Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஆற்றோட்டத்துப் பூக்கள்
ஆற்றோட்டத்துப் பூக்கள்
ஆற்றோட்டத்துப் பூக்கள்
Ebook232 pages1 hour

ஆற்றோட்டத்துப் பூக்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஜானு, சமையல்காரர்களுக்கு இன்னும் கொஞ்சம் கல்கண்டும், முந்திரியும் வேணுமாம். எடுத்துக் கொடுத்திட்டு, லட்டு சரியா பிடிக்கறாங்களான்னு ஒரு பார்வை பார்த்திட்டு வா"-கட்டளை.
 "இதோ போறேம்மா. ஜாங்கிரி எண்ணி எடுத்து வைச்சிட்டேன். லட்டு பிடிக்கறதைப் பார்க்கிறேன்."
 "ஜானகி சொம்பில் காபி கொண்டா-அப்பா வந்தாச்சு" - கூப்பாடு.
 "இந்தாங்கப்பா காபி. உங்களுக்குக் காபி குடிச்சதுமே வெற்றிலை போட்டுக்கணுமே. இதோ வெற்றிலை சீவல்."
 "ஜானகி, உன்னை எங்கேயெல்லாம் தேடறது? கடைசியில் நீ இங்கே இருக்கே. ராத்திரி சீட்டுக் கச்சேரிக்கு என் நண்பர்கள் வர்றாங்க. உங்கப்பாவுக்குத் தெரியாம காபியும், நொறுக்குத் தீனியும் நீதான் ஏற்பாடு செய்யணும்"-நைசான மிரட்டல்.
 "எனக்கு தெரியாதா மாமா? நீங்க கவலையேபடாதீங்க. நேத்தே எதிர் வீட்டில் சொல்லி, மாடியறையை ஒழிச்சு சுத்தம் பண்ணிட்டேன். நீங்க முதலில் அங்கே போய் ஆரம்பிங்க. பத்தே நிமிடத்தில் பெரிய பிளாஸ்கில் காபியும், சம்படம் நிறைய உருளைக் கிழங்கு வறுவல், கதம்ப பகோடா, மிக்சர் வந்து சேர்ந்திடும். ஜமாய்ங்க."
 "அடியே ஜானகி... கல்யாண பொண்ணுக்கு இன்னும் புது மருதாணி இட்டு விடாம இருக்கியே... இப்பவே மணி 11 ஆகிட்டுது. இன்னும் நேரமானால் கையில் அழகா பிடிக்காதே... என்னதான் வேலை செய்யறே நீ? மசமசன்னு நிக்காம, சீக்கிரமா இதைப் பாரு முதலில்" -சலிப்பான உத்தரவு.
 "மருதாணி அரைச்சிட்டேன் பாட்டி. பத்தே நிமிடத்தில் வைச்சிடறேன்."
 "ஆமா, மருதாணிக்குப் போயிட்டே. பொண்ணு காலையில் தலைக்குக் குளிச்சது இன்னும் காயவே இல்லை. சிக்கு சிக்கா தொங்குது. அதை எப்ப சிக்கு எடுத்து, வாரி ஒழுங்கு செய்யறது? காலையில் நாலுமணிக்கு எழுந்தாத்தான் எல்லாம் முடியும். அலங்காரம் எப்ப செய்து முடிக்கறது?"-கிண்டலும், கேலியும் கலந்து பரிகசிப்பு.
 "மருதாணி வைக்கறதுக்கு முன்னே, தலைவாரி சிக்கெடுத்திடறேன் சித்தி. பத்து நிமிட வேலைதானே? காலையில் அலங்காரம் செய்ய, பக்கத்துத் தெரு எஸ்தரக்கா வராங்க. அவங்க அலங்காரத்தை அடிச்சுக்க இந்த ஊரிலேயே ஆள் கிடையாது. பாருங்களேன்."
