Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வெளிச்சம் வெளியே இல்லை!
வெளிச்சம் வெளியே இல்லை!
வெளிச்சம் வெளியே இல்லை!
Ebook125 pages40 minutes

வெளிச்சம் வெளியே இல்லை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடுங்காவல் அறை கீழே இருந்தது. ஏழெட்டு ஸெல்கள். தூக்கு தண்டனைக் கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடம். கையில் சாப்பாட்டுத் தட்டுடன், ஒரு கான்ஸ்டபிள் துணைக்கு வர, அவன் இறங்கி வந்தான்.
முதல் சிறையில் முதுகு காட்டிப் படுத்திருந்தான் அவன்.
கான்ஸ்டபிள் சிறைக் கதவைத் திறக்க, திரும்பிப் பார்த்தான் மெள்ள.
“சீனு! சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.”
“ம்! வச்சிட்டுப் போ!”
“சீனு! இப்படி வாயேன்!”
சீனு எழுந்து வந்தான்.
“என்ன பிச்சை?”
“இன்ஸ்பெக்டர் மதன் உன் ஸ்நேகிநர். அரசாங்க வக்கீல் ஏகாம்பரம் மதனுக்கு வேண்டப்பட்டவர். சட்டத்துல ஆயிரம் சந்து பொந்துகள். நினைச்சா, உன்னை வெளில கொண்டு வர முடியாதா?”
“வேண்டாம்!”
“ரெண்டு வாரத்துல உனக்குத் தூக்கு!”
“தெரியும்.”
“நாலு கொலைகளைச் செஞ்சதுக்குக் காரணம் சொல்லு! இல்லைன்னா வக்கீல் சொல்லித் தர்றதைச் சொல்லு. அது போதும்!”
“வேண்டாம்!”“என்ன வேண்டாம்? நீயா கொலைகளை செஞ்சதைச் சொல்லி சரணடைஞ்சிருக்கே! அதுக்கான காரணத்தை சட்டத்தோட துணையோட முறையாச் சொல்லு.”
“உன் வேலை என்ன பிச்சை?”
“சாப்பாடு கொண்டு வர்றது.”
“கொண்டு வந்தாச்சா?”
“ம்...!”
“வச்சிட்டுப்போ! எனக்கு வாழற ஆசை இல்லை. தூக்குல தொங்கற நாளை எதிர்பார்த்து காத்துட்டு இருக்கேன் நான்!”
படிகளில் பூட்ஸ் கால்களின் ஓசை. பிச்சை சாப்பாட்டை அவசரமாகக் கொடுத்துவிட்டு வேகமாக நடந்தான். மதன்தான். கூடவே டாக்டர் நாகராஜ். நாலைந்து போலீஸ்காரர்கள். வந்தார்கள். நாலடி தள்ளி நின்று கொண்டார்கள். கதவு மீண்டும் திறக்கப்பட்டது.
டாக்டருடன் மதன் உள்ளே வந்தான்.
“உன்னை டாக்டர் பரிசோதிக்கணும்!”
சீனு திரும்பி டாக்டரைப் பார்த்தான். டாக்டர் அவனைக் கூர்ந்து பார்த்தார். சீனுவின் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லை. ஸ்டெதஸ் கோப்பை வைத்துப் பார்த்தார். பரிசோதனைகளைப் பத்து நிமிடங்களில் முடித்துக் கொண்டார்.
“ஹீ ஈஸ் ஆல் ரைட். பூரண ஆரோக்யத்தோட இருக்கான். நாளைக்கே தூக்குல தொங்கலாம்!”
“இன்னம் ரெண்டு வாரத்துல உனக்கு மரணம். ப்ளாக் வாரன்ட் வந்தாச்சு. தேதி இன்னும் ரெண்டு நாள்ல வந்துரும்.”
சீனு பேசவில்லை.
“சாகப் போறமேனு உனக்கு சங்கடமா இல்லையா?”எதுக்கு?”
மதன் பேசவில்லை.
டாக்டர், சீனுவின் அருகில் வந்தார்.
“நிஜம்தான். நாலு உயிரைப் போக்கின உனக்கு எதுதான் சங்கடமா இருக்கும்? நீ மனுஷனே இல்லை. மிருகம்!”
அவன் பேசவில்லை.
“ஏன் செஞ்சே அந்தக் கொலைகளை?”
சீனு பேசவில்லை.
“இப்பவும் நான் உன்னைக் கேட்கிற ஒரே கேள்வி இதுதான். உனக்கு உறுத்தலே இல்லை?”
சிரித்தான் சீனு.
“எதுக்கு? நல்ல காரியத்தைச் செஞ்சவங்களுக்கு ஒரு நாளும் உறுத்தலே இருக்காது.”
“யு... பாஸ்டர்!” டாக்டர் பாய்ந்து விட்டார்.
மதன் சட்டென குறுக்கிட்டுத் தடுத்தான்.
“டாக்டர்... என்ன இது? நீங்க இப்ப ட்யுட்டில இருக்கீங்க!”
“ஸாரி இன்ஸ்பெக்டர். இந்த சண்டாளனைப் பார்க்கும்போது என்னையே நான் மறந்து போறேன்.”
“போகலாமா?”
“ம்!”
டாக்டர், திரும்பித் திரும்பி பார்த்தபடி நடந்தார். இருவரும் சூப்பிரென்ட்டெண் அறைக்குள் நுழைந்தார்கள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
வெளிச்சம் வெளியே இல்லை!

