Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandu Per
Irandu Per
Irandu Per
Ebook213 pages1 hour

Irandu Per

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவசங்கரி – இந்துமதி

இன்றைய சமுதாயத்தில் தப்புப் பண்ணத்தூண்டும் ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் தடம்புரண்டு, பின் சமாளித்து, எழுந்திருக்க முயற்சிக்கும் பெண்கள் இன்று அனேகம். மாயா ஏன் இப்படிச் செய்தாள்? செய்துவிட்டு ஏன் வருந்தினாள்? அப்புறம் அதிலிருந்து மீள வைராக்கியம் எடுத்து, அதை நிறைவேற்ற முடியாமல் ஏன் தவித்தாள்? நின்று நிதானித்து யோசித்தால், இத்தனைக்கும் அடிப்படைக் காரணம் என்ன? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்…!

Languageதமிழ்
Release dateNov 4, 2023
ISBN6580123909411
Irandu Per

Read more from Indhumathi

Related authors

Related to Irandu Per

Related ebooks

Reviews for Irandu Per

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irandu Per - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இரண்டு பேர்

    (சிவசங்கரி – இந்துமதி)

    Irandu Per

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    பொருளடக்கம்

    இந்துமதி

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    சிவசங்கரி

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    இந்துமதி

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    சிவசங்கரி

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    ‘இரண்டு பேர்’ பற்றி

    இந்துமதி

    1

    பால்கனிக் கதவைத் திறந்துகொண்டு மாயா வெளியில் வந்தபோது, சில்லென்ற காற்று முகத்தில் அடித்தது.

    சின்னத் தூற்றலாய் மழை விழுந்துகொண்டிருந்தது. பால்கனி ஓரம் நனைந்து, பாதி இடம் வரை ஈரமாகியிருந்தது.

    குரோட்டன்ஸும், நந்தியாவட்டையும், தங்க அரளியும், குளித்துவிட்டு வந்த குழந்தைகளாக ஈரம் சொட்ட நின்று கொண்டிருந்தன. மாமரமும், வேம்பும், நாகலிங்கமும், எண்ணெய் பூசின கறுப்பு உடம்பாகப் பளபளத்தன.

    ராத்திரி முழுதும் மழை பெய்திருக்கவேண்டும். சாதாரண மழையாக இல்லாமல், நல்ல மழையாகவே பெய்திருக்கவேண்டும். இடியும் மின்னலும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாகப் பெய்திருக்கவேண்டும். அப்படி இடியும் மின்னலுமாக இருந்திருந்தால்கூட, அவளுக்குத் தெரிந்திருக்காது. படுக்கையறையின் ஏர்கண்டிஷன் நிசப்தத்தில், எதுவும் எட்டியிருக்காது. மழை பெய்வது தெரிந்திருந்தால், அவள் அந்த ராத்திரியிலேயே பால்கனியில் வந்து நின்றுகொண்டிருப்பாள். ஊசி ஊசியாய் இறங்கி, பின் வலுத்துப் பெரிய மழையாய்ப் பெய்வதைப் பார்த்துக்கொண்டிருப்பாள். நீர் வட்டவட்டமாய் விழுந்து, குமிழிகளாகக் கரைந்து கரைந்து ஓடுவதை ரசித்துக்கொண்டிருப்பாள்.

    அப்படி எத்தனை ராத்திரிகளை அவள் அந்தப் பால்கனியில் கழித்திருக்கிறாள். தனியாய், துணைக்கு யாருமில்லாமல், சேர்ந்து ரசனையைப் பகிர்ந்துகொள்ள முடியாமல்...

    கல்யாணமான புதிதில் சிலசமயம் நந்தகோபாலையும் கூப்பிடுவாள்.

    நந்தகோபால் சாதாரண எம். டி. யாக ஜி. ஹெச். சில் சேர்ந்து நாலு மாதம்கூட ஆகாதபோதுதான், அவர்களுக்குக் கல்யாணமாயிற்று. அப்போதே அவனுக்கு இதிலெல்லாம் ஆர்வம் இருந்ததில்லை. அவள் வலுக்கட்டாயமாய் இழுத்துக் கொண்டு போய் வராந்தாவில் நிற்கவைப்பாள். அவன் கையோடு தன்கையைக் கோத்துக்கொள்வாள். அவனுடைய உள்ளங்கையைத் தன்கன்னத்தில் பதிய வைத்துக்கொள்வாள்.

