Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நதிமூலம்
நதிமூலம்
நதிமூலம்
Ebook130 pages46 minutes

நதிமூலம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வர்கள் வாழ்வது ஒரு சிற்றூர்தான். கிராமத்துக்கும் கொஞ்சம் மேலே சின்ன ஓடை என்ற அந்த ஊரில் சொல்லும்படியாக செழிப்பு இல்லை! ஒரு ரயில் நிலையம் உண்டு. நூறு கிலோமீட்டர் பயணம் செய்தால், சேலத்துக்கு வந்து விடலாம்.


சின்ன ஓடை ரயில் நிலையத்துக்குள் நுழைந்தான் கண்ணாயிரம். காலை ஏழு மணி அப்போது.


ரயில் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது.


அங்கே விரைவு வண்டிகள் எதுவும் நிற்காது. காலை முதல் மாலை வரை உள்ளூர் பாசஞ்சர்கள் ஆறு வண்டியோ என்னமோ போகும்!


ஸ்டேஷன் மாஸ்டர் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார்.


ரவிக்கையில்லாத தயிர்க்காரியின் கறுத்த மேனியை காமத்துடன் மேய்ந்து கொண்டிருந்தன அவரது கண்கள்.


பெயர்ப் பலகை அருகில் ரெண்டு பேர், மூணு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


உள்ளே நுழைந்தான் கண்ணாயிரம்.


“வா கண்ணாயிரம்!”


“முதல்ல தயிர்க்காரியை ஜாக்கெட் போட்டுக்கச் சொல்லணும்!”


“கஷ்டமா இருக்கா?”


“எனக்கில்லை! வீட்ல அக்காவை பிரசவத்துக்கு அனுப்பியாச்சா?”


“போன வாரமே!”


“என்ன வயசு உங்களுக்கு?”


“நாப்பத்தி அஞ்சு!”


“இப்பத் தேவையா? நாலாவது குழந்தை இது!”


“சின்ன ஓடைல என்ன பொழுதுபோக்கு இருக்கு? சொல்லு!”


“நீங்க இதே வேகத்துல போனா, சின்ன ஓடை, பெரிய ஓடை ஆயிடும்! சரி! ரயில் வருமா?”


“வருமே! டிக்கெட் வேணுமா?”


“வேண்டாம். நம்மூர்ல யாரு டிக்கெட் வாங்கறாங்க? நான் சேலத்துக்கு லோக்கல் வண்டில போயிர்றன்!”


“சாயங்காலம் வந்துருவியா?”


“இல்லை! இனிமே வர மாட்டேன்!”


“என்னப்பா சொல்ற?”


“நான் தண்டச்சோறுனு எங்கண்ணன் வீட்டை விட்டு விரட்டிட்டார். அதான் புறப்பட்டுட்டேன்!”


“எந்த ஊருக்குப் போற?”


“தெரியலை! படைச்சவன் செலுத்தறான். தற்சமயம் நூல் அறுந்த பட்டம் எங்கேயெல்லாம் பறக்குதுன்னு பாக்கலாமே!”


“கடவுளே! மாசக் கடைசி! எங்கிட்ட இருபது ரூபா இருக்கு. நீ வச்சுக்கறியா?”


“வேண்டாம் சார்! உங்களை நான் மறக்க மாட்டேன்!”


அவர் உள்ளே போனார். திரும்பி வந்தார்.


“மெட்ராஸ் போற ஏற்காடு எக்ஸ்பிரஸ் வருது!”


“இந்த நேரத்துல ஏற்காடு எக்ஸ்பிரஸா? எப்படி?”


“இது ஸ்பெஷல் ரயில்டா! மாநாட்டுக்காக விட்டிருக்காங்க! நம்ம அவுட்டர்ல வாங்கணும்!”


“ஏன்?”


“ஒரு கூட்ஸ் க்ராஸிங் இருக்கு!”


“அப்படீன்னா, நம்மூர்ல எக்ஸ்பிரஸ் நிக்குமா?”


“எப்பவும் இல்லை! இது மாதிரி சில சூழ்நிலைகள்ல!”


பத்தாவது நிமிடம் ஏற்காடு ஸ்பெஷல் வந்து விட்டது. அவுட்டரில் தள்ளி நின்றது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
நதிமூலம்

Read more from தேவிபாலா

Related to நதிமூலம்

Related ebooks

Reviews for நதிமூலம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நதிமூலம் - தேவிபாலா

    1

    "கண்ணாயிரம் வந்துட்டானா?"

    முகம் கழுவி விட்டு சாப்பிட உட்கார்ந்தபோதே பெரியசாமி கேட்ட முதல் கேள்வி இதுதான்!

    பதில் இல்லை!

    நான் உன்னைத்தான் கேட்டேன்! காதுல விழுந்ததா இல்லையா?

    மாடில இருக்கான்!

    அவனை வரச் சொல்லு இங்க!

    நீங்க முதல்ல சாப்ட்டு முடிங்க. அப்புறம் எதுவானாலும் பேசிக்கக்கூடாதா?

