Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஜரிகை வேட்டி
ஜரிகை வேட்டி
ஜரிகை வேட்டி
Ebook95 pages59 minutes

ஜரிகை வேட்டி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தரகர் கொடுத்த ஜாதகத்தில் பத்துப் பொருத்தமும் அம்சமாய் பொருந்தியிருந்தது.
 அந்தப் பையனுக்கு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவி. ஐந்து இலக்கச் சம்பளம். கண்யமான குடும்பம்!
 "ரொம்ப எதிர்பார்ப்பாங்களா தரகரே?"
 "இல்லைம்மா! பேராசையெல்லாம் கிடையாது பையனுக்கு அப்பா,அம்மா இல்லை! அக்காவும், அத்தானும்தான்! அவங்க கூடத்தான் இருக்கான்! உங்க பொண்ணுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது!"
 "சரி! எப்ப வருவாங்க இங்கே?"
 "பொண்ணைப் பாக்கத்தானே? இந்த வெள்ளிக்கிழமை நல்ல நாள். வரச் சொல்லட்டுமா?"
 "சரி! சொல்லிடுங்க!"
 இதுவரை மெளனமாக இருந்த அப்பா, நிமிர்ந்தார்.
 "அவசரப்படாதே! உமாவை ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லு! வாழப் போறவ அவ!"
 "பொண்ணு பாக்க வர்றதுக்கு அவளை ஏன் கேக்கணும்?"
 "கண்டிப்பா கேக்கணும். வேலைக்குப் போற பொண்ணு லீவு பிரச்னை இருக்கலாம்! அவசரப்படாதே! தரகரே! ராத்திரி எட்டுமணிக்கு போன் பண்ணுங்க! சொல்றோம்!"
 அவர் போய்விட்டார்!
 அப்பா சமீபத்தில் வாலன்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கிக்கொண்டவர்.
 காரணம் ஹார்ட் அட்டாக்.
 முதல் அட்டாக் லேசாக இருந்தது. தப்பிவிட்டார்.

அதை அத்தனை பொருட்படுத்துதாமல் செயல்பட்டதன் விளைவு, இரண்டாவது அட்டாக் பலமாகவே அமைந்துவிட்டது! எமன் வாய் வரை போய் மீண்டு வரும்படி நேர்ந்துவிட்டது. கட்டாய ஓய்வு தேவை என டாக்டர்கள் கண்டிப்பாக சொல்லி விட்டதால், அலுவலகம் போக முடியாது என்ற நிலை வந்து விட்டது!
 அந்த நேரம் ஒரு வாலன்டரி ரிட்டையர்மெண்ட் வந்துவிட்டது அலுவலகத்தில்.
 எழுதிக்கொடுத்துவிட்டார்.
 மொத்தப் பணத்தில் வெளியில் இருந்த கடனை அடைத்துவிட்டு, மீதியை உமா கல்யாணத்துக்காக வங்கியில் போட்டுவிட்டார்!
 அவருக்கு ஒரு மகன் - கார்த்திக். மகள் உமா!
 கார்த்திக் கல்யாணம் முடிந்து ரெண்டு வருஷங்கள் ஆகிவிட்டன.
 அவன் மனைவி மேனகா குடும்பத்தில் ஒட்டுவதில்லை!
 வீட்டில் உள்ள யாரையும் அவளுக்குப் பிடிக்கவில்லை! எந்த நேரமும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவள் செயல்படுவது வேதனை! தன் கணவனுடன் தனிக்குடித்தனம் நடத்த அவளுக்கு ஆசை!
 அது பெரியவர்களுக்குத் தெரிய, கார்த்திக்கை அழைத்து 'தாராளமாக நீ தனியாகக் குடித்தனம் நடத்தலாம்' என்று பச்சைக் கொடிகாட்ட, கார்த்திக் அதை அறவே விரும்பவில்லை! விளைவு, பூசல்கள் அதிகமாகி, அமைதி குலையத்தொடங்கியது!
 அப்பாவின் மாரடைப்புக்கு மன உளைச்சலும் ஒரு முக்கியக் காரணம்! பிள்ளையைப் பிரிய விருப்பமில்லை! மேனகா செய்யும் குழப்பம்புரிந்தது!
 கல்யாண வயதில் உமா! அவருக்கு பீதி தட்டிவிட்டது!
 "நான் உயிருடன் இருக்கும் போதே, உமாவைக் கரை சேர்த்து விட வேண்டும்!"
 விளைவு, வரன் பார்க்கத் தொடங்கிவிட்டார்கார்த்திக் தனிக் குடித்தனத்தைத் தடுத்தாலும், பண விவகாரங்களில் மேனகாவை ஒட்டுமொத்தமாக எதிர்க்கமுடியவில்லை!
 தன் கைக்கு கணவனின் சம்பளம் வருவதில்லை என்பதால், வேண்டுமென்றே செலவுகளை இழுத்துவிட ஆரம்பித்தாள். கார்த்திக் தடுமாறினான்.
 அம்மாவுக்குப் புரிந்தது. அழைத்துச்சொல்லிவிட்டாள்.
 "உமா கல்யாணம் முடிஞ்சதும், நான் பொறுப்புலேருந்து விலகிக்கறேன்பா! அதுவரைக்கும் உன் பொண்டாட்டி கைக்கு ஆட்சி வராது!"
 இதனால் பிரச்னை பெரிதானது! இதுதான் அந்தக் குடும்பத்தின் சூழ்நிலை!
 மாலை கார்த்திக் ஆபீஸ் முடிந்து வந்ததும், மேனகா உள்ளே அழைத்து வந்து விட்டாள்.
 "உமாவைப் பெண் பார்க்க வர்றாங்க!"
 "அப்படியா? வெரிகுட்!"
 "ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்காம்!"
 "நல்லதுதானே! நான் அப்பாகிட்ட மற்ற விவரங்களைக் கேட்டுக்கறேன்!"
 "ஒரு நிமிஷம் இருங்க!"
 "என்ன?"
 "உங்கப்பா ரிட்டையர் ஆனப்புறம் வந்த மொத்தப் பணம் பேங்க்ல இருக்கு! அந்தப் பணத்துவ உமா கல்யாணம் நடக்கட்டும்! உங்க தலையில் கட்ட வேண்டாம். புரியுதா?"
 "என்ன பேசற நீற எங்கப்பா மானங்கெட்டவர் இல்லை! புரியுதா உனக்கு! தன் மகள் கல்யாணத்தைத் தானே நடத்தணும்னு நினைக்கறவர் அவர். நான் அவருக்கு பிள்ளை. உமா என் தங்கை! நான் செஞ்சாலும் தப்பில்லை! புரியுதா? எனக்கும் இந்தக் குடும்பத்துல பொறுப்பு உண்டு!"
 "நான் உங்களை நம்பி வாழ வந்திருக்கேன். என்னை வீதில விட்ராதீங்க!"என்னடீ பேசற நீ? குடும்பத்துக்காக செஞ்சா, நீ வீதில நிக்கறதா அர்த்தமா?"
 மேனகா அழத் தொடங்க, பிரச்னை பெரிசாகி, வெளியிலும் கேட்கத் தொடங்கியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 14, 2023
ISBN9798223652144
ஜரிகை வேட்டி

