Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தங்க மச்சம்!
தங்க மச்சம்!
தங்க மச்சம்!
Ebook155 pages37 minutes

தங்க மச்சம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டெல்லி. காலை பத்து மணி.
 ப்ரவீண் பைக்கில் பறந்து கொண்டிருந்தான். பின்னால் பூமா. பூமாவின் கையில் பாப்கார்ன் பொட்டலம்.
 இந்த இரண்டு பேரையுமே நீங்கள் ஒரு தனியார் டி.வி.யின் செய்திச் சேனலில் அடிக்கடி பார்த்து இருக்கலாம். டெல்லியில் ஏதாவது அசிங்கமான அரசியல் நடந்தால் அதை சுவாரஸ்யமாய் ஒளிபரப்பிவிட்டு டெல்லியிலிருந்து ப்ரவீண் என்றோ... பூமா என்றோ சொல்லும்போது அந்த இரண்டு பேரும் கைகளில் சோளக்கதிர் போல் ஒரு மைக்கை வைத்துக் கொண்டு தன் அழகான பல்வரிசையைக் காட்டி சிரிப்பார்கள். பூமாவைப் பார்த்து 'ஜொள்' விட தமிழ்நாட்டில் ஒரு தனிப்படையே உண்டு என்பது தனி விஷயம்.
 ப்ரவீண் பைக்கை விரட்டியபடி கூப்பிட்டான்.
 "ஏய்... தின்னிப் பண்டாரம் !"

மொச்... மொச்..." பூமாவின் வாய் பாப்கார்னை மென்றது.
 "சாப்பாட்டு ராமி!"
 "மொச்... மொச்..."
 "பூமா... உன்னைத்தான்...!"
 "காது கேக்குது சொல்லுடா"
 "பாப்கார்னை ரெஸ்டாரெண்ட்ல வாங்கும்போது பிச்சைக்காரனுக்கு பத்து பைசா போடற மாதிரி கொஞ்சம் பாப்கார்னை என் கையில் கொடுத்ததோடு சரி... அப்புறம் அதை என் கண்ணிலேயே காட்டலை."
 "உனக்குத்தான் பாப்கார்ன் பிடிக்காதேடா ?"
 "அப்படின்னு யார் சொன்னது?"
 "நீ என்னிக்கோ சொன்ன மாதிரி ஞாபகம்..."
 " இதோ பார்... இந்த டகல்பாஜி வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம்... ஒழுங்கு மரியாதையா பாதி பாப்கார்ன் பாக்கெட்டை என்கிட்டே கொடுத்துடணும். இப்போ கொஞ்சம் எடுத்து என் வாய்ல திணி..."
 "எங்கே வாயைத்திற..." பூமா சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளுடைய ஹேண்ட் பேக்கில் இடம் பிடித்திருந்த செல்போன் 'கொக்கரக்கோ' என்ற ரிங்டோனை வெளியிட்டு கூப்பிட்டது.
 "ப்ரவீண்... கொஞ்சம் வேகத்தைக் குறை..." பூமா செல்போனை எடுத்து காதில் வைத்தாள்.
 சென்னையில் இருக்கும் டி.வி. நிர்வாகம் பேசியது.
 "பூமா..."
 "சொல்லுங்க ஸார்..."
 "டெல்லி அரசியலில் இன்னிக்கு என்ன ஹாட் நியூஸ்?ஒண்ணுமேயில்லை ஸார்... உர விலை ஏற்றத்தைக் கண்டிச்சு ஹரியானா விவசாயிகள் பார்லிமெண்ட்டுக்கு முன்னாடி உண்ணாவிரதம். முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தன்னுடைய தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கார். தான் சேனியா நாட்டு தூதர் ஒருவர் பிரதமரை சந்திச்சு இரு நாட்டு நல்லுறவு பற்றிப் பேசியிருக்கார்."
 "எல்லாமே பழையசோறு. நாளைக்காவது ஹாட் நியூஸ் இருக்குமா...?"
 "பார்க்கலாம் ஸார்..."
 "'என்ன ட்ராஃபிக் சத்தம்?"
 "இப்போ நானும் ப்ரவீணும் பைக்ல போயிட்டிருக்கோம் ஸார்."
 "எங்கே...?"
 "வெளியுறவுத்துறை அமைச்சரகம் ஒரு பிரஸ்மீட் கூட்டியிருக்கு ஸார். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் போன்ல அழைப்பு வந்தது."
 "எதுக்காக பிரஸ்மீட்...?"
 "தெரியலை ஸார்... பட் புதுசா ஏதாவது ஒரு வெளியுறவுக் கொள்கையை அறிவிக்கிறதுக்காக இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன். தமிழ்நாட்ல ஏதாவது அரசியல் ஹாட் நியூஸ் உண்டா ஸார் ?"
 "அதுக்குத்தான் இங்கே பஞ்சமே கிடையாதே! முன்னாள் நடிகை சாந்தாமணி தன்னை பாலியல் பலாத்காரம் பண்ணிய முன்னாள் அமைச்சர்கள் யார் யார்ன்னு நாளைக்கு கோர்ட்ல சொல்லப் போறாளாம். அமைச்சர்கள் எல்லாம் அரண்டு போய் உட்கார்ந்து இருக்காங்களாம்."
 "என்ன ஸார் இது அநியாயம்...! அந்த நடிகை சாந்தாமணிக்கு அறுபது வயசு இருக்குமே ?"
 "என்ன பண்றது...! அந்தம்மாவுக்கு இப்பத்தான் தன்னோட கற்பு பறிபோன விஷயம் தெரிஞ்சிருக்கு..."
 "தமிழ்நாட்லதான் இந்த மாதிரியான கூத்து எல்லாம் நடக்கும்... ஸார்...""சரி... பிரஸ்மீட்டை அட்டெண்ட் பண்ணுங்க. ஏதாவது முக்கியமான விஷயமாய் இருந்தா மேட்டரை ஃபேக்ஸ் பண்ணுங்க. ராத்திரி நியூஸ்ல சேர்த்துடலாம்."
 "ஓ.கே....ஸார்...." பூமா செல்போனை அணைத்து ஹேண்ட்பேக்கில் போட்டுக் கொண்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798224825585
தங்க மச்சம்!