 "ஏண்டி ஜானகி. காலையில் கல்யாணம் நடக்கப்போற வீடு மாதிரியா இருக்கு? இரண்டு இழை அரிசி கோலத்தையோ, செங்காலி கோட்டையோ காணலியே... இந்த வீட்டில் பொம்பளைங்க என்னடி குடித்தனம் பண்றீங்க"-அதிகாரம்.
 "அரிசி அரைச்சிட்டேன் அத்தை. இன்னும் பத்தே நிமிடத்திலே வீடு முழுசும் பளபளன்னு கோலம் போட நானாச்சு. ஊரிலிருந்து வந்தது அலுப்பா இருக்கும். உங்களுக்கு அறையில் 'பேனு'க்கு கீழே படுக்கை போட்டிருக்கேன். நீங்க படுங்க..."
 "ஜானு... எங்கேடி தொலைஞ்சு போயிட்டே. பிள்ளை வீட்டுக்காரங்களை நல்லா கவனிக்கணும். தெரியுமா? மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒரு சின்ன முணுமுணுப்பும் வரக்கூடாது. அப்படி அவங்களுக்கு ஏதாவது மனசு சங்கடம்னு தெரியவந்தது, உன்னைத் தொலைச்சிடுவேன்..."-சொக்கலிங்கம், வாயில் வெற்றிலையுடன் உறுமினார்.
 "ஆகட்டும்ப்பா " என்று தலையசைத்த ஜானகி, வேகமாக மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்த வீட்டிற்கு ஓடினாள்.
 திருமண வீட்டில், மாப்பிள்ளை வீட்டாரைக் கவனிப்பது போல துன்பமான காரியம் எதுவும் இல்லை. தன் வீட்டில் குடிக்க பச்சைத் தண்ணீர்கூட இல்லாதவன், பெண் வீட்டில் கை கழுவ பன்னீர் கேட்பான்.
 அதுவும், வந்திருக்கும் மாப்பிள்ளை பக்கத்து ஊர் மைனராயிற்றே. பந்தாவுக்கும், அலட்டலுக்கும் கேட்க வேண்டியதில்லை. அத்தனைப் பேரையும் தனி ஆளாக நின்று சமாளித்து, முகம் கோணாமல் கவனித்தாள்வந்திருந்த வம்பு பெண்களில் சிலர், அவளை ரமாவுக்கு அக்கா என்று தெரிந்துகொண்டார்கள். அவளுக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்கிற ஆராய்ச்சியில் பேச்சை வளர்த்தனர். அதெல்லாம் காதில் விழாதது மாதிரி, ஜானகி மெதுவாக அங்கிருந்து நழுவி வீட்டிற்குச் சென்றாள்.
 எல்லா வேலையும் முடிந்து படுக்கையில் விழுந்தபோது, நேரம் நள்ளிரவையும் தாண்டிவிட்டது. விழா நாளான இன்றுதான் இப்படி என்பதல்ல.
 அந்த வீட்டில் எப்போதும், எந்த நொடியும், யாருக்காவது ஜானகி தேவைப்படுவாள். 'தொணதொண'வென எல்லோரும் தனக்குத் தொல்லை கொடுத்தாலும், ஜானகி முகம் சுளிப்பதில்லை. எந்த நேரமும் வேலை செய்துகொண்டே இருப்பது ஒருவகையில் வசதியாகக்கூட இருந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223160854
ஆற்றோட்டத்துப் பூக்கள்