Read more from Devibala

Related to ஜரிகை வேட்டி

Related ebooks

Reviews for ஜரிகை வேட்டி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஜரிகை வேட்டி - Devibala

    1

    தரகர் கொடுத்த ஜாதகத்தில் பத்துப் பொருத்தமும் அம்சமாய் பொருந்தியிருந்தது.

    அந்தப் பையனுக்கு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவி. ஐந்து இலக்கச் சம்பளம். கண்யமான குடும்பம்!

    ரொம்ப எதிர்பார்ப்பாங்களா தரகரே?

    இல்லைம்மா! பேராசையெல்லாம் கிடையாது பையனுக்கு அப்பா,அம்மா இல்லை! அக்காவும், அத்தானும்தான்! அவங்க கூடத்தான் இருக்கான்! உங்க பொண்ணுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது!

    சரி! எப்ப வருவாங்க இங்கே?

    பொண்ணைப் பாக்கத்தானே? இந்த வெள்ளிக்கிழமை நல்ல நாள். வரச் சொல்லட்டுமா?

    சரி! சொல்லிடுங்க!

    இதுவரை மெளனமாக இருந்த அப்பா, நிமிர்ந்தார்.

    அவசரப்படாதே! உமாவை ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லு! வாழப் போறவ அவ!

    பொண்ணு பாக்க வர்றதுக்கு அவளை ஏன் கேக்கணும்?

    கண்டிப்பா கேக்கணும். வேலைக்குப் போற பொண்ணு லீவு பிரச்னை இருக்கலாம்! அவசரப்படாதே! தரகரே! ராத்திரி எட்டுமணிக்கு போன் பண்ணுங்க! சொல்றோம்!

    அவர் போய்விட்டார்!

    அப்பா சமீபத்தில் வாலன்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கிக்கொண்டவர்.

    காரணம் ஹார்ட் அட்டாக்.

    முதல் அட்டாக் லேசாக இருந்தது. தப்பிவிட்டார்.

    அதை அத்தனை பொருட்படுத்துதாமல் செயல்பட்டதன் விளைவு, இரண்டாவது அட்டாக் பலமாகவே அமைந்துவிட்டது! எமன் வாய் வரை போய் மீண்டு வரும்படி நேர்ந்துவிட்டது. கட்டாய ஓய்வு தேவை என டாக்டர்கள் கண்டிப்பாக சொல்லி விட்டதால், அலுவலகம் போக முடியாது என்ற நிலை வந்து விட்டது!

    அந்த நேரம் ஒரு வாலன்டரி ரிட்டையர்மெண்ட் வந்துவிட்டது அலுவலகத்தில்.

    எழுதிக்கொடுத்துவிட்டார்.

    மொத்தப் பணத்தில் வெளியில் இருந்த கடனை அடைத்துவிட்டு, மீதியை உமா கல்யாணத்துக்காக வங்கியில் போட்டுவிட்டார்!