    மழை எத்தனை அழகாகப் பெய்கிறது, இல்லை? என்று கேட்பாள். மெதுவாக அவனுக்குக் கேட்கிற குரலில், லிஸன் டு தி போரிங் ரெயின் என்று சன்னமாகப் பாடுவாள்.

    லிஸன் டு தி போரிங் ரெயின் ஏன், கோபால் பெய்கிற மழையைப் பார்க்க வேண்டும் என்றில்லாமல், கேட்க வேண்டும் என்று பாடத் தோன்றியது? பார்ப்பதை விடக் கேட்பது அழகாக இருக்கிறது. அந்த ‘சோ’வென்ற சப்தம் நல்ல சங்கீதமாக இனிமையாகத்தான் கேட்கிறது, இல்லை?

    நந்தகோபால் தலையாட்டுவான். மனம் முழுதும் ஆஸ்பத்திரியில் இருக்கும். அந்த மூன்றாம் வார்டில் எட்டாம் நம்பர் பேஷண்ட்டுக்கு சலைன் சரியாக ஏறுகிறதா என்கிற நினைவில் இருக்கும். ஆபரேஷன் ஆன குழந்தைக்கு நினைவு திரும்பிவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் போலிருக்கும். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி மழையைப் பார்த்துக்கொண்டு மனைவியோடு நிற்பது பைத்தியக்காரத்தனமாகப்படும். குற்றவுணர்ச்சியாகக்கூடத் தோன்றும். மெதுவாக மாயாவின் கையிலிருந்து தன் கையை விடுவித்துக் கொள்வான். அவள் மனசைப் புண்படுத்தாத விதத்தில் சிரிப்பான்.

    மாயா, இதோ நீ இங்கேயே நின்று மழையைப் பார்த்துக்கிட்டிரு. ஒரு நிமிஷத்துல நான் ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வந்துடறேன். என்ன?

    அவள் மனசுக்குள் சட்டென்று எதுவோ கலைந்துபோகும். ஆனாலும் மெதுவாகத் தலையாட்டுவாள். அவன் கார் கிளம்பி ஹெட் லைட் வெளிச்சம் கேட்டில் பட்டுத் திரும்ப ரோடிற்குப் போகிறவரை பார்த்துக்கொண்டு நிற்பாள். அதன்பின் மழை சத்தமற்றுப்போகும். அதில் கேட்க ஒன்றுமில்லாததாகத் தோன்றும். பார்வை வெற்றுப்பார்வையாகும்.

    அப்போது மட்டுமில்லை. இந்தப் பதினேழு வருஷத்தில் அவன் அதே ஜி. ஹெச்சில் ஆனரரி சர்ஜனாக - மெடிகல் காலேஜில் ஆனரரி லெக்சரராக ஆன பின்பு, வீட்டில் கன்சல்டேஷன் அறை கட்டி மாலையில் நோயாளிகளைப் பார்ப்பது என்றான பின்பு இந்தியாவின் மிகப்பெரிய ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயரெடுத்து நியூயார்க்கிற்கும் லண்டனிற்கும் மாதத்திற்கு இரண்டு தரமாவது போவது என்றான பின்பு, மந்திரிகளும், தொழில் நிபுணர்களும், நடிக நடிகைகளும் நோயாளிகளாக வர ஆரம்பித்த பின்பு, ஒரே பெண் மஞ்சு கல்லூரியில் பி. யூ. சி யில் சேர்ந்த பின்பு, இத்தனை வருஷங்களுக்கு அப்புறமும் அவள் அதே பால்கனியில் தனியாக நின்றுதான் மழையைப் பார்க்கிறாள். தனக்குப் பிடித்த பாடல்களைத் தனியாகத்தான் கேட்கிறாள்.

    இந்தத் தனிமை பழகிப்போய்விட்ட காரணத்தினால் இப்போதெல்லாம் அவளுக்கு மழை சத்தமில்லாததாகத் தோன்றுவதில்லை. பார்வை வெறுமையாய்ப் பதிவதில்லை. உயிரும், துடிப்புமாய், சத்தமும் சங்கீதமுமாகத்தான் தோன்றுகிறது. எல்லாம் இயல்பானதாக ஆயிற்று. நந்தகோபாலின் நேரமில்லாத தன்மை, மஞ்சுவின் துள்ளலும் துடிப்புமான பரபரப்பு, வீடு, அதன் அமைதி, அன்றாட வேலைகள், மேற்பார்வைகள்.

