Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஓடாதே! ஒளியாதே!
ஓடாதே! ஒளியாதே!
ஓடாதே! ஒளியாதே!
Ebook83 pages37 minutes

ஓடாதே! ஒளியாதே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முரளி, ஜமுக்காளத்தை உதறி - முன்னறையில் விரித்தான். கல்யாணத் தரகர் கன்னையன் ஒரு கை பிடித்து மடிப்புகளை நீக்க உதவினார்.
வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே சொன்னார்.
‘‘தாம்பூலத் தட்டை கொண்டு வந்து வை. அப்படியே நாலு ஊதுபத்தியையும் கொளுத்தி வை. கமகமன்னு வாசனையா இருக்கட்டும்...’’ தும்பைப் பூ நிறத்தில் வேஷ்டி, சர்ட் அணிந்த முரளி, அவர் சொன்னபடி செய்தான்.
‘‘தரகரே... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’
“சரியா நாலு மணிக்கெல்லாம் வந்துருவாங்க. அதுக்கு முன்னால உன் தங்கை காயத்ரி ரெடியாயிரணும். அவங்க வந்தப்புறம் புடவையைச் சொருகறதும், ஜடையைத் திருகறதுமா இருந்தா நல்லாயிருக்காது. வந்ததும் டாண்ணு அவ ஸ்வீட், காரத்தை தட்டில் கொண்டு வரணும். ஆமா... ஸ்வீட், காரமெல்லாம் தயார் பண்ணியாச்சா...?’’
‘‘கடைல வாங்கி வெச்சுட்டேன். காயத்ரிக்கு சரியாய் போட வராதே...’’
அடுத்த அறையில் காயத்ரிக்கு அலங்காரம் பண்ணி விடும் பக்கத்து வீட்டுப் பெண்களின் சிரிப்பொலிகள் கேட்டது.
முரளி, தரகரை ஏறிட்டான்.
‘‘எல்லா விஷயத்தையும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்டே மறைக்காம சொல்லிட்டீங்க இல்லே?’’
“சொல்லிட்டேம்ப்பா...’’
‘‘அப்பா இறந்தப்புறம்தான் எனக்கு குடும்ப பாரம்ன்னா என்னான்னு தெரிஞ்சது. அது வரைக்கும் ரெஸ்டாரண்ட்ல ஜாலியா ஃப்ரெண்ட்ஸோட புகை விட்டுட்டிருந்தேன்..“உணர்ந்துட்டே இல்லே...?’’
“ரொம்ப லேட் தரகரே. இப்ப ஒரு டப்பாக் கம்பெனில - மாசம் ஆயிரம் ரூபா வாங்கிட்டிருக்கேன். முப்பது நாளைக்கு ஆயிரம் ரூபா எந்த மூலைக்கு? சல்லிக்காசு சேமிக்க முடியலை. ‘தங்கச்சிக்கு வயசு ஏறிட்டே போகுது. உங்கப்பா மாதிரியே நீயும் இவளை விட்டுரப் போறியா? அவ கழுத்துல மூணு முடிச்சு விழ வேண்டாமா?’ எல்லாரும் இதையே கேட்டு என்னை உசுப்பி விட்டாங்க. கல்யாணச் சந்தைல இறங்கினப்புறம் மலைச்சுப் போயிட்டேன். இருபது பவுன்... நாப்பது பவுன்னு கூசாமக் கேக்கறாங்க...! காயத்ரிக்கு இந்த ஜன்மத்தில் ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணித்தர முடியுமான்னு திணறிட்டிருக்கும் போது நல்லவேளையா நீங்க வந்தீங்க...’ தரகர் சிரித்தார் வாய் கொள்ளாமல்...
‘‘இனிமே கவலையை விடு... உன்னோட தங்கச்சிக்கு கல்யாணம் நடந்த மாதிரிதான்...’’
தரகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் சரேலென ஒரு டாக்சி வந்து நின்றது. கதவுகள் நான்கும் சட்டென்று ஒரே நேரத்தில் விரிந்தன.
பட்டுப்புடவையில் மின்னும் மாப்பிள்ளையின் அம்மா. சில்க் ஜிப்பா, வேஷ்டி தரித்த அப்பா. மாப்பிள்ளைப் பையன் பூப் போட்ட சட்டையை கறுப்பு பேண்ட்டில் இன் பண்ணியிருந்தான். தவிர இரண்டு உறவுக்கார நபர்கள். தரகர் எதிர்கொண்டார்.
‘‘வாங்க... வாங்க...’’ முரளி பவ்யமாய் கும்பிட்டான். மாப்பிள்ளைக்கு மட்டும் ஒரு ஃபோல்டிங் சேர் போடப்பட, மற்றவர்கள் ஜமுக்காள விரிப்பில் தங்களை இருத்திக் கொண்டார்கள்.
‘‘அட்ரஸ் கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களா?’’ கேட்ட தரகரைப் பார்த்து புன்னகைத்தார் மாப்பிள்ளையின் அப்பா

