Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன்னைக் கொன்ற நாள் முதலாய்...
உன்னைக் கொன்ற நாள் முதலாய்...
உன்னைக் கொன்ற நாள் முதலாய்...
Ebook101 pages32 minutes

உன்னைக் கொன்ற நாள் முதலாய்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெங்களூர்.
காவி நிற விஸ்வேஸ்வரைய்யா மியூசிய கட்டிடத்துக்கும் பின்புறமாய் நடந்து கொண்டிருந்தார்கள் சத்யகலாவும், பிரசன்னகுமாரும், மேகங்களோடு போராடி மீண்டு வந்த சொற்ப வெய்யில் மரங்களிடம் மறுபடியும் தோற்றுப்போய் அடர் நிழலாய்த் தரையில் விழுந்து கொண்டிருந்தது.
நீல நிற ஃப்ளேட் உல்லி ஸாரிக்குள் இருந்த சத்யகலா ரோஜாவிடம் நிறத்தை இரவல் வாங்கியிருந்தாள். சிரிக்கிற போது கண்களில் வாட்ஸ் கணக்கில் வெளிச்சம் வீசியது. லேடீஸ் ஹாஸ்டலில் இருந்துகொண்டு பெங்களூரின் ஒரு ரெப்யூடட் கன்சர்னுக்கு ரிஷ்ப்ஸனிஸ்ட்டாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு அழகான இருபது சத்யகலா.
அவளின் கையைப் பற்றியபடியே நடந்து கொண்டிருந்த பிரசன்னகுமார் ஒழுங்கான எடை, உயர விகிதாச்சாரத்தில் இருந்தான். எந்த வாசகமுமில்லாத டீ ஷர்ட் போட்டிருந்தான். ஹொசூர் ரோட்டில் பதினொராவது கிலோ மீட்டரிலிருக்கும் பாமாசந்திரா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் மெக் அண்ட் கியர் டெக்னிகல் சர்வீஸின் நிர்வாகி.
நடந்தபடியே கிசுகிசுத்தான்.
“சத்யா...”
திரும்பினாள். “ம்?”
“ரெண்டே வாரத்துல நம்ம ப்ரெண்ட்ஷிப் இப்படி டெவலப் ஆகும்னு நான் நினைக்கவேயில்லை...”
புன்னகைத்தாள் சத்யகலா“ரெண்டு மூணு தடவை என்னோட எம். டி. ஐ பார்க்க வந்தீங்க... என்கிட்டே சுவாரஸ்யமா பேசினீங்க... ஒருதடவை தியேட்டர்ல பார்த்தோம் நாலஞ்சு நாளா இந்த பார்க்கில் சந்திக்கறோம்... இது வெறும் ஃப்ரெண்ட்ஷிப் இல்ல பிரசன்னகுமார்...”
அந்தத் தள்ளுவண்டியைக் கடந்தபோது நின்றான் ப்ரசன்னகுமார்,
“ஐஸ்க்ரீம்?”
தலையாட்டினாள்.
“வேண்டாம்”
கோபித்தான்.
“எது கேட்டாலும் வேண்டாம்னு சொல்லு. இன்னிக்கு என்னோட ட்ரீட். சாப்பிட்டே ஆகணும்... ஹோட்டல் ஹைவே இன்?”
“ப்ரச...”
அவள் சொல்ல ஆரம்பிக்குமுன் ஸ்கூட்டர் சாவியைக் கையில் சுழற்றியபடி திரும்பி நடக்க ஆரம்பித்தான் ப்ரசன்னகுமார்.
“உன்கிட்டே கேட்டுட்டிருந்தா நடக்காது நாம இப்போ போகறோம்”
சொன்ன ப்ரசன்ன குமாரோடு நடந்தாள் சத்யகலா மரத்தடி நிழலில் நனைந்துக் கொண்டிருந்தது இளநீல வெஸ்பா எக்ஸ்ஈ அதனை சமீபித்ததும் ஸ்டாண்டினின்றும் விடுவித்து சீட்டில் பரவிக்கொண்டான். கிக்கரின் மேல் கால் வைத்து உதைவிட-ஸ்டார்ட் ஆகி சப்தித்தது ஸ்கூட்டர்.
“ம்... ஏறு...”
என்றபடி திரும்பி சத்யகலாவைப் பார்த்தவன் “ஏன் சத்யகலா எதுக்கு தயங்கறே...?”
“யாராவது பார்த்துட்டா என்ன பண்றதுன்னு பயமாயிருக்கு...”
சொன்னவளைப் பார்த்து நோகாமல் தலையில் தட்டிக் கொண்டான்இதுக்குத்தானா? என்னோட அப்பா, அம்மா நானூறு கிலோ மீட்டர்ஸுக்கு அந்தப் பக்கம் மெட்ராஸ்ல இருங்காங்க... உன்னையும் ஹாஸ்டல்ல யாரும் கேட்கப் போறதில்லே”
“அதான் கிடையாது ப்ரசன்னா... நான் தங்கியிருக்கிற ஹாஸ்டல் ரொம்பவும் கண்டிப்பான ஹாஸ்டல் வார்டன் கனகதாராருக்கு இந்த லவ் விவகாரமே பிடிக்காது. யாரவது காதலிக்கறாங்கன்னு தெரிஞ்ச உடனடியா ஹாஸ்டலை விட்டு தொரத்திடுவாங்க”
ப்ரசன்னகுமார் சிரித்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
உன்னைக் கொன்ற நாள் முதலாய்...

