Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mann Kuthirai
Mann Kuthirai
Mann Kuthirai
Ebook111 pages43 minutes

Mann Kuthirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வரதட்சணை கொடுமையால் தினம் தினம் கஷ்டப்படும் பெண்ணான சூரியா. சூரியாவின் வாழ்க்கையில் விக்ரம் அவர்களின் குடும்பத்தார்களால் ஏற்பட்ட பிரச்சனை என்ன? பிரச்சனைகளிலிருந்து வெளியேற சூரியா என்ன செய்தாள்? உடலால் ஏற்பட்ட ஊனத்தை விட உள்ளத்தால் ஏற்பட்ட ஊனத்தால் பாதிக்கப்பட்ட சூரியாவின் கதையை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580155608833
Mann Kuthirai

Read more from Lakshmi

Related to Mann Kuthirai

Related ebooks

Reviews for Mann Kuthirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mann Kuthirai - Lakshmi

    http://www.pustaka.co.in

    மண் குதிரை

    Mann Kuthirai

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    சரவணாலயத்தின் முன்னால் ஒரு வழியாக ஸ்கூட்டரைக் கொண்டு வந்து விக்ரம் நிறுத்தினான்.

    அங்கு வந்து சேர்வதற்குள் எத்தனை குலுக்கல்கள்?

    கற்சட்டியில் ஊறப்போட்ட மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைக்குமுன் அம்மா குலுக்குவார்களே? அதைப்போல் அவளைப் போட்டுக் குலுக்கித் தள்ளிக்கொண்டு வந்து இறக்கிவிட்டான் விக்ரம்.

    ஸ்கூட்டர் வாங்கிய இரண்டு மாதத்திற்குள் இந்தப் பயணத்தினால் அவள் உடலில் உள்ள ஒவ்வொரு தசையும் வலித்தது. எலும்புகள் அலறின. உன்னைக் கொண்டு இங்கே விட்டுட்டு நான் என் ஆபீசிற்குப் போகிறதுக்குள்ளே தினமும் கொஞ்சம் தாமதமாகிறது. அந்த மானேஜர் எரிஞ்சு விழறான் முணுமுணுத்தான் விக்ரம்.

    உட்காரும் இடத்திற்குப் பின்னால் இருந்த கம்பியை இறுக்கப் பிடித்துக்கொண்டு வந்ததில் அவள் கை சிவந்து வலித்தது. ஒரு பக்கமாகத் தலையைத் திருப்பிக்கொண்டு அவன் பேச வந்ததை உற்றுக் கேட்க முயன்றதினால் அவள் கழுத்து வலித்தது. அவனது முணுமுணுப்பைக் கேட்டு இப்போது நெஞ்சு வலித்தது.

    பேசாமல் வழக்கம்போல பஸ்சில் கூட்டத்திற்குள் மூச்சைப் பிடித்துக்கொண்டு வந்திருக்கலாம்.

    நான்கு ஆண்டுகளாக அவள் அந்த அலுவலகத்திற்கு பஸ்சில்தான் வந்து கொண்டு இருந்தாள். கல்யாணம் ஆகுமுன் அடையாறில் இருந்து அங்கு வந்து கொண்டு இருந்தாள். இப்பொழுது கொஞ்சம் முன்னேறி மந்தை வெளியில் இருந்து வந்து கொண்டு இருந்தாள்.

    பயணம் செய்ய வேண்டிய தூரத்தில்தான் அவள் முன்னேறியிருந்தாள். வாழ்க்கையில்?

    சூரியாவுக்கு ஸ்கூட்டர் பின்னால் சவாரி செய்வது புதிய அனுபவமில்லை. பஸ் தவறிவிட்ட பொழுது எத்தனையோ முறை அவள் அண்ணன் சுகுமாரின் ஸ்கூட்டர் பின்னால் அதே அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள்.

    தலைப்பு காற்றில் பறக்காது மேல் புடவை சரியாது சீராக இழுத்துச் சொருகிக்கொண்டு, தோளின்மீது பையைப் போட்டுக்கொண்டு, மடிமீது குடையை வைத்தபடி பொம்மை போல் ஒரு கையை மெல்ல அண்ணன் தோளில் வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் பின்னால் இருந்த இரும்புக் கம்பியை பிடித்துக் கொண்டு பயணம் செய்த அனுபவம் அதிகம் இருந்தது.

    சுகுமாரன் ஜாக்கிரதையாக வண்டியை ஓட்டுவது வழக்கம்.

    அவள் கணவன் விக்ரமைப் போல் வெறிபிடித்த வேகத்தில் ஓட்டமாட்டார். தெருவில் இருக்கும் குண்டு குழிகளைப் பார்த்துப் பின்னால் இருப்பவளை மறக்காது கருத்துடன் கவனமாகக் கூடிய மட்டும் மெல்லவே ஓட்டுவார்.

    அண்ணனுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் இருந்தனர். அதனால் ஏற்பட்ட பொறுப்புணர்ச்சி, மேலும், பத்து ஆண்டுக்குமேல் ஸ்கூட்டரில் பயணம் செய்த அனுபவம்.

