Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பின்னர் அறிவிக்கப்படும்!
பின்னர் அறிவிக்கப்படும்!
பின்னர் அறிவிக்கப்படும்!
Ebook123 pages1 hour

பின்னர் அறிவிக்கப்படும்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனக்கு நாக்கைப் பிடுங்கிட்டு சாகலாம்னு தோணுது!"
 "அது முடியுமா உன்னால?"
 "என்ன சொல்றீங்க?"
 "உன் நாக்கு ரொம்ப நீளமாச்சே! அதைப் புடுங்கறது அத்தனை சுலபமில்லையே! ரொம்பக் கஷ்டப்படணுமே! நானும் வேணும்னா உதவிக்கு வரட்டுமா?"
 "போதும் கிண்டல்! வயிறெரிஞ்சு பேசறேன் நான். உங்க காதுல எதுவுமே விழாது! இல்லை, விழுந்தும் நீங்க கண்டுகறது இல்லையோ என்னவோ?"
 "நீ என்ன சொல்ல வர்ற?"
 "லல்லியை இன்னமும் வீட்ல வச்சிருந்தா, போறவங்க வர்றவங்க நம்ம மேல் காறித் துப்பிட்டுப் போவாங்க!"
 அவர் பேசவில்லை!
 "அவளுக்கு வயசு முப்பது! பார்வைக்கு இளமையா, இருபத்திரெண்டு வயசாட்டம் இருக்கா! ஒருத்தர் பாக்கியில்லை! உங்க பொண்ணுக்குக் கல்யாணமே செய்ய மாட்டீங்களானு கேக்கறாங்க! நான் என்ன பதில் சொல்றது?"
 "இதுக்கு நீயும் நானும் எப்படி சகுந்தலா பதில் சொல்ல முடியும்?"
 "ஏன் முடியாது? அவளைப் பெத்தது நாமதான்!"
 "........."
 "அவ ஆயிரக்கணக்கா சம்பாதிக்கறா! அதை நடுவீட்ல ஒக்காந்து அனுபவிக்கிறவங்களும் நாமதான்! நமக்குத்தான் அவ சங்கதில தார்மீகப் பொறுப்பு நாம பதில் சொல்லாம யார் சொல்ல முடியும்?"அவர் பேசவில்லை!
 "அவளுக்கு வரன் பார்க்கணும்னு எண்ணம் நமக்கு வந்திருக்கா! தரகரை அழைச்சு ஒரு நாளாவது பேசியிருப்போமா?"
 "அவளும் கல்யாண சிந்தனையே இல்லாம இருக்காளே சகுந்தலா?"
 "எப்படீங்க வரும்? கல்யாணத்தைப் பத்தி யோசிக்க அந்தப் பொண்ணுக்கு எங்கே நேரம்? அதை யோசிக்க நாம விட்டிருக்கோமா?"
 "சகுந்தலா?"
 "நாலு புள்ளைங்களைப் பெத்தோம். ஒரே மகன்னு சொல்றவன் குடும்பத்துக்கு உதவாம தத்தாரியா ஊர் மேஞ்சான். தட்டிக் கேட்டப்ப நமக்கு அடங்காம வீட்டை விட்டு வெளியே போனான். அவனைத் தடுக்க நம்மால முடிஞ்சுதா?"
 "நீங்க உத்யோகம் பாக்கற வயசுதான் இது! உங்க கம்பெனியை இழுத்து மூடி பத்து வருஷம் ஆச்சு. வேற வேலைக்கு நீங்க போனீங்களா?"
 "வேற வேலை கிடைச்சாதானே?"
 "இல்லை! நீங்க முயற்சி பண்ணலை! உங்க கடமையை ஒரு குடும்பத் தலைவனா இருந்து நீங்க செய்யலை! என்ன காரணம்?"
 "நிறுத்து! நான் வேலை பார்த்துத்தான் நாலு புள்ளைங்களையும் ஒரு நிலைக்குக் கொண்டு வந்தேன்!"
 "போதுமே பெருமை! உங்க பிஸ்கோத்து சம்பளத்துல அரைப்பட்டினியும், கால் பட்டினியுமா குடும்பத்தை நடத்த நான் பட்டபாடு, எனக்குத்தானே தெரியும்! அப்பப்ப பொறந்த வீட்டு ஆதரவு எனக்கு இருந்ததால, நடுவீட்ல ஒக்காந்து தின்ன முடிஞ்சது. எப்ப லல்லி தலையெடுத்தாளோ, அப்பத்தானே நமக்கு மூணுவேளை சோறு!"
 அப்பா பேசவில்லைமூத்தவ கல்யாணத்தை கடன் வாங்கி நடத்தினது லல்லி! தான் இருக்கும்போது தங்கச்சிக்கும் கல்யாணத்தை முடிச்சா. பார்த்துக்கிட்டுத்தானே இருந்தம்!"
 "சும்மா நிறுத்தடி! என்னை மட்டும் எல்லாத்துக்கும் குற்றவாளியாக்கறே! ரெண்டு கை தட்டினாத்தான் சத்தம். நீயும், நானும் சேர்ந்ததுதான் இந்தக் குடும்பம். உனக்கு உம்பொண்ணு மேல அத்தனை அக்கறைனா, நீ பேசாம ஏன் இருந்தே?"
 அம்மாவிடமும் குற்ற உணர்ச்சி இருந்தது.
 "லல்லி நல்லா சம்பாதிக்கத் தொடங்கிட்டா! புத்திசாலித்தனமா ஷேர் மார்க்கெட்ல நுழைஞ்சா! அப்புறம் படிப்படியா நிறைய ஏஜென்சிகள் எடுத்து, சம்பாதிக்கிற வழியைத் தெரிஞ்சுகிட்டா! குடும்பக் கடன்களை அடைச்சா, ரெண்டு பொண்ணுங்க கல்யாணம் முடிச்சு, இப்ப சொந்த வீடு கூட கட்டியாச்சு. இதையெல்லாம் அனுபவிச்சிட்டு, அந்த சுகத்துல நீயும் இருக்கே! என்னை மட்டும் குறை சொல்றியா?"
 சகுந்தலா பேசவில்லை!
 "இதப்பாருடி! ஊர் எப்பப் பேசலை? பட்டினி கிடந்து நாலு குழந்தைகளோட நாம் போராடும் போதும் பேசத்தான் செஞ்சுது! இப்பவும் பேசுது! சரி ஊரை விடு! உனக்கு ஏன் ஆதங்கம்? இன்னிக்கு லல்லி வரட்டும்! பேசிரலாம்!"
 "ஆமாங்க! பணத்துக்காக அந்தக் குழந்தையை நாம பிடிச்சு வச்சிருக்கோம்னு அவளுக்குத் தோணக் கூடாது பாருங்க!"
 "பேசிரலாம் கண்டிப்பா!"
 இரவு ஒன்பது மணிக்கு வாசலில் ஆட்டோ வந்து நின்றது.
 லல்லி உள்ளே வந்தாள், கைப்பையுடன்.
 "யப்பா! ட்ராஃபிக் ஜாம்ல வீடு வந்து சேர்றதுக்குள்ளே முடியறதில்லை!"
 நைட்டிக்கு மாறி, முகம் கழுவி விட்டு கூடத்துக்கு வந்தாள்சாப்பிடலாமா லல்லி?"
 "நீயும், அப்பாவும் இன்னமும் சாப்பிடலையாம்மா?"
 "என்னிக்கு உன்னை விட்டுட்டு சாப்பிட்டிருக்கோம்?"
 "சரி கொண்டா! சப்பாத்தியா?"
 அம்மா ஹாட் பேக்கை எடுத்து வந்தாள். சாப்பிடத் தொடங்கினார்கள் மூவரும்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223126720
பின்னர் அறிவிக்கப்படும்!

