Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sakthi 81/90
Sakthi 81/90
Sakthi 81/90
Ebook233 pages1 hour

Sakthi 81/90

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகத்தில் வாழும் எல்லாப் பெண்களையும் போல் இல்லாமல் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்கின்றாள் சக்தி. இவள் யார் உதவியையும் எதிர்ப்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். அவளுடைய வாழ்க்கை ஓட்டத்தில் பல ஆண்களைச் சந்தித்திருக்கின்றாள். அதேபோல் ஒரு நாள் பிரதாப்பையும் சந்திக்க நேர்கின்றது. பிரதாப் ஒரு நாள் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்துகின்றான். சக்தி அந்த காதலை நிராகரித்தாளா? ஏற்றுக்கொண்டாளா? வாருங்கள் காண்போம்...!

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580123909387
Sakthi 81/90

Read more from Indhumathi

Related to Sakthi 81/90

Related ebooks

Reviews for Sakthi 81/90

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sakthi 81/90 - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சக்தி 81/90

    Sakthi 81/90

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    அந்த மழையில் குடையோடு பாலிகஞ்ச் முழுதும் சுற்றியாகிவிட்டது. தலைக்குத் தொப்பி மாதிரி குடை, அதில் தலை மட்டும் நனையவில்லை. ஆனால் உடை தெப்பமாக நனைந்து போயிருந்தது. டெனிம் பெல்ஸின் ஓரம் பாத நுனியில் தடுக்கிற்று. மெலிசான டூ பை டூ டாப்ஸ் ஈரத்தில் ப்ராவோடு ஒட்டிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாய், காலில் ஹவாய்ச் செருப்புத்தான் என்று நினைத்துக் கொண்டாள் அவள். வேறு எந்தச் செருப்பாக இருந்திருந்தாலும் கல்கத்தா தெருக்களின் குப்பைக்கும், மழைக்கும் தாக்குப் பிடித்திருக்காது. இப்படி அரை ஓட்டமாக ஓடியிருக்க முடியாது. ஒரு டாக்ஸிக்காக இருபது நிமிடங்களாக அலைந்திருக்க முடியாது.

    என்ன வந்து விட்டது இன்று? தெருக்கோடியில் தங்கள் வண்டிகளின் மீது சாய்ந்து சார்மினார் காரத்தை இழுத்து நெஞ்சை நிரப்பிக்கொண்டு பஞ்சாபியில் அல்லாமல் பழக்கம் காரணமாக வங்காளத்திலேயே பேசும் அத்தனை சர்தார்ஜி டாக்ஸி டிரைவர்களும் எங்கே போய் விட்டார்கள்? ஏதாவது ஸ்ட்ரைக்கா? காலையில் பேப்பரைக் கூடப் பார்க்காமல் அவசரமாகக் கிளம்பி விட்டாள். ஆனால் ஸ்ட்ரைக்காக இருக்கும் என்று தோன்றவில்லை. இத்தனை அமைதியாய் ஸ்ட்ரைக் நடக்க இது ஜப்பானில்லை. இன்னும் ஒரு கடை கூடக் கல்லெறியப்படாமல், டிராம் எரிக்கப்படாமல், பாட்டில்கள் விசிறப்படாமல் இருப்பதால் நிச்சயமாக ஸ்ட்ரைக் இல்லை. அப்படியானால் என்ன ஆயிற்று இந்த டாக்ஸி டிரைவர்களுக்கு? இன்று முழுதும் பாலிகஞ்ச் பக்கமே வரக்கூடாது என்று சபதம் பண்ணிக்கொண்டு விட்டார்களா என்ன?

    அவளுக்குள் ரயிலுக்கு நேரமாகிவிட்ட கவலை அதிகரித்தது. நாளைய மறுநாள் காலை அவள் அந்தப் பத்திரிகை ஆபீஸில் இருந்தாக வேண்டும். தவறுகிற பட்சத்தில் வேலையும் தவறிப்போகும். அந்த வேலையைத் தவற விட அவளுக்கு விருப்பமில்லை. பிடித்தமான வேலை. எதிர்பாராத விதமாகச் சட்டென்று கிடைத்து விட்டது. இப்போது டாக்ஸியும் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாக இருக்கும். நேரத்திற்கு ஸ்டேஷனுக்குப் போய் விடலாம். சூட்கேஸையும் ஹோல்டாலையும் தள்ளி விட்டு ஏறிக்கொண்டு விடலாம். அவள் தன் இடத்தை ரிசர்வ் பண்ணவில்லை. அன்று காலை வரை டிக்கெட் கிடைப்பது கூட நிச்சயமாக இல்லை. ஆனால் எப்படியோ முயற்சி செய்து ராபர்ட் ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுத்து விட்டான்.

