Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனசெல்லாம் நிறைஞ்சவனே!
மனசெல்லாம் நிறைஞ்சவனே!
மனசெல்லாம் நிறைஞ்சவனே!
Ebook113 pages40 minutes

மனசெல்லாம் நிறைஞ்சவனே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஐயோ... இப்படியொரு முடிவை தேடிக்க தான், எங்களை பிரிந்து சென்றாயா சிவா...
 பாவி, எங்க மகனை பிரித்து... எமனிடம் தந்து விட்டாயே... அழுது, புலம்பினாலும், போனது... போதுதான். மரணத்தை வெல்ல யாராலும் முடியாது.
 கொடியாக துவண்டு போயிருக்கும் நந்தினி... நடந்தது எதையும் புரிந்து கொள்ளமுடியாத இரண்டு வயது அருண்...
 பதினாறாம் நாள் காரியங்கள் முடிய,
 மூன்றாம் மனிதர் போல, கிளம்புகிறார்கள்.
 ஒரு மாத பொழுது யந்திரமாக போக,
 பிரச்சனையே அதற்கு பிறகுதான் ஆரம்பமாகிறது.
 "ராஜசேகர் நீ பெரிய மனுஷன்பா... நாலும் தெரிஞ்சவன். நீயே இப்படி பாராமுகமாக இருக்கலாமா...
 இறந்து போன உன் மகன், கண்ணீரும் கம்பலையுமாக கணவனை பறி கொடுத்த நிற்கிறது உன் மருமகள்...
 பிஞ்சு மகன். அருண்... உன் குடும்ப வாரிசு... உன் பேரன்... பரிதவிச்சு நிற்கிற பாலகன்...
 யாரோ ஒருத்தர் போல, யாருக்கோ நடந்தது போல துக்க வீட்டிலிருந்து கிளம்பி வந்துட்டியே... இது நியாயமா..."
 "என்னை என்ன பண்ண சொல்ற குமார்... என் மகனே போயிட்டான். இனி யார் எப்படி போனால் என்ன..."
 "தப்புப்பா... நீ பேசறது ரொம்ப தப்பு. பெரிய மனுஷனாக நீதான் நல்ல முடிவு எடுக்கணும். இவ்வளவு வருஷம் உன் மகன் இருந்தான். இப்ப அவன் குடும்பம் பரிதவிச்சு நிக்குது.உன் மருமகளுக்கும் இளம் வயசு. அந்தப் பக்கமும் ஆதரவு இல்லை. இப்போதைக்கு சிங்கப்பூரில் இருக்கும் சிவாவின் சிநேகிதன் விஷ்வாவும், அவன் மனைவி மாலினியும் துணைக்கு இருக்காங்க. அது உன் குடும்பம் ராஜசேகர். கோபத்தை மறந்து நல்ல முடிவாக எடுப்பா."
 குமார் சொல்லிவிட்டு போனதிலிருந்து வீடு வீடாக இல்லை.
 "இப்ப உங்க நண்பர் என்ன சொல்றாரு. பிள்ளை இருக்கும் போதே வேண்டாம்னு சொன்னவளை... நம் மருமகள்னு வீட்டுக்கு அழைக்கச் சொல்றாரா...
 அவளை பார்க்கும் போதெல்லாம் என் பிள்ளையை என்கிட்டேயிருந்து பிரிச்ச எமனாகத்தான் தெரியறா...
 வேண்டாங்க... நம்ப சிவாவே போயிட்டான். இனி, அவ மேலே நமக்கு என்ன ஒட்டுறவு...
 எங்காவது அனாதை இல்லத்துக்கு போகச் சொல்லுங்க."
 "பார்வதி... நானும் பேசிப் பார்த்தேன். அப்படி விட முடியாதும்மா. ஊர் உலகத்துக்காக மட்டுமில்லை. மனசாட்சியை தொட்டு யோசிக்கும்போது, அப்படி அவங்களை அனாதரவாக விடறது தப்புன்னு படுது.
 அந்த பெண் நந்தினியை விடு, அந்த பாலகன் அருண், நம்ப பேரன்... நம் சிவாவின் மகன்... எப்படி பார்வதி... அவன் அனாதையா... தாத்தா... பாட்டி... நாம் இருக்கோம்...
 அப்படி அவங்களை தெருவில் நிறுத்தினா... இறந்துபோன நம் பிள்ளையின் ஆத்மா நிச்சயம் நம்மை மன்னிக்காது."
 "அதனால..."
 "தயவு செய்து, நம் மனசை மாத்திப்போம். இந்த வீட்டின் ஒரு மூலையில் மகனுடன் அவள் வந்து இருந்துட்டுப்போகட்டும்.
 இனியும் பகைமை பாராட்டறதில் எந்த பிரயோசனமும் இல்லை."
 உள்ளே வந்தவன், ஸ்கூல் பேகை தூக்கி போடுகிறான்.
 "அம்மா... அம்மா.""ஆட்டோ சப்தம் கேட்கும் போதே நினைச்சேன். வந்தாச்சா ரித்திக்... என்னப்பா இது... 'பேகை' இப்படியா வீசறது. எடுத்து அலமாரியில் வைப்பா."
 "போம்மா... டாடி எப்ப வருவாங்க." கேட்டபடி சோபாவில் உட்காருகிறான்.
 "ம். வந்துட்டே இருப்பாங்க. வந்ததும் என்ன அப்பாவை தேடற. வா... கை, கால் அலம்பிட்டு... பால் குடிச்சுட்டு ஹோம் - ஒர்க் செய்யலாம்."
 "ம்கூம். மாட்டேன். டாடி வந்ததும்தான் எல்லாம். காலையில் போகும் போதே. எனக்கு கிரிக்கெட் பேட், பால் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனாங்க."
 "அதுதான் விஷயமா... சரி சரி வாங்கிட்டு வருவாங்க... நீ சமர்த்து இல்லை. வாடா கண்ணா." மகனை கெஞ்சி, கூத்தாடி அழைத்துப் போகிறாள் லதா.
 ஆபீஸ் டென்சனில், 'பேட்' வாங்க மறந்துவிட்டு வர, வீடே ரணகளமாகிறது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223214182
மனசெல்லாம் நிறைஞ்சவனே!