    ஆனால் சங்கீதம் மட்டும் அப்படியே பதினேழு வருஷத்திற்கு முன்பு இருந்த அதே இனிமையோடு அதே ரசனையோடுதான் இருந்தது. கேட்கிறபோதே அவளை சந்தோஷப்படுத்துவதாக, சின்னச் சிரிப்பாய்ச் சிரிக்கவைப்பதாக, மனசுக்குள்ளேயே உருக வைப்பதாக, சாப்பிடுகிறபோது, வேலை செய்கிறபோது, டெலிபோனில் பேசுகிறபோது, காரில் போகிறபோது, தூங்குகிறபோதுகூட அவளுக்கு சங்கீதம் தேவையாக இருந்தது. இந்த இனிமை இல்லாமல் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. எப்படி இவர்களால் இதை ரசிக்க முடியாமற்போனது என்று கஷ்டமாகக்கூட இருந்தது.

    சிலநாள் ராத்திரி மிகவும் அபூர்வமாய் நந்தகோபால் நோயாளிகளைச் சீக்கிரம் பார்த்து முடித்து படுக்கையறைக்கு வருகிறபோது, அவள் மிகவும் சந்தோஷமாக இருப்பாள். மனசின் சிரிப்பெல்லாம் முகத்திற்கு வரும். அந்த நேரத்தை நன்றாக அனுபவிக்க வேண்டுமென்று தோன்றும். அறை முழுவதையும் இதமான, லேசான இசையால் நிரப்பவேண்டும் போலிருக்கும். அவருக்காக ரேடியோகிராமைத் திருப்பி ஒவ்வொரு இசைத்தட்டாகப் பார்த்துக்கொண்டே,

    உங்களுக்கு எந்தப் பாட்டு வேணும் சொல்லுங்கள். போடறேன், என்பாள்.

    எனக்கு எந்தப் பாட்டும் வேணாம். இதோ இந்தப் பாட்டுத்தான் வேணும், என்று அவர் அவளுடைய இரண்டு கைகளையும் பற்றிக்கொள்வார். பார்வை புதுசாய்ப் பளபளக்க அவள் முகத்தைப் பார்ப்பார். அவள் எப்போதும் மென்மையாய்ச் சிரிப்பாள்.

    இந்தப் பாட்டு கேட்காமலே பழசாகிப்போன பாட்டு. அதிகம் கீறல் விழலேன்னாலும் லேடஸ்ட் ரெகார்ட் இல்லே பாருங்க?

    டோண்ட் பி ஸில்லி. கம் ஹியர். இதுவா பழைய ரெகார்ட்? வா. வந்து கண்ணாடி முன்னால நின்னு பாரு என்று அந்த ஆளுயரக் கண்ணாடி முன்னால் தோளில் கை போட்டு அணைத்துக்கொண்டு வந்து நிற்க வைப்பார்.

    அவள் அப்படியே பதினேழு வருஷத்திற்கு முன்னால் பார்த்த மாயாவாக, வழவழவென்று ஓடுகிற மென்மையும், பளிச்சிடுகிற முகமும், இறுகக் கட்டிவைத்த உடம்பும், வெடவெடவென்ற உயரமுமாகத்தான் நிற்பாள். முகம்கூட அதே குழந்தை முகமாகத்தான் தெரியும். சிரிக்கிற கண்ணும், துறுதுறுவென்ற பார்வையுமாகத்தான் இருக்கும். தலையில் ஒன்றிரண்டாகக்கூட வெள்ளியோடாமல், இடுப்பிலும் வயிற்றிலும் சதை போடாமல், இந்த முப்பத்தைந்து வயசில் பி. யூ. சி. படிக்கிற பதினாறு வயசுப் பெண்ணிற்கு அம்மா என்கிற மாதிரி இல்லாமல், அவளுக்கு அக்கா மாதிரி, ஒரு எம். ஏ. படிக்கிற கல்லூரி மாணவி மாதிரி, கல்யாணமாகாமல் வேலைக்குப் போகிற பெண் மாதிரி.