    ஒருமணி நேரம் முன்னாலேயே போய் டி.டி.ஆரைப் பார். ஸீட் ஏதாவது போட்டுத் தருவார். அப்படியே பெர்த் ஒன்றும் ரிசர்வ் பண்ணிக் கொண்டு விடு. நான் நேராக வந்து ஸ்டேஷனில் உன்னைப் பார்க்கிறேன் என்றும் சொல்லியிருந்தான்.

    அவன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகப் போகச் சொன்னால் தன்னால் பத்து நிமிஷங்களுக்கு முன்பாகக்கூடப் போகமுடியாது போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டாள். ராபர்ட் வேறு காத்துக் கொண்டிருப்பான். தன்னைத் தேடி பிளாட்பாரம் முழுதும் அலைந்து கொண்டிருப்பான் என்று தோன்ற மறுபடியும் உள்ளுக்குள் பரபரத்தாள். கோடியில் ஏதோ கார் வருவது தெரிய அது டாக்ஸியாக இருக்க வேண்டுமென்ற நினைப்பில் கூர்மையாகப் பார்த்தாள். அந்த மழையில் வண்டியின் நிறம் கூடச் சரியாகத் தெரியவில்லை. பக்கத்தில் வந்த அந்த வெள்ளை அம்பாஸிடர் அவள் மீது தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டு போயிற்று.

    முகம் வரை தெருத்தண்ணீர் தெளிக்க அவள் இயல்பாக ஏற்பட்ட கோபத்தில், யு பாஸ்டர்ட்! என்று கத்தினாள்.

    மழைச் சத்தத்தில் அந்தக் கத்தல் அவளுக்கு மட்டுமே கேட்டு அடங்கிப் போயிற்று. அது வேறு அவள் கோபத்தை அதிகமாக்கிற்று. இனிமேல் டாக்ஸிக்காக அலைந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று பட்டது. ஒரு சைக்கிள் ரிக்‌ஷா வந்தால்கூட நிறுத்தி ஏறிக்கொண்டு போக வேண்டியதுதான். வேறு வழி இல்லை.

    இப்படி ஆகும் என்பது தெரிந்திருந்தால் ஆபீஸிலிருந்து வரும்போதே எஸ்பிளனேடிலிருந்து ஒரு டாக்ஸி பிடித்துக்கொண்டு வந்திருப்பாள். பத்து நிமிடம் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று உடைமாற்றி, காலையில் தயாராக்கி வைத்திருந்த சூட்கேஸையும் ஹோல் டாலையும் ஏற்றி, பின் தோள் பையில் மேஜை மீதிருக்கும் சில புத்தகங்களையும் ராத்திரி பாதி படித்து ரயிலில் மீதியைப் படிப்பதற்காக வைத்துக் கொண்டிருந்த எரிகா ஜோங்கையும் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பியிருக்கலாம். சித்தப்பாவிடம் சொல்லிக் கொள்கிற அவசியம்கூட இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பே சொல்லியாகிவிட்டது. அதைத் தாங்கிக் கொள்கிற சக்தியற்று அதிர்ச்சியோடு அவர் பார்த்தாகிவிட்டது. நிஜமாகவா... நிஜமாகப் போறியா? போய்த்தான் ஆகணுமா? என்றெல்லாம் புலம்பியாகி விட்டது. அவள் அதெல்லாம் கேட்காதவளாக, கண்ணுக்குத் தெரியாத பஞ்சைக் காதில் அடைத்துக்கொண்டாள். மனசை இழுத்து மூடிக்கொண்டாள். அதை எந்த வார்த்தைக்காகவும் திறந்துவிட்டு விடக்கூடாது என்பதில் திடமாக இருந்தாள். அப்படியும் அவர் விடாமல் அந்தக் கதவைத் தட்டி அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டபோது அவளுக்குள் அந்தத் திடமும் பிடிவாதமும் இன்னும் அதிகமாயிற்று. குரல் இறுகிற்று. பார்வை வழக்கத்தைவிட வெறுமையாக நின்றது.