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
ஓடாதே! ஒளியாதே!

Read more from ராஜேஷ்குமார்

Related to ஓடாதே! ஒளியாதே!

Related ebooks

Related categories

Reviews for ஓடாதே! ஒளியாதே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஓடாதே! ஒளியாதே! - ராஜேஷ்குமார்

    1

    டி.வி.யின்

    ஸ்டார் மூவிஸில் ஒரு பழைய காலத்து ‘வார்’ பிக்சர் ஒடிக் கொண்டிருந்த அந்த ராத்திரி வேளையில்

    டாக்டர் சந்திரமோகனின் வீட்டு டெலிபோன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட குழந்தையைப் போல் அலறியது.

    டி. வி. யைப் பார்த்த படி – ரொட்டித்துண்டில் மும்முரமாய் ஜாம் தடவிக் கொண்டிருந்த டாக்டர் சந்திரமோகன் - எதிரே இருந்த மகள் ஆர்த்தியைப் பார்த்தார். கண்களால் ‘ரிஸீவரை எடு’ என்றார்.

    நடமாடும் சொர்க்கம் போலிருந்த அழகான ஆர்த்தி தொண்டை வறள சப்தமிடும் டெலிபோனை நெருங்கினாள்.

    "ஹலோ...’’

    ...........

    "எஸ்...’’

    .........

    ‘‘எஸ்... ஜஸ்ட் எ மினிட் ப்ளீஸ்...’’ ரிஸீவரின் வாயைப் பொத்தி, "அப்பா, உங்களுக்குத் தான் ஃபோன்’’ என்றாள்.

    ‘‘யாரு?’’ கேட்டுக் கொண்டே எழுந்தார் சந்திரமோகன். பிரபல நியூராலஜிஸ்ட். உடம்பிலுள்ள பண்டல் பண்டலான நரம்புச் சரடுகள் அத்தனையும் இவர் சொன்ன பேச்சைத் தட்டாமல் கேட்கும். மூளையைத் திறந்து ஆபரேஷன் பண்ண வேண்டுமென்றால் உத்தரவாதமாய் இவரை கூப்பிட்டுக் கொள்வார்கள். போன மாசம் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த மருத்துவ செமினாரில் இவர் சமர்ப்பித்த ‘ப்ரெயின் அண்ட் நியூரான்ஸ்’ என்ற தீஸிஸ் பல வெள்ளைத் தோல்களை சிலிர்க்க வைத்தது. அநேக அந்நிய நாடுகள் பல லட்சம் டாலர்களால் இவருக்கு வலை விரித்தது. ‘என்னுடைய சேவை என் தாய்நாட்டுக்குத் தேவை’ என தூசி தட்டிக் கொண்டு ஃப்ளைட் ஏறிவிட்டார்.

    ஆர்த்தி சொன்னாள்.

    "ஆல்வா ஆஸ்பிடல்ல இருந்து பேசறாங்கப்பா...’’

    சந்திரமோகனின் வழுக்கைத் தலை, இடுங்கின கண்கள், நீண்ட காதுகள், ஒடுங்கின நாசி இவற்றுக்கெல்லாம் உவமை தேடிக் கொண்டிருக்க இது சமயமில்லையென்பதால் அந்த சங்கதிகளை அவர் ஃபோன் பேசி முடித்தபின் நேரமிருந்தால் பார்த்துக் கொள்வோம்.