    இது எப்படி இவளுக்குச் சாத்தியமாகிறது என்று அவர் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். தன்னுடைய நாற்பத்திரண்டாவது வயதில், தன் காதோரங்கள் நரைத்து, கண்ணாடி போட்டு, லேசாய்ப் பூசின மாதிரி பருத்து, அந்த உயரத்திற்கும் பருமனிற்கும் காதோர நரைக்கும் மூன்றுநான்கு வயசு அதிகமாய்ச் சேர்த்து நாற்பத்தைந்து வயசு மதிக்கிறார்போல்.

    அந்த நரைதான் உங்களுக்குக் கம்பீரமாக இருக்கு. இந்தக் கண்ணாடிக்குள்ளிருந்து நீங்க பார்க்கிறபோது ஒரு ஜீனியஸ் பார்க்கிற பார்வையாய்த் தெரிகிறது.

    அதைக் கேட்டு அவரும் சிரிப்பார். அவள் சொல்வதில் அதிகம் புகழ்ச்சியில்லை என்றுகூடத் தோன்றும். அவளோடு இருக்கிற அந்த ராத்திரிகளில், அவருக்குத்தான் ஒரு பெரிய டாக்டர் என்பது மறந்துபோகும். தன் வயசு நாற்பத்திரண்டு என்பதும், தனக்குப் பதினாறு வயசுப் பெண் இருக்கிறாள் என்பதும், மற்ற டாக்டர்கள் எல்லோரும் பெயரைக்கூடச் சொல்லாமல் ‘சார்’ என்றே பக்தியோடு கூப்பிடுவதும் மறந்துபோகும்.

    மாயா யூ மேக் மீ எ சைல்ட். உன்னோட இருக்கிறபோது மட்டும்தான் நான் இப்படிக் குழந்தையாகிப் போகிறேன். ஏன் தெரியுமா? நீயே ஒரு குழந்தை மாதிரிதான் இன்னும் இருக்கே. ஒரு குழந்தைகிட்ட விளையாடறபோதுதான் நமக்கும் குழந்தைத்தனம் திரும்பி வரும், இல்லையா மாயா?

    தான் நிஜமாகவே சந்தோஷமாக இருந்த நாள்கள் அந்தச் சில ராத்திரிகள்தான் என்று நினைத்துக்கொள்வாள் மாயா. இந்தப் பதினேழு வருஷத்தில் அந்த ராத்திரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றும் தோன்றும். அதுவும் மஞ்சுவிற்குப்பின் எல்லாமே நாள் கடந்து ஏற்பட்ட வசந்தங்கள். மஞ்சு பிறந்த பின்புதான் நந்தகோபால் பெயரெடுக்க ஆரம்பித்திருந்தார். ராத்திரியும் பகலுமாய் உழைத்த உழைப்புத்தான், அந்தப்பெயரைக் கொண்டுவந்திருந்தது. அப்போது உழைப்பு, உழைப்பு என்று அலைந்துவிட்டு, இப்போது பணம் புகழ் பெயர் எல்லாம் கிடைத்த பின், அவருக்கு வாழ்க்கையின் அர்த்தம் லேசாகப் புரிகிறது. அதுவும்கூட லேசாகத்தான். அழகாய் வீணையை மீட்டுகிற மாதிரி இல்லை. தனியாய் வயலின் வாசிக்கிற மாதிரி இல்லை. மெலிசாய் கிடாரை இழைக்கிற மாதிரி இல்லை. மென்மையாய், சன்னமாய்ப் பாடுகிற மாதிரி இல்லை.

    ‘வேகத்தில் அதிர அடிக்கிற மரம் மாதிரி. இரைச்சலாய்க் கூட்டத்தோடு பாடி முடிக்கிற மாதிரி. தடதடவென்று பெரிதாய்க் கொட்டுகிற மழை மாதிரி’ ராத்திரி கொட்டின மாதிரி?

    அதை நினைத்ததும் அவள் சிரித்துக்கொண்டாள். நந்தகோபாலுக்கு அப்படி மழையாகக் கொட்டத்தான் தெரியும். இப்போது எதிரில் பெய்கிறார்போல் லேசாய் சின்னத் தூறலாய், இதமாய், உடம்பையும் மனசையும் குளிரவைக்கத் தெரியாது. அதற்கு அவருக்கு நேரமும் இல்லை.