    போய்த்தான் ஆகணும். போகத்தான் போறேன்.

    அந்தப் பட்டுக் கத்தரித்த நறுக்கில் வேறு யாரானாலும் மேலே எதுவும் கேட்டிருக்கமாட்டார்கள். ஆனால் சித்தப்பா கேட்டார். அவர் உரியடிக்காரன் மாதிரி. வழுக்க வழுக்க மேலே ஏற முயற்சித்துக் கொண்டேதான் இருப்பார். அவ்வளவு சுலபமாக விட்டு விட மாட்டார். கடைசியில் கை நீட்டி அவளைப் பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறவரை விடமாட்டார். இத்தனைக்கும் சித்தப்பாதான். அவர் சித்தப்பாவானால் இவள் மட்டும் யார்? இவளால் மட்டும் எப்படி விட்டுவிடமுடியும்? அவர் உரியடிக்காரனானால் இவள் கீழே நின்று மேலே ஏறுகிற அவர் மீது நீரை வாரி வாரி அடிப்பவள். மேலே ஏற விடாமல் தடுப்பவள்.

    அப்படித் தடுத்துக் கடைசியில் ஒரேயடியாய் நிரந்தரமாகத் தடுக்கத்தான் இந்தப் பிரயாணம். அதை அவர் புரிந்துகொண்டு விட்டிருக்க வேண்டும். அவளை இனிமேல் தடுக்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் மீண்டும் மீண்டும் கேட்டார்.

    இப்போ போனால் திரும்பி எப்போ வருவே...?

    தெரியாது.

    வருவாயா, மாட்டாயா?

    அதையும் நான் இன்னும் முடிவு பண்ணலை.

    அப்படியானால் வருவாய்ன்னு நம்பலாமா?

    யாருக்கும் எந்த நம்பிக்கையும் எப்போதும் இதுவரை நான் கொடுத்ததில்லை. இனிமேல் கொடுப்பதாகவும் இல்லை.

    எனக்குக் கூடவா?

    ஆமாம்! முக்கியமாய் உங்களுக்குத்தான்.

    ஆழமான அடிதான். பலமான வலியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் நிறையவே முனகினார். புஸ்புஸ்ஸென்று பெருமூச்சு விட்டார். மேலே பேச முடியாமல் சங்கடப்பட்டார். ராத்திரி தூக்கமே வராமல் தவித்தார்.

    அத்தனை தவிப்பையும் பார்த்துக் கொண்டு அவள் பேசாமல் தான் இருந்தாள். தான் அத்தனை பலமாக அடித்திருக்க வேண்டாமோ என்று ஒரு வினாடி தோன்றியது. அவர் செய்த உதவிகளுக்கு அது சரியில்லையோ என்று பட்டது. ஆனால் வெறும் உதவியாக மட்டும் இருந்திருந்தால், அவளும் இப்படி அடித்திருக்கப் போவதில்லை. குறி பார்த்து வார்த்தைக் கல்லாக எறிந்திருக்கப் போவதில்லை. அந்த உதவிகளுக்குப் பிரதிபலனாக நிராதரவாக நின்ற நிலைமையை உபயோகப்படுத்திக் கொள்பவராக எத்தனை செய்யவில்லை அவர்? எவ்வளவு எதிர்பார்க்கவில்லை! வெறும் எதிர்பார்ப்பு மட்டுமில்லை. அதுதான் சரி, அதுதான் நியாயம் என்கிற மாதிரி எத்தனை பேச்சு! எப்படிப்பட்ட பார்வை! உடம்பில் கை கையாக ஊர்ந்த மரவட்டைகள் போதாதென்று பார்வை பார்வையாய்...

    அதற்கெல்லாம் இந்த அடி கூடப் போதாது. இந்தக் குறி கூடச் சரியில்லை. இன்னும் நன்றாகக் குறி பார்த்து இன்னும் கூரான கல்லில் பலமாக அடித்திருக்க வேண்டும். மனசுக்குள் தவறிப் போன அடிகள் மாதிரி இப்போது இதுவும் தவறித்தான் போயிருக்கிறது. ஆனால் நல்ல வேளையாக முழுதும் தவறவில்லை.

