Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நதிக்கரையோரம்!
நதிக்கரையோரம்!
நதிக்கரையோரம்!
Ebook95 pages33 minutes

நதிக்கரையோரம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மறுநாள் காலை ஆறு மணிக்கு ஒரு பிராமண மாமி வந்து விட்டாள்!
அகிலாதான் வரவேற்றாள்.
‘‘என் பேரு சுலோச்சனா! நான் மடிப்பாக்கத்துலேருந்து வர்றேன்!’’
‘‘ஒக்காருங்க மாமி!’’
ரமேஷ் வர, தாரிணி மெல்ல எழுந்து வந்தாள்!
அம்மா அகிலா எல்லா விஷயங்களையும் சொன்னாள்! “அதுக்கென்ன? நான் இப்ப முதலே பொறுப்பை ஏத்துக்கறேன்! சம்பளம் பற்றி ஏதாவது சொன்னாளா?”
“நீங்க சொல்லுங்க!”
“பத்துரூபா குடுத்துடுங்க! பஸ் சார்ஜ் இருக்கில்லையா? சமயத்துல காத்தால பஸ் கிடைக்கலைனா, ஷேர் ஆட்டோ புடிச்சு வரணும்!”
“ராத்திரி சமையலைக் கூட செஞ்சு வச்சிட்டுப் போகணும்!”
“கண்டிப்பா!”
“உங்க வீட்ல எத்தனை பேர் மாமி?”
“சின்ன வயசுல அவர் என்னை விட்டுட்டு வேற ஒருத்தியோடப் போயிட்டார். ஒரே பெண் குழந்தை - வத்சலா! இப்ப இருபது வயசு! ப்ளஸ் டு பெயில்! அவளும் இந்த மாதிரி சமையல், பங்களா வேலைனு சம்பாதிக்கறா! ஒரு நாளைக்கு நான் வரமுடியலைனா, அவ வந்து செஞ்சு தருவா!”
“சரி மாமி!”“இந்த வீட்டுப் பழக்கம் எப்படி? யாருக்கு என்ன ருசி? எல்லாம் சொன்னா அதன்படி செஞ்சு தர்றேன். சில வீடுகள்ல உப்பு, உறைப்பு நிறைய வேணும், இப்ப பி.ப்பீ, சக்கரைனு எல்லா வியாதிகளும் இருக்கற காரணத்தால பார்த்து சமைக்க வேண்டியிருக்கு!”
கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
“இப்ப டிபனுக்கு சேமியா கிச்சடி பண்ணி, சட்னி அரைக்கட்டுமா?”
“சரி, மாமி!”
மாமி மளமளவென செயலில் இறங்கி விட்டாள்.
காலை ஏழரைக்கு ஆவி பறக்கும் சேமியா கிச்சடி, தேங்காய் கொத்துமல்லி சட்னி, ஒரு கத்தரிக்காய் கொத்சு என தயார் செய்து விட்டாள். டிகிரி காபியும் தயாராக, சாப்பிட்ட குடும்பத்தார் அசந்து போனார்கள்.
அப்படி ஒரு ருசி!
“அத்தே! மாமி பிரமாதமா செய்யறாங்களே?”
“ஆமாம் தாரிணி! ரெண்டு நாள் பார்க்கலாம். வந்த புதுசுல ஜோர் இருக்கும்! போகப்போக தேயுதானு பார்க்கணும்!”
மதிய சமையல் அதை விடப் பிரமாதம்!
ஒரு கூட்டு, பொரியலை வைத்து நெய்ல வத்தக்குழம்பு, எலுமிச்சை ரசம் என மாமி அசத்தினாள்!
தேவைக்கு அதிகமான பேச்சு இல்லை!
சுறுசுறுப்பான செயல்பாடு!
அடுத்த நாள் இட்லி, தோசை தேவைக்கு ஊறப்போடுதல், மாவு அரைத்தல், பொடி செய்தல் என நேரத்தை விணாக்காமல் உழைத்தாள்.
இரவு உணவை தயாரித்து ஏழு மணிக்கு புறப்பட்டாள்!
செல்போன் வைத்திருந்தாள்மகள் வத்சலாவுடன் அவ்வப்போது பேச்சு!
அந்த ஒருவாரத்தில் மாமியின் தயாரிப்பு அட்டகாசம்!
ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு சமையல். காலையில் வரும் போதே காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்துவிடுவாள்!
பொருட்களை அதிகம் விரயம் செய்யாமல் சிக்கனமாகக் கையாண்டு அசத்தி விட்டாள்!
தாரிணிக்கு என்ன பிரச்னை என்று இன்றுவரை கேட்கவில்லை. வம்பு, தும்பு இல்லை.
“பத்தியச் சமையல் செய்வீங்களா மாமி?”
“உனக்கு ஒடம்புக்கு என்னானு சொல்லு, அதுக்குத்தக்க செஞ்சு தர்றேன்!”
“மாமி! அவளுக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை! அதனால என்னால முடியலைனுதான் உங்களை வேலைக்-கு வச்சிருக்கோம்!”
“குழந்தையே இல்லையா?”
அகிலா எல்லா விபரங்களையும் சொல்லி விட்டாள்!
மாமிக்கு கண்கள் கலங்கியது! திரும்பி ரகசியமாக துடைத்துக் கொண்டாள்.
“விடும்மா குழந்தே! நல்ல மாமியார் -தங்கமான புருஷன்! உங்க அன்பு, பாசம், குடும்ப இணக்கத்தை ஒரு வாரமா நான் பார்க்கறேனே! இது குடுப்பினை இல்லையா? மனசைத் தேத்திக்கோ! பகவான் எப்ப, எதை, எப்படி தரணும்னு எழுதி வச்சிருப்பான்! அது நமக்குத் தெரியுமா? சரி விடு! ஆபரேஷன் ஆயிருக்கு! வயிறெல்லாம் புண்ணா இருக்கும்! அதுக்குத்தகுந்த பத்தியச் சமையலை உனக்கு நான் செஞ்சு தர்றேன்!”
“சரி மாமி!”
“இதப்பாரு! மனசைத் தெளிவா வச்சுக்கோ! எந்த டாக்டரும் நம்மை குணப்படுத்த முடியாது! மனசுதான் மகத்தான வைத்தியர்!”