Read more from ராஜேஷ்குமார்

Related to உன்னைக் கொன்ற நாள் முதலாய்...

Related ebooks

Related categories

Reviews for உன்னைக் கொன்ற நாள் முதலாய்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன்னைக் கொன்ற நாள் முதலாய்... - ராஜேஷ்குமார்

    1

    காணாமல் போய்க் கொண்டிருந்த பகல் நேரத்தை ரோட்டோர சோடியம் வேபர் விளக்குகளின் வெளிச்சத்தில் சாயந்தரம் நேரம் தேடிக் கொண்டிருக்க ப்ரவீன் மணிக்கட்டில் அமர்ந்திருந்த டைம்ஸ்டார் கடிகாரத்தின் முட்கள் ஆறு முப்பதைத் தடவியது. அவஸ்தையாய் நிமிர்ந்து எதிர்நாற்காலியை ஆக்ரமித்திருந்த நீல வர்ண சூட்டில் திணிந்திருந்த அதிகாரியைப் பார்த்தான். எழுபது சதவீத வழுக்கையை உள்ளங்கை பரப்பால் தேய்த்தபடியே சொன்னார் அவர்.

    நான் சொன்னமாதிரி நாளைக்கு ரஹிம் ‘பெவல் கியரை’ மெஷின் பண்ணறப்போ டைம் ஸ்ட்டி எடுத்துடு...

    தலையாட்டினான் ப்ரவீன். ஒகே ஸார்...

    அப்புறம்... என்றவர் ப்ரவீனின் கண்கள் வாட்சில் நிலைத்திருப்பதைக் கவனித்தவராய் நிறுத்திக் கொண்டார்.

    அப்புறம் ஸார்? ப்ரவீன் கேட்க -

    தலையைத் திருப்பி ஜன்னல் வழியே கீழே தெரிந்த ஷாப் ஃப்ளோரைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

    மூணு ட்ரில்லிங் மெஷின்லயும் புல்லிகளைத்தான் ட்ரில் பண்ணிட்டு இருக்காங்க போலிருக்கு... யாரோ ஒருத்தரை கவர் சியர்கேஸ் எடுத்துக்கச் சொல்லிட்டு நீ போகலாம்...

    சொல்லி முடித்ததும் ப்ரவீன் எழுந்து கொண்டான். சேரினின்றும் விலகி நடந்து அறைக்கு வெளியே வந்தான். கீழே போன படிக்கட்டுகளில் தடதடத்து ஷாப் ஃப்ளோரைத் தொட்டு, காதைச் சூழ்ந்த இயந்திர ஓசைக்கு நடுவே நடந்து - ஹாண்டிலை கீழ் நோக்கி சுழற்றிக் கொண்டிருந்த மெஷினிஸ்ட் கைலாஷைக் கூப்பிட்டான்.

    கைலாஷ்...

    மெஷின் இயக்கத்தை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்த கைலாஷிடம் அங்கிருந்தே சொன்னான்.

    புல்லி போட்டது போதும்... இனி கவர்கியர் கேஸ் எடுத்துக்க...

    கைலாஷ் தலையாட்டினான்.

    சரி ஸார்...

    நகர்ந்தான் ப்ரவீன்.

    தொழிற்சாலை கட்டிடத்திலிருந்து வெளிப்பட்டு ஸ்டோன் வாஷ் பாக்கெட்டுக்குள் இரண்டு கைகளையும் திணித்துக்கொண்டு-பனி பதம் பார்க்க ஆரம்பித்திருந்த -

    டெல்லி தெருக்களில் நடைவிட ஆரம்பித்தான் ப்ரவீன்.