Read more from Devibala

Related to பின்னர் அறிவிக்கப்படும்!

Related ebooks

Reviews for பின்னர் அறிவிக்கப்படும்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பின்னர் அறிவிக்கப்படும்! - Devibala

    1

    "எனக்கு நாக்கைப் பிடுங்கிட்டு சாகலாம்னு தோணுது!"

    அது முடியுமா உன்னால?

    என்ன சொல்றீங்க?

    உன் நாக்கு ரொம்ப நீளமாச்சே! அதைப் புடுங்கறது அத்தனை சுலபமில்லையே! ரொம்பக் கஷ்டப்படணுமே! நானும் வேணும்னா உதவிக்கு வரட்டுமா?

    போதும் கிண்டல்! வயிறெரிஞ்சு பேசறேன் நான். உங்க காதுல எதுவுமே விழாது! இல்லை, விழுந்தும் நீங்க கண்டுகறது இல்லையோ என்னவோ?

    நீ என்ன சொல்ல வர்ற?

    லல்லியை இன்னமும் வீட்ல வச்சிருந்தா, போறவங்க வர்றவங்க நம்ம மேல் காறித் துப்பிட்டுப் போவாங்க!

    அவர் பேசவில்லை!

    அவளுக்கு வயசு முப்பது! பார்வைக்கு இளமையா, இருபத்திரெண்டு வயசாட்டம் இருக்கா! ஒருத்தர் பாக்கியில்லை! உங்க பொண்ணுக்குக் கல்யாணமே செய்ய மாட்டீங்களானு கேக்கறாங்க! நான் என்ன பதில் சொல்றது?

