Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன்னைக் கண் தேடுதே..!
உன்னைக் கண் தேடுதே..!
உன்னைக் கண் தேடுதே..!
Ebook121 pages41 minutes

உன்னைக் கண் தேடுதே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்தப் பெண், கண்களைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள். அலை பாய்ந்து கொண்டிருக்கும் நெஞ்சத்தைச் சுமையாக ஏந்தியிருப்பவள் நான் என்று அறிவிக்கும் முகம். எதையோ பறிகொடுத்த பார்வை. பத்தொன்பது வயது இளமைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத இறுகிய தோற்றம்.
 "சுமித்ரா..." சபர்மதி மெல்ல அழைத்தாள்.
 அந்தப் பெண் கண் விழித்தாள்.
 "சுமித்ரா... எவ்வளவு அழகான பெயர் உனக்கு! லெட்சுமணனின் தாயார் பெயர்... இந்தப் பெயரைத் தாங்கி இருப்பதில் மகிழ்ச்சிதானே உனக்கு?" என்று இதமாய்க் கேட்டாள்.
 "அவன்கூட அப்படித்தான் சொன்னான்!" அந்தப் பெண்ணின் உதடுகள் முணுமுணுத்தன.
 "அவன் என்றால்...?"
 "அவன்தான்... நரி... குள்ளநரி..."
 "அதுதான் அவன் பெயரா?"
 இல்லை... அவன் பெயர் மதன்... மன்மதன் என்று வைத்திருக்க வேண்டும்... பாவி... படுபாவி..."
 "நீ நன்றாகப் படிக்கிற விஞ்ஞான சிந்தனையுள்ள மாணவியாமே, சுமித்ரா?"
 "ஆமாம்... தொண்ணூறு, தொண்ணூற்று ஐந்து என்று மதிப்பெண் வாங்கியவள்."
 "பொது அறிவுப் போட்டி என்றால் முதலிடம் உனக்குத்தானாமே?"
 "ஆமாம்"கல்லூரி விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து நீதான் பாடுவாயாமே? அவ்வளவு இனிமையான குரல் வளம் என்கிறார்கள். அப்படியா?"
 "முழுக்க முழுக்க உண்மை. முறையாகக் கர்நாடக இசை பயின்றவள் நான். வானொலி நிலையப் போட்டியில் முதல் பரிசு வாங்கி இருக்கிறேன்."
 "உடற்பயிற்சி செய்வாயோ? இவ்வளவு கட்டான உடல் அமைப்பைப் பெற்றிருக்கிறாயே, நடன மங்கை போல?"
 "ஆமாம்... கட்டுப்பாடான உணவு, உடற்பயிற்சி என்பது தொடர் பழக்கம் எனக்கு."
 "அப்புறம் என்ன சுமித்ரா?" என்றாள் அவள் மலர்ந்த முகத்துடன். "ஒரு ராஜகுமாரிக்குரிய அத்தனை குணங்களும் பண்புகளும் உன்னிடம் இருக்கின்றன. காலம் உனக்காகக் காத்திருக்கிறது. எத்தனையோ படிகள் உன் பாதம் படுவதற்காக உருவாகி நிற்கின்றன... கேவலம் யாரோ ஒரு மதன் காதலித்தான், கைவிட்டான் என்று தடுமாறிப்போய் நிற்கிறாயே! தேவையா இது?"
 "ஏமாற்றப்பட்டு விட்டேன் மேடம்..." சுமித்ரா திடீரென்று அழுதாள்.
 "கடற்கரை என்ன, பூங்கா என்ன, சினிமா என்ன என்று அழைத்துப் போனான். எல்லாரும் பார்க்கப் பார்க்க ஊர் சுற்ற அழைத்துப் போனான்... கடைசியில் ஓட்டல் அறைக்கு அழைத்தபோதுதான் விழித்துக் கொண்டேன். தப்பித்து ஓடிவந்தேன்... ஆனால்..."
 "ஆனால்... என்ன?"
 கண்ணீரைத் துடைக்க விரும்பாமல் சுமித்ரா கரகரத்தாள்.
 "அவமானம் இல்லையா இது? என் அழகுக்குக் கிடைத்தது செருப்படி இல்லையா? இதற்குப் பிறகும் உயிர் வாழத்தான் வேண்டுமா நான்? ஊரே பார்த்துவிட்டதே, இனி நான் எப்படித் தலைநிமிர்ந்து நடப்பேன்? ஏன் இன்னும் சாகாமல் இருக்கிறேன்?"
 சுமித்ரா கண்களைப் பொத்தியபடி அழுதாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223910121
உன்னைக் கண் தேடுதே..!

Read more from V.Usha

Related to உன்னைக் கண் தேடுதே..!

Related ebooks

Reviews for உன்னைக் கண் தேடுதே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன்னைக் கண் தேடுதே..! - V.Usha

    1

    சபர்மதிக்கு உற்சாகமாக இருந்தது.

