Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள்
காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள்
காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள்
Ebook98 pages34 minutes

காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ரீநகர் போலீஸ் கமிஷனர் மோதி கங்காதர், தக்காளி சிவப்பில் வார்னீஷ் வழுக்கையோடு திடகாத்ரமாய் கருநீல உல்லன் யூனிபார்மில் திணித்து தோள்பட்டைகளிலும்
 மார்புச் சட்டையிலும் வர்ணக் கோடுகளையும், நட்சத்திரங்களையும் காட்டினார். கூடவே அவர் தோளுக்கு இணையாய் இரண்டு போலீஸ் அதிகாரிகள்.
 பஷீரை ஷவர் பாத் குழாயிலிருந்து கீழே இறக்கி பாத்ரூம் சுவரோரமாய் கிடத்தியிருந்தார்கள். உச்சந்தலையில் நீளமாய் ரத்த காயமும், மண்டையின் இரு பக்கமும் வழிந்த ரத்தக் கோடுகளும் ஸ்பஷ்டமாய் தெரிந்தது. இடதுகை வீங்கியிருந்தது, திறந்து கிடந்த வாயிலும், மூக்குத் துவாரங்களிலும் ரத்தம் கறுப்பாய் உறைந்து போயிருந்தது. அணிந்திருந்த பேண்ட் சர்ட்டில் ரத்தத் திவலைகள்.
 ஷ்யாம், நர்த்தனா வெளிறிப்போன முகங்களோடு நடந்த சம்பவங்களை சொல்லி முடிக்க - கமிஷனர் மோதி கங்காதர் தெளிவான ஆங்கிலத்தில் விசாரணையை ஆரம்பித்தார்.
 ''பஷீர் உங்களுக்கு எத்தனை வருஷமாய் நண்பர்?''
 ''காலேஜ் டேஸிலிருந்து பழக்கம் எய்ட்டி த்ரியில் மெட்ராஸ் ந்யூ காலேஜில் டிகிரியை முடிச்சோம்.''
 "பஷீர்க்கு ஃபாதர் மதர்...?''
 ''மதர் இல்லை ஸார் ஃபாதர் மட்டும் தான். நேட்டீவ் ப்ளேஸ் மேலப்பாளையம். இங்கே காஷ்மீரில் அஞ்சு வருஷமா டூரிஸம் டெவலப்மெண்டில் மானேஜராக இருந்தார்.''
 ''இந்த கொலைக்குக் காரணம் என்னவாயிருக்கும்ன்னு நினைக்கறீங்க?"
 ''தெரியலை ஸார். பஷீரோட மரணம் நாங்க எதிர்பார்க்காத ஒண்ணு.''
 ''ஏர்ஃபோர்ட் டூரிஸம் சென்டரில் அவர் கொடுத்துட்டுபோன லெட்டரை வெச்சிருக்கீங்களா...?'இருக்கு... ஸார்"
 "ப்ளீஸ்...''
 ஷ்யாம் அந்த லெட்டரை எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கி படித்துப் பார்த்த மோதி கங்காதர் மெல்லிய குரலில் கேட்டார்.
 "இது அவரோட கையெழுத்து தானா...?"
 "ஸாரி... ஸார். எங்களுக்குள்ளே கடிதப் போக்குவரத்து குறைவு. ஏதாவது பேசறதாயிருந்தா டெலிபோனிலேயே பேசிக்குவோம்..."
 கமிஷனர் ஒரு போலீஸ் அதிகாரியின் பக்கம் திரும்பினார்.
 "மிஸ்டர் அன்சாரி..."
 "ஸார்..."
 ''வீட்டை நல்லா சர்ச் பண்ணி... பஷீர் வேறு யார்க்காவது எழுதின லெட்டர்ஸ்... டயரி... இப்படி ஏதாவது கிடைச்சா... கொண்டு வாங்க. இந்த லெட்டரை அதோடு வெச்சு கம்பேர் பண்ணி பார்த்துடலாம்...''
 "எஸ். ஸார்...'' - அன்சாரி நகர்ந்தார்.
 கமிஷனர் ஷ்யாமிடம் விசாரணையைத் தொடர்ந்தார்.
 ''பஷீர்க்கு ஏதாவது காதல் விவகாரம் இருந்ததா...?''
 ''அப்படி ஏதும் இருந்திருந்தா... என்கிட்டே சொல்லியிருப்பார் ஸார்"
 ''பஷீர்க்கு வேறு யாராவது ஃபிரண்ட்ஸ்...?"
 ''இங்கே இருக்கிற ஃப்ரெண்ட்ஸைப் பத்தி எனக்குத் தெரியாது..."
 ''ஏர்ஃபோர்ட்டிலிருந்து... ஒரு கார்ல இந்த வீட்டுக்கு வந்ததா சொன்னீங்க...? காரை ஓட்டி வந்த நபர் பஷீர்க்கும் பழக்கமானவரா?"அவர் யார்...?"
 ''அவர் ஒரு சீக்கியர். பேர் தயாள்வீர்."
 ''காஷ்மீரில் என்னவாயிருக்கார்?''
 ''டெஃபென்ஸில் சிக்னல் ஆபரேட்டர்.''
 ''என்ன கார் வெச்சிருந்தார்...?"
 "வெள்ளை நிற பியட்...''
 ''நெம்பர்...?"
 ''ஸாரி... ஸார். கவனிக்கலை...'' ஷ்யாம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போலீஸ் ஆபீஸர் அன்சாரி ஒரு பாக்கெட் டயரியோடு வந்தார். கமிஷனரிடம் நீட்டினார்.
 "ஸார்... இது... பஷீரோட அஃபிஷியல் டயரி''
 அவர் வாங்கிப் புரட்டினார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 10, 2023
ISBN9798223388951
காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள்