Read more from தேவிபாலா

Related to வெளிச்சம் வெளியே இல்லை!

Related ebooks

Reviews for வெளிச்சம் வெளியே இல்லை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வெளிச்சம் வெளியே இல்லை! - தேவிபாலா

    1

    தேவாலயத்தில் தன் தொழுகையை முடித்துக் கொண்டு எழுந்தார் ஃபாதர் அருமை நாயகம்.

    சர்ச்சுக்கு வெளியே வந்தார்.

    எதிர்ப்பட்டவர்கள் எல்லாம் வணங்க, பதிலுக்கு ஒரு தலையசைப்பில் அதை ஏற்றுக் கொண்டு நடந்தார். தேவாலயத்தை ஒட்டிய சின்னஞ்சிறு வீடு ஒன்று இருந்தது. அதுதான் ஃபாதர் தங்கும் இல்லம். அதற்குள் நுழைந்தார்.

    காலை உணவாக அவரே தயாரித்து வைத்திருந்த கஞ்சியை எடுத்துப் பருகினார். அன்றைய ஆங்கில நாளிதழைப் பிரித்தார். கதவு தட்டப்பட்டது.

    ம்! திறந்து தான் இருக்கு!

    அந்த இளைஞன் நுழைந்தான்.

    உங்களைப் பார்க்க இன்ஸ்பெக்டர் மதன் வந்திருக்கார் ஃபாதர்!

    வரச் சொல்லு!

    ஐந்து நிமிடம் கழித்து மதன் உள்ளே நுழைந்தான். போலீஸ் உடையில் நல்ல உயரத்தில் கம்பீரமாக இருந்தான்.

    குட்மார்னிங் ஃபாதர்!

    வா மதன்! உட்கார்.

    உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க. அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன் ஃபாதர்!

    இனிமே உடம்பு எப்பவுமே சரியா இருக்காது மதன்!

    அவன் சற்றே சங்கடத்துடன் அவரைப் பார்த்தான்.

    ஏதாவது சாப்பிடறியா மதன்? கஞ்சி தான் இருக்கு!

    வேண்டாம் ஃபாதர். ரொம்ப தேங்க்ஸ்!

    அவன் தண்டனையில் எந்த மாற்றமும் இல்லையா?