    எண்பத்தி இரண்டில் காலேஜையும் முடித்துக்கொண்டு ஒரு வருஷம் வேலை இல்லாமல் திண்டாடின பின், எண்பத்தி நான்கு ஜனவரி மாதத்தின் ஒரு நாளில் ஆட்டோமெஷர் மேட்டிக் லிமிடெட்டில் டெக்னிகல் அஸிஸ்டென்ட் ஆக அப்பாய்ன்மென்ட் ஆன ப்ரவீனை-இங்கே-டெல்லியில் இருக்கும் தலைமையகத்துக்கு ஸ்பெஷலைஸ்ட் ட்ரெய்னிங்கிற்காக மார்ச் மாதக் கடைசி வாரத்தில் ஜனதா எக்ஸ்பிரஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்திருந்தார்கள்.

    ஜனங்களால் நிரம்பி வழிந்த ரீகல் சௌக்கில் நடந்த ப்ரவீன் தெருவின் மையத்தில் இருந்த அந்த பஸ் ஸ்டாப்பில் ஒதுங்கினான். சில்லறை டப்பாவை ஜலீர் ஜலீர் எனக் குலுக்கி நெருங்கிய அழுக்கான அந்தப் பிச்சைக்காரனை உதாசீனம் பண்ணிவிட்டு - மேல் பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை உதட்டு விளிம்பில் பொருத்திக்கொண்டான். சிகரெட் லைட்டரை எடுத்து க்ளிக்-கப் போன சமயம் -

    அடைசலான டவுன் பஸ் ஒன்று சாலையை அடைத்துக்கொண்டு வர -

    லைட்டர், சிகரெட் இரண்டையுமே பாக்கெட்டுக்கே திரும்பக் கொடுத்துவிட்டு, நெருங்கின டவுன் பஸ்ஸின் படிக்கட்டில் அடைக்கலமானான், நின்றும் நிற்காமலும் போன டவுன் பஸ்ஸில் முப்பது நிமிஷங்கள் பயணித்து -

    மகாத்மா காந்தி சவுக்-கில் உதிர்ந்துகொண்ட ப்ரவீன் மெயின் சாலையோடு கோபித்துக்கொண்டு போன உப பாதையில் நடந்து ஹிந்த் நகரின் ஆரம்பத்தில் நாலு ப்ளேசர் உயரத்துக்கு வளர்ந்திருந்த அந்த அபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்து வலது பக்கமாய் உயரப்பட்டுக் கொண்டுபோன படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினான்.

    வராந்தாவைத் தொட்டு கடைசியில் இருந்த அவனுடைய அபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்து கொண்ட ப்ரவீன் ஸ்விட்சைத் தட்டி அறை பல்புக்கு உயிருட்டினான். காலையில் ஆபீஸ் போகிற அவசர நிமிஷங்களில் மடிக்காமலே கட்டிலின் மேல் ஏறிந்துவிட்டுப் போன லுங்கியைப் பொறுக்கிக்கொண்டு நிதானமாய் பேண்ட்டிலிருந்து லுங்கிக்கு மாறினான்.

    பேண்டடை மடித்து ஹேங்கரில் மாட்டிய விநாடி -

    கதவைத் தட்டிய பெண் குரல் ஒன்று, எக்ஸ்க்யூஸ்மி கேட்க -

    ஹேங்கரை சுவர் ஆணியில் மாட்டிவிட்டுத் திரும்பினான்.

    எஸ். கம் இன்

    ப்ரவீன் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து கதவு திறக்கப்பட -

    கையில் பால் பாக்கெட்டோடும் உதட்டில் பிரகாசத்தனமான புன்னகையோடும் அனிஷா தெரிந்தாள். சுடிதாருக்குள் நிறைந்து பார்க்கிறவர்களின் மூச்சை அடைத்தாள். கோஷ்டி சேரா நாடு மாதிரி முடிக்கற்றை ஒன்று வலது கண்ணோரம் ஒதுங்கி விழுந்திருந்தது.

    குட் ஈவனிங் ப்ரவீன்...

    ஷெனாய் குரலில் சொன்னபடியே உள்ளே நுழைந்தாள் அனிஷா, பால் பாக்கெட்டை மேஜை மீது வைத்துவிட்டு -

    அவசரமாய் சொன்னாள் ப்ரவீன்.

    உங்களுக்கு எதுக்கு கஷ்டம்... நானே உங்க அபார்ட்மெண்ட்டுக்கு வந்து வாங்கிக்கறேன்னு தினமும் சொல்றேனே...

    புன்னகைத்துத் தலையாட்டினாள்.

    இது ஒண்ணும் பெரிய கஷ்டமில்லைன்னு நானும் தினமும் சொல்றேனே...

    சொல்லிவிட்டுக் கதவை அடைந்த அனிஷா- நின்று திரும்பி மறுபடியும் சொன்னாள்.

    ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க ப்ரவீன்... ஸ்வீட்டோட வரேன்.

    சொன்னவளை ஆச்சரியமாய்ப் பார்த்தான் ப்ரவீன்.

    ஸ்வீட்டா...?

    Enjoying the preview?
    Page 1 of 1