Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சின்னஞ் சிறு கிலியே!
சின்னஞ் சிறு கிலியே!
சின்னஞ் சிறு கிலியே!
Ebook115 pages1 hour

சின்னஞ் சிறு கிலியே!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

டாக்டர் தாராசந்திரிகா கடைசி நோயாளியைப் பார்த்து வாஷ்பேசினில் கைகளை லிக்விட் சோப்பால் கழுவிக் கொண்டிருந்தபோது நர்ஸ் எட்டிப் பார்த்தாள்.
“டாக்டர்...’’
“என்ன...?’’
“உங்களைப் பார்க்க சுவர்ணான்னு ஒரு பொண்ணு வந்திருக்காங்க... ஏதோ பர்சனலா பேசணுமாம்...’’
“சுவர்ணா...?’’
“ஆமா டாக்டர்...”
“வயசு எவ்வளவு இருக்கும்...?”
“முப்பது இருக்கலாம்... பெரிய இடத்து பொண்ணு மாதிரி தெரியுது. டாட்டா சியாராவில் வந்திருக்காங்க.”
தாராசந்திரிகா மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மேல் வைத்துவிட்டு தன் நெற்றிப் பொட்டை பத்து விநாடிகள் யோசனையில் தேய்த்துவிட்டு நர்ஸைப் பார்த்து தலையாட்டினாள்.
“வரச்சொல்லு...’’
பேஷண்ட்டை அனுப்பிவிட்டு தாராசந்திரிகா காத்திருக்க, அந்த நிமிஷம் கரைவதற்குள் பாலிஷ் துணியால் தேய்த்த ஆப்பிள் பழம் போல் அந்த சுவர்ணா தள்ளு கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.
“வணக்கம் டாக்டர்...’
“வணக்கம்!” கைகளைக் குவித்துக் கொண்டே தாராசந்திரிகா அவளை ஏறிட்டாள்.முப்பது வயதுக்குரிய சுவர்ணா எலுமிச்சை நிறத்தில் சதைபோட்டு மினுமினுப்பாய் தெரிந்தாள். கழுத்தில் ஒரு வைர நெக்லஸ் அநியாயத்துக்கு டாலடித்தது. மெருன் வண்ண ஃபாரின் சில்க் புடவைக்கு உடம்பைக் கொடுத்து அதே வண்ணத்தில் ஜாக்கெட் தரித்திருந்தாள்.
“ப்ளீஸ் ஸீட்டட்...’’ டாக்டர் எதிரில் இருந்த நாற்காலியைக் காட்ட “தாங்க்ஸ்” சொல்லி உட்கார்ந்த ஸ்வர்ணா ஒரு சின்னப் புன்னகையோடு கேட்டாள்,
“டாக்டர் என்னை உங்களுக்குத் தெரியுதா?’’
“தெரியலையே...”
“கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்க...’’
தாராசந்திரிகா ஸ்வர்ணாவின் முகத்தை உன்னித்துப் பார்த்தாள். பின் தன் தலையை மெல்ல ஆட்டினாள்.
“தெரியலையே...?”
“மறந்துட்டீங்க போலிருக்கு... நீங்க நிர்மலா காலேஜ்லதானே படிச்சீங்க...?”
“ஆமா...”
“பி.எஸ்.ஸி... படிச்சுட்டு அதுக்கப்புறமா மெடிக்கலுக்கு போனீங்க இல்லையா...?’’
“ஆமா...’’
“நீங்க பி.எஸ்.ஸி படிக்கும்போது உங்க கூட பவ்யா படிச்சது ஞாபகம் இருக்கா டாக்டர்...?”
“பவ்யா...? ம்... ஞாபகம் இருக்கு. வீடு கூட ராம்நகர்ல...’’
“கரெக்ட் டாக்டர்... அதே பவ்யாதான்... பவ்யா எனக்கு அக்கா...’’
தாராசந்திரிகாவின் முகம் ஒரு மலர்ச்சிக்கு உட்பட்டது.
“நீ... அந்த பவ்யாவோட சிஸ்டரா...?”
“ஆமா டாக்டர்... ரெண்டாவது தங்கை“மைகுட்னஸ்...! நீ பவ்யாவோட சிஸ்டரா...? கொஞ்சம் கூட அடையாளமே தெரியலையே... பனிரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தது. அக்கா இப்போ எங்கே இருக்கா...?”
“அபுதாபியில, மாப்பிள்ளை என்ஜீனியர்... இந்தப் பக்கம் வர்றதே கிடையாது... ரெண்டாவது சிஸ்டர் பம்பாய்ல இருக்கா. அவளோட ஹஸ்பெண்ட் பிசினஸ்மேன்...’’
“அப்பா... அம்மா...?’’
“கிராமத்துல இருக்காங்க...’’
“உன்னைப் பத்தி சொல்லலையே...?”
“எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷமாச்சு டாக்டர். கணவன் பிசினஸ்மேன். பேரு ஆதிநாராயணன். ஆதி க்ரூப்பைப் பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க...”
“ஆமா தெரியும்...”
“அந்த ஆதி க்ரூப்ஸ்க்கு எம்.டி. என் கணவர்தான்.”
“ஆதி க்ரூப்ஸ் வெரி வெல் நோன் க்ரூப்பாச்சே! இன்னிக்கு ஷேர் மார்க்கெட்ல டாப் ரேட்ல இருக்கிறது அந்த க்ரூப்தானே...?”
“எஸ் டாக்டர்... எனக்கு கிடைச்சிருக்கிற கணவரும் ஒரு ஜெம்தான். கல்யாணமானதிலிருந்து இதுவரைக்கும் நான் கண் கலங்கியது கிடையாது. என்னோட கணவர் காட்ற அன்பில் நிறையத் தடவை திக்கு முக்காடிப் போயிருக்கேன்...”
“குட்... குட்... கேட்கவே சந்தோஷமாயிருக்கு. ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையில இந்த சந்தோஷத்தைக் காட்டிலும் வேற எது வேணும்...’’
“யூ... ஆர் கரெக்ட் டாக்டர்... பட் கடந்த ஒரு மாச காலமா என்னால சந்தோஷத்தை அனுபவிக்க முடியலை...’’
“ஏன்?”
“மனசுக்குள்ளே ஒரு திகில் நுழைஞ்சிருக்கு.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
சின்னஞ் சிறு கிலியே!