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
நதிக்கரையோரம்!

Read more from தேவிபாலா

Related authors

Related to நதிக்கரையோரம்!

Related ebooks

Reviews for நதிக்கரையோரம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நதிக்கரையோரம்! - தேவிபாலா

    1

    இது மூன்றாவது கருச்சிதைவு! உடைந்து போய் விட்டாள் தாரிணி.

    இரண்டாவது கர்ப்பம் அடைந்தபோதே டாக்டர் கல்யாணி சொல்லி விட்டாள்.

    ‘‘உனக்கு கர்ப்பப்பை பலமாக இல்லை. குழந்தையைத் தாங்கும் சக்தி இல்லை. அதனால இனி கர்ப்பம் தரிக்காம பாத்துக்கறது நல்லது.’’

    இதைச் சொல்லி ஒரு வாரம் கழித்து கர்ப்பம் தரித்து விட்டது. கிட்டத்தட்ட தொண்ணூறு நாட்களுக்கு அது நிலைத்து நிற்க, டாக்டரே சந்தோஷப்பட்டாள்!

    தாரிணி உத்யோகம் பார்க்கும் பெண். பட்டதாரி! மாதம் இருபதாயிரம் வரை சம்பளம்! கணவன் ரமேஷ் ஒரு வங்கியில் கேஷியர்! கல்யாணமாகி நாலு வருடங்கள் முடிந்து விட்டன. சொந்த வீடு, கார் போன்ற வசதிகள்!

    மாமனார் இல்லை. மாமியார் அகிலா! தங்கமான தாய்! தாரிணி மேல் அன்பைப் பொழியும் பெண்மணி!

    ரமேஷின் தம்பி சந்தோஷ்! நல்ல ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவன்! கல்யாணம் ஆகவில்லை.

    தாரிணிக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு எதிலும் கடுகளவும் குறையில்லை. ஆனால், இந்தக் குழந்தை பிரச்னை அவளை வாட்டும் விவகாரம்!

    இதோ கர்ப்பமாகி நூறாவது நாள். காலையில கடுமையான வயிற்று வலி. ரத்தப்போக்கு! ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் எல்லாம் முடிந்துவிட்டது.

    கழுவித் துடைத்து வார்டில் கொண்டு வந்து போட்டு விட்டார்கள். ரமேஷ், மாமியார் அகிலா, மச்சினன் சந்தோஷ் அருகில் இருக்க,

    டாக்டர் கல்யாணி வந்தாள்.

    தாரிணி அழுதாள்.

    ‘‘நானும் சந்தோஷப்பட்டேன் இது நிலைக்கும்னு!’’

    ‘‘நான் பூ மாதிரி அகிலாவைத் தாங்கினேன் டாக்டர்!’’

    ‘‘உங்களைத் தெரியாதாம்மா? உங்களை மாதிரி ஒரு மாமியார், யாருக்குக் கிடைக்கும்?’’

    ‘‘ஸாரி டாக்டர்! இனி இது மாதிரி நிகழக் கூடாது!’’

    ‘‘அது மட்டுமில்லை ரமேஷ்! கர்ப்பப்பை புண்ணாகியிருக்கு. நாளைக்கு கேன்சர், அது இதுன்னு கொண்டு போய் விட்டிடக் கூடாது. அதனால...’’

    ‘‘அதனால?’’

    ‘‘அதை எடுத்துர்றது நல்லது!’’

    ‘‘டாக்டர்!’’ கதறி விட்டாள் தாரிணி!

    ‘‘இதப்பாரம்மா! உயிர் எல்லாத்தையும் விட உசத்தி! அதை நீ புரிஞ்சுக்கோ! இனி நீ கர்ப்பம் தரிக்கக்கூடாது! அப்படி இருக்க, அதை எடுத்துட்டா என்ன தப்பு?’’