    "ஹலோ, டாக்டர் சந்திரமோகன் ஹியர்...’’ எதிர்முனைக் குரலில் பதட்டம்.

    டாக்டர்! உங்க கேர்ல அட்மிட் ஆயிருக்கும் பேஷண்ட் தேவநாதனுக்கு - எபிலெப்சி அட்டாக் ஆயிருக்கு...

    சந்திரமோகனின் முகப்பரப்பில் சட்டென அவிழ்ந்தது பரபரப்பு.

    "மை குட்னஸ்! அந்த பேஷண்ட்டுக்கு எபிலெப்சி வரக் கூடாதே... எப்டாயின் குடுத்தீங்களா...?’’

    "குடுத்திருக்கோம். இருந்தாலும் வலிப்பு நிக்கலை. ஹாஸ்பிடல் கார் அனுப்பிச்சிருக்கோம். நீங்க உடனே வாங்க டாக்டர்...’’

    இடது கையில் பிடித்திருந்த ரிஸீவரை வைத்தார். வாஷ் பேசினில் கை அலம்பினார். தட்டில் ஜாம் தடவின ரொட்டித்துண்டு அப்படியே இருந்தது.

    ‘‘அப்பா, சாப்பிடலையா?’’

    ‘‘என்னோட பேஷண்ட் ஸீரியஸா கிடக்கார். இப்ப கார் வந்துரும். நான் போயாகணும் ஆர்த்தி...

    ‘‘நேரத்துக்கு சாப்பிடறதில்ல. சுவர் இருந்தாத்தான் சித்திரம். உங்க உடம்பையும் கொஞ்சம் கவனிங்கப்பா. கார் வரதுக்குள்ளே ஒரு துண்டாவது எடுத்துச் சாப்பிடுங்க...’’

    "ஊஹூம்...’’ அவசரமாய் வேறு உடைக்கு மாறினார். ரொட்டித் துண்டை சுமக்கும் பீங்கான் தட்டோடு குறுக்கே வந்து நின்றாள்.

    "சாப்பிடாம நான் உங்களை விடமாட்டேன். அம்மா இருந்தா வயத்தை காயப் போட்டுக்கிட்டு நேரங்கெட்ட நேரத்தில் கிளம்பிப் - போக விடுவாங்களா?’’ சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தைத் தட்டினார் சந்திரமோகன்.

    ‘‘அதான் அம்மாவுக்கு வாரிசா தப்பாம நீ பொறந்திருக்கியே. அவளுக்காவது டிமிக்கி தரலாம். உன்கிட்டே மூச்!’’ ஒரு ஸ்லைசை வாய்க்குள் கபளீகரம் செய்தார். வாசலில் கார் சத்தம். போர்டிகோவுக்கு வந்தார். வெள்ளை நிற மாருதி. அதன் உடம்பில் பெரிய ப்ளஸ் குறியும், ஆல்வா ஆஸ்பிடல் என்ற சிவப்பு நிற எழுத்துக்களும் தெரிந்தன. சீருடை அணிந்த டிரைவர் வேகமாய் காரைச் சுற்றி வந்து கதவைத் திறந்து விட்டான். சந்திரமோகன் அமர்ந்ததும் கார் புறப்பட்டது. இருபுறமும் சன் ஃபிலிம் ஒட்டப்பட்ட கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்தன. சாலையோர சோடியம் வேபர் விளக்கு வெளிச்சங்கள் அவ்வப்போது பலஹீன மின்னல்களாய் விழுந்தன.

    "டிரைவர் லைட்டைப் போடுப்பா...’’

    "தலையசைத்து தலைக்கு மேலிருந்த சுவிட்சைத் தட்டினான் அவன்.

    காருக்குள் குட்டிப் பிரகாசம். ‘சயன்டிபிக் கனடியன்’ மாதாந்திர சஞ்சிகையைப் பிரித்து வைத்தார் சந்திரமோகன். மருத்துவப் பதங்கள், வண்ணப்... படங்கள், ரத்தத்துடன் கொழகொழக்கும் சதைப் பிளவுகள், பளபளக்கும் சர்ஜிகல் கருவிகள்.

    பிரேக் அடித்து கார் லேசாய்க் குலுங்கியதில்

    Enjoying the preview?
    Page 1 of 1