Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hindu Madha Pandigaigalil Maram, Chedi, Kodi Vazhipaadu
Hindu Madha Pandigaigalil Maram, Chedi, Kodi Vazhipaadu
Hindu Madha Pandigaigalil Maram, Chedi, Kodi Vazhipaadu
Ebook205 pages1 hour

Hindu Madha Pandigaigalil Maram, Chedi, Kodi Vazhipaadu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மரங்களும், செடிகளும், கொடிகளும் எந்த அளவுக்கு மக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன என்பதை அறிய இவை உதவுகின்றன. இப்போதுள்ள தலைமுறையினருக்கோ செடி, கொடிகள் பெயரும் தெரியாது; எவை எவை செடி, கொடிகளிலிருந்து கிடைக்கின்றன என்பதும் தெரியாது. தாவரங்களுக்கு அடுத்தபடியாக நான் கண்ட அரண்மனைகள் மற்றும் அண்மையில் சென்ற கோவில்கள் குறித்தும் இந்த நூலில் எழுதியுள்ளேன்.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580153510320
Hindu Madha Pandigaigalil Maram, Chedi, Kodi Vazhipaadu

Read more from London Swaminathan

Related to Hindu Madha Pandigaigalil Maram, Chedi, Kodi Vazhipaadu

Related ebooks

Related categories

Reviews for Hindu Madha Pandigaigalil Maram, Chedi, Kodi Vazhipaadu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hindu Madha Pandigaigalil Maram, Chedi, Kodi Vazhipaadu - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இந்து மத பண்டிகைகளில் மரம், செடி, கொடி வழிபாடு

    Hindu Madha Pandigaigalil Maram, Chedi, Kodi Vazhipaadu

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. அத்தி மரத்தின் கதை: மரம், செடி, கொடிகளை வழிபடுவது பற்றி புதிய செய்திகள்!

    2. புளியமரத்தின் கதை; மரங்களைப் பற்றிய புதிய செய்திகள்

    3. இந்து மதத்தில் ஆலமர வழிபாடு

    4. இந்து மதத்தில் காசித் தும்பை, நாயுருவிச் செடி வழிபாடு!

    5. இந்து மதத்தில் தென்னை மரம்; தேங்காய் உடைப்பது ஏன்?

    6. இந்து மதத்தில் நெல்லிக்காய் மர வழிபாடு

    7. மனசா தேவி வழிபாட்டில் கள்ளிச்செடி

    8.இந்து மதத்தில் தாழம்பூ, வெட்டிவேர்

    9.செங்கோல் விழாவும், நான் கண்ட நாயக்கர் அரண்மனையும் -- 1

    10.செங்கோல் விழாவும் நான் கண்ட நாயக்கர் அரண்மனையும் – 2

    11. நான் கண்ட பத்மநாபபுரம் அரண்மனை

    12.யாழ் மூரி பதிகம் பாடி அசத்திய சம்பந்தர்

    13. காசியின் 5 சிறப்புகள்; திருமீயச்சூர் அதிசயங்கள்

    14. மஹாளய அமாவாசை: ஜப்பானில் மூதாதையர் வழிபாடு-1

    15.மஹாளய அமாவாசை: ஜப்பானில் மூதாதையர் வழிபாடு- Part 2

    16.மீண்டும் வைத்தீஸ்வரன்கோயில் ! குல தெய்வ வழிபாடு ஏன்?

    17.இந்துக்கள் கொண்டாடும் நான்கு நவராத்ரிகள்

    18.எந்த அரிசி நல்ல அரிசி?

    19.’பாப் கார்ன்’ POPCORN உணவைக் கண்டுபிடித்தது தமிழனா?

    20.ராமனை பரதன் சந்தித்த அக்ஷய நவமி

    21.அக்ஷய திருதியை - தங்கம் பொங்கும் பண்டிகை!

    22.அமெரிக்கா போட்ட புளூட்டோனியம் அணுகுண்டு: லட்சம் பேர் மரணம் -Part 1

    23.அமெரிக்கா போட்ட புளூட்டோனியம் அணுகுண்டு: லட்சம் பேர் மரணம் -part 2

    24.ப்ரொமீதியம் - அக்னீ பகவான் பெயர் கொண்ட மூலகம்

    25.மனுவைக் கள்ளக்காப்பி அடித்த புத்தர்

    26.சேலையூருக்கு செல்வோம் வாருங்கள்; ஒரே கல்லில் 20 மாம்பழம் அடிக்கலாம்!