    அவர் எழுந்து விட்டான்.

    சரி! சரி! நீங்க ஒக்காருங்க! நான் கூட்டிட்டு வர்றேன்!

    அதற்குள் கண்ணாயிரம் மாடி இறங்கி வந்தான்.

    கூப்பிட்டியா அண்ணே?

    அம்மா எங்கேடா?

    வந்துட்டேன் தம்பி

    அம்மா எதிரே வந்து நின்றாள்.

    உன் அருமைப் புள்ளை, கடைக்குட்டி அடிச்ச கூத்தை நீ காது குளிரக் கேக்க வேண்டாமா?

    ....!

    நான் எத்தனை பாடுபட்டு சிபாரிசு புடிச்சிருப்பேன் இந்த வேலைக்கு? அட, பதில் சொல்ற அளவுக்கு உனக்கு புத்தியில்லைனு ஊருக்கே தெரியும்! நீ போய் சும்மா அங்கே நின்னாலே வேலை கிடைச்சிருக்கும்! நின்னியா?

    அண்ணே! நான் கொஞ்சம் பேசலாமா?

    என்னடா சொல்லப் போற?

    அங்கே யாரும் ஒழுங்கா கேள்வி கேக்கலை! நம்ம தன்மானத்தை பாதிக்கிற மாதிரி எடக்கு முடக்கா கேட்டாங்க!

    உடனே நீ எகிறிட்டியாக்கும்?

    முதல்ல நான் எதுவுமே பேசலைண்ணே! போகப் போக என் பொறுமையை சோதிச்சாங்க! படக்குனு கேட்டுட்டேன்!

    பார்த்தியாம்மா! இவன் பேசிட்டு வந்துட்டான். சிபாரிசு சொல்றேன்னு எங்கிட்ட சொன்னவன், என்னை நிறுத்தி வச்சு எப்படியெல்லாம் கேள்வி கேட்டான் தெரியுமா? அங்கே குனிஞ்ச தலை இப்பக்கூட எனக்கு நிமிரலை!

    அண்ணே நீயும்...!

    எதிர்த்து பேசுனு சொல்றியா? உன்னை மாதிரி நானும் வேலையை விட்டுட்டு வந்துரட்டுமா? அடேய், நீ வெக்கம், மானம் இல்லாம நடுவீட்ல. மூணு வேளை ஒக்காந்து சோறு திங்கலாம். நான் ஒரு இளிச்சவாயன் அண்ணனா உனக்குக் கிடைச்சிருக்கேன். எனக்கு அப்படி யாரும் கிடைக்கலையே!

    கண்ணாயிரம் முகம் சிவந்தான்.

    அண்ணே! அதுக்காக மத்தவங்க நம்மகிட்ட தாறுமாறாப் பேசினா, அதைப் பொறுத்துக்க முடியுமா?

    நீ பூமில கால் ஊனி நிக்கணும்னா சகிச்சுக்கத்தாண்டா வேணும்

    இல்லைண்ணே! என்னால அது முடியாது!

    உனக்கு இருபத்தி மூணு வயசுடா! எஸ்ஸெல்சி தாண்டலை நீ! அதுக்கு மேல படிப்பும் ஏறலை! எத்தனை நாளைக்கு பூமிக்கு பாரமா இருக்கப் போற? நான் செத்த பின்னால், என் பிள்ளைகளும் உனக்கு சோறு போடும்னு நெனச்சியா? உன் நிலைமைல நானிருந்தா எப்பவோ நாண்டுகிட்டு செத்திருப்பேன்!

    அம்மா குறுக்கிட்டாள்.

    தம்பி! அப்படிச் சொல்லாதேடா!

    அம்மா... நீ குறுக்கிட்டா, உன் மேல நான் வச்ச மரியாதையை வாபஸ் வாங்கிக்க வேண்டி வரும்!

    அம்மா அதிர்ந்து போனாள்.

    அவனை ஒக்கார வச்சு வக்கணையாக் கொட்டுடி! மூக்கு முட்ட சாப்பிடட்டும். சில பேர் அதுக்காகத் தானே பூமில வாழறாங்க! எனக்கு வேண்டாம். என்னுதையும் சேர்த்து அவனே கொட்டிக்கட்டும்!

    பெரியசாமி எழுந்து போக,

    அண்ணி கண்ணாயிரத்தை நெருங்கினாள்.

    இப்ப உனக்கு திருப்திதானா? உழைச்சிட்டு வர்ற அவரை ஒரு கவளம் சோறு தின்ன விடலை! வா! நீ வந்து சாப்பிடு! இந்த பாவமெல்லாம் உன்னை சும்மாவிடாது!

    அம்மா ஆவேசமாக அருகில் வந்தாள்.

    ஏண்டீ இப்படி பேசற? உம் புருஷனுக்குச் சோறு இறங்கலைனா, அதுக்கு யார் என்ன செய்ய முடியும்?