Read more from ராஜேஷ்குமார்

Related to சின்னஞ் சிறு கிலியே!

Related ebooks

Related categories

Reviews for சின்னஞ் சிறு கிலியே!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சின்னஞ் சிறு கிலியே! - ராஜேஷ்குமார்

    1

    "அய்யா...!’’

    குரல் கேட்டு டாக்ஸியின் ட்ரைவிங் சீட்டில் ஒரு ப்ராக்கெட் குறி மாதிரி படுத்திருந்த நாகராஜ் கண்களை மட்டும் திறந்து பார்வையை ஜன்னலுக்கு வெளியே அனுப்பினான்.

    அந்த நடுத்தர வயதுப் பெண் ஒரு சூட்கேஸோடு தெரிந்தாள்.

    என்ன...?

    கோயமுத்தூர் போற கடைசி பஸ் போயிடுச்சா?

    மணி பதினொன்று ஆகுது. இனியுமா பஸ் ஓடிட்டிருக்கும்...? இனிமே விடிகாலை நாலு மணிக்குத்தான் பஸ்.

    கடைசி பஸ் பதினொண்ணேகால் மணிக்குன்னு சொன்னாங்களே...

    அவங்க சொன்னது சரிதான்... பஸ் ஃபுல்லாயிட்டா பதினோரு மணிக்கே எடுத்துடுவாங்க... ஆமா... நீ எங்கே போகணும்?

    "கோயமுத்தூர்...’’

