Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இரும்புத் திரை!
இரும்புத் திரை!
இரும்புத் திரை!
Ebook87 pages30 minutes

இரும்புத் திரை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மறுநாள் ஹரி சீக்கிரமே ஆபீசை விட்டு வெளியே வந்து விட்டான்!
சந்தியா காரில் காத்திருந்தாள்.
ஹரி ஆபீசில் பளிச்சென்று தன்னைத் தயார் செய்து கொண்டுதான் வந்தான்!
சந்தியா ஏற இறங்கப் பார்த்தாள்.
“ஏன் அப்படி பாக்கறே?”
“ரொம்ப அழகா இருக்கீங்க! இந்த மாதிரி எல்லா தகுதிகளும் உள்ள ஒருத்தரை மாப்பிள்ளையா யார்தான் வேண்டாம்னு சொல்லுவாங்க?”
ஹரி சிரித்தான். கார் புறப்பட்டது.
பங்களா கேட் திறக்க, உள்ளே அரை கிலோ மீட்டர் ஓடி கார் நின்றது. சுற்றிலும் பூந்தோட்டம். வளமான - செழிப்பான நாய்கள் இரண்டு காதை விடைத்துக் கொண்டு நிற்க, ஹரி மிரண்டான்!
“ஒண்ணும் செய்யாது! தைரியமா வாங்க!”
அவளது பார்வையில் நாலு கால் ஜீவன்கள் அடங்கிப் போக, ஹரியுடன் உள்ளே நுழைந்தாள் சந்தியா.
உட்கார வைத்தாள். மாளிகைதான்! பிரமிப்பின் உச்சியில் இருந்தான் ஹரி.
“அம்மாவை வரச் சொல்றேன்!” - சந்தியா உள்ளே போனாள். ஹரி பார்த்துக் கொண்டே இருந்தான்.
சந்தியாவுடன் அந்தம்மா வர, ஹரி எழுந்து நின்று கை கூப்பினான். வசுமதியும் கை கூப்பினாள்.
“உட்காருங்க தம்பி!”
ஹரி உட்கார்ந்தான். எதிரே வசுமதி கால் மேல் கால் போட்டு உட்கார, அருகில் சந்தியா!ஒரு நொடியில் ஹரியை தன் கண்களால் ஸகேன் பண்ணி விட்டாள் கோடீஸ்வரி வசுமதி!
ஹரிக்கு குளிர்பானம் வந்தது.
“சாப்பிடுங்க!” - அதை முடிக்கும் வரை காத்திருந்தாள் வசுமதி!
“சந்தியா நேத்திக்கு வந்து சொன்ன இந்த 24 மணி நேரத்துல உங்களைப் பற்றி முழுமையா விசாரிச்சிட்டேன். எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு! எல்லா தகுதிகளும் உள்ள ஒரு இளைஞனைத்தான் என் மகள் தேர்ந்தெடுத்திருக்கா! என் மாப்பிள்ளையா உங்களை ஏத்துக்க எனக்கு சம்மதம்!”
சந்தியா உற்சாகமாகி விட்டாள்.
ஹரியின் முகமும் மலர்ந்தது!
“ஆனா சில நிபந்தனைகள் இருக்கு தம்பி!”
“என்ன?”
“முதல்ல உங்கப்பா சம்பந்தம் பேச இங்கே வரணும். அவர் கிட்ட நான் பேசுவேன்! நாளைக்கு நல்ல நாள்! உங்கப்பா வரமுடியுமா?”
“கேக்கறேன்!”
“நாளைக்கு விட்டுட்டா, ஒரு மாசத்துக்கு நாட்களும் சரியா இல்லை! எனக்கு நேரமும் இல்லை!”
“சரி! நான் அவரைக் கூட்டிட்டு வர்றேன்!”
“அவ்ளோதான்! பேசி முடிச்சிட்டா, இந்த மாசக் கடைசில கல்யாணத்தை முடிச்சிடலாம்!”
அந்தம்மா எழுந்து உள்ளே போய் விட்டாள்.
சந்தியா அருகில் வந்து உட்கார்ந்தாள்.
“பாத்தீங்களா? எங்கம்மா பச்சைக் கொடி காட்டிட்டாங்க! நியாயமான ஆசைகளை அம்மா மறுக்கவே மாட்டாங்க!“இரு சந்தியா! எங்கப்பா கிட்ட இனிமேல்தான் நான் பேசணும்!”
“பேசுங்க! நாளைக்குத் தானே கூட்டிட்டு வரணும்?”
ஹரியிடம் ஒரு கலக்கம் இருந்தது.
“என்ன ஹரி?”
“தங்கச்சி ராதிகா கல்யாணம் முடியாம, எனக்கு நடத்த அப்பா ஒப்புக்கணுமே!”
“தப்பு ஹரி! இந்த எண்ணம் இருந்திருந்தா, ராதிகா கழுத்துல தாலி ஏறின பிறகுதான் நீங்க காதலிக்கவே தொடங்கியிருக்கணும்!”
“என்ன சந்தியா இப்படி பேசற?”
“முடிவுகளை எடுக்கறதுக்கு முன்னால யோசிக்கணும். எடுத்த பிறகு எது வந்தாலும் ஏத்துக்கணும்! இது எங்கம்மா கத்துக் குடுத்த பாடம்! புறப்படுங்க!”
ஹரி காரில் ஏறினான்.
“டிரைவர்! அவரை வீட்ல விட்டுட்டு வந்துடுங்க!”
சந்தியா உத்தரவிட்டாள். கார் புறப்பட்டது!
தன் வீட்டு வாசலில் ஹரி வந்து இறங்க, அப்போதுதான் காய்கறிக் கூடையுடன் அப்பா உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.
நேரம் எட்டு மணி - இரவு!
“கம்பெனி கார்ல உன்னை ட்ராப் பண்ணினாங்களா?”
“இது கம்பெனி கார் இல்லைப்பா!”
“ராதிகா! வெங்காயத்தை கட் பண்ணித் தர்றியா?”
ஹரி முகம் கழுவி, பர்முடாஸ் அணிந்து கொண்டு வெளியே வந்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
இரும்புத் திரை!