    ‘என்ன நினைப்பு இது’ என்று சட்டென்று உடம்பைச் சிலிர்த்துக்கொண்டாள். மணி என்ன இருக்கும் என்று தனக்குள் கேட்டுக்கொண்டு திரும்பினபோது

    நீங்க இங்கேயா இருக்கீங்க? கீழே அண்ணா உங்களை ரூம் ரூமாகத் தேடுகிறார். விஸிட்டிங்கிற்கு நேரமாச்சு, அண்ணிகிட்ட சொல்லிட்டுப் போகணும், எங்கே காணோம்னு தவிச்சுக்கிட்டிருக்கார்.

    இதோ வந்துட்டேன், பாஸ்கர் கொஞ்ச நேரம் மழையைப் பார்த்துக்கிட்டிருந்தேனா, நேரம் போனதே தெரியலை.

    இன்னும்கூட நீங்க அப்படியே இருக்கீங்க, அண்ணி! சிரித்தான் பாஸ்கர்."

    அப்படியேன்னா எப்படி? சொல்லுங்க.

    மழை பெய்தால் குழந்தை மாதிரி வாசலுக்கு ஓடிப்போய் வேடிக்கை பார்க்கிற அண்ணியா, நல்ல பாட்டு வந்தால் ரேடியோ பக்கத்தில் காதை வச்சுக்கிற அண்ணியா, சின்ன விஷயத்துக்கெல்லாம் சந்தோஷப்படற அண்ணியா, எப்பவும் சிரிச்சுக்கிட்டிருக்கிற அண்ணியா, எல்லாத்துக்கும் மேலே நீங்க இந்த வீட்டுக்குக் கல்யாணம் பண்ணிட்டு வந்தபோது பார்த்த அதே அழகான அண்ணியா

    மாயா ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே படியிறங்கினாள். கூடவே அவனும் வந்தான். பாதிப் படிகள் இறங்கினதும் அவன் ஒரு நிமிஷம் தயங்கி, பின் சொன்னான்.

    உங்ககிட்டே எனக்குப் பிடிச்சது உங்களை நினைக்கிறபோது அன்பா, பாசமா, மதிப்பா, மரியாதையாத் தோணவைக்கிறது எது தெரியுமாண்ணி? நீங்க நீங்களாகவே இருக்கீங்களே, இந்த சுபாவம்தான்

    "சரிதான், பாஸ்கர். இன்னிக்கு என்கிட்டே உங்களுக்கு என்ன வேலை ஆகணும்? காலையில் எழுந்ததும் இப்படி ஐஸ் வைக்கிறீங்க?’’

    உங்ககிட்டே ஐஸ் வச்சால்தான் வேலையாகுமா என்ன? இல்லாட்டாவே ஆயிடுமே!

    மாயா அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டே, பரபரவென்று நந்தகோபாலுக்கு வேண்டிய வேலைகளைக் கவனித்தாள். அவருடைய சூட்டையும் டையையும் எடுத்து வைத்தாள். பையனைக் கூப்பிட்டு, மெடிக்கல் கிட்டையும், சில புஸ்தகங்களையும் காரில் கொண்டுபோய் வைக்கச் சொன்னாள். சமையலறைக்குப் போய் டிபன் தயாராகிவிட்டதா என்று பார்த்தாள். சமையற்காரரிடம் இட்லியையும் சட்னியையும் சாப்பாட்டு மேஜைமீது வைக்கச் சொல்லி டிபன் தட்டுக்களைத் துடைத்துப் போட்டபோது, மாடியிலிருந்து நந்தகோபாலும் மஞ்சுவும் இறங்கி வந்தார்கள். கையில் பிரித்த ஹிந்து பேப்பரோடு பாஸ்கரும் வந்து உட்கார்ந்தான். டிபனைத் தட்டில் எடுத்து வைத்துக்கொண்டே மாயா நந்தகோபாலைப் பார்த்தாள். அந்தப் பார்வையின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்ட அவர்,

    என்ன, மாயா? என்று கேட்டார்.

    "இல்லே நான் அடிக்கடி சொல்வேனே, அந்த யூத்

    Enjoying the preview?
    Page 1 of 1