    27.சிறை சென்ற சாமியார் சுவாமி சாந்தானந்தா

    28.சிவ பெருமானும் இரண்டு கழுதைகளும்; 2 குட்டிக் கதைகள்

    29.கிழமைகளுக்கு பெயர் சூட்டியது யார்?

    30.கும்பேஸ்வரர் கோவிலில் தரிசனம்

    31.ஓரிக்கை மணி மண்டப தரிசனமும், உண்மைச் சாமியார் விமர்சனமும்!

    32.பாரதி பாட்டில் சநாதனம் Sanatan! நாத்திகம் பேசுவோர் பேய்கள் Ghosts!

    33.மாங்காடு காமாட்சியை தரிசித்தேன்

    முன்னுரை

    தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? என்ற நூலை எழுதிய பின்னர் நிறைய புதிய விஷயங்கள் கிடைத்தன.ஆயினும் பழைய கால புஸ்தகங்களில் காணப்படும் வழக்கங்கள் வேகமாக மாறி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், அவைகள் மறைந்து வருகின்றன. மரங்களும், செடிகளும்,கொடிகளும் எந்த அளவுக்கு மக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன என்பதை அறிய இவை உதவுகின்றன. இப்போதுள்ள தலைமுறையினருக்கோ செடி, கொடிகள் பெயரும் தெரியாது; எவை எவை செடி, கொடிகளிலிருந்து கிடைக்கின்றன என்பதும் தெரியாது…

    தாவரங்களுக்கு அடுத்தபடியாக நான் கண்ட அரண்மனைகள் மற்றும் அண்மையில் சென்ற கோவில்கள் குறித்தும் இந்த நூலில் எழுதியுள்ளேன்.

    மூலக வரிசையில் ஏற்கனவே இரண்டு புஸ்தகங்களை வெளியிட்டேன் . புதிதாக எழுதிய யுரேனியம், ப்ரொமீதியம் பற்றிய அறிவியல் கட்டுரைகளை இந்த நூலில் காணலாம் சில பண்டிகைகளின் சிறப்பும் கட்டுரைகளில் இடம்பெறுகிறது.

    மூலிகை, மரம், செடி கொடிகளில் ஆர்வம் உடையோர் இந்த நூலுடன் முந்தைய நூல்களான

    தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ? என்ற நூலையும்

    அற்புத மூலிகைகள் பற்றி வேதம் தரும் செய்திகள் என்ற நூலையும் படிக்க வேண்டுகிறேன்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர் 2023

    1. அத்தி மரத்தின் கதை: மரம், செடி, கொடிகளை வழிபடுவது பற்றி புதிய செய்திகள்!

    Post No. 11,901

    Date uploaded in London 14 APRIL 2023

    இந்துக்கள் வழிபாட்டில் மரங்களும் செடிகளும் ஏன்?

    ஸுலப: ஸுவ்ரத: ஸித்த:

    ச’த்ருஜிச்‌-ச’த்ருதாபன:/

    ந்யக்ரோதோதும்பரோ(அ)ச்வத்த

    ச்சாணூராந்த்ர நிஷூதன: ||88 (விஷ்ணு ஸஹஸ்ரநாம வரி)

    (ந்யக்ரோத - ஆலமரம், அவுதும்பர- அத்தி மரம், அஸ்வத்த - அரச மரம்)

    shloka-88 of Vishnu Sahasranama

    Sulabhah Su-Vratah Siddhah Shatru-jit Shatru-tapanah |

    Nyag-rodhodumbaro’Svatthah ChanurAndhra-Nishudanah ||88||

    सुलभः सुव्रतः सिद्धः शत्रुजिच्छत्रुतापनः ।

    न्यग्रोधोऽदुम्बरोऽश्वत्थश्चाणूरान्ध्रनिषूदनः ॥ ८८॥

    உலகில் வேறு எந்த சமய மக்களையும்விட இந்து சமயத்தினரின் வாழ்வே தாவர, பிராணிகளின் உலகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது . தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? என்ற எனது நூலில் இது தொடர்பான என்னுடைய கட்டுரைகளைத் தொகுத்து அளித்தேன்.