    அவள் ஒரு குரூரச் சிரிப்பாகச் சிரித்துக் கொண்டாள். ‘தவிடா கிழவா! நன்றாகத் தவி!’ என்று சொல்லிக் கொண்டாள்.

    இத்தனை நாளாக நான் தவிக்கவில்லையா? ஒரு நாளா இரண்டு நாளா? எத்தனை நாட்கள்? வெறும் நாட்கள் மட்டும்தானா? கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷங்கள் இருக்குமா? இருக்கும். பி.யு.சி. படித்தபோது வந்தது. அப்பா அம்மாவை விட்டு, அண்ணன் தங்கையை விட்டு, அந்த ஊரை விட்டு, ஏன், எல்லாவற்றையுமே விட்டுவிட்டு வந்தாகி விட்டது. சர்வமும் நீயே என்று அடைக்கலம் மாதிரி ஒட்டிக் கொண்டாகி விட்டது. நீயும் அடைக்கலம் கொடுத்து ரொம்பச் சுலபமாகச் சித்தப்பா போர்வையைப் போர்த்துக் கொண்டு என்னருகில் உட்கார்ந்து கதகதப்பாகக் குளிர் காய்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு...

    டேய்! அப்போ எனக்குத் தைரியம் வரலை. துணிச்சல் இல்லை. படிக்கணுமே என்கிற ஆசை. சொந்தக் காலில் நிற்கணும் என்கிற வேகம்.

    இப்போது நின்றாகி விட்டது. அந்தத் தைரியம், துணிச்சல் எல்லாம் வந்தாகி விட்டது. சாதாரணமாகக் கூட இல்லை. அசாத்தியத் துணிச்சலாய் அதிகப்படி தைரியமாய், அத்தனை பேரையும் எதிர்த்து நிற்கக் கூடியதாய்...

    நிற்கத்தான் போகிறேன். ஸ்திரமாக. சாசுவதமாக இனிமேல் எந்த இடறலும் குனியலும் வளைச்சலும் இல்லாமல் முற்றின மூங்கிலாக... வளைக்க வேண்டுமானால் முறிக்கத்தான் வேண்டும்.

    சர்ரென்று மழைத் தண்ணீரை டயரின் தெறிப்பில் பின்னுக்குத் தள்ளிக் காலியாக ஓர் அம்பாஸிடர் டாக்ஸி வந்தது. அவளருகில் ஓடும்போதே வேகம் குறைந்து கதவுக்கு வெளியில் சர்தார்ஜி டிரைவரின் முகம் நீண்டது. இவள் திடீரென்று ஏற்பட்ட நிம்மதி உணர்வோடு ஸ்டேஷன் ஞாபகம் வந்தவளாகச் சட்டென்று ஏறி, பின் ஸீட்டில் உட்கார்ந்தாள்.

    ராஜா பஸந்த்ராய் ரோடு போய், அங்கிருந்து ஸ்டேஷனுக்குப் போகணும்.

    டிரைவர் பதில் சொல்லாமல் மீட்டரைப் போட்டு வண்டியைக் கிளப்பினான். அவள் உடையிலிருந்து காருக்குள் சொட்டி ஸீட்டையும் மிதியடிகளையும் நனைத்த தண்ணீரைப் பார்த்துவிட்டு உடனே கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரமாகிவிட்டது. வீட்டிற்குப் போய் உடை மாற்றக் கூட முடியாது. தலையைத் துவட்டுகிற நேரம் கூடக் கிடைக்காது. அப்படியே சாமான்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மறக்காமல் தோல் பையையும் புஸ்தகங்களையும் எடுத்துக் கொண்டு கிளம்ப வேண்டியது தான். கதவைப் பூட்டிச் சாவியை அடுத்த பிளாட்டில் இருக்கிற மிஸஸ் சக்ரவர்த்தியிடம் கொடுத்து, சித்தப்பா வந்தால் தந்துவிடச் சொல்ல வேண்டும். இந்த ஈர உடைக்கும் மழைக்கும் சூடாக ஒரு கப் காப்பி குடித்துவிட்டுக் கிளம்பினால் நன்றாக இருக்கும். ஆனால் நெஸ்கஃபே கலக்கக்கூட நேரமில்லை. வேண்டாம். ஸ்டேஷனுக்குப் போய்ப் பார்த்து கொள்ளலாம். அங்கே ராபர்ட்டை வேறு தேடிக் கண்டு பிடித்தாக வேண்டும். அதில் அதிகச் சிரமம் இருக்காது. தன்னால் அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும் கண்டுபிடித்து விடுவான். இந்த உயரமும், பாப் தலையும் பளிச்சென்று கண்ணில் அடிக்கிற சிவப்பு டாப்ஸும் அசாதாரணமான நடையில் வேகமும் எத்தனை கூட்டத்திலும் சுலபமாகத் தனியாகப் பிரித்து நிறுத்திவிடும். அதனால் அந்தக் கவலை இல்லை.