Read more from Megala Chitravel

Related to ஆற்றோட்டத்துப் பூக்கள்

Related ebooks

Reviews for ஆற்றோட்டத்துப் பூக்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஆற்றோட்டத்துப் பூக்கள் - Megala Chitravel

    1

    மேகச் செடியில் பூத்திருக்கும் நிலவு ரோஜா மீது முதலில் அமர்ந்து தேனெடுக்க நட்சத்திரப் பட்டாம்பூச்சிகள் போட்டியிட்டு ஓடிவரும் முன் மாலைப் பொழுது.

    அந்த அழகான மாலைப் பொழுதை மேலும் அழகாக்க, அலங்கார ரதங்களாக பெண்கள் கோயிலை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆகக் கூட்டம் அதிகமாயிற்றே தவிர குறைந்தபாட்டைக் காணோம்.

    இரண்டு மணி நேரமாக வெளியே வராமல் கோயிலுக்குள்ளேயே இருக்கும் அம்மாவின் மீது அஜயனுக்கு ஆத்திரமாக வந்தது.

    ‘இதுக்குதான் நான் சொன்னேன். நீ டிரைவரை அழைச்சுக்கிட்டுப் போ. எனக்கு வேலை இருக்குன்னு. கேட்டாத்தானே? விருந்து ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சிடும்; அங்கே குணாளன் வருவார். நாளைக்குப் பேசப்போறதை இப்பவே பேசிடுவேன். அந்த ஆர்டர் கை நழுவிப் போகாது. இதென்ன துன்பம்...’

    எரிச்சலுடன் கதவைத் திறந்துகொண்டு காரிலிருந்து இறங்கினான். கொஞ்ச நேரம் அங்கு நடமாடும் பெண்களைப் பார்த்தான். எந்தவிதமான சுவாரசியமும் வரவில்லை.

    ‘எவளாவது அழகா இருக்காளா பாரு. முகத்துக்கு ஒருபடி பவுடரை அப்பி, மையை இழுத்து, வீட்டில இருக்கிற நகையெல்லாம் வாரி போட்டுக்க வேண்டியது. கழுத்து எலும்பு முறியற மாதிரி பூவை சுமந்துகிட்டு அசைய வேண்டியது. துன்பமடா சாமி. இதுக்கு சென்ட் வேற... எவ முகத்திலாவது பக்தி தெரியுதா பாரு.

    பாதிபேரு திருமணம் ஆகணும்னு வேண்டிக்கத்தான் வருவாளுங்க. மீதியில் பாதி, காதலனைச் சந்திக்கக் கோயிலைச் சாக்கு வைக்கிறது. என்ன பொம்பளைங்கப்பா.

    பொம்பளைன்னா எப்படி இருக்கணும்?

    மாநிறமா, நிகுதிகுன்னு நல்லா உயரமா இருக்கணும். புத்திசாலித்தனம் கண்ணில் தெறிக்கணும். யாரையும் லட்சியம் செய்யாத பேராண்மைமிக்க நடவடிக்கை இருக்கணும். விழி பால் தொடும்போதே, உடலில் ஒரு சந்தன மணம் மனதை உயிர்ப்பிக்கணும்.

    நடந்தா நிலத்துக்கு வலிக்கக்கூடாது. பேசினால் காற்றுக்குக்கூட கேட்கக்கூடாது. ஆனால், அவசியம் வரும் போது ராணுவ தளபதிபோல வாயாட மட்டுமல்ல கைபலமும் காட்டத் தயாராக இருக்க வேண்டும். எங்கே, எந்தச் சூழ்நிலையில் அவள் இருந்தாலும் தனியாகத் தெரிய வேண்டும்.

    மொத்தத்தில் வானத்திலிருக்கிற நிலவு, பூமிக்கு இரங்கி வந்த மாதிரி இருக்கணும். அவ்வளவுதான். இந்தக் காலத்தில் எவ அப்படி இருக்கா?

    யோசனையை மேலும் நீடிக்க முடியாமல். காலடியில் பூப்பந்து போல எதுவோ மோதி விழுவது தெரிந்தது. அவன் பதறிப் பாய்ந்து குழந்தையைத் தூக்க குனிந்த அதே நேரத்தில், இன்னும் இரண்டு கரங்களும் நீண்டன.

    குழந்தையை அந்தக் கரங்களுக்கே விட்டுக் கொடுத்துவிட்டு, அஜயன் நகர்ந்து நிமிர்ந்தான். சட்டெனக் கண்கள் இமைக்க மறந்தன.

    ‘அட என்னடா இது. இவ்வளவு நேரமும் இலக்கிய வர்ணனையை மனதுக்குள் ஓடவிட்ட அந்த வானத்து நிலா, இப்படி நிலத்தில் விழுந்து நிமிர்ந்து பார்த்துக்கிட்டிருக்கு.’

    அடுத்த நினைவு வருவதற்குள், மன்னிச்சிடுங்க, குழந்தை கவனிக்கலை. அவள் குரல் குழைந்தது.

    பரவாயில்லை, குழந்தைக்கு அடிபட்டிருக்கான்னு முதலில் பாருங்க.