Read more from Rajeshkumar

Related to தங்க மச்சம்!

Related ebooks

Related categories

Reviews for தங்க மச்சம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தங்க மச்சம்! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    நம் இந்தியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன என்ற கேள்விக்கு பதில் தெரிந்த வாசகர்கள் நாவலின் முதல் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்து விடுங்கள். பதில் தெரியாதவர்கள் மட்டும் இரண்டாவது அத்தியாயத்துக்கு போய்விட்டு வந்து நாவலை படிக்க ஆரம்பியுங்கள்.

    வடகிழக்கு பருவமழை மும்பையை ஹதம் பண்ணிக் கொண்டிருந்தது. நேரம் ராத்திரி பதினோரு மணி.

    தாதர் சாராபாய் ஹாஸ்பிட்டலின் தலைமை டாக்டர் அத்வாலே ‘இந்த மழையில் வீட்டுக்குப் புறப்பட்டு போக முடியுமா?’ என்று ஜன்னல் வழியே பெய்யும் மழையைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார். பாக்கெட் செல்போன் சிணுங்கியது. எடுத்து டிஸ்ப்ளேயில் பார்த்தார்.

    அவருடைய மனைவி சுஷ்மா.

    என்ன...?

    புறப்பட்டாச்சா...?

    இன்னும் இல்லை... மழையோட வேகம் இன்னும் அப்படியே இருக்கு...

    நடந்தா வீட்டுக்கு வரப்போறீங்க... கார்லதானே! மெதுவா ஓட்டிட்டு வந்துடுங்க...

    சுஷ்மா! நிலைமை புரியாமே பேசாதே...! மழையோட வேகத்தைப் பார்த்தா ஏதோ ஊழிக்காலம் மாதிரியிருக்கு. இந்த மழையில என்னால காரை ஓட்ட முடியாது. ட்ரைவர் இருந்தாலாவது பரவாயில்லை...

    மணி என்ன தெரியுங்களா... பதினொண்ணு

    நான் இல்லேன்னா சொன்னேன்...? மழை கொஞ்சம் விடட்டும். நான் புறப்பட்டுடறேன்...

    எனக்கு பங்களாவில் ஒண்டியாய் இருக்க பயமாயிருக்குங்க...

    சந்தோஷி மா காஸட்டை போட்டு பாட்டு கேட்டுகிட்டு இரு...! வந்துடறேன்... இல்லேன்னா வைஷ்ணவிதேவி ஸ்லோகம் சொல்லிகிட்டிரு...

    டொக்... டொக்...

    சுஷ்மா...! யாரோ கதவைத் தட்றாங்க... நான் உன்கிட்டே ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பேசறேன்... சொன்னவர் செல்போனை அணைத்து சர்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டபடி ‘எஸ்’ என்றார்.

    கதவைத் திறந்து கொண்டு நர்ஸ் க்ளோரி பதட்டமாய் உள்ளே வந்தாள்.

    டாக்டர்...

    என்ன சிஸ்டர்...?

    ஒரு எமர்ஜென்ஸி கேஸ்...

    ஆணா... பெண்ணா...?

    ஆண்...இளைஞன்...! ஸிவியர் பைக் ஆக்ஸிடெண்ட். ரத்தக்களறியா கொண்டு வந்திருக்காங்க...

    ட்யூட்டி டாக்டர் விநோத்குமாரை அட்டெண்ட் பண்ணச் சொல்லு...

    அவர் இன்னிக்கு லீவு டாக்டர்...

    ஓ.கே...! நீ போ... வர்றேன்... அத்வாலே சொல்லிவிட்டு நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுந்தார். ஜன்னலுக்கு வெளியே மழை முரட்டுத்தனமாய் பூமியோடு முட்டி மோதிக் கொண்டிருந்தது.