    அவள் கணவன் விக்ரமுக்கு அந்த வாகனம் கைக்குக் கிடைத்து கொஞ்ச காலந்தானே ஆகிறது? அதற்கு முன்னால் அவன் சாதாரண சைக்கிளைத்தானே பயன்படுத்தினான். வேலை உயர்வு காரணமாக அம்பத்தூர் தொழில் பேட்டையில் இருந்த தொழிற்சாலை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டான். மாமனார் ஸ்கூட்டர் வாங்கித் தரும்வரை காத்திருக்க முடியவில்லை. அம்மாவைக் கேட்டு வற்புறுத்திக் கடனாக தொகை வாங்கி அந்த வாகனத்தை வாங்கினான்.

    வழி நெடுகிலும் விக்ரம் உரத்த குரலில் பேசிக் கொண்டு வந்தான். சாலையில் ஓடிக்கொண்டிருந்த மற்ற வாகனங்கள் எழுப்பிய ஓசையில், ஸ்கூட்டர் எழுப்பிய சத்தத்தில், விர் என முகத்தில் மோதி தலைமுடியைப் புரட்டிக் கொடுத்த காற்றின் ஓசையில் அவளுக்கு சில வார்த்தைகள்தான் கேட்டன. ஆனாலும் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு விட்டாள்.

    உங்கப்பா ஸ்கூட்டர் வாங்கித் தருவதாகச் சொன்னாரே, என்னாச்சு?

    சில நாளாக அவன் திரும்பத் திரும்ப அவளைக் கேட்கும் கேள்விதான்.

    வேலை முடிந்ததும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் மாமியார், மாமனார், நாத்தி, மைத்துனர் நாலு பேரிடம் இருந்தும் நான்கு விதமாக எழுந்த வார்த்தைகளின் ஒட்டு மொத்த உருவந்தான் அந்தக் கேள்வி.

    கல்யாணமான மூணாவது மாசமே வாங்கித்தரதா சர்க்கரையாகப் பேசினாரு சம்பந்தி. ஆறுமாசமாகப் போவுது. சத்தத்தையே காணோமே. வேலையில் இருந்து வந்ததும் வராததுமாக மாமியார் காபி தம்ளரை சாப்பாட்டு மேசைமீது வைத்துவிட்டு, சூடான வார்த்தைகளையும் பரிமாறினாள்.

    முதலில் மவுனமாகத் தாயைப் பார்த்து விக்ரம் முறுவலிப்பது வழக்கம். நாட்கள் செல்லச்செல்ல, அம்மாவின் வார்த்தைகளில் சூடும் ஏற ஏற, அவன் முகத்தில் முறுவல் மறைந்து கடுமை பரவியது. இன்னுமா உன் மாமனார் ஸ்கூட்டர் வாங்கித் தருகிறார்? தங்கை இடித்துக் காட்டினால் போதும்; அவன் முகம் சுருங்கிப் போகும். அருகில் களைப்புடன் காபி பருக உட்காரும் மனைவியைக் கண்களால் வெட்டுவான்.

    அண்ணனின் மாமனார் ஸ்கூட்டர் விற்பனை கம்பெனி ஒன்று திறக்கப் போகிறாராம். முதல் போணி நம் அண்ணன்தானாம்! கையில் புத்தக அடுக்குடன் வியர்வை வடிய உள்ளே நுழையும் தம்பி குமாரின் கேலிப்பேச்சு அவன் காதுகளைச் சிவக்கச் செய்துவிடும். தம்பி குமார் அவனைவிட வயதில் சிறியவன். பார்மசி தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவன். ஆனால் பேச்சில் தமயனை மிஞ்சியவன். தம்பிக்குப் பதில் அளிக்கத் தெரியாது கண்களால் மனைவியைச் சுடுவான்.

    உன் மாமனாருக்கு நாலுமுறை கடிதம் எழுதிட்டேன். பதிலையே காணோம். ஆசாமி பெரிய ஆள்தான். மாமனார் சிவபாதம் தொடுக்கும் கணை.

    ஆயிரம் பொய் சொல்லி ஒரு தாலியைக் கட்டுன்னு சொல்வாங்க. ஸ்கூட்டர் வாங்கித் தரேன்னு சொன்னது முதல் பொய். இன்னும் தொளாயிரத்து தொண்ணூத்து ஒன்பது பொய்கள் அண்ணன் மாமனார் வீட்டில் இருந்து சீதனமாக வரப்போகுது தங்கை ரேவதி உரத்த குரலில் கூறிவிட்டு உள்ளே ஓடிவிடுவாள்.

    நான்கு பக்கமும் வந்து விழுந்த சொல் அம்புகளுடன், கணவன் கண்களின் ஈட்டி பார்வையின் தாக்குதலையும் காபியுடன் விழுங்கிவிட்டு அமைதியாக அவள் எழுந்து குளியலறைக்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1