Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கைகேயி - 96
கைகேயி - 96
கைகேயி - 96
Ebook112 pages45 minutes

கைகேயி - 96

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சம்பத் மண்டையைப் பிய்த்துக் கொள்ளாத குறைதான்.
 எல்லாருக்கும் சம்பளம் வந்தால், நிச்சயமாக அந்த நிமிஷமாவது சந்தோஷம்தான். ஆனால் சம்பத்துக்கு இல்லை!
 ஏற்கனவே போட்டு வைத்த பட்ஜெட்டில் பயங்கரமான இடி.
 வந்த சம்பளம் எதிர்பார்த்ததை விடக் குறைவு.
 கணக்கு வழக்கில் பயங்கர உதை.
 வெறுப்பாக இருந்தது.
 'எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை?'
 'இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எதுவும் முடியாது.'
 'யாரிடம் கடன் கேட்பது?'
 'சிரிக்க மாட்டார்களா?'
 'இப்போதுதானே சம்பளம் வாங்கினாய்! அதற்குள் கடன் வாங்குகிறாயா? அப்படி என்ன செலவு உனக்கு?'
 'நினைக்க மாட்டார்களா?'
 தேசிகன் வந்தான்.
 "சம்பத் நூறு ரூபாய் எடு!"
 "எதுக்கு?"
 "எடேன்!"காரணத்தைச் சொல்லுப்பா!"
 "ஒரு டூர் ஃபண்ட் கலெக்ட் பண்ணப் போறேன். மாசம் நூறு ரூபா. ஒரு வருஷம் கலெக்ட் பண்ணினா, அதோட வட்டியும் சேரும். ஜாலியா லீவு போட்டுட்டு டூர் போகலாம் இல்லையா? என்ன சொல்ற?"
 "நான் வரலை!"
 "நீ சுத்த முசுடுடா! புதுசா போன வாரம் வேலைல சேர்ந்தவன் பவித்ரன். அவன் கலந்துக்கறான், எல்லாத்துலேயும்."
 "எனக்கு இஷ்டமில்லை!"
 "வேண்டாம். உன்னை மாதிரி ஆட்கள் வந்தா மொத்தப் பேரோட 'மூடும்' கெடும்!"
 வாய் வார்த்தை தடிக்கத் தொடங்க,
 எல்லாரும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.
 புதிய பவித்ரன் எழுந்து வந்தான்.
 "விடுங்க சம்பத்! தேசிகன், நீங்க போங்க!"
 கலைத்து விட்டான்.
 அஞ்சரைக்கு ஆபீஸ் முடிந்து விட்டது.
 சம்பத் மட்டும் வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 14, 2023
ISBN9798223813538
கைகேயி - 96

Read more from Devibala

Related to கைகேயி - 96

Related ebooks

Related categories

Reviews for கைகேயி - 96

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கைகேயி - 96 - Devibala

    1

    சம்பத் மண்டையைப் பிய்த்துக் கொள்ளாத குறைதான்.

    எல்லாருக்கும் சம்பளம் வந்தால், நிச்சயமாக அந்த நிமிஷமாவது சந்தோஷம்தான். ஆனால் சம்பத்துக்கு இல்லை!

    ஏற்கனவே போட்டு வைத்த பட்ஜெட்டில் பயங்கரமான இடி.

    வந்த சம்பளம் எதிர்பார்த்ததை விடக் குறைவு.

    கணக்கு வழக்கில் பயங்கர உதை.

    வெறுப்பாக இருந்தது.

    ‘எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை?’

    ‘இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எதுவும் முடியாது.’

    ‘யாரிடம் கடன் கேட்பது?’

    ‘சிரிக்க மாட்டார்களா?’

    ‘இப்போதுதானே சம்பளம் வாங்கினாய்! அதற்குள் கடன் வாங்குகிறாயா? அப்படி என்ன செலவு உனக்கு?’

    ‘நினைக்க மாட்டார்களா?’

