Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கருநாகபுர கிராமம்
கருநாகபுர கிராமம்
கருநாகபுர கிராமம்
Ebook163 pages58 minutes

கருநாகபுர கிராமம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காங்கேய நாட்டு மன்னன் பிரகதத்தன், காட்டில் வேட்டையாடி முடித்துவிட்டு அந்தப் பெரிய ஆலமரத்தின் அடியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த குடிலுக்கு வந்து சேர்ந்தபோது மதிய வேளை.
சூரியன் உச்சி வானத்தில் இருந்து சுட்டாலும் அந்தக் கோடையின் கடுமை, ஆலமரத்தின் அடர்த்தியான இலைகளால் வடிகட்டப்பட்டு விட்டதால் அவனுக்கு குளுமையாகவே இருந்தது. குடிலுக்கு வெளியே இருந்த பாறைத்திட்டின் மீது தாவி ஏறி உட்கார்ந்தான்.
குடிலில் இருந்து வெளிப்பட்ட அமைச்சர் நல்லியக் கோடனார், மன்னன் பிரகதத்தனை நெருங்கினார்.
“மன்னா...! உணவு அருந்தும் வேளை. நாம் மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டரை நாழிகை நேரத்திற்குள் நாடு போய்ச் சேர வேண்டும். இன்று இரவு சீன வியாபாரிகள் வர்த்தகம் பற்றிப் பேச வந்துவிடுவார்கள். அதற்கு முன்பாக நாம் அரசவையைக் கூட்டி சில முன்னேற்பாடான விஷயங்களைப் பேசி முடிக்க வேண்டும்...”எனக்கு நினைவிருக்கிறது அமைச்சரே! அதைப் பற்றி உங்களிடம் நானே பேச வேண்டும் என்று இருந்தேன்...!”
நல்லியக் கோடனார் தன்னுடைய முகத்தில் பெரியதொரு திகைப்பைக் காட்டினார்.
“என்னிடம் எதைப்பற்றிப் பேச வேண்டும் மன்னா...?”
“நமக்கு இந்த சீன வர்த்தகம் தேவையா...?”
“ஏன் மன்னா...?”
“சென்ற முறை அவர்கள் நம்மிடம் வந்து வியாபார பேச்சுவார்த்தை நடத்தும்போது, பேசிய உரையாடலில் நிறைய பொய் இருந்தது. கண்களில் ஒருவித தந்திரம் தெரிந்தது. எனக்கு மட்டும் இப்படி தோன்றவில்லை. என்னுடைய சகோதரர்கள் இளந்தத்தன், கொற்றன் ஆகியோர்க்கும் அதேபோன்ற எண்ணம் தோன்றியுள்ளது.”
அமைச்சர் நல்லியக் கோடனார் மன்னன் பிரகதத்தனை ஏறிட்டார்.
“மன்னா...! உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் நீங்களும் சரி, உங்களுடைய சகோதரர்களும் சரி, பின்னால் ஏற்படும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். இந்த சீனர்களின் வர்த்தக விஷயத்திலும் அது சரியாகவே இருக்கும். இன்றைக்கு அவர்களோடு நடத்தப் போகும் வணிக வர்த்தகப் பேச்சில் நாம் பட்டும் படாமல் பேசுவோம். நாம் பேசும் பேச்சிலிருந்தே அவர்கள் புரிந்துகொண்டு நம்மைவிட்டு விலகிவிடுவார்கள்.
பிரகதத்தன் மேற்கொண்டு பேசும் முன்பு பெரிய மரத்திற்கு பின்புறம் இருந்து ஏதோ சத்தம் கேட்டது.
“அது என்ன சத்தம் அமைச்சரே?”
“குதிரையின் குளம்பொலி போல் தெரிகிறது மன்னா!”
இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த மரத்தின் பின்னாலிருந்து பால் போன்ற வெண்மை நிறத்தில் நல்ல உயரத்தில் குதிரையொன்று தெரிய, அதன் மேல் கரிய நிறத்தோடு திடகாத்திரமான உடம்போடு ஒருவன் உட்கார்ந்திருந்தான்மன்னன் பிரகதத்தன் அந்தக் குதிரையைப் பார்த்து கண்ணிமைக்க மறந்தான்.
“அமைச்சரே!”
“மன்னா!”
“குதிரையை பார்த்தீங்களா... எவ்வளவு அழகாய் இருக்கிறது?”
“ஆம் மன்னா...! இதுபோன்ற தும்பைப் பூ நிறத்தில் இப்படியொரு குதிரையை நான் பார்ப்பது இதுதான் முதல் தடவை”
“எனக்கு அந்தக் குதிரையைப் பிடித்து இருக்கிறது அமைச்சரே! இப்படியொரு குதிரையில் ஏறி அமரவும், பயணிக்கவும் ஒருவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் குதிரையின் மேல் உட்கார்ந்திருப்பவன் அந்தப் பெருமைக்கு ஏற்றவன்போல் தெரியவில்லையே? அவன் யார் என்பதை விசாரியுங்கள்.”
“இதோ... மன்னா.”
சொன்ன அமைச்சர் அந்த விநாடியே வேகமாய் நகர்ந்து குதிரையை நோக்கிப் போனார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
கருநாகபுர கிராமம்