    "பழனியிலிருந்து இப்போ ஒரு பஸ்ஸு வரும். அதுல இடம் கிடைக்கிறது கஷ்டம். முயற்சிப் பண்ணிப் பாரு...’’ சொல்லிவிட்டு நாகராஜ் மறுபடியும் கண்களை மூடிக்கொள்ள அந்தப் பெண் சூட்கேஸோடு நகர்ந்தாள்.

    வயது முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கலாம். கிராமிய முகம். உயர்த்திப் போட்ட கொண்டை. கழுத்தில் மெலிதான ஒரு செயின். உடம்பில் நெகமம் சேலை.

    பார்வையில் ஒருவித பயத்தை வைத்துக்கொண்டு பஸ் ஷெல்டர்க்கு கீழே போய் நின்றாள். பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் எல்லா சந்தடிகளும் ஓய்ந்து ஒரு பாலைவனத்துக்குரிய அமைதி கொஞ்சம் கொஞ்சமாய் அரும்பிக் கொண்டிருந்தது. வேர்க்கடலை வண்டிக்காரன் மட்டும் இருக்கிற கடலையை எல்லாம் விற்றுவிட்டே போவது என்கிற தீர்மானத்துக்கு வந்தவனைப்போல் ஆ... சூடே... சூடே... சூடான வேர்க்கல்லே...! என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்.

    சூட்கேஸ் வைத்திருந்த பெண் வேர்க்கடலை வண்டிக்காரனை நெருங்கி கேட்டாள்,

    "பழனியிலிருந்து வர்ற பஸ் எப்ப வரும்?’’

    "இப்ப வந்துடும். கல்ல வேணுமாம்மா...?’’

    "பஸ்ஸுல கூட்டம் இருக்குமா...?’’

    "கடைசி பஸ்ஸாச்சே... கூட்டம் ரொம்பி வழியும் கல்ல வேணுமாம்மா...?’’

    நான் அவசரமா கோயமுத்தூர் போகணும், பஸுல சீட் கிடைக்க ஏற்பாடு பண்ண முடியுமா...?

    சரியா போச்சு... பஸ்ஸு... என்ன என்னோடதா நான் சொன்னதுமே அவங்க சீட் தர்றதுக்கு...? கல்ல வேணுமா... சூடா இருக்கு...

    "என்ன பண்றதுன்னு தெரியலையே... இப்படி வந்து மாட்டிக்கிட்டேன்...’’

    அவள் மிரண்ட பார்வையோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே - அந்த லுங்கி கட்டிய ஆள் ஒரு ரூபாய்க்கு வேர்க்கடலை பொட்டலத்தை வாங்கி கொண்டு - தள்ளி நின்றிருந்த அவளுக்குப் பக்கத்தில் வந்தான்.

    பொட்டலத்தின் வாயைத் திறந்து இரண்டு கடலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே கேட்டான்.

    என்ன... பஸ்ஸுக்கா...?

    "ஆ... ஆமா...’’

    "நிஜமாலுமே பஸ்ஸுக்குத்தானா...?’’

    அவன் கண் சிமிட்டினான்.

    அவள் திகைத்தாள்…

    ஆமா... பஸ்ஸுக்காகதான்...! கோயமுத்தூர் போகணும்.

    அவன் பற்களைக் காட்டினான்.

    "பக்கத்துலதான் யாரும் இல்லையே... இந்த பாவ்லாவெல்லாம் வேண்டாம். அடுத்த தெரு லாட்ஜ்ல எனக்கு பர்மனன்டா ஒரு ரூம் இருக்கு. போய்க்கலாமா...? பிரியாணி வாங்கித்தறேன்... கையில நூறு ரூபா...’’

    அவள் மிரண்டாள். அவன் இன்னமும் பற்களை அகலமாய்க் காட்டினான்.

    பணம் பத்தலையா சொல் போட்டுத்தர்றேன்...

    ...

    அவள் முறைத்தாள்.

    "என்ன அப்படி பார்க்கிறே...? உன்னை எப்படி ஸ்மெல் பண்ணினேன்னு நினைச்சு ஆச்சர்யப்படறியா. இந்த விஷயத்தில் என் கையில் எத்தனை வருஷ அனுபவம் இருக்கு தெரியுமா...?’’