    நல்ல வேளை அடி எதும் படலை. நான் வரேங்க. ஏண்டி அனு, உங்கம்மா கூட்டத்தில் மாட்டிக்கிட்டாங்க. பாரு கொஞ்சம்னா இப்படித்தான் ஓடிப்போய் விழறதா? கையைப் பிடிச்சுக்கோ, இல்லைன்னா உன்னைப் பார்த்துக்க என்னால் முடியாது.

    அஜயன் பரபரத்தான். ‘ஐயோ கையில் பூக்கூடையோட நிலா நடக்குதே... ஏதாவது பேசி நிறுத்தணுமே. வராதே... - இப்பபார்த்து ஒரே ஒரு வார்த்தைகூட வராதே.’

    ‘ஓ’வென கத்த வேண்டும் போலிருந்தது. அதற்குள் அந்தப் பெண், கூட்டத்தின் உள்ளே போய்விட்டாள். தலையிலிருந்த மஞ்சள் ரோஜா மட்டும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

    அஜய், என்னப்பா பார்க்கிறே? மீனாட்சி மகனைக் கூப்பிட்டபடி கார் கதவைத் திறந்தாள்.

    அட என்னம்மா நீங்க? இந்தப் பக்கமா வந்திட்டீங்களா? நான் அங்கே தேடிக்கிட்டிருக்கேன். நல்லவேளை சட்டெனச் சமாளித்துப் பேசவும் வந்தது. முகத்தில் வழிந்த அசடை, அம்மா பார்க்காமல் மறைத்துக் கொள்ளவும் முடிந்தது.

    அம்மாவை வீட்டில் இறக்கிவிட்டு, விருந்து நடக்கும் இடத்துக்குப் பறந்தான்...

    என்ன அஜய். இவ்வளவு நேரமாகி வந்திருக்கே? நீ இல்லாமல் விருந்து களை கட்டவில்லை. நண்பர்களின் கலகலப்பான வரவேற்புக்கு, நன்றியாகப் புன்னகைத்தான். விருந்து நடக்கும் கூடத்துக்குள் நுழைந்தான்.

    கைகளில் உணவுத் தட்டுடன் ஆண்களும், பெண்களும் மூலைக்கு மூலை நின்றிருந்தார்கள். மெல்லிய இசை யாராலும் கேட்கப்படாமலே வழிந்துகொண்டிருந்தது. எல்லோரிடமும் மரியாதைக்காக ஓரிரு வார்த்தைகள் பேசினான். குணாளன் காத்திருந்தார். அவரோடு பேசி, தன் வேலையை முடித்துக் கொண்டான். மனதில் ஒரு மகிழ்ச்சி படர்ந்தது.

    கையில் தட்டுடன் மூலையிலிருந்த சோபாவில் உடகார்ந்தான். அங்கிருந்த பெண்களைக் கண்களால் அளந்தான்.

    ‘சே, இவளுங்களைப் பார்ப்பதே ஒரு துன்பம். கோயிலில் பார்த்தேனே அவளைப்போல் ஒருத்திகூட இல்லையே... ஒன்று சிவப்பாக போண்டாபோல குண்டாக இருக்கிறார்கள் இல்லையென்றால் ஓமப்பொடிபோல குச்சியாக இருக்கிறார்கள்.’

    காலிலிருந்து தலை வரை செயற்கைதான்.

    ‘பார்த்துக்கொள்’ என்று காட்ட திறந்து போட்ட மார்பும், தொப்புளும், அப்பிக் கொண்டிருக்கும் உதட்டுச் சாயமும், எந்த ஆணையும் மயக்காது. பதிலாக முகம் சுளித்து அருவருக்க வைக்கும் என்பதைத் தெரியாதவர்கள். எதையும் மூடமூடத்தான் அறியும் ஆர்வமும் அதிகமாகும் என்கிற ரொம்ப சாதாரணமான மன இயல்பு புரியாத முட்டாள் பெண்கள்.

    என்ன அஜய். இங்கே வந்து உட்கார்ந்துட்டே? வந்திருக்கிற வர்ணப் பூச்சிகளைப் பார்த்து ரசிக்கிறாயா? கேலியுடன் கேட்டபடி நண்பன் அமர்நாத் அருகில் உட்கார்ந்தான்.

