Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iyarkaiyin Kaaval Kavasangal
Iyarkaiyin Kaaval Kavasangal
Iyarkaiyin Kaaval Kavasangal
Ebook134 pages48 minutes

Iyarkaiyin Kaaval Kavasangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இயற்கை மனிதனுக்கு எந்தெந்த வகையில் உதவி புரிகின்றன என்பதையும், மனிதனால் இயற்கைக்கு ஏற்படும் தீமைகள் பற்றியும், அதனால் நிகழும் தீய விளைவுகள் எவ்விதமான ஆபத்தை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை பற்றியதே இயற்கையில் காவல் கவசங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580160509418
Iyarkaiyin Kaaval Kavasangal

Read more from W.R. Vasanthan

Related to Iyarkaiyin Kaaval Kavasangal

Related ebooks

Reviews for Iyarkaiyin Kaaval Kavasangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iyarkaiyin Kaaval Kavasangal - W.R. Vasanthan

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    இயற்கையின் காவல் கவசங்கள்

    Iyarkaiyin Kaaval Kavasangal

    Author :

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகவுரை

    பூமிக்கு ஒரு குடை

    பூமியின் பச்சை நுரையீரல்

    மிதக்கும் தண்ணீர்ப் போர்வை

    உயிர் காக்கும் ஒளி விளக்கு

    ஆழத்தில் ஒரு அதிசயம்

    ஒளியும், ஒலியும்

    காக்கும் கண்ணாடி வீடு

    முகவுரை

    இயற்கை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் அற்புத வினோதங்கள் அளவிட முடியாதவை. அதனுடைய பாதுகாப்பு ஒழுங்கமைப்புகள் எப்படியெப்படி ஒன்றுக்கொன்று இணைந்து இந்த பூகோள உருண்டையையும், உயிரினங்களையும், தாவரங்களையும் பாதுகாக்கிறது என்பது கற்பனைக்கும் எட்டாத விந்தை. அறிவியலின் வளர்ச்சி அவை செயல்படும் விதத்தை அலசி ஆராய்ந்து நமக்குச் சொல்லுகிறது.

    ‘இயற்கையின் காவல் கவசங்கள்’ என்ற இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஏழு கட்டுரைகளும், ஏழு வகையான பாதுகாப்பு ஒழுங்கமைப்புகளைப் பற்றிச் சொல்கிறது. ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல, அறிவியல் புத்தகங்களுக்குள் புகுந்து, பத்திலிருந்து பதினைந்து வயது வரையான குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் மட்டும் தகவல்களைச் சேகரித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

    குழந்தைகளுக்கு அறிவியல் புத்தகம் எழுதுவது என்பது சற்று கடினமான வேலை. பள்ளிக்கூடத்தில் கொள்கைகள், கோட்பாடுகள், விதிகள், சமன்பாடுகள் என்று அறிவியலோடு போராடும் சிறார்கள், தாங்களே விரும்பி, பிறர் துணையில்லாமல் படிக்கும் வண்ணம் சுவையாக எழுதினால்தான் புத்தகம் எழுதுவதன் நோக்கம் நிறைவேறும். எனவேதான் இந்தக் கட்டுரைகள் உரையாடல் பாணியிலும், கதை சொல்லும் உத்தியிலும் எழுதப்பட்டுள்ளன.

    இதில் வரும் கதாபாத்திரங்களோடு உறவாடி, அதே நேரத்தில் எளிதாக அறிவியல் தகவல்களை அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய மொழிநடையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    வெறுமனே விஞ்ஞானத் தகவல்களை மட்டும் சொல்லாமல், சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதால், இயற்கையின் காவல் கவசங்களை நாம் எப்படி சிதைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் தரும் உண்மைகளையும் இக்கட்டுரைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன். இதைப் படிக்கும் குழந்தைகளுக்கும் சுற்றுப்புறச்சூழலைப் பற்றிய அறிவும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

    இக்கட்டுரைகளை எழுத பெருமளவில் பயன்பட்டவை விஞ்ஞான பத்திரிகைகள்தான். குறிப்பாக ‘வாட்ச் டவர் சொஸைட்டி’யால் வெளியிடப்படும் ‘அவேக்’ (AWAKE) பத்திரிகை. அதில் பல வருடங்களினூடே வந்த அறிவியல் கட்டுரைகள் பெருமளவில் உதவின. மேலும் சில அறிவியல் புத்தகங்களும், கலைக் களஞ்சியமும் சில தகவல்களைத் தந்தன.

    இயற்கையின் அற்புத வினோதங்களை நோக்க நோக்க அண்ட சராசரங்களையும் உருவாக்கி, கண்ணுக்குத் தோன்றாமலே அவற்றை இயக்கிக் கொண்டிருக்கும் இறைவனின் எல்லையற்ற ஞானத்தையும், ஆற்றலையும் வியந்து போற்றத் தோன்றுகிறது.

    ஓர் ஆழகிய வீட்டைப் பார்க்கும்போது, அதைக் கட்டியவனின் மதி நுட்பமும், அதன் பின்னால் மறைந்திருக்கும் அறிவுக் கூர்மையுந்தான் நம் மனக் கண்ணில் தோன்றுகின்றன. அந்த வீடு, தானாக வந்துவிட்டது என்று யாராவது சொன்னால், நிச்சயமாக நகைப்பைத்தான் அது தோற்றுவிக்கும். ஆனால் அணுவிலிருந்து, அகிலாண்டம் வரை இத்துணை ஒழுங்காக திட்டமைக்கப்பட்ட இயற்கையின் அமைப்பும், அதன் இயக்கமும் தானாக வந்துவிட்டன என்று கூறுவது அறிவியல் மடமை அல்லாமல் வேறென்ன?

