குமே சரியான நேரத்தில் வராத கோவை எக்ஸ்பிரஸ் அன்றைக்கும் 1 மணி 40 நிமிடம் லேட்டாகி வந்து ரெயில்வே டிபார்ட்மெண்டின் மானத்தை செமத்தியாய் வாங்கியிருந்தது. சென்னைக்கு போக வேண்டிய பயணிகள் படித்துக் கொண்டிருந்த வாராந்திரிகளையும், மாத நாவல்களையும் பைக்குள் திணித்துக் கொண்டு தத்தம் கோச்சுகளை தேட ஆரம்பிக்க, சென்னையிலிருந்து அலுப்பையும், அழுக்கையும் சுமந்து வந்த பயணிகள் லேட்டாய் வந்த கோவை எக்ஸ்பிரஸை திட்டிக் கொண்டே கீழே இறங்க ஆரம்பித்தார்கள்.

    நமக்கு இந்த ரயிலில் ஏ.சி. (ஏர்கண்டிஷன்) கோச்தான் முக்கியம். அதுவும் - ஏ.சி. கோச்சிலிருந்து பூப்பூவாய் இறங்கிக் கொண்டிருக்கிறார்களே அந்த 20-25 வயதுக்குட்பட்ட ஏழு பெண்கள். அவர்கள்தான் முக்கியம். அந்த ஏழு பேரும் புதை பொருள் ஆராய்ச்சி மாணவிகள். ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்டில் பணிபுரிவதற்காக இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவு ஜீவியான மாணவிகள். ஆர்க்கியாலஜி சம்பந்தப்பட்ட எந்த சிக்கலான கேள்விக்கும் நுனி நாக்கில் பதிலை கம்ப்யூட்டர் டிப் மாதிரி வைத்திருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவராக பிளாட்பாரத்தில் இறங்கும்போதே வரிசையாய் அறிமுகப்படுத்தி விடுகிறேன். (ஆண் வாசகர்கள் முட்டி மோதிக் கொண்டு பார்க்கவேண்டாம்.) - முதலில் இறங்குபவள் ஜெசிந்தா. வயது இருபத்தி இரண்டு. சிவப்பு நிறம். அசப்பில் இந்தி நடிகை மந்தாகிணியை லேசாய் ஞாபகத்துக்கு கொண்டு வந்தாள். சொந்த ஊர் பெங்களூர். பெங்களூர்க்கு போனால் மட்டும் கன்னடம் பேசுவாள். இருக்கிற ஏழு பேர்களில் இவள்தான் கண்களை நிறைத்தாள். சேஸ் நாவல்கள் இவளுக்கு பாதாம் அல்வா.

    அவளுக்கு அடுத்தபடியாய் - சால்வார் கம்மீஸில் ஒரு ஜெயராஜ் ஓவிய அளவுகளோடு இறங்குபவள் காஞ்சனா. கண்கள் ஒவ்வொன்றும் ஒரு காந்தப் பிரதேசம். வயது இருபத்தியொன்று. புதை பொருள் ஆராய்ச்சியில் அபார ஆர்வம். ஹரப்பா... மொகாஞ்சாதோரா இடங்களுக்கு போய் - கற்கால மனிதர்களின் மண்டையோடுகளை பொறுக்கிக் கொண்டு வந்து 'எக்ஸி பிட்' செய்து சர்பிடிகேட் வாங்கினவள். சொந்த ஊர் நாகர்கோவில். பேசுகிற தமிழில் மீன் வாசமும் மலையாள வாசமும் அடிக்கும்.