Read more from Parimala Rajendran

Related to மனசெல்லாம் நிறைஞ்சவனே!

Related ebooks

Related categories

Reviews for மனசெல்லாம் நிறைஞ்சவனே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனசெல்லாம் நிறைஞ்சவனே! - Parimala Rajendran

    1

    "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

    வாசல்தோறும் வேதனை இருக்கும்

    வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால்

    ஓடிவிடாது.

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

    இறுதிவரைக்கும் அனுமதி இருக்கும்"

    பாடல் வரிகள் காற்றில் கலந்து ஒலிக்க, எந்த முடிவுக்கும் வரமுடியாமல் மனம் கலங்க வாசலில் உட்கார்ந்திருந்த ராஜசேகர் எழுந்து உள்ளே வருகிறார்.

    பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்குமான இடைவெளி எந்த வயதில் ஆரம்பமாகிறது புரியவில்லை.

    குழந்தை பருவத்தில் கண்ணே, மணியே என்று கொஞ்சிய பிள்ளைகள், ஒரு பருவத்தில் அந்நியமாய் தோன்றுவது... தன் மகன், தான் சொல்வதை தான் கேட்கவேண்டும்... அவனாக முடிவெடுக்கும் உரிமை. தவறானது. அதுவும் காதல் என்ற ஒன்று அவன் மனதில் புகுந்துவிட்டால்... அதற்கு பிறகு... கண்ணாடி பாத்திரத்தில் கீறல் விழுந்தது போல அல்லவா... குடும்ப ஒற்றுமை சிதறிப் போய் விடுகிறது.

    யோசிக்க மனவேதனைதான் அதிகரிக்கிறது. ராஜசேகர் பாங்கில் அதிகாரியாக பணியாற்றி ரிடையர்ட் ஆனவர். இரண்டு பிள்ளைகள், குரு, சிவா... குருநாதன், சிவானந்தன்... அப்பா பேச்சை தட்டாதவர்களாகதான் வளர்ந்தார்கள்.