    பல நாட்கள் இப்படித்தான்.

    விழிப்பு தன் கூடவே இன்பத்தையும் சேர்த்து அழைத்துக்கொண்டு வரும்.

    இன்னும் கொஞ்ச நேரம் படுக்கலாமே என்று தோன்றவே தோன்றாது. ‘சடக்’கென்று எழுந்து விடுவாள். காலைக் கடமைகள், உடற்பயிற்சி முடித்துவிட்டுத் தோட்டத்திற்கு ஓடுவாள்.

    சின்னஞ் சிறு தோட்டம்தான் என்றாலும், பூச்செடிகளும் வாழையும் வெண்டையும் கீரையும் அவளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கும். குழந்தைகளை வருடுவது போல வருடுவாள். சிரிப்பாள். மென்மையாக நீர் பாய்ச்சுவாள்.

    ‘நேற்று இல்லாத மாற்றம், என்னது? காற்று என் காதில் ஏதோ சொன்னது’ என்று இதழ்கள் முணுமுணுக்கும், கத்தரிப் பூக்கள் அவள் கன்னங்களை வருடும்.

    வீட்டிற்குள் விரைந்து சமையல் முடிப்பாள். பெருக்கித் துடைத்தபடி மெல்லிய புல்லாங்குழல், வீணை இசையைக் கேட்டு முடிக்கையில் தரை பளபளப்பாகி விடும். சூரியக் கதிர்கள் உற்சாகமாக ஓடிவந்து மொசைக் தரையைக் கவ்விக் கொள்ளும்.

    பாத்தியா பாத்தியா... தெனம் இப்படி எனக்கு முன்னால எழுந்து எல்லா வேலையும் முடிச்சுட்டு என்னைச் சோம்பேறி ஆக்கிடுறே பாத்தியா... என்று அத்தை, கொண்டையை முடிச்சிட்டபடி அலுத்துக் கொள்வாள்.

    என்ன... சோம்பேறியா? யாரு... நீங்களா? இருபத்து மூணு ஆண்டா நீங்க உழைச்ச உழைப்பாலதானே அத்தை, இப்படி மரம் மாதிரி வளர்ந்து நிக்கிறேன் நான்? என்பாள் செல்லச் சிணுங்கலுடன்.

    என்ன பொண்ணு நீ, மரம் கிரம்னு சொல்லிக்கிட்டு? மாத்துக் குறையாத என் சொக்கத் தங்கம் இல்லையா நீ? என்று அத்தை உணர்ச்சிகர வசனத்திற்குத் தாவிவிட, ஐயோ, போதும் அத்தை... ஆளை விடுங்க... என்று அவள் ஓடுவாள்.

    இன்றைக்கும் அதே போல விடியற்காலைப் பொழுது தன்னோடு உற்சாக வெள்ளத்தைச் சுமந்தபடி ஓடி வந்திருந்தது.

    வெகு நாட்களாகக் கிண்ணென்று அழுத்தமாக இருந்த காசித்தும்பைச் செடியில் புதிதாக மொட்டு உருவாகி இருந்ததைப் பார்த்தபோது குதிக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. போட்ட எருவையும், குடித்த நீரையும், மறக்காமல் அது தன் கடமையைச் சரியாகச் செய்தது, திருப்தியைக் கொடுத்தது.

    தவிர தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சி, வானத்தில் அவளைப் பறக்க வைத்து விட்டது.

    தாய்லாந்து நாட்டிலே ஒரு அதிசயம்.

    இரண்டு பூனைகளும் இரண்டு எலிகளும் அதி ஒற்றுமையாக ஒரே அறையில் வசிக்கிற காட்சியைக் காட்டினார்கள். முதலில் நம்பவே முடியவில்லை. ‘எலியும் பூனையும் போல’ என்று பகைமைக் குணத்திற்கு உதாரணமே ஆகிவிட்ட அவை இப்படிப் பரம்பரை நண்பர்கள் போல அணைத்துக் கொள்வதையும், நக்கிக் கொள்வதையும், முத்தமிட்டுக் கொள்வதையும் காணக் காண அவளுக்கு முகம் பளபளத்தது.

    வெறும் ஐந்தறிவே கொண்ட மிருகங்கள்கூட, மனது வைத்தால் தங்களை மாற்றிக்கொள்ள முடிகிறதே? ரத்தத்திலே இருக்கும் பகைமைப் பண்பை வீசியெறிந்து விட்டு நட்பு பாராட்ட முடிகிறது. மனிதனால் ஏன் முடியாது? மதம் - நாடு - இனம் என எத்தனை பெயர்களில் வேற்றுமைச் சண்டைகளில் இறங்குகிறான் மனிதன்? இந்தக் காட்சியைப் பார்த்த பிறகாவது அவன் வெட்கித் தலை குனிவானா? தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவானா?