    துளசி, வில்வம் முதலிய தாவரங்களை இந்துக்கள் வழிபடுவது எல்லோருக்கும் தெரிந்ததே. இவை மருத்துவ குணங்கள் உடையவை அரச மரத்தைச் சுற்றிப்பார்த்து அடிவயிற்றில் கைவைத்தாளாம் என்று பிள்ளைப் பேற்றுக்காக ஏங்கும் பெண்களைப்பற்றிச் சொல்வதெல்லாம் விஞ்ஞான உண்மையே என்பதையும் சொன்னேன். குழந்தை இல்லாதவர்கள் அரச மரத்தைச் சுற்றி, அங்கே வீற்றிருக்கும் பிள்ளையாரையோ அல்லது வேறு தெய்வத்தையோ வழிபடும்போது, அந்தப் பெண்மணி நல்ல ஆக்சிஜனை சுவாசிப்பதோடு உடற்பயிற்சியும் செய்வதால் ஆரோக்கியம் பெருகி குழந்தை பிறப்பது வேகப்படுகிறது- விரைவாகிறது. அரசமர இலைகள் வெளிவிடும் காற்றின் - ஆக்சிஜனின் அளவும் அதிகம் எங்கெங்கோ ஞானத்தைத் தேடி அலைந்த புத்த பிரானுக்கு இறுதியில் அரச மரத்துக்கடியில் ஞானம் கிடைத்ததும் இதனாலன்றோ! இன்று இலங்கை வரை அந்த அரச மரத்தை எடுத்துச் சென்று வழிபடுகிறார்கள் அல்லவா?!

    இவை தவிர இந்தியா முழுதும் பல்வேறு மரம், செடி, கொடிகளை இறைவனுடன் இணைத்து வழிபடும் விஷயங்களை மேலும் ஆராய்வோம் இன்று தாவர இயல் விஞ்ஞானிகள் FICUS பைகஸ் என்னும் ஒரே பிரிவில் வைத்துள்ள ஆல மரம், அரச மரம், அத்தி மரம் மூன்றையும் அன்றே விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவின் திருநாமங்களாக வைத்து பெருமைப்படுத்தினார்கள் இந்துக்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களுடைய தாவரவியல் அறிவு அந்த அளவுக்கு வளர்ந்து இருந்தது.

    அந்த மூன்றில் அத்தி மரம் (Fig Tree) பற்றிய புதிய செய்தி இதோ:

    உடும்பரா என்பது இதன் ஸம்ஸ்க்ருதப் பெயர்.

    பைகஸ் க்ளோமெரெட்டா (Ficus glomerata, Ficus racemose) என்பது தாவர வியல் பெயர் (Botanical name)

    இதன் பழங்களை இன்று வரை நாம் சத்துணவாக உண்கிறோம்.

    இதை திரிமூர்த்தியின் வடிவமான தத்தாத்ரேயரின் இருப்பிடமாக மக்கள் வழிபடுகின்றனர் . குழந்தை இல்லாதோர் இந்த மரத்தைப் பலமுறை சுற்றி வணங்குகின்றனர்.

    இதை அவுதும்பரா, உமரரோ என்றும் வட இந்திய மொழிகளில் அழைப்பர்

    தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமி (1378- 1458 )நரசிங்கவாடி (நர்ஸோபவாடி Narsobawadi) ) மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது . அங்கு அவரது கோவிலில் உருவங்கள் கிடையாது. ஆனால் அவரது பாதுகைகள் மட்டும் அத்தி மரத்துக்கடியில் வைக்கப்பட்டுள்ளன . அவைகளை தத்த பக்தர்கள் வணஙகி குரு சரித்திர என்ற நூலை வாசிப்பார்கள் . இதனால் அவர்கள் எண்ணிய பலன்கள் கிடைக்கும். இந்த குரு சரித்திரத்தில் அத்தி மரத்தின் பெருமை உள்ளது.

    நரசிம்ம வாடி கிருஷ்ணா நதி- பஞ்ச கங்கா நதிகளின் சங்கமத்தில் உள்ளது. அங்கு நரசிம்ம சரஸ்வதி 12 ஆண்டுக்காலம் தவம் செய்தார்.

    கங்காதர சரஸ்வதி என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் குரு சரித்திர என்ற நூலை மராட்டிய மொழியில் இயற்றினார். அதை பின்னர் வாசுதேவானந்த சரஸ்வதி சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்தார். அந்த நூலின் இருபதாவது அத்தியாயத்தில்தான் அத்தி மர மஹிமை உள்ளது . எப்படி அரசமரத்துக்கடியில் புத்தர் ஞானம் பெற்றாரோ அதே போல அதே குடும்பத்தைத் (Family- Moraceae, Genus- Ficus) சேர்ந்த அத்தி மரத்தின் கீழ் தத்தாத்ரேயரும் அவரது சீடர்களும் ஞானம் பெற்றனர்.