    அவள் பயந்து பின்வாங்கினாள்.

    "நீ நினைக்கிற மாதிரியான பொம்பளை நான் இல்லை.’’

    "அட...! பிகு பண்ணிக்கிட்டது போதும். போலீஸ் ரோந்து வர்றதுக்குள்ளே லாட்ஜூக்கு போயிடலாம் வா...’’

    அவள் இப்போது முகம் சிவந்தாள்.

    மரியாதையா இப்போ இடத்தைவிட்டு போறியா இல்லையா...?

    "போகலைன்னா என்ன பண்ணுவே...?’’

    "கால்ல இருக்கிறதை கழட்டிடுவேன்... போன வாரம்தான் வாங்கின செருப்பு. போனாலும் போகுதுன்னு அது பிய்ஞ்சு போற மாதிரி அடிப்பேன்.’’

    "என்னடி பத்தினி கணக்கா டயலாக் பேசறே? உன் ரேட்டு என்னான்னு சொல்லு... தர்றேன்... அது வுட்டுட்டு டயலாக் பேசினா எனக்கு எரிச்சல்தான் வரும்...’’

    அவள் பின்வாங்கினாள்.

    "மரியாதையா சொல்றேன்... போயிடு...’’

    சர்த்தான் வாடி... ஈஈஈஈ...!

    அவன் முன்னேறி கையைப் பிடிக்க முயன்ற விநாடி தோளில் கை விழுந்தது.

    லுங்கி பேர்வழி திரும்பினான். டாக்ஸி ட்ரைவர் நாகராஜ்.

    "என்ன பத்ரி... பொம்பளைகிட்ட போய் தகராறு பண்ணிகிட்டு...?’’

    "கூப்பிட்டா வரமாட்டேங்கிறா... பெரிசா பத்தினி வேஷம் போடறா... இந்த பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்ல ராத்திரி பதினோரு மணிக்கு மேல ஒருத்தி இப்படி வந்து காத்திட்டிருந்தா... லாட்ஜ்க்கு கூட்டிட்டுப் போறதுதானே நம்ம வழக்கம்...’’

    நாகராஜ் பத்ரியின் தோளைத் தட்டினான்.

    "நீ நினைக்கிற மாதிரி இந்தப் பொம்பளை அது மாதிரி இல்லை... கோயமுத்தூர் போற கடைசி பஸ்ஸை தவறவிட்டுட்டு பழனியிலிருந்து வர்ற பஸ்ஸுக்காக காத்திட்டிருக்கு...’’

    உனக்கு தெரிஞ்ச பொண்ணா...?

    அப்படித்தான் வெச்சுக்கோயேன்...

    "அப்படீன்னா... நான் அம்பேல்...’’ லுங்கி பேர்வழி காதில் சொருகியிருந்த பிடியை எடுத்து வாய்க்கு கொடுத்துக் கொண்டே நகர்ந்தான்.

    அந்தப் பெண் நாகராஜைப் பார்த்து கை குவித்தாள்.

    "ரொம்ப நன்றிங்க...’’

    ஊர் கெட்டுக் கிடக்கும்போது... இப்படி தனியே வரலாமா? இருட்டிட்டா இந்த உலகத்துல யாரும் நல்லவங்க இல்லேம்மா... இந்த ஊர்ல உனக்கு யாருமே தெரிஞ்சவங்க இல்லையா...?

    "இல்லைங்க...’’

    ஒரு நல்ல லாட்ஜ்ல ரூம் எடுத்து தர்றேன். தங்கிட்டு நாளைக்கு காலையில புறப்படறியா...?

    "வேண்டாங்க... ராத்திரி எவ்வளவு நேரமானாலும் நா... கோயமுத்தார் போயாகணும்ங்க... பழனியிலிருந்து வர்ற பஸ்ஸுல என்னை எப்படியாவது ஏத்தி விட்டுடுங்க...’’

    "பார்க்கலாம்...

    Enjoying the preview?
    Page 1 of 1