Read more from Rajeshkumar

Related to காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள்

Related ebooks

Related categories

Reviews for காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள் - Rajeshkumar

    1

    இந்தியாவின் உச்சந்தலையில் உட்கார்ந்திருந்த ‘ஸ்ரீநகர் ஏர்ஃபோர்ட்’டை குறி வைத்து இரை எடுக்கிற ராட்சஸ அலுமினிய கழுகு மாதிரி கீழே தாழ்ந்தது அந்த வாயுதூத் விமானம். வெள்ளை வெளேரென்று பஞ்சு மேகங்களுக்கு கீழே கெட்டியான ஆரோக்கிய பச்சையில் சதுர சதுரமாய் புல்வெளிகளும், குன்றுகளும் தெரிந்தன. தொலைவில் இமயமலைச் சாரல் நீலநிற பென்சிலால் கோணல் மாணலாய் கோடு கிழித்த மாதிரி கண்களுக்கு சிக்க தேவநாரு மரங்கள் கூட்டம் கூட்டமாய்... இளஞ்சிவப்பில்...

    "அய்யோடா! என்ன அழகு...!’’ - விமானத்தின் ஜன்னலோரம் உட்கார்ந்து முட்டை வடிவ கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்த நர்த்தனா தன் அழகிய கண்களை அகல விரித்தாள். அவளுக்கு அருகே உட்கார்ந்திருந்த ஷ்யாம் புன்னகைத்தான்.

    இந்த காஷ்மீர் என்னிக்குமே இப்படித்தான். முதல் தடவையா வர்றவங்களை... அசத்திடும். நானும் ஆரம்பத்துல இப்படித்தான்.

    ‘‘என்னங்க.?" கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே கூப்பிட்டாள்.

    "ம்...’’

    ‘‘இதுவரைக்கும் நீங்க இந்த காஷ்மீர்க்கு எத்தனை தடவை வந்திருப்பீங்க..."

    இது மூணாவது தடவை... ஆனா இந்த தடவைதான் காஷ்மீரை அனுபவிக்கப் போறேன். சொன்ன ஷ்யாம் கண்களைச் சிமிட்டினான்.

    "சே! சுத்த மோசம் நீங்க...’’

    ‘‘நான் மோசமா...? சரியா போச்சு... உன் கழுத்துல தாலி கட்டி இன்னும் பத்து நாள் கூட ஆகலை. போனா போகுதுன்னு தேன்நிலவுக்கு கூட்டிட்டு வந்தா. நான் மோசமா... இந்த பத்து நாள்ல... உன்னை... ரெண்டு ராத்திரி..."

    போதும்... யார் காதிலாவது விழப்போகுது...

    ‘‘பயப்படாதே இந்த ஃபிளைட்ல நீயும் நானும் மட்டும்தான் தமிழ். பாதிபேர் முஸ்லீம். மீதிபேர் காஷ்மீரியன்ஸ்."

    ‘‘அதென்ன கோயிலுங்க...?" - நர்த்தனா முட்டை வடிவ ஜன்னலுக்கு வெளியே பார்த்து கையைக் காட்ட ஷ்யாம் அவள் மேல் சாய்ந்து எட்டிப் பார்த்து விட்டு சொன்னான்.

    "வைஷ்ணவதேவி கோயில்...’’

    அற்புதமா இருக்கும் போலிருக்கே...

    ‘‘இங்கே எல்லாமே அற்புதம்தான். ஜீலம் நதியும், தால் ஏரியும் பார்க்க பார்க்க ரம்யம். புல்தரைகள்ல எவ்வளவு தூரம் நடந்தாலும் வேர்க்காது. காலும் வலிக்காது. இங்கே இருக்கிற ஐஸ் காத்தை சுவாசிச்சா... நுரையீரல்களுக்கு அது டானிக் மாதிரி...’’ - ஷ்யாம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமானம் கீழே குபீரென்று உயரம் இழந்து ரன்வேயைப் பற்றிக் கொண்டது.

    "இறங்கின உடனே ரொம்பவும் குளிருமாங்க...?’’

    ‘‘இது சாயந்தர நேரம். ஓரளவு குளிரும்"

    ஸ்வெட்டர் போட்டுக்கவா...?

    ‘‘ஸ்வெட்டர் எதுக்கு...? என்னைக் கட்டிபிடிச்சுக்கோ..."