    அவருக்கு ஒரு மகன் - கார்த்திக். மகள் உமா!

    கார்த்திக் கல்யாணம் முடிந்து ரெண்டு வருஷங்கள் ஆகிவிட்டன.

    அவன் மனைவி மேனகா குடும்பத்தில் ஒட்டுவதில்லை!

    வீட்டில் உள்ள யாரையும் அவளுக்குப் பிடிக்கவில்லை! எந்த நேரமும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவள் செயல்படுவது வேதனை! தன் கணவனுடன் தனிக்குடித்தனம் நடத்த அவளுக்கு ஆசை!

    அது பெரியவர்களுக்குத் தெரிய, கார்த்திக்கை அழைத்து ‘தாராளமாக நீ தனியாகக் குடித்தனம் நடத்தலாம்’ என்று பச்சைக் கொடிகாட்ட, கார்த்திக் அதை அறவே விரும்பவில்லை! விளைவு, பூசல்கள் அதிகமாகி, அமைதி குலையத்தொடங்கியது!

    அப்பாவின் மாரடைப்புக்கு மன உளைச்சலும் ஒரு முக்கியக் காரணம்! பிள்ளையைப் பிரிய விருப்பமில்லை! மேனகா செய்யும் குழப்பம்புரிந்தது!

    கல்யாண வயதில் உமா! அவருக்கு பீதி தட்டிவிட்டது!

    நான் உயிருடன் இருக்கும் போதே, உமாவைக் கரை சேர்த்து விட வேண்டும்!

    விளைவு, வரன் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

    கார்த்திக் தனிக் குடித்தனத்தைத் தடுத்தாலும், பண விவகாரங்களில் மேனகாவை ஒட்டுமொத்தமாக எதிர்க்கமுடியவில்லை!

    தன் கைக்கு கணவனின் சம்பளம் வருவதில்லை என்பதால், வேண்டுமென்றே செலவுகளை இழுத்துவிட ஆரம்பித்தாள். கார்த்திக் தடுமாறினான்.

    அம்மாவுக்குப் புரிந்தது. அழைத்துச்சொல்லிவிட்டாள்.

    உமா கல்யாணம் முடிஞ்சதும், நான் பொறுப்புலேருந்து விலகிக்கறேன்பா! அதுவரைக்கும் உன் பொண்டாட்டி கைக்கு ஆட்சி வராது!

    இதனால் பிரச்னை பெரிதானது! இதுதான் அந்தக் குடும்பத்தின் சூழ்நிலை!

    மாலை கார்த்திக் ஆபீஸ் முடிந்து வந்ததும், மேனகா உள்ளே அழைத்து வந்து விட்டாள்.

    உமாவைப் பெண் பார்க்க வர்றாங்க!

    அப்படியா? வெரிகுட்!

    ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்காம்!

    நல்லதுதானே! நான் அப்பாகிட்ட மற்ற விவரங்களைக் கேட்டுக்கறேன்!

    ஒரு நிமிஷம் இருங்க!

    என்ன?

    உங்கப்பா ரிட்டையர் ஆனப்புறம் வந்த மொத்தப் பணம் பேங்க்ல இருக்கு! அந்தப் பணத்துவ உமா கல்யாணம் நடக்கட்டும்! உங்க தலையில் கட்ட வேண்டாம். புரியுதா?

    என்ன பேசற நீற எங்கப்பா மானங்கெட்டவர் இல்லை! புரியுதா உனக்கு! தன் மகள் கல்யாணத்தைத் தானே நடத்தணும்னு நினைக்கறவர் அவர். நான் அவருக்கு பிள்ளை. உமா என் தங்கை! நான் செஞ்சாலும் தப்பில்லை! புரியுதா? எனக்கும் இந்தக் குடும்பத்துல பொறுப்பு உண்டு!

    நான் உங்களை நம்பி வாழ வந்திருக்கேன். என்னை வீதில விட்ராதீங்க!

    என்னடீ பேசற நீ? குடும்பத்துக்காக செஞ்சா, நீ வீதில நிக்கறதா அர்த்தமா?

    மேனகா அழத் தொடங்க, பிரச்னை பெரிசாகி, வெளியிலும் கேட்கத் தொடங்கியது.

    அப்பா காதில் விழுந்தது.

    அப்பா, அம்மாவை அழைத்தார்.

    என்ன பிரச்னை வனஜா?

    வழக்கம் போலதான். உமா கல்யாணத்துக்கு கார்த்திக் எதுவும் செஞ்சிடக் கூடாதுனு இப்பவே தடுக்கப் பாக்கறா!

    கார்த்திக் வெளியே வந்தான்.

    அப்பா சூடாகி விட்டார்.

    கார்த்திக் இங்கே வா

    என்னப்பா?

    உமாவைக் கரை சேர்க்க முழுப் பணமும் என்கிட்ட இருக்கு! யார் தயவும் எனக்குத் தேவையில்லை!

    அப்பா! நான் உங்களை எதுவுமே சொல்லலியே!

    "நீ எங்கிட்ட சொல்லலை! ஆனா உங்கிட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1