    சாமான்களை ஏற்றி, தோல் பையை மாட்டிக் கொண்டு சாவியைத் தந்துவிட்டு இரண்டிரண்டு படிகளாக நான்கு மாடி உயரத்தையும் குறைத்து கீழே வந்து டாக்ஸியில் ஏறினபோது சற்று மூச்சு வாங்கியது.

    ஜரா ஜல்தி ஸ்டேஷன் சலோ பைய்யா... என்ற போது குரலில் ஒரு மிகுதியான அவசரம் தெரிந்தது.

    அதைப் புரிந்து கொண்டு அந்த டிரைவரும் ஆக்ஸிலேட்டரை அதிகம் அழுத்தினான். சில நிமிடங்களில் எஸ்ப்பிளனேட் வந்து ஸ்தூபியைக் கடந்து எப்போதும் நெரிசல் படுகிற படாபஜாரைத் தாண்டி, ஹௌரா பாலத்தில் போய், பதினைந்தே நிமிடங்களில் ஸ்டேஷன் வாசலில் நிறுத்தினான்.

    மற்ற எல்லா ரயில்வே ஸ்டேஷனுக்கும் இருக்கிற அதே களை ஹௌரா ஸ்டேஷனுக்கும் இருந்தது. எத்தனை மழையானாலும் புயலானாலும் எங்களைமட்டும் குறைக்க முடியாது என்கிற மாதிரிக் கூட்டம் இடித்துக் கொண்டு முன்னேறியது. சாதாரணமாகவே வங்காளிகள் குடையில்லாமல் வெளியில் போக மாட்டார்கள். அதுவும் சின்னத் தூற்றலாகப் போட்டுவிட்டால் போதும், கையில் மொட்டாகக் கிடந்த குடைப் பூ தலைக்கு மேல் வட்ட வட்டமாக முழுதும் மலர்ந்த கறுப்புப் பூக்களாக விரிந்து கொள்ளும். அத்தனை பூக்களையும் தள்ளி, தலையில் குத்தாமல் லாகவமாக நகர்ந்து, எத்தனை முன்பாகக் கிளம்பினாலும் அந்தக் கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க முடியாமல் தவித்துக் கொண்டே ஓடியவர்களுக்கிடையில் அவளும் ஒருத்தியாக ஓடினாள். போர்ட்டரின் வேகத்திற்கு ஈடாகச் சமாளித்து ரிசர்வ் பண்ணப்படாத அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியை அடைந்தாள். ஒரு வழியாக சூட்கேஸையும் ஹோல்டாலையும் திணித்து விட்டு, போர்ட்டருக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு, அதே மாதிரி திணித்துக் கொண்டு நின்ற மனிதர்களை விலக்கி, பிளாட்பாரத்தில் குதித்து ராபர்ட்டைத் தேட ஆரம்பித்தபோது, ரயில் கிளம்பச் சில வினாடிகளே இருந்தன.

    அதற்குள் எப்படியாவது அவனைக் கண்டுபிடித்துவிட வேண்டும். அத்தனை நாள் நட்பிற்கு நன்றி சொல்ல வேண்டும். (வெறும் நன்றி மட்டும் தானா?) அந்தக் கையைப் பற்றிக் குலுக்க வேண்டும். குட்பை சொல்ல வேண்டும்.

    குட்பை...? சொல்லி,

    ‘ராபர்ட், நீ வாயேன். என்னுடன் வந்துவிடேன்’

    Enjoying the preview?
    Page 1 of 1