    நிறுத்துங்க அத்தே! தண்டச் சோறா இருக்கற உங்க பிள்ளையைக் கண்டிக்க உங்களுக்கு துப்பில்லை! மத்தவங்ககிட்ட எகிர்றீங்களா? நல்லாருக்கே நியாயம்! அவர் என்ன தப்பா பேசிட்டார்? உத்யோகம் புருஷ லட்சணம். தனக்கா தேடிக்க துப்பில்லை! மத்தவங்க பாடுபட்டு சிபாரிசு புடிச்சா, அவங்க முகத்துலேயே கரியைப் பூசறது என்ன நியாயம்?

    சரிடீ! அதுக்காக கேக்கக் கூடாத கேள்விகளையெல்லாம் கேட்டா, அவன் எப்படி சும்மா இருப்பான்?

    பெரியசாமி அங்கு வந்தான்.

    நிறுத்தும்மா தப்பு உன் புள்ளை பேர்ல! ஆனா நீ அவனுக்கு வக்காலத்து வாங்கற

    அதை நான் கேட்டப்ப எங்கிட்ட கோவப்படறாங்க உங்கம்மா!

    நீ ஏன்மா அவகிட்ட எகிர்ற? உன்னோட ரெண்டாவது பிள்ளை எந்த பிரச்னைகளையாவதுதான் சுமக்கறானா? தங்கச்சிகளை கடன் வாங்கிக் கட்டிக்குடுத்தது நான். இப்ப இந்த தண்டச்சோறு எங்கிட்டத்தான் இருக்கு. நான் ஒருத்தன்தான் சுமக்கணுமா? அவ கேட்டா என்ன தப்பு?

    அம்மா அதிர்ந்து போனாள்.

    பெரியசாமி! நீயாடா இப்படி பேசற?

    நான்தான்மா! எல்லாத்தையும் நானே தாங்கிக்கணும்னா அது முடியற காரியமா? எனக்கும் பொண்டாட்டி, புள்ளைங்க இருக்கு. அதுங்களை நான் அனாதையா வீதில விட்டுட்டுப் போக முடியுமா? சொல்லு!

    அப்படி யாரப்பா சொன்னாங்க?

    "இதப்பாரு! நீ பெத்த தாய்! உன்னை வச்சுக் காப்பாத்தற கடமை எனக்கு உண்டு. அதை நான் செஞ்சுதான் ஆகணும். மத்தவங்க யாரையும் ஆதரிக்க இனி நான் தயாரா இல்லை!

    கண்ணாயிரம் இந்த வீட்ல இருக்கக் கூடாதுனு சொல்றியா நீ?

    புரிஞ்சுகிட்டா சரி!

    அம்மா அதிர்ச்சியுடன் கண்ணாயிரத்தைப் பார்த்தாள்.

    அவன்... அவன் எங்கேடா போவான்? அவனுக்கு யாரைத் தெரியும்?

    ஏம்மா... அப்பாவும் செத்து குடும்பம் அவஸ்தைல நின்னப்ப, நான் காலைத் தூக்கி வெளில வைக்கலை? அப்ப எனக்கு யாரைத் தெரியும்? அன்னிக்கு நீ கேட்டியா இந்தக் கேள்வியை? எனக்காக பரிதாபப்பட்டியா? நானும் உம்பிள்ளை தானே? சொல்லுமா?

    அம்மா பேசவில்லை!

    கண்ணாயிரம் இங்க வா!

    கண்ணாயிரம் அருகில் வந்தான்.

    சில முடிவுகளை எடுக்கும் போது மனசங்கடம்தான். வேற வழியில்லை! நான் காலம் முழுக்க ஏமாளியா இருக்கத் தயாரா இல்லை! அதனால, உனக்கு இனிமே இந்த வீட்ல இடமில்லை! இந்த வாரம் முழுக்க உனக்கு அவகாசம் தர்றேன். அதுவே அதிகபட்ச அவகாசம்! அதுக்குள்ள நீ கிளம்பணும்! வாடி உள்ள!?

    பெரியசாமி போக, அண்ணியும் போய்விட்டாள்.

    கண்ணாயிரம் மாடிக்கு வந்து விட்டான். நாளை பௌர்ணமி! நிலவு ஏகாந்தமாக வெளிச்சம் வினியோகித்துக் கொண்டிருந்தது. மல்லாந்து படுத்தான் கண்ணாயிரம்.

    ‘பேசாத அண்ணன், பேசக் கூடாத அளவுக்குப் பேசி விட்டான். இனி நான் முடிவுக்கு வந்தாக வேண்டும்!’

    தம்பி!

    அம்மாவின் குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்தான்.

    என்னடா இது?

    அம்மா அழுதாள்.

    நீ ஏன்மா அழற? உன் அழுகை எந்தப் பிரச்னைக்கு தீர்வு சொல்லப் போகுது?

    "பெத்த வயிறுடா! எனக்குத்தான் தெரியும் அந்த சங்கடம்! நீ எங்கேடா போவ? உனக்கு யாரைத் தெரியும்? நானும் உங்கூட வந்துர்றன். உங்கண்ணன் இத்தனை பேசின பின்னால் எனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1