Read more from ராஜேஷ்குமார்

Related to கருநாகபுர கிராமம்

Related ebooks

Related categories

Reviews for கருநாகபுர கிராமம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கருநாகபுர கிராமம் - ராஜேஷ்குமார்

    எடிட்டர் ஏரியா

    இரவு நேரம். இயற்கை உந்துதல்...

    கண்ணை கஷ்டப்பட்டு திறந்து செல்லிடைப் பேசியில் மணியைப் பார்க்கிறேன்... சரியாக 3 மணி 17 நிமிடங்கள். ஒரு ஐந்து மணி என்றால் அடக்கி ஆறு மணிக்கு வெளியேற்றலாம். அகால நேரம்... அவசரம் பாதி, பயம் மீதி.

    என் வீட்டுப் பின்புறம் கிணற்றுக்கு அருகில் இருக்கும் பாத்ரூம் போறதுக்குள் இல்லாத கற்பனை. எப்பவோ தூக்கு மாட்டிச் செத்த எதிர்வீட்டுப் பெண் கிணற்றுக்கு மேலே நிற்கிற மாதிரி இருக்கு.

    ஐயோ என்ற பயத்துடன் உற்றுப் பார்த்தால் காற்றில் பறந்து சென்று தொங்கிய பாவாடை என்று தெரிந்ததும்தான் பெருமூச்சு சிறுமூச்சாக மாறியது.

    வேகவேகமாக பாத்ரூம் உள்ளே சென்று கதவை மூடி உச்சா போனதும் ஏற்படும் நிம்மதியைச் சொல்லி மாளாது.

    அரைத் தூக்க கண்களோடு கதவைத் திறக்க, கதவின் தாழ்ப்பாளை நோக்கி கை போன நேரத்தில் அனிச்சைச் செயலாக 1000 வாட்ஸ் வேகத்தில் கை நின்றது.

    ‘ஐயோ பாம்பு...’ கதவின் மேல் பட்டா போட்டுக் கட்டிய பங்களாவில் அமர்ந்துள்ளது போல் உள்ளது.

    எண்ணங்கள் ஏதேதோ நினைக்கிறது. இப்படி பாம்புக் கடிக்கவா உயிர்.

    சரி, எதையாவது செய்ய வேண்டும்.

    பாம்பு என்னைப் பார்த்து விட்டதா தெரியலை. பாம்பு பிடிக்கறவங்க பிடிப்பது போல் பிடித்து ஒரே அடி அடிச்சு சாகடிக்கலாம் என்றால்... அந்தப் பாத்ரூமோ நானே வேகமா திரும்பினா அடிபடும். இங்க எங்கே பாம்பப் பிடிக்கறது, அடிக்கறது...?