    பல்லாண்டு வாழட்டும், அந்தப் பூனைகளும் எலிகளும்! சாந்தாவையும் நகுலனையும் சந்திக்கும்போது இதைப்பற்றிக் குறிப்பிட வேண்டும். ஏன், ஆலோசனைக்காக நான்கு நாளாக வந்து கொண்டிருக்கிறாரே ஒருவர், அவரிடத்திலே கூட இந்த அழகிய உண்மையைச் சொல்லலாம்.

    ‘வெட்டு அவனை! குத்து இவனை!’ என்று ஓயாமல் ஏதோ ஒரு குரல் கேட்பதாகச் சொல்கிறாரே, நூறு ஆறுதல் வார்த்தைகளால் உண்டாக்க முடியாத மனநலத்தை, இந்த எளிய மிருக நட்பு உண்டாக்கிவிடுமே...

    என்னம்மா... என்றபடி அத்தை எழுந்து வந்து விட்டாள்.

    சபர்மதி புன்னகைத்தாள்.

    என்ன ஆச்சு இன்னிக்கு. முகம் பூரா மின்னல் தெறிக்குது? என்று அத்தை வியந்தாள்.

    காசித்தும்பை மொட்டு விட்டிருக்கு, அத்தே... தவிர தாய்லாந்துல பூனையும் எலியும் ஒத்துமையா இருக்கிற காட்சிகளை டி.வி.யில பார்த்தேன்... மகிழ்ச்சியா இருக்குது... இந்தாங்க... காப்பியை நீட்டிவிட்டுச் சபர்மதி சிரித்தாள்.

    கலிகாலம் என்பது சரியாத்தான் இருக்கு! அத்தை காப்பியை உறிஞ்சியபடி சொன்னாள்.

    எப்படி?

    பிறவிப் பகை கொண்டவை ரெண்டும்... இப்போ ஒட்டி உறவாடினா அது இயற்கைக்கு எதிரானதில்லையா? அதான் சொன்னேனே, கலிகாலம்னு...

    இல்லே அத்தே... இது நல்ல காலம்... மனசு வெச்சா எதுவும் சாத்தியம்னு அழகா நிரூபிச்சிருக்குதுங்க... அவ்வளவுதான்...

    என்று அவள் மறுபடி சிரித்தாள்.

    ஏதோ ரெண்டு பூனையும் எலியும் ஒண்ணா ஆயிட்டா போதுமா? உலகத்துல இருக்கிற எல்லாப் பூனையும் அப்படி நடந்துக்குமா, சபர்மதி?

    மாத்த முடியாதது எதுவுமே இல்லை என்கிறதுதான் அத்தே இதுல இருந்து நாம் தெரிஞ்சுக்க வேண்டிய செய்தி... ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்கிற மாதிரி...

    சரி சரி... உன்கூட வாக்குவாதம் பண்ணி என்னால ஜெயிக்க முடியுமா? அத்தை முகத்தைத் தொங்க விட்டாள்.

    இல்லே அத்தே... இப்பகூட நீங்கதான் ஜெயிச்சீங்க... என்று அத்தையின் கன்னத்தைச் செல்லமாக வருடினாள், அவள். நான் ஜெயிச்சா, நீங்க ஜெயிச்ச மாதிரிதானே! நீங்க உருவாக்கின ஆள்தானே நான்? என்ன சொல்றீங்க அத்தே?

    அதையேதான் நானும் சொல்றேன்...

    அப்படின்னா?

    பேச்சுல உன்னை ஜெயிக்க முடியாது...

    அன்பால என்னை ஜெயிச்சுடலாம்... ஏன்னா, அன்புக்கு நான் அடிமை... என்று புத்தர்போலக் கைகளை வைத்துக் கண்மூடிச் சொன்னவளை அத்தை புன்னகையுடன் அணைத்துக் கொண்டாள்.

    ‘அம்மா, ராஜராஜேஸ்வரி!

    இது குழந்தை! நல்ல குழந்தை! சூதுவாது தெரியாத பச்சை மண்! பாசத்தைச் சுவாசமாக்கியே இதை வளர்த்துவிட்டேன்! கடைசி வரைக்கும் தாயைப் போலவே கூட இருந்து இவளை நீதான் காப்பாற்ற வேண்டும், அம்மா!’

    கண் கலங்கி விட்டது.

    என்ன அத்தை நீங்க? என்றாள் சபர்மதி, கோபத்தை வரவழைத்துக் கொண்டு.

    அத்தை சட்டென்று ஈரத்தைத் துடைத்துக் கொண்டாள்.

    "இப்படியா சட்டுசட்டுனு உணர்ச்சி வசப்படுறது? வேண்டாம் அத்தே... கையளவு மனசுன்னு சொன்னா மட்டும் போதாது... உண்மையாவே நம்ம இதயம் உள்ளங்கை அளவுதான் இருக்குன்னு புரிஞ்சுக்கணும்... உடல் முழுக்க ரத்தத்தை அனுப்புகிற கடுமையான உழைப்பாளி அது...

    Enjoying the preview?
    Page 1 of 1