Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moolai Thanda Moolathanam
Moolai Thanda Moolathanam
Moolai Thanda Moolathanam
Ebook59 pages19 minutes

Moolai Thanda Moolathanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"மூளை தாண்டா மூலதனம்" என்ற தலைப்பிற்கு இணங்க கதாநாயகனான ஷ்யாம் சுந்தர் தன் மூளையை பயன்படுத்தி வங்கிக்கு எதிராக பணம் சம்பாதிக்கிறான். இவனுடைய சிஷ்யனான நல்ல முத்து இவனையே மிஞ்சுகிறான். இறுதியில் நடந்தது என்ன? ஷ்யாம் சுந்தரின் நிலைமை என்ன? வாசியுங்கள்...

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580100607837
Moolai Thanda Moolathanam

Read more from Devibala

Related to Moolai Thanda Moolathanam

Related ebooks

Reviews for Moolai Thanda Moolathanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moolai Thanda Moolathanam - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மூளை தாண்டா மூலதனம்

    Moolai Thanda Moolathanam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    என்னைப் பற்றி உங்களுக்கு யாரும் அறிமுகம் செய்து வைக்க மாட்டார்கள். அதனால் நானே அதைச் செய்து விடுகிறேன்!

    என் பெயர் ஷ்யாம் சுந்தர்!

    வயது முப்பத்தி நாலு!

    எனக்கு இருபத்தி எட்டில் திருமணமானது. இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. வயது நாலும் ஒன்றும்.

    என் மனைவிக்கு முப்பது வயது. இவளைப் பற்றிய விவரங்கள் பிறகு!

    எனக்கு என்ன தொழில், என்ன வருமானம் என்றெல்லாம் கேட்கப் போகிறீர்கள். அதுதான் இந்தக் கதை.

    "24 வயது வரை வேலை கிடைக்காமல் நாயாக அலைந்து, கடைசியாக ஒரு வங்கியில் சிலரது சிபாரிசின் பேரில் கொஞ்சம் லஞ்சமும் சேர, எனக்கொரு காஷியர் வேலை கிடைத்தது. எடுத்த எடுப்பில் ரெண்டாயிரத்துக்கு இருபது ரூபாய் குறைய சம்பளம். அதை வாங்கிக் கொண்டு, பஸ் ஸ்டாண்டில் சுடிதார்களைக் கண்டு, ஜொள்ளடித்து, தியேட்டரில் பாப்கான்கள் கொரித்து, இரவில் ஆபாச சொப்பனங்களில் லயித்து நானும் சராசரியாகக் காலம் கடத்தியவன்தான். அத்தோடு வாயை மூடிக் கொண்டிருக்கலாம்.

    விதி யாரை விட்டது.

    வேலை கிடைத்த நாலு வருடங்களில் கல்யாணம்... மேலும் நாலு வருடங்கள் குடும்ப வாழ்க்கை... ஒரு குழந்தை...

    என்னங்க! எல்லாரையும் போல வீடு, நகை நட்டு, கலர் டீவி இப்பிடியெல்லாம் நம்மால ஏன் வாழ முடியல?" என்னை படுகுழியில் தள்ள பங்கஜம் (என் சகதர்மிணிதான்) கேட்ட முதல் கேள்வி.

    ம்!

    நீங்க இன்னும் சம்பாதிக்கணும். லோன் போக கையில மூவாயிரத்துச் சொச்சம் வருது. பத்தலை. நானும் வேலைக்குப் போகலை. அதெப்படி எதிர் வீட்டு ஹேமி மட்டும் அத்தனை வசதியா இருக்கா?

    உசுப்பி விட்டாள்.

    ஏற்கனவே கனவுகளில் கசமுசாவென வாழும் வர்க்கம் நான். முதலில் அடிப்போடி என்று இருந்து விட்டேன். அப்படியே இருந்திருந்தால் தேவலை. ரெண்டாவது மகள் பிறந்த போது ஒரு பயக்கத்தி அடி வயிற்றில் செருகியது.

    இந்தச் சம்பளத்தில் இரண்டு பேரையும் கரை சேர்க்க முடியுமா? வங்கியில் உணவு இடைவேளையில் லீலாராமிடம் (ஆம்பளதான்) இது பற்றி நாசூக்காகக் கிண்டினேன்.

    உன் ஆதங்கம் எனக்கும் உண்டு. நம்ம கனகராஜ் நம்மை விடக் கவலைப்படறான்!

    மூவரும் ஒன்று சேர்ந்தோம்.

    விவாதித்தோம்.

    ஷேல்ஸ் பண்ணலாமா?

    அடப் போடா. என்ன பெரிசா வந்துரப் போகுது? நிறைய உழைக்கணும் அதுக்கு. இருக்கற வேலை பார்க்கவே நேரமில்லை இங்கே! கனகு அலுத்துக் கொண்டான்.

    எங்க மாமா பையன் கதை எழுதியே சம்பாதிக்கறான்!

    "மூளை

    Enjoying the preview?
    Page 1 of 1