    மாமியார் அகிலா அருகில் வந்தாள்.

    ‘‘டாக்டர் சொல்றது நியாயம் தாரிணி! இருக்கும்போது, கிடைக்குமோங்கற எதிர்பார்ப்பு இருக்கும்! இல்லைனா மனசு ஓரு திடமான முடிவுக்கு வந்துடும்!’’

    ‘‘அத்தே!’’

    ‘‘இதப்பாரு! எங்களுக்கும் வாரிசு வேணும்னு ஆசைதான்! அதுக்கு பல வழிகள் இருக்கு! யோசிப்போம்! இப்ப நீ தான் முக்கியம். புரியுதா?’’

    தாரிணி ரமேஷைப் பார்த்தாள்!

    ‘‘ஆமாம் தாரிணி! சரினு சொல்லு!’’

    வேறு வழியில்லாமல் தாரிணி தலையை அசைக்க, ‘‘இங்கேயே இருக்கட்டும்! மற்ற டெஸ்ட்டுகளை பார்த்துட்டு இந்த வாரத்துல முடிச்சிடலாம்!’’

    டாக்டர் கல்யாணி போய்விட,

    அழும் மருமகளை படிப்படியாக தேற்றி அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஒரு பக்குவத்துக்குக் கொண்டு வந்து விட்டாள் அகிலா!

    எல்லா பரிசோதனைகளும் முடிந்து விட,

    நாளை ஆபரேஷன் என்று முடிவாகி விட்டது.

    முதல் நாள் மாலை ரமேஷ் மட்டும் அருகில் இருந்தான்,

    அம்மா, சந்தோஷ் சாப்பாடு எடுத்து வர வீட்டுக்குப் போய் விட்டார்கள்!

    ‘‘உங்களை நான் ஏமாத்திட்டேன்!’’

    ‘‘என்ன சொல்ற தாரிணி?’’

    ‘‘உங்க குடும்பத்துக்கு ஒரு ‘வாரிசை’த் தர முடியாம ஆயிட்டேனே?’’

    ‘‘அப்படியெல்லாம் நீ கவலைப்படாதே தாரிணி! யாராவது உன்னைப் புண்படுத்தியிருந்தா, நீ வேதனைப்படணும்; எதுவும் இல்லையே? அப்புறமென்ன! குழந்தை இல்லாம எத்தனையோ தம்பதிகள் வாழலையா? இல்லை, குழந்தை வேணும்னா, அதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு! இப்ப அது முக்கியமில்லை. நீ டென்ஷன் படாம ஆபரேஷனை முடிச்சிட்டு வா! மீதியை அப்புறமா பாத்துக்கலாம்!’’

    அகிலா, சந்தோஷ் வந்து விட்டார்கள்!

    ‘‘சந்தோஷுக்கு சீக்கிரமா ஒரு வரனை முடிங்க அத்தே! அவன் மூலமாவது ஒரு வாரிசு நம்ம வீட்டுக்கு வரட்டும்!’’

    ‘‘அண்ணி! நீங்க ஒடம்பு குணமாகி, பழைய நிலைக்கு வர்ற வரைக்கும் எதைப் பற்றியும் பேச வேண்டாம். புரியுதா! நம்ம குடும்பத்துக்கு ஒரு குறையும் இல்லை.’’

    தாரிணி கண்களை மூடிக் கொண்டாள்.

    ‘எத்தனை நல்ல குடும்பம்!’

    ‘அன்பைப் பொழியும் புகுந்த வீட்டு உறவுகள்!’

    ‘ஆனால், ஒரு குறை உண்டாகிவிட்டதே!’

    லேடி டாக்டர் வந்து மறுபடியும் பரிசோதித்து விட்டு, ‘‘டென்ஷன் படக்கூடாது! பட்டா, நாளைக்கு சர்ஜரி பண்ண முடியாது!’’.

    ‘‘இல்ல டாக்டர்!’’

    ‘‘சரி! அம்மா மட்டும் இருக்கட்டும்! நீங்க ரெண்டு பேரும் காலைல வாங்க!’’

    ‘‘சரி டாக்டர்!’’

    ‘‘ரமேஷ்! உங்க ரெண்டு பேருக்கும் சப்பாத்தி, குருமா போட்டு ஹாட் பேக்ல வச்சிருக்கேன். பாலை சூடு பண்ணிக் குடிங்க! காலைல வந்துருங்க!’’

    ‘‘சரிம்மா!’’

    இருவரும் புறப்பட்டுப் போக, மாமியார் அகிலா வந்து தாரிணியின் கூந்தலைக் கோதி விட்டாள்!

    ‘‘இதப்பாரு! எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கறதில்லை. உள்ளதைக் கொண்டு ஆனந்தமா வாழப் பழகலேனா வாழ்க்கைல நிம்மதியே இருக்காது. புரியுதா? தெம்பா

    Enjoying the preview?
    Page 1 of 1