    அம்மா பார்வதியும் பாசத்தை மட்டும் பிள்ளைகளிடம் காட்டினாள். தன்பிள்ளைகள் தனக்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்ற எண்ணம் அவளிடம் அதிகம்.

    குருநாதன் கல்யாணமாகி மனைவி லதாவுடன் கோயம்புத்தூர் போனபோது, தனக்கு உரிமையான ஒன்று பறிபோவது போன்ற உணர்வுதான் பார்வதியிடம் அதிகம் இருந்ததே தவிர, தன் மகன் மனைவியுடன் புது வாழ்க்கை தொடங்க போகிறான் என்ற நினைப்பு வரவில்லை.

    அடுத்த மகன் சிவாவிடம் அதிகம் பாசம் காட்டினாள். என்னங்க, நம்ப சிவாவை நான் எங்கேயும் அனுப்பமாட்டேன். அவன் படிப்பு முடிஞ்சதும், இங்கேயே வேலை தேடிக்கட்டும். அவனுக்கு கல்யாணம் பண்ணி, என் மகனை கடைசிவரை, என் பக்கத்திலேயே வச்சுப்பேன். சிரிப்பு ஒன்றே ராஜசேகரின் பதிலாக இருக்கும். எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரும்போது, அதை ஜீரணிப்பது எவ்வளவு கஷ்டம்.

    சிவாவுக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைக்க, மனமில்லாமல் அனுப்பி வைத்தாள்.

    அடுத்த இடி... காதல் என்ற பெயரில் அவளை தாக்க, நிலைகுலைந்து போனாள்.

    "அம்மா... ப்ளீஸ் நான் சொல்ல வர்றதை நல்லவிதமாக புரிஞ்சுக்க. நந்தினி நல்லவம்மா... அவளுடைய அழகை விட, அமைதியான குணம்தான் என்னை கவர்ந்துச்சு.

    நான் வேலை பார்க்கிற கம்பெனிக்கு பக்கத்தில், ஒரு ரெடிமேட் ஷாப்பில் வேலை பார்க்கிறா.

    போன இடத்தில் ஏற்பட்ட பழக்கம்... எங்களுக்குள் ஏற்பட்ட புரிதல் காதலாக மாறிப் போச்சு.

    அதுவும் அவள் அனாதை. காப்பகத்தில் வளர்ந்தவள். அவளுக்குன்னு எந்த உறவுகளும் இல்லைன்னு தெரிஞ்ச பிறகு, அவள் மேல் எனக்கிருந்த அன்பு அதிகமாச்சும்மா. நீதான்மா அவளுக்கும் தாயாக இருக்கணும்."

    என்ன சொல்கிறான்... ஒரு அனாதையை... பெத்தவர்கள் யார் என்றுகூட தெரியாதவளை காதலிக்கிறான். கல்யாணம் பண்ணவும் விருப்பப்படுகிறான். முடியாது இதற்கு நான் எந்த காலத்திலும் சம்மதிக்கமாட்டேன்.

    "என்ன அத்தை இது. சிவாவுக்கு கொஞ்சம்கூட புத்தி இல்லையா. ஜாதி, மதம், குலம், கோத்திரம் என்னன்னு தெரியாதவளை... நாம் எப்படி ஒத்துக்கமுடியும்.

    எங்கப்பா கௌரவமான குடும்பம்ன்னுதான், ஐம்பது பவுன் நகை போட்டு, சீர் வரிசை கொடுத்து... இந்த வீட்டில் வாழ அனுப்பினாரு.

    எனக்கு ஒர்ப்படியாக ஒரு அனாதையா வரணும். இதுக்கு நீங்க ஒத்துக்கக் கூடாது அத்தை." லதாவும் மாமியாருக்கு தூபம் போட்டாள்.

    "சிவா... உன் விருப்பத்துக்கு தடை சொல்றோம்னு நினைக்காதே. இது கௌரவ பிரச்சனை. உன் காதல் எந்தவிதத்திலும் நம் குடும்பத்துக்கு சரிவராது.