    1993-ம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய ஏ.வி.எம் அறக்கட்டளையின் அறிவியல் நூல்களுக்கான போட்டியில், இந்நூல் முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வென்றது.

    இந்த நூலைப் படிக்கையில், அறிவியலின்மேல் விசாலாட்சிக்கும் வித்தியாதரனுக்கும் ஏற்பட்ட ஆவல் உங்களையும் நிச்சயமாகத் தொற்றிக்கொள்ளும்.

    - வி.ர. வசந்தன்

    கட்டுரைகளை எழுத உதவிய பத்திரிகைகளும் புத்தகங்களும்

    1. AWAKE!

    2. SCIENCE TO DAY

    3. INSIGHT

    4. LIFE

    5. THE WORLD BOOK ENCYCLOPEDIA

    பூமிக்கு ஒரு குடை

    கோடை வெயில் பிற்பகலில் வெளியே தலை காட்ட முடியாதபடி அனலை வீசிக்கொண்டிருந்தது. அன்று மாலையே மாமா ஊர் திரும்ப வேண்டும். அதற்குள் அவரை எப்படியாவது கடைவீதிக்கு அழைத்துச்சென்று விடுவதில் முனைப்பாக இருந்தான் வித்தியாதரன்.

    அவன் மாமாவை நச்சரித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவாறு, உள்ளே இருந்து வந்த அம்மா, ஏண்டா வித்தியா, வெயில் அனலாக விழுந்துட்டு இருக்கு, சாயங்காலம் மாமா ஊருக்குக் கிளம்பணுமில்லியா... சாப்பிட்டுட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கட்டுமே என்றாள் அதட்டும் குரலில்.

    வித்தியாதரன் மாமாவின் முகத்தைப் பார்த்தான்.

    அவனுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத மாமா, பரவாயில்லைக்கா, அவனுக்கு கிரிகெட் பேட்டும், தொப்பியும் வாங்கித்தரதா சொல்லியிருக்கேன்... விசாலாட்சிக்குக்கூட குடை வாங்கணும். சீக்கிரமா போயிட்டு வந்திர்றோம் என்று எழுந்தார்.

    ஜ, மாமான்னா மாமாதான் என்று துள்ளிக் குதித்த வித்தியாதரன், விசாலாட்சியைப் பார்த்து, எதுக்குடி குடை? பட்டப் பகல்ல குடைப் புடிச்சுட்டுப் போனா, இந்த காலத்துல சிரிப்பாங்க என்றான்.

    சிரிச்சா சிரிக்கட்டுமே, வெயில்ல மண்டை காயறது நானில்லையா, சிரிக்கறவங்க இல்லையே... மற்றவங்களுக்காக குல்லா மாட்டிக்கிறவனுக்கு கோமாளின்னு பேரு என்ற விசாலாட்சி, அவனைப் பார்த்து உதட்டைச் சுளித்து அழகு காட்டினாள்.

    இருவரையும் பார்த்து புன்னகைத்த மாமா உண்மையிலேயே குடையைப் பயன்படுத்தறது ஒரு நல்ல பழக்கம், ஏன் தெரியுமா? அதனால் சூரிய வெளிச்சத்தில் இருக்கிற நச்சுக் கதிர்கள் நம்மைத் தாக்காம காப்பாத்திக்க முடியும் என்றார்.

    வித்தியாதரன் அவரைப் பார்த்து அது என்ன மாமா, சூரிய வெளிச்சத்தில் கூட நச்சுக் கதிர்கள் இருக்கா? என்று கேட்டான்.

    ஆமாம் வித்தியா, சூரியன் இல்லேன்னா, இந்த உலகம் ஒரு சில நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. நம்முடைய உலகத்துக்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும் கொண்டு வரும் சூரியக் கதிர்களில் பெரும்பாலானவை நன்மை தருவதுதான். ஆனால் அதில் ஒரு சிறு சதவிகிதம் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதற்கு புற ஊதா - பி கதிர்கள் (ULTRA VIOLET - B) என்று பெயர். இந்தக் கதிர்கள் முழுவதும் பூமியை வந்து அடையுமானால் இங்கு உயிர் வாழ்கிற எல்லா உயிரினங்களையுமே அழித்துவிடும். அந்த அளவுக்கு அவை கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றார்.

    விசாலாட்சி முகத்தில் ஆர்வம் பொங்க, அப்படின்னா, அந்தக் கதிர்கள் பூமியை அடைய முடியாமல், ஏதாவது தடுத்துட்டு இருக்கா மாமா? என்று கேட்டாள்.

    சரியாகக் கேட்டாய் என்று அவளைப் பாராட்டிய மாமா, நாம் வெயில் தாக்காதபடி, குடையைப் பிடித்துக்கொள்கிறோம் இல்லையா? அதுபோல, இந்தப் பூகோள உருண்டைக்கும் ஒரு குடை இருக்கிறது. அந்தக் குடைதான் நச்சுக் கதிர்கள் பூமியை தாக்காதவாறு தடுக்கிறது என்று புதிரோடு அவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.

    வித்தியாதரனும், விசாலாட்சியும் உற்சாகம் கொப்பளிக்க, "என்னது, இந்த பூமிக்கு குடை இருக்கா? அதைப்

    Enjoying the preview?
    Page 1 of 1