    அதோ... கக்கூஸ் கழுவ வைத்திருக்கும் அந்தக் கழுவாத அழுக்குப் பிடித்த பிரஷ் கண்ணில் பட்டது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். பிரஷ்ஷ எடுத்தமா, ஓங்கி மொட்டேர் என்று அடித்தமா என்று தைரியத்துடன் அதை எடுத்தேன். அய்யகோ... அது நீண்டநாள் பயன்படுத்தாமல் இருந்ததால் மாவாகக் கொட்டியது.

    என்ன செய்வது என்று தெரியாமல் அந்தக் கருமம் பிடித்த கக்கூஸ் சுவற்றின் மூலையில் பதுங்கியபடி யோசித்தேன்.

    ‘பாக்கெட் நாவல் அசோகன் பாம்பு கடித்து...’ என்று அந்த காலை பேப்பரின் தலைப்புச் செய்தி தெரிகிறது. அதற்குக் கீழே ஏதோ எழுதி இருக்கு. சரியாப் படிக்க முடியலை. அந்த வரிகள்...

    ஆஸ்பத்திரியில் அனுமதி! என்றா, ஆத்மா சாந்தியடைந்தது! என்றா...? தெரியலை.

    கண்களில் நீர் பிதுங்கி வருகிறது.

    நாம போய்ட்டா... புத்தகங்களை யார் கொண்டு வருவார்கள்...?

    திடீர் என கரண்ட் கட். இப்ப அந்தப் பாம்பு என்ன செய்யப் போகுதோ... ஒருவேளை நம்ம மேல ஏறினா ஆடாமை அசையாம இருக்கணும். அது அப்டியே போய்டும்... என்ற யோசனையில் இருக்கும்போது...

    ஒருவித சத்தம் கேட்கிறது. காலில் ஏதோ ஊறுது. கால் தானா நடுங்கத் தொடங்குது.

    காலில் கொத்திவிட்டது. குதிக்கறேன்.

    இரண்டாவது கொத்தறா மாதிரி இல்ல. யாரோ காலில் அடிக்கற மாதிரி இருக்கு.

    மெல்லிய குரல் கேட்கிறது.

    ஏங்க, கால எடுங்க. என் இயர்போன் ஒயர் உங்க காலில் மாட்டியிருக்கு.

    எழுந்த என்னைப் பார்த்து என் மனைவி கேட்ட முதல் கேள்வி, ஏங்க உங்க மூஞ்சி பேயறைஞ்ச மாதிரி இருக்கு...? என்பதுதான்.

    அடக்கடவுளே... அப்ப அது கனவா...?

    இந்த வயதில் கனவு. அதுவும் பாம்புக் கனவு. இதற்குக் காரணம்...

    ஆங்... புரிந்து விட்டது.

    ‘கருநாகபுர கிராமம்’ கதையை நேற்று இரவுதான் முழுவதும் படித்து முடித்தேன்.

    ஆம்... இது மூன்று வழிக் கதை.

    ஒன்று ராஜா காலத்துக் கதை. இரண்டு நிகழ்காலக் கதை. இரண்டிலும் கதாநாயகன் திரு.நாகராஜன் என்கிற பாம்புதான். மூன்றாவது பாம்புகள் பற்றிய புரிய விஷயம் (அரிய விஷயத்தையும் புரியும்படி சொன்னதால் அது புரிய விஷயம்.)

    இதை ஆர்வ ஆர்வமாகப் படித்துவிட்டு படுத்ததில் ஏற்பட்டதுதான் இந்த பாம்புக் கனவு பாதிப்பு.

    என் பர்சனல் கனவ ஏன் உங்ககிட்ட பகிர்ந்து கொண்டேன் என்றால்... இதைப் படித்ததும் உங்களுக்கு அதுமாதிரி வரக்கூடாது என்பதற்காகத்தான்.

    சரி, நீங்க புடிங்க... சாரி, படிங்க...

    நான் புறப்படறேன்...

    அன்புடன்

    ஜி.அசோகன்

    கோயம்புத்தூரிலிருந்து செல்போன் சிணுங்குகிறது...

    அன்பான வாசக உள்ளங்களே!

    வணக்கம்.