    ஆமா... எல்லாம் வண்ண மயிலுங்க. நான்தான் பார்க்க முடியாம திண்டாடிக்கிட்டிருக்கேன். நீ வேற. தொட்டா பவுடர் ஒட்டிக்கற ஒப்பனைப் பொம்மைங்க. கொஞ்ச நேரம் முன்னால் கோயிலில் ஒரு நிலா பார்த்தேன். பொண்ணுன்னா அது பொண்ணு... இதோ இப்பகூட கண்ணுல அவதான் மிதக்கறா.

    நிலான்னு சொல்ற. எந்த திசை நிலான்னு தெரிஞ்சுக்கிட்டியா?

    அஜயன் உதட்டைப் பிதுக்கினான். முகம் மட்டும்தான் தெரியும். இந்த ஊரைச் சேர்ந்தவளாத்தானே இருப்பா? எப்படியும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போகும்? அப்ப பேசினாப் போகுது.

    உன் நம்பிக்கை பலிக்கட்டும். அப்பறம் அஜய், என் பையன் விசயமா உன்கிட்டே பேசணும்.

    அவர்கள் மேலே பேசுமுன்னே நாலைந்து பேர் வந்தார்கள். பேச்சின் திசை பல வழியிலும் போகத் தொடங்கியது. பெண்கள். நாகரீகம் என்று சுற்றியது.

    அஜயனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ‘இளைஞர்கள் எல்லோரின் எண்ணமும் நிச்சயம் ஒன்றுதான். எத்தனைதான் நாகரீகத்தை ரசித்தாலும், வரும் வாழ்க்கைத் துணைவி மட்டும் தனக்கு அடங்கினவளாக- நாகரீகத்தின் சாயல் அதிகம் விழாதவளாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.’

    விடைபெறும்போது அமர்நாத் கேலி செய்தான். ரதி, ரம்பைகளாக நினைத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறவளுங்களை ஒதுக்கிட்டே. அந்த நிலாவையாவது காதலியேன். வயசு ஏறிக்கிட்டே போகுது இல்லே?

    அட நீ வேறே. பார்த்ததும் கவர்ந்தது, அவ்வளவுதான். அதற்காகக் காதலிச்சிட முடியுமா? என்னுடைய எதிர்பார்ப்புகளே தனிடா ராஜா. நான் கிளம்பறேன். அம்மா தூங்காமக் காத்திருப்பாங்க.

    அமர்நாத்திடம் எதையோ பேசிச் சமாளித்துவிட்டாலும், அஜயனுக்கு அவள் நினைவு அடிக்கடி வர ஆரம்பித்தது. அவனுக்குச் சிரிப்பாக வந்தது.

    ‘அட தொந்தரவுக்காரப் பெண்ணே. நீ யாரு, எங்கே இருக்கே? இப்படி என்னை நொச்சு பண்றியே... உன் நினைவிலாவது நான் இருக்கேனா?

    நீ பாட்டுக்கு வாய்க்கு ருசியா சாப்பிட்டுக்கிட்டு, நிம்மதியா தூங்கிட்டு இருப்பே. இப்பதான் ஆயிரம் டி.வி. வந்திருக்கே. ஜாலியா டி.வி. பார்ப்பே. உனக்கு வியாபாரத் தொல்லை நிச்சயம் இருக்காது. என்னைப்போல, இருக்கற பணத்தைக் குட்டிபோட வைக்க இப்படி நாயா அலையமாட்டே.

    நிலைமை இப்படி இருக்கும்போது எதுக்காக என்னை மட்டும் தொல்லை பண்றே? விட்டிடு தாயே. நான் பாவப்பட்ட கன்னிப் பையன். இதுவரை யாருமே தொல்லை செய்யாத என்னை ஏன் இப்படி இம்சிக்கறே? ஆண் பாவம் பொல்லாதது. சொல்லிட்டேன்.’

    எவளை மகிழ்ச்சியாக இருப்பாள் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தானோ அவள்- அந்த பூமிக்கு வந்த நிலா- ஜானகி, அப்பா சொக்கலிங்கத்திடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தது.