    தேசிகன் வந்தான்.

    சம்பத் நூறு ரூபாய் எடு!

    எதுக்கு?

    எடேன்!

    காரணத்தைச் சொல்லுப்பா!

    ஒரு டூர் ஃபண்ட் கலெக்ட் பண்ணப் போறேன். மாசம் நூறு ரூபா. ஒரு வருஷம் கலெக்ட் பண்ணினா, அதோட வட்டியும் சேரும். ஜாலியா லீவு போட்டுட்டு டூர் போகலாம் இல்லையா? என்ன சொல்ற?

    நான் வரலை!

    நீ சுத்த முசுடுடா! புதுசா போன வாரம் வேலைல சேர்ந்தவன் பவித்ரன். அவன் கலந்துக்கறான், எல்லாத்துலேயும்.

    எனக்கு இஷ்டமில்லை!

    வேண்டாம். உன்னை மாதிரி ஆட்கள் வந்தா மொத்தப் பேரோட ‘மூடும்’ கெடும்!

    வாய் வார்த்தை தடிக்கத் தொடங்க,

    எல்லாரும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.

    புதிய பவித்ரன் எழுந்து வந்தான்.

    விடுங்க சம்பத்! தேசிகன், நீங்க போங்க!

    கலைத்து விட்டான்.

    அஞ்சரைக்கு ஆபீஸ் முடிந்து விட்டது.

    சம்பத் மட்டும் வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

    பவித்ரன் அருகில் வந்தான்.

    எக்ஸ் க்யூஸ் மீ!

    சம்பத் நிமிர்ந்தான்.

    நான் வந்து ஒரு வாரமாச்சு. எல்லார்கிட்டேயும் சகஜமாப் பழகத் தொடங்கிட்டேன். நீங்கதான் அதிகம் ஒட்டலை என்கிட்ட!

    சம்பத் பேசவில்லை.

    வாங்களேன்! ஹோட்டல்ல போய் ஒரு காபி குடிச்சிட்டு பேசலாம்!

    நிமிர்ந்து பார்த்தான் சம்பத்.

    பவித்ரனிடம் ஒரு வசீகரம் தெரிந்தது.

    அவனுடன் போக வேண்டும் என்று தோன்றியது.

    எழுந்தான்.

    இருவரும் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தார்கள்.

    என்ன சாப்பிடறீங்க சம்பத்?

    ஜஸ்ட் காபி!

    மத்யானம் சாப்பிட்டது தானே! டிபன் சொல்றேன்!

    சம்பத் மறுக்கவில்லை.

    நல்ல டிபனாக ஆர்டர் கொடுத்தான்.

    உங்களுக்குக் கல்யாணம் ஆயாச்சா சம்பத்?

    இல்லை!

    அப்ப ரெண்டு பேரும் ஒரே மாதிரித்தான். எனக்கும் ஆகலை! உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க சம்பத்?

    நானும் எங்கம்மாவும் மட்டும்தான்!

    வெரிகுட்! ஆங்... சம்பத், உங்களால எனக்கு உதவ முடியுமா?

    எப்படி?

    நான் வந்த முதல், தூரத்து உறவுக்காரங்க ஒருத்தர் வீட்லதான் தங்கியிருக்கேன். அது ரொம்ப நாளைக்கு சாத்தியமில்லை! அதனால பேச்சிலர்களா ஷேரிங் அக்காமடேஷன் ஏதாவது கிடைச்சா நல்லது!

    தெரியலை எனக்கு! விசாரிச்சுப் பாக்கறேன். உங்களுக்கு சொந்தக்காரங்க...?

    சொல்லும்படி யாரும் இல்லை சம்பத். நான் தனிக்கட்டைதான்.

    டிபன் வந்தது.

    அமைதியாக இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

    ஸாரி சம்பத்! நான் கேக்கறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்...!

    கேளுங்க!’