    இந்த கொரோனா காலத்திலும் நம் க்ரைம் நாவல் ஆரோக்கியமாய் வந்து கொண்டு இருப்பதற்கு காரணம் உங்களுடைய அபரிமிதமான அன்புதான் என்பதில் எள்முனை அளவும் சந்தேகம் இல்லை.

    இந்த கொரோனா காலத்தில் நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும் நாமும் கற்றும் வருகிறோம்.

    அந்த வகையில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் என்னுடைய செல்போனின் உள்டப்பிக்குள் வந்து கொண்டே இருந்தன.

    அதில் ஒரு பதிவைத்தான் இப்போது நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    நாம் சாலையில் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால்தான் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

    அதேபோல் நம் வாழ்க்கையிலும் சில பண்புகளை கடைபிடித்தால்தான் ஒரு நல்ல மனிதனாக வாழ முடியும்.

    இதோ...அந்த நல்ல பண்புகள்.

    தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் போனில் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

    திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம், மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா வராதா என. இது உங்கள் கேரக்டரை அவர் உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், லஞ்ச் பாக்ஸ், குடை போன்றவைக்கும்.

    ஹோட்டலில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், மெனுகார்டில் காஸ்ட்லியாக உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி ஆர்டர் சொல்லுங்கள் என வேண்டலாம்.

    தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.

    இன்னும் கல்யாணம் ஆகலயா?

    குழந்தைகள் இல்லையா?

    இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?

    ஏன் இன்னும் கார் வாங்கவில்லை?

    இது நமது பிரச்சினை இல்லைதானே!

    தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச் செய்யும்!

    நண்பருடன் டாக்ஸியில் சென்றால் பெண் தோழியாக இருந்தாலும்... இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

    மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், சாய்ஸில் வைத்திருக்கலாம்.

    அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

    நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்,

    யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்!

    பொதுவில் புகழுங்கள்.

    தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

    உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.

    நீங்கள் பார்க்க ஸ்மார்ட்டாக, கியூட்டாக இருக்கீங்க என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

    யாராவது அவர்கள் போட்டோவைக் காட்ட போனைக் கொடுத்தால் காலரியில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

    யாரும் தனக்கு டாக்டர் அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது. போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம், விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறலாம்.

    நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது போனை நோண்டிக் கொண்டிருக்காதீர்கள்.

    கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

    நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

    தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், ஸ்டைலுக்காக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள், கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது!

    யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

    ஸார்... ஒவ்வொரு அறிவுரையும் ஒரு வைரக் கல்

    க்ராஸ் டாக்ல யாரு?

    ஸார்... நான் திருநெல்வேலி மகாதேவன். கொரோனா காலத்தில் வந்த க்ரைம் நாவல் ‘தலை இல்லாத சிலை’ அற்புதம்

    "நன்றி மகாதேவன். அடுத்த க்ரைம் நாவலுக்கான தலைப்பை உங்ககிட்டயே சொல்லிடட்டுமா...?

    சொல்லுங்க... ஸார். அதுக்குதானே ‘க்ராஸ் டாக்’ல நுழைஞ்சேன்

    கண்ணை நம்பாதே!

    ஆஹா...!

    மிக்க அன்புடன்

    ராஜேஷ்குமார்

    ராஜேஷ்குமாரிடம் கேளுங்கள்

    நாக மாணிக்கம் என்று கல் உண்மையிலேயே உள்ளதா...?

    (எஸ். சசிகுமார், பாப்பிரெட்டிப்பட்டி)

    நல்ல பாம்புக்கு வயதாகி, அதன் உடல் தளர்ந்து, இரை தேடுவதற்கு அதிக தூரம் ஊர்ந்து செல்ல முடியாத போது, அது அதன் தலைப்பகுதியில் உள்ள மாணிக்கத்தை உமிழ்ந்துவிட்டு அந்த மாணிக்கம் வெளியிடும் வெளிச்சத்தில தனது இரையை தேடி உண்ணும் என்கிற இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1