    இந்தா ஜானகி. மாப்பிள்ளை ரொம்ப அவசரப்படறார். அதனால அடுத்த வாரத்திலேயே திருமண நாள் குறிச்சிட்டு வந்துட்டேன். இந்த வினாடியிலிருந்து வேலைகள் ஆரம்பிச்சிடணும், புரியுதா?

    அவர் அப்படிச் சொன்னதுமே, உள்ளே இருந்து பாட்டி வெளியே வந்தாள். ஏண்டா சொக்கலிங்கம். நீ செய்யறது ஏதாவது உனக்கே நல்லாயிருக்கா? பெரியவ ஜானகி இருக்கும் போது, அவளைவிட ஐந்து வயசு சின்னவ ரமாவுக்கு இப்பவே என்ன அவசரம்? எனக்கு அந்தப் பையனையும், அவன்கூட வந்த கூட்டத்தையும் பிடிக்கலை. அவன் ஜமீன் குடும்ப மைனர்னா அவனோட... எதுக்கும் இன்னும் தீர ஆலோசித்து செய்யுடா?

    சொக்கலிங்கம், அவளை விசித்திரமாகப் பார்த்தார்.

    இதோ பாரும்மா, நீ பேசுறதுதான் எதுவும் எனக்குப் பிடிக்கலை. ஜானகி தரித்திர முண்டம். ரமாவுது ராஜாங்கம் ஆளுகிற ஜாதகம். அதோட, இது வலிய வந்த சம்மந்தம். இதோ பார்த்தியா. இருபதினாயிரம் ரூபாய். மாப்பிள்ளை என்கிட்டே கொடுத்து, ரமாவுக்கு வேண்டியதை வாங்கிக்கச் சொல்லியிருக்கார். நீ கொஞ்சம் வாயைத் திறந்து பேசாம இருந்தியானா, எனக்கு உபகாரம் செய்தவளாவே... போ உள்ளே. கோமதி, அடியே கோமதி. உள்ளே என்னடி பண்றே? வந்து தொலையேண்டி.

    கோமதி, மெதுவாக எட்டிப்பார்த்தாள். ரமா, முகமெல்லாம் பூரிப்பாக உடன் வந்தாள். அப்போதே, தான் ஜமீன்தாரிணி ஆனது போல ஒரு ஜிலு ஜிலுப்பு. பணம் கோமதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயும், மகளுமாக உடனே கடைத் தெருவுக்குப் புறப்பட்டார்கள்.

    சின்னவள் சுகந்தா. தட்டச்சு நிலையத்திலிருந்து வந்தவள், இந்தப் பரபரப்பைக் கண்டு மலைத்தாள். சொக்கலிங்கம் அவளிடம், இன்னும் ஒரு வாரத்துக்கு நீ கிளாசுக்குப் போகவேணாம். ஜானகி கூட கூடமாட உதவி செய் என்று ஆணையிட்டார்.

    தூணோடு தூணாக நின்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஜானகியை, ஒரு முறை முறைத்தார்.

    இந்தாடி ஜானகி, என்னடா நமக்கு ஆகாம ரமாவுக்கு திருமணம் ஆகுதேன்னு வயிறு எரிஞ்சிடாதே. உன்னை நம்பிதான் ஒரே வாரத்தில் தேதி குறிச்சிட்டு வந்திருக்கேன். இப்பவே போய் சமையல்கார ராமசாமியை வரச் சொல்லிட்டு வா.

    ஆகட்டும்ப்பா. ஜானகி, கொளுத்தும் வெய்யிலில் சமையல்காரர் வீட்டுக்கு நடந்தாள்.

    2

    "ஜானு, சமையல்காரர்களுக்கு இன்னும் கொஞ்சம் கல்கண்டும், முந்திரியும் வேணுமாம். எடுத்துக் கொடுத்திட்டு, லட்டு சரியா பிடிக்கறாங்களான்னு ஒரு பார்வை பார்த்திட்டு வா"-கட்டளை.

    இதோ போறேம்மா. ஜாங்கிரி எண்ணி எடுத்து வைச்சிட்டேன். லட்டு பிடிக்கறதைப் பார்க்கிறேன்.