    இதுக்கு நீயும் நானும் எப்படி சகுந்தலா பதில் சொல்ல முடியும்?

    ஏன் முடியாது? அவளைப் பெத்தது நாமதான்!

    .........

    அவ ஆயிரக்கணக்கா சம்பாதிக்கறா! அதை நடுவீட்ல ஒக்காந்து அனுபவிக்கிறவங்களும் நாமதான்! நமக்குத்தான் அவ சங்கதில தார்மீகப் பொறுப்பு நாம பதில் சொல்லாம யார் சொல்ல முடியும்?

    அவர் பேசவில்லை!

    அவளுக்கு வரன் பார்க்கணும்னு எண்ணம் நமக்கு வந்திருக்கா! தரகரை அழைச்சு ஒரு நாளாவது பேசியிருப்போமா?

    அவளும் கல்யாண சிந்தனையே இல்லாம இருக்காளே சகுந்தலா?

    எப்படீங்க வரும்? கல்யாணத்தைப் பத்தி யோசிக்க அந்தப் பொண்ணுக்கு எங்கே நேரம்? அதை யோசிக்க நாம விட்டிருக்கோமா?

    சகுந்தலா?

    நாலு புள்ளைங்களைப் பெத்தோம். ஒரே மகன்னு சொல்றவன் குடும்பத்துக்கு உதவாம தத்தாரியா ஊர் மேஞ்சான். தட்டிக் கேட்டப்ப நமக்கு அடங்காம வீட்டை விட்டு வெளியே போனான். அவனைத் தடுக்க நம்மால முடிஞ்சுதா?

    நீங்க உத்யோகம் பாக்கற வயசுதான் இது! உங்க கம்பெனியை இழுத்து மூடி பத்து வருஷம் ஆச்சு. வேற வேலைக்கு நீங்க போனீங்களா?

    வேற வேலை கிடைச்சாதானே?

    இல்லை! நீங்க முயற்சி பண்ணலை! உங்க கடமையை ஒரு குடும்பத் தலைவனா இருந்து நீங்க செய்யலை! என்ன காரணம்?

    நிறுத்து! நான் வேலை பார்த்துத்தான் நாலு புள்ளைங்களையும் ஒரு நிலைக்குக் கொண்டு வந்தேன்!

    போதுமே பெருமை! உங்க பிஸ்கோத்து சம்பளத்துல அரைப்பட்டினியும், கால் பட்டினியுமா குடும்பத்தை நடத்த நான் பட்டபாடு, எனக்குத்தானே தெரியும்! அப்பப்ப பொறந்த வீட்டு ஆதரவு எனக்கு இருந்ததால, நடுவீட்ல ஒக்காந்து தின்ன முடிஞ்சது. எப்ப லல்லி தலையெடுத்தாளோ, அப்பத்தானே நமக்கு மூணுவேளை சோறு!

    அப்பா பேசவில்லை!

    மூத்தவ கல்யாணத்தை கடன் வாங்கி நடத்தினது லல்லி! தான் இருக்கும்போது தங்கச்சிக்கும் கல்யாணத்தை முடிச்சா. பார்த்துக்கிட்டுத்தானே இருந்தம்!

    சும்மா நிறுத்தடி! என்னை மட்டும் எல்லாத்துக்கும் குற்றவாளியாக்கறே! ரெண்டு கை தட்டினாத்தான் சத்தம். நீயும், நானும் சேர்ந்ததுதான் இந்தக் குடும்பம். உனக்கு உம்பொண்ணு மேல அத்தனை அக்கறைனா, நீ பேசாம ஏன் இருந்தே?

    அம்மாவிடமும் குற்ற உணர்ச்சி இருந்தது.

    லல்லி நல்லா சம்பாதிக்கத் தொடங்கிட்டா! புத்திசாலித்தனமா ஷேர் மார்க்கெட்ல நுழைஞ்சா! அப்புறம் படிப்படியா நிறைய ஏஜென்சிகள் எடுத்து, சம்பாதிக்கிற வழியைத் தெரிஞ்சுகிட்டா! குடும்பக் கடன்களை அடைச்சா, ரெண்டு பொண்ணுங்க கல்யாணம் முடிச்சு, இப்ப சொந்த வீடு கூட கட்டியாச்சு. இதையெல்லாம் அனுபவிச்சிட்டு, அந்த சுகத்துல நீயும் இருக்கே! என்னை மட்டும் குறை சொல்றியா?

    சகுந்தலா பேசவில்லை!