Read more from தேவிபாலா

Related to இரும்புத் திரை!

Related ebooks

Reviews for இரும்புத் திரை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இரும்புத் திரை! - தேவிபாலா

    1

    உங்களைப் பாக்கணும்னு எங்கம்மா சொல்றாங்க! - காரில் வந்து இறங்கியதும் சந்தியா சொன்ன முதல் வாக்கியம் இது.

    விவரத்தைச் சொல்லிட்டியா உங்கம்மா கிட்ட?

    ம்! என் கல்யாணப் பேச்சை எடுத்துட்டாங்க! எங்கம்மா எதைத் தொடங்கினாலும் வேகம் அதிகம். அதை செஞ்சு முடிச்சிட்டுத்தான் ஓய்வாங்க! அப்புறமா நான் உங்களுக்குக் கிடைக்கறதே கனவாயிடும். அதான் உடைச்சிட்டேன்!

    நீ பணக்காரி. நான் நடுத்தர வர்க்கம். இதை சொல்லிட்டியா?

    அம்மா எதுவும் கேக்கலை. நாளைக்கு சாயங்காலம் ஆறுமணிக்கு உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட்!

    ‘சரி’ என்றான் ஹரி!

    ஹரி நடுத்தர வர்க்கத்து இளைஞன். சிறு வயதில் தாயை இழந்தவன். அப்பா தனியாரில் உத்யோகம். கடனை உடனை வாங்கி, ஹரியை பி.டெக். படிக்க வைத்து விட்டார். ஒரு பிரபலமான நிறுவனத்தில் ஹரிக்கு வேலையும் கிடைத்து ஒரு வருடம் ஆகி விட்டது. மாதம் நாற்பதாயிரம் சம்பளம். குடும்பம் தெளியத் தொடங்கி விட்டது!

    ஹரியின் தங்கை ராதிகா பி.காம். இரண்டாவது வருடத்தில் இருக்கிறாள்.

    குடும்பப் பாசம் உள்ளவன் ஹரி!

    இசையில் ஆர்வமுள்ளவன். ஒரு இசைக்குழுவில் சேர்ந்து அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பாடி விட்டு வருவான். அந்த மாதிரி ஒரு இசை நிகழ்ச்சியில் ஹரியின் பாட்டுக்கு ரசிகையாகி அவனுக்கு அறிமுகமான சந்தியா, அடிக்கடி சந்திப்புகளை உருவாக்கி, இப்போது காதல் வரை கொண்டு வந்து விட்டாள்.

    முதலில் விலகிப் போன ஹரி, சந்தியாவின் பழகும் முறையால், இனிமையால் ஈர்க்கப்பட்டு அவளைக் காதலிக்கத் தொடங்கி விட்டான்.

    அவனும் இதை வீட்டில் சொல்லவில்லை.

    இதோ சொல்லும் நேரம் வந்து விட்டது!

    இரவு சாப்பாட்டுக்கு தயாரானார்கள்.

    அப்பாதான் சமையல்!