    அனாதைன்னு சொல்றே. அவளுக்குன்னு உறவுகள் யாருமில்லை. இப்படிப்பட்ட ஒருத்தியை உங்கம்மா மருமகளாக ஒத்துக்க சம்மதிக்க மாட்டா...

    பெத்து வளர்த்தவங்க மனசில் என்ன இருக்குன்னு முதலில் புரிஞ்சுக்க. உன் மேல் அன்பும், அக்கறையும் வச்சிருக்க நாங்க, உனக்கு நல்லதுதான் செய்வோம், நல்லதுதான் நினைப்போம்.

    உனக்கு இது சரிவராது சிவா. உனக்கு நல்ல பெண்ணாக பார்த்து நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம்பா."

    "என்னை மன்னிச்சுடுங்க. நான்தான் சகலமுன்னு நினைக்கிற நந்தினியை என்னால் கைவிட முடியாது.

    என்வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சா... நீங்கதான்பா மனசை மாத்திக்கணும்."

    தீர்மானமாக சிவா சொல்ல, அவன் முடிவில் உறுதியாக இருப்பது புரிய... பார்வதி கண்ணீரில் மகன் மனதை கலைக்க பார்க்கிறாள்.

    எதுவும் நடக்கவில்லை.

    முடிவு... நண்பர்கள் முன்னிலையில் நந்தினியின் கழுத்தில் தாலி கட்டுகிறான்.

    அவமானம், கோபம், பிள்ளையின் காதலை ஏற்க முடியாத குடும்ப கௌரவம்... எல்லாமுமாக சேர்ந்து... பாசத்தை மனதில் குழி தோன்றி புதைக்கிறது.

    உனக்கும் இந்த குடும்பத்துக்கான உறவு முறிஞ்சுடுச்சு. போயிரு. எங்களுக்கு ஒரு பிள்ளைதான்னு வாழ்ந்துட்டுப் போறோம். அப்பா, மகன்ங்கிற உறவு இன்னையோடு முறிஞ்சு போச்சு.

    அப்பா, காதலிக்கறது அவ்வளவு பெரிய குற்றமா

    "இல்லை. பெத்தவங்க மனசை... இருபத்தைந்து வருடம் சீராட்டி, பாராட்டி வளர்த்தவங்களை... காதலுக்காக சுக்கு நூறாக உடைச்சு போட்டுட்டியே... அதுதான் நீ செய்த குற்றம்.

    வேண்டாம் சிவா... எப்ப உன் சந்தோஷம், உன் வாழ்க்கைதான் பெரிசுன்னு முடிவு பண்ணி, அவ கழுத்தில் தாலி கட்டினியோ... இனி இந்த வீட்டில் உனக்கு இடமில்லை."

    நிறை மாத கர்ப்பிணியாக லதா, அப்பாவுக்கும், மகனுக்கும் நடந்த பிரச்சனையை சுவாரசியமாக பார்க்க, மகன் செயலில் ஆத்திரமும், கோபமும் மனசெல்லாம் மண்டிக்கிடக்க,

    ஒரு தாயாக இல்லாமல், ஒரு எதிரியாக பார்வதி மகனை பார்க்க,

    அப்பா சேர்த்து வைத்த இந்த வீடு, சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் இனி தான் ஒருவன்தான் ஒரே வாரிசு என்ற எண்ணம்... தம்பியை பிரியும் வருத்தத்தை விட, சந்தோஷத்தையே குருவுக்கு கொடுக்க,

    இன்றைய கோபம், ஆத்திரத்தில் எல்லாரும் அவனை வெறுக்கிறார்கள். அவர்கள் மனது ஒரு நாள் மாறும் என்ற எண்ணத்தில் வெளியேறுகிறான் சிவா.

    லதா மூலம் பேரன் ‘ரித்திக்’ பிறக்க, மகன் விலகி சென்ற கவலையை, பேரன் முகத்தை பார்த்து மறக்க முயற்சிக்கிறார்கள்.

    நாட்கள், மாதங்கள், வருடங்கள் உருள, மனம் பாறையாக இறுகிப்போனதே தவிர,

    Enjoying the preview?
    Page 1 of 1