    இதப்பாருடி! ஊர் எப்பப் பேசலை? பட்டினி கிடந்து நாலு குழந்தைகளோட நாம் போராடும் போதும் பேசத்தான் செஞ்சுது! இப்பவும் பேசுது! சரி ஊரை விடு! உனக்கு ஏன் ஆதங்கம்? இன்னிக்கு லல்லி வரட்டும்! பேசிரலாம்!

    ஆமாங்க! பணத்துக்காக அந்தக் குழந்தையை நாம பிடிச்சு வச்சிருக்கோம்னு அவளுக்குத் தோணக் கூடாது பாருங்க!

    பேசிரலாம் கண்டிப்பா!

    இரவு ஒன்பது மணிக்கு வாசலில் ஆட்டோ வந்து நின்றது.

    லல்லி உள்ளே வந்தாள், கைப்பையுடன்.

    யப்பா! ட்ராஃபிக் ஜாம்ல வீடு வந்து சேர்றதுக்குள்ளே முடியறதில்லை!

    நைட்டிக்கு மாறி, முகம் கழுவி விட்டு கூடத்துக்கு வந்தாள்.

    சாப்பிடலாமா லல்லி?

    நீயும், அப்பாவும் இன்னமும் சாப்பிடலையாம்மா?

    என்னிக்கு உன்னை விட்டுட்டு சாப்பிட்டிருக்கோம்?

    சரி கொண்டா! சப்பாத்தியா?

    அம்மா ஹாட் பேக்கை எடுத்து வந்தாள். சாப்பிடத் தொடங்கினார்கள் மூவரும்.

    அப்பா! மாருதி எஸ்டீம் ஒண்ணுக்கு புக் பண்ணியிருக்கேன். அடுத்த வாரம் வந்துடும்!

    காரா?

    ஆமாம்மா! ஏன்?

    நிறைய ஆகுமே!

    ஆறு லட்சத்துக்கும் மேல

    அ... அத்தனை பணத்துக்கு எங்கே போவ?

    கையில கொஞ்சம் இருக்கு. மிச்சத்துக்கு லோன் வாங்கிக்கறது!

    காரை நீயே ஓட்டுவியா?

    இல்லைமா! நான் ரிஸ்க் எடுக்கத் தயாரா இல்லை! டிரைவர் வச்சுக்க வேண்டியதுதான்!

    அம்மா பேசாமல் இருந்தாள்.

    ஏம்மா லல்லி, நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே!

    என்னப்பா?

    கிட்டத்தட்ட இந்த வீட்டுக்கு ஏழு லட்சம் செலவாச்சு இல்லையா?

    ஆமாம்பா!

    கடன் எவ்ளோ போகுது?

    மாசம் அஞ்சாயிரம்!

    இப்ப கார் லோன், டிரைவர் சம்பளம், பெட்ரோல் இதெல்லாம் எவ்ளோம்மா ஆகும்?

    இன்னொரு அஞ்சு அல்லது ஆறு ஆகும்!

    தவிர வீட்டுச் செலவு வேற! மாசம் பதினைஞ்சுலேருந்து இருபதாயிரம் வரைக்கும் செலவு! தாங்குமாம்மா?

    தாங்கற காரணமாத்தானேப்பா தைரியமா வாங்கறேன்!

    சரிம்மா! இத்தனை சுமைகள் அவசியமா?

    தெரியலைப்பா! அவசியம்னா எல்லாமே அவசியம். இல்லைனா, எதுவுமே இல்லை!

    எழுந்து கை கழுவினாள்.

    எனக்குத் தூக்கம் வருது! பால் இருக்காம்மா?

    கொண்டு வர்றேன் லல்லி!

    அம்மா உள்ளே போனாள்.

    லல்லி! ஒரு பத்து நிமிஷம் உங்கிட்ட நான் பேசணும்!

    சொல்லுங்கப்பா

    இந்தக் குடும்பத்துல நான் செய்ய வேண்டிய எல்லாத்தையும் நீ செஞ்சுட்டு வர்ற! நான் செய்ய முடியாத பல விஷயங்களையும் நீ சாதிச்சாச்சு!

    விஷயத்தைச் சொல்லுங்கப்பா!

    நாங்களும் ஏதோ ஒரு மயக்கத்துல இத்தனை நாள் வாழ்ந்தாச்சும்மா! இப்ப அது தெளியுது! தெளிஞ்சப்ப உறுத்துது!

    புரியலை!

    உனக்கும் ஒரு வாழ்க்கை வேணும்மா!

    நான் இப்ப வாழ்ந்துட்டுத்தானேப்பா இருக்கேன்!

    "இது முழுமை இல்லைமா! கல்யாண வாழ்க்கைதான் முழுமை! அது உனக்கு கிடைக்கணும்! உனக்குனு ஒரு குடும்பம் அமையணும்.

    Enjoying the preview?
    Page 1 of 1