    நர்த்தனா தீவிரமாய் முறைக்க -

    ‘‘சரி... சரி... ஸ்வெட்டரையே போட்டுக்க...’’ என்றான் ஷ்யாம். கையில் வைத்திருந்த ஏர்பேக்கைப் பிரித்து ரத்த சிவப்பில் இருந்த ஸ்வெட்டரை உருவி அணிந்து கொண்டால் நர்த்தனா.

    ஸ்கார்ப்பையும் வேணும்ன்னா கட்டிக்கோ...

    வேண்டாம். வெளியே போனதும்... பார்த்துக்கலாம்... குளிரை கொஞ்சமாவது அனுபவிக்க வேண்டாமா...?

    ஃபிளைட் அரைவட்டம் அடித்து நின்றது. பயணிகள் தத்தம் இருக்கைகளின்றும் கழன்று கொண்டார்கள். ஷ்யாம் சின்னதா ஒரு ஏர்பேக்கை சுமந்து கொள்ள நர்த்தனா தன் வானிடி பேக்கை தோளில் சரித்துக் கொண்டாள்.

    ‘‘உங்க ஃபிரண்ட் பஷீர் ஏர்ஃபோர்ட்டுக்கு வந்திருப்பாரா?"

    ‘‘கண்டிப்பா..."

    ‘‘அவர் இங்கே என்னவா வேலை பார்க்கிறார்?’’

    ‘‘ஜே அண்ட் கே டூரிஸம் சென்டர்ல...’’

    "ஜே அண்ட் கே... ன்னா... என்ன அர்த்தம்...?’’

    ‘‘என் மண்டு பெண்டாட்டியே. ‘ஜே’ன்னா ஜம்மு. ‘கே’ன்னா காஷ்மீர்."

    ‘‘புரியுது... இது பெரிய ராஜ ரகசியமாக்கும்"

    ஸ்டேர்ஸில் இறங்கினார்கள். ஐஸ் காற்று முகத்தை முகர்த்தது. காதின் நுனிகளும் மூக்கின் நுனியும் ப்ரிஜ்ஜில் வைத்த பண்டம் மாதிரி குளிர்ந்து போயிற்று.

    என்னங்க... இந்த குளிர் குளிருது...?

    ‘‘ஸ்கார்ப்பை கட்டிக்க...’’

    பேக்கை பிரிச்சு எடுத்துக் கொடுங்க... நர்த்தனா கொஞ்சலாய் சொன்னதும் அந்த ஐஸ்க்ரீம் குரலில் கரைந்து போன ஷ்யாம் ஏர்ஃபோர்ட்டின் லெனன்ஞ்சை நோக்கி நடந்து கொண்டே தோளில் ஊஞ்சலாடிய ஏர்பேக்கின் ஜிப்பைப் பிரித்து ஸ்கார்ப்பை எடுத்துக் கொடுத்தான். நர்த்தனா அந்த ஷிபான் ஸ்கார்ப்பை தலைக்கு போர்த்தி தாவாக்கட்டைக்கு கீழே ஒரு முடிச்சைப் போட்டாள். அவளுடைய சந்தன நிற முகத்துக்கு அந்த சாக்லேட் நிற ஸ்கார்ப் எடுப்பாய் இருந்தது. லக்கேஜ்களைப் பெற்றுக் கொண்டு நடந்தார்கள்.

    ‘‘நர்த்தனா..."

    ‘‘ம்...’’

    "எனக்கு எரிச்சலாயிருக்கு...’’

    ‘‘ஏன்?’

    ‘‘நீ ஒரு சினிமா ஸ்டாரோன்னு நினைச்சுகிட்டு... எல்லோரும் உன்னையே வெச்ச கண்ணு வாங்காமே பார்த்திட்டிருக்காங்க... அவங்க கண்ணுல கொள்ளியை வெச்சு தேய்க்க...!’’

    ‘‘ஏன் நீங்க கூடத்தான் ஹீரோ மாதிரி இருக்கீங்க..."

    ‘‘நீ தான் சொல்லிக்கணும். இந்த ஏர்ஃபோர்ட்டில் இருக்கிற எந்தப் பொண்ணுமே... பொண்ணு வேண்டாம்... ஒரு கிழவி கூட என்னை நிமிர்ந்து பார்க்கலையே? பார். அந்த வெளிநாட்டு பன்னிப் பய... உன் கழுத்துக்கு கீழேயே பார்க்கிறான்.’’

    ‘‘புலம்பாமே வாங்களேன்...’’

    "ஊ... ஹீ... ம்... இது சரிப்பட்டு வராது. உனக்கு கோஷா மாட்டிட வேண்டியது தான்.

    ஏர்ஃபோர்ட் லெளன்ஞ்சுக்குள் நுழைந்தார்கள். நர்த்தனா ஆச்சர்யப்பட்டாள்.

    ‘‘ஏர்ஃபோர்ட் சின்னதா இருந்தாலும்... நீட்டா இருக்கு. எல்லாமே கிரானைட் ஸ்டோன்ஸ் போலிருக்கு."

    ஷ்யாம் சுற்றும் முற்றும் பார்த்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1