    மூன்றாவதாய் இறங்குபவள் - முக்தா. ஐஸ்க்ரீமையும் - காட்பரீஸ் சாக்லேட்களையும் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிட்டு உடம்பை கன்னா பின்னாவென்று வளர்த்துக் கொண்டவள். ஸ்விம்மிங் சென்ட்டர்க்குப் போய். 'உடம்பை குறைக்கிறேன்' என்று போனவள் அவர்கள் போட்ட பட்டினி தண்டனையை தாள முடியாமல் ஒரே வாரத்தில் ஓடிவந்து விட்டவள். கொஞ்சம் பயந்த சுபாவம். சொந்த ஊர் குண்டூர். வாரத்திற்கு ஐந்து சினிமா பார்க்கிற ரகம். மகேஷ் விசிறி. நான்காமவள் சுந்தரி. ஏழு பேர்களில் இவள் தான் கறுப்பு. மஞ்சள் பூசி குளிக்கும் நாட்களில் மட்டும் கொஞ்சம் மாநிறமாய் தெரிவாள். ஈரம் தோய்ந்த சதை பிடிப்பான உதடுகளை அவள் அசைந்து பேசும்போது - தெரிந்து மறைகிற பல் வரிசை பழைய கே.ஆர்.விஜயாவை ஞாபகத்துக்கு கொண்டு வரும். சொந்த ஊர் சேலத்துக்குப் பக்கம் வாழப்பாடி. ஏழு பேர்களில் இவளுக்குத்தான் வயது அதிகம். அதாவது இருபத்தைந்து. ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஐந்தாவதாய் - சூடிதாரில் இறங்கும் ஆர்யாவுக்கும் - அழகு என்கிற வார்த்தைக்கும் இடையில் உள்ள தூரம் ஒரு கிலோ மீட்டர். ஆண்களுக்கு இருக்கிற மாதிரியான மேடிட்ட நெற்றி. சிறிய கண்கள். மார்புகளும் இடுப்பும் ஒரே பரிமாணம். இவள் கல்யாணமானவள். கணவன் ரவீந்தர்க்கு சவுட் ஈஸ்ட்ரன் ரயில்வேயில் தண்டச் சம்பளம் வாங்கும் வேலை. சொந்த ஊர் ஹூப்ளி. போட்டோ கிராபி இவளுக்கு ஹாபி. செஸ்ஸும் ஆடுவாள்.

    ஆறாவதாய் பிளாட்பாரத்தில் குதித்து இறங்குபவள் இதயா. 'பூவே பூச்சுடவா...' நதியா மாதிரியான சுட்டித்தனம். அறுவை ஜோக் ஸ்பெஷலிஸ்ட். அவள் அண்மையில் அடித்த அறுவை ஜோக்.

    நான் காட்டுவழியா போயிட்டிருந்தப்போ... எனக்கு எதிர்ல ஒரு புலி வந்த நின்னு உறுமிச்சு... நான் ஏழு எழுத்து உள்ள ஒரு வார்த்தையை மெல்லமா அதோட காதுக்குப் பக்கத்துல சொன்னேன். அவ்வளவுதான் புலி வாலைச் சுருட்டிகிட்டு ஒரு சொறி நாய் மாதிரி ஓடிடுச்சு. நான் சொன்ன அந்த ஏழு எழுத்து வார்த்தை என்ன?

    எல்லாரும் முழிமுழியென்று முழித்துவிட்டு 'நீயே சொல்லடி சனியனே' என்று சலித்துக் கொள்ள இதயா சொன்ன ஏழு எழுத்து வார்த்தை 'மம்பட்டியான்.' இதயாவுக்கு ஒடிசலான உடம்பு வாகு. எந்நேரமும் துறுதுறு... சுறுசுறு... சொந்த ஊர் தமிழ் நாட்டின் தலைநகரம். ஹாபி: அப்பாவி வாலிபனாய் கண்ணுக்குத் தெரிந்தால் சீண்டுவது. கடைசியாய் உதிர்த்தவள் ஊர்மிளா. யாரோடும் அதிகம் பேசாத டைப். எவ்வளவு வெய்யில் அடித்தாலும் சேலைத் தலைப்பை போர்த்திக் கொண்டே இருப்பவள். முகத்தில் அமலா ஜாடை. ஷ்யாம் என்கிற ஒரு அழகான இளைஞனை காதலிக்கிறாள். நிஜமான காதல். அதே கோவை எக்ஸ்பிரஸ்ஸில் - அவள் இருந்த 'கோச்'சிலேயே பயணம் செய்து - இந்த நிமிஷம் அடுத்த பக்க கதவின் வழியாக இறங்கி - ஹிக்கின்பாதாம்ஸ் புக் ஸ்டாலில் நின்றபடி அந்த ஷ்யாம் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான். இவர்களைத் தவிர - மேலே சொன்ன எட்டு பேர்களைத் தவிர - வெள்ளி ரோமத் தலையோடு நாற்பத்தைந்து வயதில் இறங்கும் புரபசர் தேவாமிர்தமும் - அவர்க்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1