    ஏன் ஒரு மாதிரி ‘டல்’லாவே இருக்கீங்க எப்பவும்? சொல்லக் கூடாதுன்னா வேண்டாம்

    அப்படியெல்லாம் இல்லை!

    ......!

    பணப்பிரச்சினைதான். சமீபத்துலதான் ஒரு தங்கச்சியைக் கல்யாணம் செஞ்சு கொடுத்தேன். அதுக்கு மூணு வருஷம் முன்னால ஒருத்தி... கடன்கள் எக்கச்சக்கம். லோன் வாங்கினதெல்லாம் பிடித்தம் போகுது. அம்மா ரத்த அழுத்தம் உள்ளவங்க. அடிக்கடி டாக்டர் செலவு. எத்தனைதான் கடன் வாங்க முடியும் பவித்ரன்? அதான் சம்பளம் வர்ற அன்னிக்கு அதிகமா கவலை வருது. இந்த சிக்கல் என்னிக்கு தீருமோனு கவலையா இருக்கு!

    பவித்ரன் பேசவில்லை.

    வேறென்ன சாப்பிடறீங்க?

    போதும்!

    கை கழுவினார்கள்.

    பில் வந்தது. பணம் எடுத்துத் தந்தான் பவித்ரன்.

    வெளியே வந்தார்கள்.

    இந்த மாசம் என்ன பற்றாக் குறை?

    அது நிறைய பவித்ரன்

    ‘அப்படியில்லை. உத்தேசமா ஒரு தொகை இருந்தா, சமாளிக்கலாம்னு இருக்குமில்லையா?"

    ஆயிரம் ரூபா!

    பவித்ரன் சட்டென சம்பளக் கவரைத் திறந்து பத்து நூறு ரூபாய்த் தாள்களை உருவினான்.

    இந்தாங்க சம்பத்!

    பவித்ரன், இதை நான் எப்படி உங்களுக்கு?

    நாளைக்கு ஸன்டே!!

    ஆமாம்!

    உங்க வீட்டுக்கு நான் வரலாமா? அம்மாவையும் பார்த்த மாதிரி இருக்கும்.

    ஷ்யுரா! இத்தனை பணம்...!

    அந்தக் கணக்கை அப்புறமா பேசிக்கலாமே! போலாமா?

    சரி பவித்ரன்!

    இருவரும் திசை மாறி பஸ்களில் ஏற, சம்பத்தின் முகத்தில் வாட்டம் லேசாக மறைந்து கொஞ்சம் மலர்ச்சி வந்திருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டை சம்பத் அடையும் சமயம் இரவு எட்டு.

    அம்மா வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

    வந்துட்டியாப்பா? நிம்மதியில்லாம தவிக்கறேன் நான்!

    மணி எட்டுதான்மா ஆச்சு!

    சரிப்பா! ஆறரைக்கு டாண்ணு வந்து நிப்பியே! ஒண்ணரை மணி நேர லேட்டாயிடுச்சே!

    நான் பச்சக் குழந்தையாம்மா?

    எனக்குக் குழந்தைதானே?

    உள்ளே வந்தான். முகம் கழுவி, உடை மாற்றி லுங்கியோடு வெளிப்பட்டான்.

    சாப்பிட வா சம்பத்!

    எனக்கு வேண்டாம்மா!

    கடன் கவலைகளா? விடுப்பா! அலை ஓஞ்சு எப்பக் குளிக்கப்போறம். வயித்தை காயப்போடாதே!

    இல்லைமா! ஓட்டல்ல ஸ்நேகிதன் ஒருத்தன் டிபன் வாங்கித் தந்தான்!

    எழுந்து போய் சம்பளக் கவரை எடுத்து வந்தான்.

    இந்தாம்மா

    அம்மா வாங்கிக் கொண்டாள்.

    இதையும் புடி!

    தனியாக ஆயிரம் தந்தான்.

    இது ஏதுப்பா?

    பவித்ரன் விவரம் முழுக்கச் சொன்னான் சம்பத்.

    "நல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1