    ஜானகி சொம்பில் காபி கொண்டா-அப்பா வந்தாச்சு - கூப்பாடு.

    இந்தாங்கப்பா காபி. உங்களுக்குக் காபி குடிச்சதுமே வெற்றிலை போட்டுக்கணுமே. இதோ வெற்றிலை சீவல்.

    ஜானகி, உன்னை எங்கேயெல்லாம் தேடறது? கடைசியில் நீ இங்கே இருக்கே. ராத்திரி சீட்டுக் கச்சேரிக்கு என் நண்பர்கள் வர்றாங்க. உங்கப்பாவுக்குத் தெரியாம காபியும், நொறுக்குத் தீனியும் நீதான் ஏற்பாடு செய்யணும்-நைசான மிரட்டல்.

    எனக்கு தெரியாதா மாமா? நீங்க கவலையேபடாதீங்க. நேத்தே எதிர் வீட்டில் சொல்லி, மாடியறையை ஒழிச்சு சுத்தம் பண்ணிட்டேன். நீங்க முதலில் அங்கே போய் ஆரம்பிங்க. பத்தே நிமிடத்தில் பெரிய பிளாஸ்கில் காபியும், சம்படம் நிறைய உருளைக் கிழங்கு வறுவல், கதம்ப பகோடா, மிக்சர் வந்து சேர்ந்திடும். ஜமாய்ங்க.

    அடியே ஜானகி... கல்யாண பொண்ணுக்கு இன்னும் புது மருதாணி இட்டு விடாம இருக்கியே... இப்பவே மணி 11 ஆகிட்டுது. இன்னும் நேரமானால் கையில் அழகா பிடிக்காதே... என்னதான் வேலை செய்யறே நீ? மசமசன்னு நிக்காம, சீக்கிரமா இதைப் பாரு முதலில் -சலிப்பான உத்தரவு.

    மருதாணி அரைச்சிட்டேன் பாட்டி. பத்தே நிமிடத்தில் வைச்சிடறேன்.

    ஆமா, மருதாணிக்குப் போயிட்டே. பொண்ணு காலையில் தலைக்குக் குளிச்சது இன்னும் காயவே இல்லை. சிக்கு சிக்கா தொங்குது. அதை எப்ப சிக்கு எடுத்து, வாரி ஒழுங்கு செய்யறது? காலையில் நாலு மணிக்கு எழுந்தாத்தான் எல்லாம் முடியும். அலங்காரம் எப்ப செய்து முடிக்கறது?-கிண்டலும், கேலியும் கலந்து பரிகசிப்பு.

    மருதாணி வைக்கறதுக்கு முன்னே, தலைவாரி சிக்கெடுத்திடறேன் சித்தி. பத்து நிமிட வேலைதானே? காலையில் அலங்காரம் செய்ய, பக்கத்துத் தெரு எஸ்தரக்கா வராங்க. அவங்க அலங்காரத்தை அடிச்சுக்க இந்த ஊரிலேயே ஆள் கிடையாது. பாருங்களேன்.

    ஏண்டி ஜானகி. காலையில் கல்யாணம் நடக்கப்போற வீடு மாதிரியா இருக்கு? இரண்டு இழை அரிசி கோலத்தையோ, செங்காலி கோட்டையோ காணலியே... இந்த வீட்டில் பொம்பளைங்க என்னடி குடித்தனம் பண்றீங்க-அதிகாரம்.

    அரிசி அரைச்சிட்டேன் அத்தை. இன்னும் பத்தே நிமிடத்திலே வீடு முழுசும் பளபளன்னு கோலம் போட நானாச்சு. ஊரிலிருந்து வந்தது அலுப்பா இருக்கும். உங்களுக்கு அறையில் ‘பேனு’க்கு கீழே படுக்கை போட்டிருக்கேன். நீங்க படுங்க...

    "ஜானு... எங்கேடி தொலைஞ்சு போயிட்டே. பிள்ளை வீட்டுக்காரங்களை நல்லா கவனிக்கணும். தெரியுமா? மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒரு சின்ன முணுமுணுப்பும்

    Enjoying the preview?
    Page 1 of 1