    அறைக்கதவைச் சாத்திக் கொண்டு வேகமாய் காஷுவாலிடி அறையை நோக்கிப் போனார். அறைக்கு வெளியே அழுகையோடு நின்றிருந்த அந்த வயதான பெண்மணியும் பெரியவரும் ஓடிவந்து டாக்டரின் கால்களில் விழுந்தார்கள். ஹிந்தியிலும் உருதுவிலும் மாறி மாறி கதறித் தீர்த்தார்கள்.

    டாக்டர்...! இவன் எங்களுக்கு ஒரே பையன். அவனோட உயிரை எங்களுக்கு காப்பாத்திக் கொடுங்க டாக்டர். பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர்... அவன் எங்களுக்கு இல்லேன்னா இதே ஹாஸ்பிட்டல்ல நாங்க தீக்குளிச்சு செத்துப் போயிடுவோம் டாக்டர்...!

    உஸ்... என்றார் அத்வாலே. இருவரின் அழுகையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    ஆக்ஸிடெண்ட் எங்கே நடந்தது...?

    நேதாஜி ரோட்ல டாக்டர்...

    போலீஸுக்கு சொல்லியாச்சா...?

    சொல்லியாச்சு டாக்டர்... அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்ஸ்பெக்டர் ஒருவர் வராந்தாவில் வேக நடையில் வந்து அத்வாலேயை நெருங்கினார். ஆங்கிலத்தில் கேட்டார்.

    டாக்டர்...! பேஷண்ட்டோட நிலைமை இப்போது எப்படி இருக்கிறது...?

    நான் இன்னமும் பேஷண்ட்டையே பார்க்கவில்லை.

    டாக்டர்! அந்த இளைஞன் உயிர் பிழைப்பானா மாட்டானா என்பது உடனடியாகத் தெரிந்தால் பரவாயில்லை. உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லையென்றால் அவனிடம் வாக்கு மூலமாவது வாங்க வேண்டும்.

    கொஞ்சம் வெளியே காத்திருங்கள். இளைஞனை சோதித்துப் பார்த்துவிட்டு எந்த நிலைமையில் அவன் இருக்கிறான் என்பதைச் சொல்லிவிடுகிறேன்...

    அத்வாலே காஷுவாலிடி அறையின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனார்.

    அறையின் நடுவேயிருந்த மேஜையின் மேல் அந்த இளைஞன் ரத்த வெள்ளத்தில் மல்லாந்து கிடந்தான். நர்ஸ் க்ளோரி முதலுதவி சிகிச்கைக்குத் தேவையான உபகரணங்களை செல்ஃபினின்றும் எடுத்து மேஜையோரமாய் வைத்துக் கொண்டிருந்தாள்.

    க்ளோரி...

    டாக்டர்...

    பேஷண்ட்டோட கண்டிஷன் எப்படியிருக்கு ?

    ஸீம்ஸ் டு பி சீரியஸ் டாக்டர். ப்ளட் லாஸ் எக்கச்சக்கம்... பேண்ட் சர்ட் எல்லாமே ரத்தத்துல ஊறிப்போயிடுச்சி.

    மொதல்ல ட்ரஸ்ஸை ரிமூவ் பண்ணு...

    அத்வாலே சொல்லிக்கொண்டே கைகளுக்கு ஸ்கின் க்ளவுஸை மாட்டிக் கொண்டு மேஜையின் மேல் இருந்த இளைஞனை நெருங்கினார்.

    பேஷண்ட்டோட பேர் என்ன...?

    நவந்தர்...

    ப்ளட் லாஸ் பயங்கரமாயிருக்கு... ஆள் உயிரோடு இருக்கமாட்டான் போலிருக்கே...? அத்வாலே சொன்ன விநாடி-

    ஸாரி... டாக்டர்...! நான் உயிரோடுதான் இருக்கேன்... சொல்லிக்கொண்டே அந்த இளைஞன் ‘திடும்’ என்று எழுந்து உட்கார்ந்தான்.

    அத்வாலேயும் நர்ஸ் க்ளோரியும் திடுக்கிட்டுப் போய் பின்வாங்க, அவன் ரத்தக்கறை படிந்த கைகளால் தலையைக் கோதிக்கொண்டு சிரித்தான். ஹிந்தி பேசினான்.

    டாக்டர்...! இந்த ஹாஸ்பிட்டல்ல எனக்கு ஒரு அரைமணி நேர வேலையிருக்கு... அந்த வேலை முடிஞ்சதும் நான் போயிடுவேன்...

    அத்வாலே அவனைக் கோபமாய் பார்த்தபடி பதட்டப்பட்டார். ஏய்... யார்... நீ...? எதுக்காக... இ... இ... இப்படி பேஷண்ட்னு பொய் சொல்லி...! உன்னை... இப்பவே... யூ... ராஸ்கல்... போலீஸ்ல...

    செல்போனை

    Enjoying the preview?
    Page 1 of 1