    இல்லை ஃபாதர். அது முடிவான ஒண்ணுதான். இன்னும் ரெண்டு வாரத்துல அது நிறைவேறப் போகுது. டாக்டர் பிடிவாதமா இருக்கார்- அவனைத் தூக்குல ஏத்தாம தூங்கறதில்லைன்னு!

    ஃபாதரின் முகம் வேதனையால் சுருங்கியது.

    நீங்க சுப்ரீம் கோர்ட்டுக்கு முயற்சி செய்யலையா?

    செய்யாம இருப்பமா ஃபாதர்? ஜனாதிபதிக்கு கருணை மனு வரைக்கும் போட்டாச்சு. நான் என் சொந்த முயற்சியில் அவனை மீட்க எத்தனை பாடுபடறேன் தெரியுமா?

    அவனிடமும் அந்த வேதனை ஒட்டிக் கொண்டது.

    அவன் அருகில் நெருங்கி, தோளில் கை போட்டார் ஃபாதர்.

    மை டியர் மதன்! நீயும் அவனும் ஒரு தட்டுல சாப்பிட்டு வளர்ந்தவங்க. அவனை ரட்சிக்கற பொறுப்பு உனக்கும் உண்டு!

    நான் அதை ஒப்புக்கறேன் ஃபாதர். ஆனா சட்டம்னு ஒண்ணு இருக்கே ஃபாதர்!

    .......!

    நாலு கொலைகளைச் செஞ்ச அவனை சட்டம் விட்டு வைக்குமா? கையும், களவுமா பிடிபட்ட அவனை, சட்டம் எப்படி ஃபாதர் விட்டு வைக்கும்?

    அவன் ஏன் மதன் அந்தக் கொலைகளை செஞ்சான்?

    சரி ஃபாதர், அது நமக்குத் தெரியுது. கொலை செஞ்சிட்டு போலீஸ்ல அவனே அதை ஒப்புக்கிட்டு சரணடைந்து விட்டான். இந்த நிமிஷம் வரைக்கும் ஏன் அந்தக் கொலைகளை செஞ்சோம்ன்னு அவனுக்கு உறுத்தல் இல்லை. அவன் அது பற்றி உங்ககிட்டக்கூட பேசலை!

    சீனு சாகத் தயாரா இருக்கானா மதன்?

    அப்படித்தான் தெரியுது. ஒரு போலீஸ் அதிகாரியா இல்லாம, கூட வளர்ந்தவனா இருந்து பலமுறை நான் கேட்டுப் பார்த்துட்டேன். எந்த பதிலும் இல்லை!

    கஷ்டம்! அவனே பேசலைன்னா ரொம்பக் கஷ்டம். அவன் பேசினாத்தான் சட்டத்தை நம்மால பிரயோகப்படுத்த முடியும்!

    மணிக்கட்டைப் பார்த்தான் மதன்.

    ஓ... நேரமாச்சு. நான் புறப்படறேன் ஃபாதர். உடம்பு ஜாக்ரதை!

    மதன் வெளியேறினான்.

    ஃபாதர் இடது பக்கச் சுவரைப் பார்த்தார். அதில் இரண்டு புகைப்படங்கள். ஒன்றில், நடுவில் ஃபாதர் - இரு பக்கமும் அந்த இரண்டு இளைஞர்கள். ஒருவன் மதன். அடுத்தவன் சீனு என்ற சீனிவாசன்.

    ஃபாதர் எழுந்து வெளியே வந்தார். சர்ச்சுக்குள் நுழைந்தார். அங்கு அலுவலக அறை ஒன்று இருந்தது. அதற்குள் இருந்த தொலைபேசியை எடுத்தார்.

    எதிர் முனையில் பிஷப்.

    ஃபாதர் பவ்யமாக பேசிக்கொண்டே வந்தார்.

    வரப்போகும் கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டங்கள் தொடர்பாக ஏதோ விவாதிக்க வேண்டும் என்று பேராயர் விரும்புவதாகத் தெரிவித்தார்.