    மனைவியை இழந்தபின் இந்த இரண்டு குழந்தைகளையும் வளர்ப்பதில் சகலமும் கற்றுக் கொண்டு விட்டார்.

    சூடான சப்பாத்தி, குருமா!

    ஹரியால் சரியாக சாப்பிட முடியவில்லை.

    ராதிகா ஒரு கட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள்.

    ‘முதலில் ராதிகாவிடம் மட்டும் சொல்லி விட்டு, பிறகு அப்பாவிடம் சொல்லலாம்!’

    ஹரி அவசரமாக சாப்பிட்டு, ராதிகா! நான் மாடிக்குப் போறேன். நீயும் வா! அரட்டையைப் போடலாம்!

    சரிண்ணா!

    ராதிகா மாடிக்கு வந்தாள்.

    கொஞ்சம் சுற்றி வளைத்து - சந்தியாவை தான் காதலிப்பதை சொல்லி விட்டான் ஹரி!

    அவங்கம்மா வசுமதி பெரிய கோடீஸ்வரி! தொழிபதிபர். ஒரு தம்பி மட்டும் தான் சந்தியாவுக்கு.

    பரவால்லயே! பெரிய இடமா புடிச்சிட்டியே?

    அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லை ராதிகா! அமைஞ்சு போச்சு! சந்தியா இன்னிக்குத்தான் உடைச்சுப் பேசியிருக்கா! நாளைக்கு என் சந்திப்பு!

    ராதிகா சந்தோஷப்பட்டாள்.

    உன் கல்யாணம் முடியாம, அப்பா எனக்குக் கல்யாணம் செய்ய ஒப்புக்க மாட்டார்!

    இதப்பாரு! இப்பத்தான் ரெண்டாவது வருஷம் தொடங்கியிருக்கு. இன்னும் ஒரு வருஷம் முடியணும். நான் எம்.காம். பண்ணப் போறேன். அப்புறமா வேலை. எனக்குக் கல்யாணத்துக்கு அஞ்சு வருஷமாகும். அது வரைக்கும் உன் காதல் காத்திருக்காது. நீ கவலைப் படாதே! அப்பாகிட்ட நான் பேசிக்கறேன். அண்ணி முதல்ல வரட்டும்! வருவாங்களா?

    இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம் ராதிகா?

    கோடீஸ்வரி - இந்த வீட்டுக்கு வாழ வருவாங்களா?

    வந்துதான் ஆகணும் ராதிகா!

    யாரையும் எதுக்கும் நாம் கட்டாயப்படுத்த முடியாதண்ணா! சரி! நாளைக்கு நீ போயிட்டு வா! அப்புறம் நிறைய பேசப்போறோமே!

    அம்மாவும் இல்லை நமக்கு! உன்னை விட்டுப் பிரிய முடியாது என்னால்!

    ராதிகா சிரிந்தாள்.

    ஏன் சிரிக்கற?

    உணர்ச்சி வசப்படறது மட்டுமே முழுமையான வாழ்க்கையில்லை. சூழ்நிலை எல்லாரையுமே மாற்றும். மாறத் தயாரா இருக்கணும். நேரமாச்சு! படுக்கலாம்!

    ராதிகா நடந்தாள்.

    வயதில் இளையவளாக இருந்தாலும், ராதிகாவுக்கு தெளிவு அதிகம்!

    பேச்சு அழகாக, அர்த்தமுள்ளதாக இருக்கும்!

    படித்திருந்தாலும், பதவியில் இருந்தாலும் தாண்டி யோசிக்கும் சக்தி ஹரிக்கு இல்லை.

    படக்கென உணர்ச்சி வசப்படும் மனிதன்!

    2

    மறுநாள் ஹரி சீக்கிரமே ஆபீசை விட்டு வெளியே வந்து விட்டான்!

    சந்தியா காரில் காத்திருந்தாள்.

    ஹரி ஆபீசில் பளிச்சென்று தன்னைத் தயார் செய்து கொண்டுதான் வந்தான்!

    சந்தியா ஏற இறங்கப் பார்த்தாள்.

    ஏன் அப்படி பாக்கறே?

    ரொம்ப அழகா இருக்கீங்க! இந்த மாதிரி எல்லா தகுதிகளும் உள்ள ஒருத்தரை மாப்பிள்ளையா யார்தான் வேண்டாம்னு சொல்லுவாங்க?

    ஹரி சிரித்தான். கார் புறப்பட்டது.

    பங்களா கேட் திறக்க, உள்ளே அரை கிலோ மீட்டர் ஓடி கார் நின்றது. சுற்றிலும் பூந்தோட்டம். வளமான

    Enjoying the preview?
    Page 1 of 1