    ***

    இதோ அந்தக் கதை:

    பிரஹலாதனைக் காப்பாற்றுவதற்காக விஷ்ணு, நரசிம்ம அவதாரத்தை எடுத்தார். ஹிரண்யகசிபு என்னும் அசுரனை சிங்க விரல்களால் கிழித்தார். பின்னர் அந்த விரல்கள், நகங்களில் பெரும் வலி துவங்கியது. அப்போது லெட்சுமி வந்து அருகிலுள்ள அத்திப் பழங்களில் நகங்களை நுழைக்கச் சொன்னார். அதனால் அவர் நக வலி அகன்றது. உடனே அத்தி மரத்துக்கு ஒரு வரம் தந்தார். உன்னை வழிபடுவோர் சகல நன்மைகளையும் பெறுவார்களாகுக என்று.

    இந்தக் கதை மராட்டிய மொழி, பின்னர் அதன் வடமொழி பெயர்ப்பு குரு சரித்திர நூல்களில் உளது.

    இதனால் தத்தாத்ரேயரை வழிபடும் கர்நாடக, மகாராஷ்டிர பக்தர்களுக்கு அத்தி மரத்தின் மீது மதிப்பும் மரியாதையும் பய பக்தியும் உண்டு. அதை வெட்ட மாட்டார்கள்.

    அத்தி மரத்தின்,மருத்துவப் பயன்களை உலகிற்கு அறிவிக்கவே தத்தாத்ரேயர், நரசிம்ம சரஸ்வதி சுவாமிகளின் அவதாராம் தோன்றியது என்றாலும் மிகையாகாது.

    ***

    வேதத்தில் அத்தி மர தாயத்து,

    இந்துக்கள் யாக, யக்ஞங்களில் இதன் குச்சிகளைப் போட்டு வழிபட்டனர்.

    வேத காலம் முதலே இந்த அவுதும்பர /அத்தி மரம் பிரபலமாகிவிட்டது . அதர்வண வேதத்தில் இதன் மரத்திலான தாயத்துக்களின் பெருமை பேசப்படுகிறது அதர்வண வேதம் 19-31 சூக்தத்தின் பெயர் ஒளதும்பர மணி. இதிலுள்ள 14 மந்திரங்களும் இந்த தாயத்தை அணிந்தவர்களுக்கு, தனம், தானியம், பசுமாடுகள், வீரம், வெற்றி கிடைக்கும் என்கிறது.

    பிற் கால புராணங்களும் ஹரிச்சந்திரன் முதலிய ராஜாக்கள் அத்தி மர சிம்மாசனத்தில் அமர்ந்து உலகப் புகழ் பெற்ற செய்தி வருகிறது. இந்த மரத்தின் மஹிமை தொடர்ந்து வருவதை அதற்குப் பின்னர் வந்த நூல்களும் இயம்புகின்றன

    3000 ஆண்டுகளுக்கு முந்தைய சதபத பிரமாணம் என்னும் நூலிலும் இது பற்றிய வேறு ஒரு கதை உள்ளது . இந்திரன் சோம பானம் என்னும் மூலிகை திரவத்தை அருந்திய பின்னர் அவனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தாவரமாக மாறியதைப் போற்றுகிறது. அவனது உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அரச மரம், ஆல மரம், சதையிலிருந்து அத்திமரம், அரிசி முதலியன தோன்றியதாகப் பகர்கிறது.

    இதன் காரணமாகத்தான் மஹாபாரதத்தில் வரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் 3 மரங்களும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன . இன்றுவரை அந்த துதியை பல லட்சம் பேர் தினமும் சொல்லும்போது அத்தி, ஆல, அரச மரங்கள் போற்றுதலுக்கு உள்ளாகின்றன

    2. புளியமரத்தின் கதை; மரங்களைப் பற்றிய புதிய செய்திகள்

    Post No. 11,904

    Date uploaded in London 15 APRIL 2023

    ஒரு புளிய மரத்தின் கதை என்ற தலைப்பில் சுந்தரம் ராமசாமி எழுதிய நாவல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்த்ததை நாம் அறிவோம்.

    Botanical term- Tamarind (Tamarindus indica)

    உலகப்புகழ்பெற்ற வடஇந்திய பாடகர் தான்சேன், ஒரு புளியமரத்தின் இலைகளை சுவைத்து நல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1