    நான் அங்கே வந்துட்டே இருக்கேன்!

    அருமை நாயகம் ரிசீவரை வைத்து விட்டுப் புறப்பட்டார்.

    அவரது தேவாலய வேன் ஒன்று தயாராகக் காத்திருந்தது.

    ஏறி உட்கார்ந்தார். இடம் சொன்னார்.

    சாமி!

    என்ன அந்தோணி? டிரைவரைப் பார்த்துக் கேட்டார்.

    சீனுவைத் தூக்குல போடத்தான் போறாங்களா?

    இந்த நிமிஷம் வரைக்கும் அந்தத் தீர்ப்பு மாறலை!

    ஆண்டவர் அவனை ரட்சிக்க மாட்டாரா சாமி?

    அவன் நாலு கொலைகளைச் செஞ்சான் அந்தோணி!

    அவன் காரணமில்லாம செய்ய மாட்டான் சாமி... பாவம் சீனு!

    காரணத்தை யார்கிட்டேயும் அவன் சொல்லலை!

    நீங்க அவன் மனசை உடைக்க முடியலியா? உங்ககிட்டக் கூடவா சொல்லலை?

    என்னைப் பாக்கறதையே தவிர்க்க நினைக்கிறான் சீனு. நானும் அதைப் புரிஞ்சுக்கிட்டேன்!

    இன்னும் ரெண்டு வாரத்துல தூக்கு தண்டனை சாமி!

    தெரியும்!

    சர்ச் வாசலில் வண்டியை அந்தோணி நிறுத்த, ஃபாதர் இறங்கி படிகளில் ஏறினார்.

    அவள் முக்காடிட்ட தலையுடன் இறங்கிக் கொண்டிருந்தாள்.

    ஃபாதரைப் பார்த்ததும் ஒரு குற்ற உணர்ச்சியுடன் விலகி வேறு புறமாக நடந்தாள்.

    ஃபாதர் ஒருநொடி நின்றார். பின் ஒன்றும் பேசாமல் படிகளை ஏறிக் கடந்தார் வேகமாக.

    2

    கடுங்காவல் அறை கீழே இருந்தது. ஏழெட்டு ஸெல்கள். தூக்கு தண்டனைக் கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடம். கையில் சாப்பாட்டுத் தட்டுடன், ஒரு கான்ஸ்டபிள் துணைக்கு வர, அவன் இறங்கி வந்தான்.

    முதல் சிறையில் முதுகு காட்டிப் படுத்திருந்தான் அவன்.

    கான்ஸ்டபிள் சிறைக் கதவைத் திறக்க, திரும்பிப் பார்த்தான் மெள்ள.

    சீனு! சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.

    ம்! வச்சிட்டுப் போ!

    சீனு! இப்படி வாயேன்!

    சீனு எழுந்து வந்தான்.

    என்ன பிச்சை?

    இன்ஸ்பெக்டர் மதன் உன் ஸ்நேகிநர். அரசாங்க வக்கீல் ஏகாம்பரம் மதனுக்கு வேண்டப்பட்டவர். சட்டத்துல ஆயிரம் சந்து பொந்துகள். நினைச்சா, உன்னை வெளில கொண்டு வர முடியாதா?

    வேண்டாம்!

    ரெண்டு வாரத்துல உனக்குத் தூக்கு!

    தெரியும்.

    நாலு கொலைகளைச் செஞ்சதுக்குக் காரணம் சொல்லு! இல்லைன்னா வக்கீல் சொல்லித் தர்றதைச் சொல்லு. அது போதும்!

    வேண்டாம்!

    என்ன வேண்டாம்? நீயா கொலைகளை செஞ்சதைச் சொல்லி சரணடைஞ்சிருக்கே! அதுக்கான காரணத்தை சட்டத்தோட துணையோட முறையாச் சொல்லு.

    உன் வேலை என்ன பிச்சை?

    Enjoying the preview?
    Page 1 of 1