Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nadikanin Kaadhali
Nadikanin Kaadhali
Nadikanin Kaadhali
Ebook127 pages51 minutes

Nadikanin Kaadhali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704169
Nadikanin Kaadhali

Read more from Lakshmi Rajarathnam

Related to Nadikanin Kaadhali

Related ebooks

Reviews for Nadikanin Kaadhali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nadikanin Kaadhali - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    நடிகனின் காதலி

    Nadikanin Kaadhali

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    சரிதாவின் கண்களில் கனவு ஊர்வலம் வந்தது. பருவ வயதில் வாலிபக் கனவுகள் வருவது நடைமுறையில் உள்ளதுதான். காரணமில்லாமல் எதைப் பார்த்தாலும் ஒரு சிரிப்பு. துள்ளாத மனமும் துள்ளும் வகையில் ரசிப்பு... கொண்டாட்டம். தன்னால் எல்லாம் முடியும். தனக்குத்தான் எல்லாம் சொந்தம் என்ற ஒரு உரிமைத் திணிப்பு உள்ளத்தில் குமிழியிடும் ஆர்ப்பாட்டம். அழகாக அலங்கரித்துக் கொண்டால் அழகான வாலிபன் என்னை மறைந்து நின்று பார்க்கிறானோ என்ற கள்ளத்தனமான கண்விழிப்பு.

    தோழிகளுக்கு கல்யாணம் என்றால் ஒருவித ஏக்கம் உள்ளத்தில் தழுவினாலும் போகாத பாசியாகவே படரும். இந்த உணர்வு வசதி படைத்த சரிதாவுக்கு மட்டும் பீரிடும் உணர்வல்ல. முறை வாசல் தெளித்துக் கோலம் போடும் முத்தக்காவுக்கும் ஏற்படும் உணர்வு. தெருக்கோடியில் டீக்கடையில் அரையடி உயரத்திற்கு டபரா தம்ளரில் தேநீரை ஆற்றிக்கொண்டு ஒரு எதலன் இருப்பான்.

    அப்படியானால் சரிதாவுக்கும் ஒரு காதலன் இருக்கிறானா என்ற சந்தேகம் வருவது நியாயம்தான். நெஞ்சில் விரிந்து கிடக்கும் அந்த சினிமா புத்தகம்தான் கனவை பட்டுப் பாயாக விரித்தது. மலை நகரத்துப் பன்னீர் சாரலாகத் தெளித்தது. கனவே கலையாதே என்று இள மனசு பண்பாடி கும்மியடித்தது.

    காதலா என்று மலை உச்சியில் நின்று பாட வேண்டும் போல் நீரூற்றுப் பொங்கி அலையடித்தது. அவளுக்குக் கனவை ஊட்டியவன் அந்த சினிமா புத்தகத்தில்...

    பலவித, போஸ்களில்... மலரைத் தழுவியது போல் மங்கையர்களைத் தழுவுகிறானே... அது நானாக இருக்கக் கூடாதா? அவளுடைய இள நெஞ்சைத் துடிக்க வைத்தது.

    மோகனப் புன்னகையை இதழ்களில் சுமந்து -

    உதடுகள் சிரிக்கும் பொழுது கண்களும் சிரித்து -

    அரும்பு மீசையின் அடியில் சிவந்த உதடுகள் -

    எந்த வேடத்திற்கும் பொருத்தமான உடற்கட்டு -

    அந்த கதாநாயகன் பெயர் நவநீத், ஆயர்பாடி கண்ணன் வெண்ணெய் திருடியதால் நவநீதன் என்று பெயர். இவன் பெண்களின் உள்ளம் கவர் நவநீத். காதலிலே இவன் மன்னனோ! இவனுக்கு ஒரு காதலி இருப்பாளோ. அப்படிப்பட்ட நினைப்பையே அவளால் தாங்க முடியவில்லையே...

    கண்கள் மூடி இருந்தாலும், நவநீத், நீங்கதான் என்ன பர்ஸனாலிடி? வாய்விட்ட கூவினாள். குயிலாகக் கூவுகிறாயே என்று சொல்ல அந்த நவநீத் எதிரில் இல்லையே. விட்ட பெருமூச்சில் நெஞ்சில் கவிழ்ந்து கிடந்த புத்தகம் ஊஞ்சலாடியது.

    இந்த ஹீரோவின் அருகில் நான் இருந்தால்? அந்த பாக்யம் கிடைக்குமா? குயிலாக அவன் தோளில் அமர்ந்து கூவ வேண்டும் வேண்டாம்... வேண்டாம் குயில் கருப்பு. குரல்தான் இனிமை... பச்சைக் கிளியாக அமர்ந்து குயில் குரலில் மிழற்ற வேண்டும். அவன் பேரையே கூவ வேண்டும். நவநீத். நவநீத்.

    புத்தகம் தவறி விழுந்தது. கனவு அரை நினைவோடு மயக்க நிலை கலைந்தது. கட்டிலிலிருந்து எழுந்து கீழே விழுந்த புத்தகத்தை எடுத்தாள். அந்தப் பக்கத்தைப் பிரித்தாள். நவநீத் பற்றிய செய்திகள் வண்ணப் புகைப்படங்கள். அவனே புதுப்படத்தில் ஒரு பாட்டு பாடிய செய்தியுடன் அவன் சென்னை திரும்பும் செய்தியும் தேதியும் போடப்பட்டிருந்தது.

    ஓ... ஐஸு. இன்னிக்கு செவ்வாய்க்கிழமை. நாளை மறுநாள் வியாழக்கிழமை வருகிறான். அன்றைய தினம் ஏர்போர்ட் போனால் என்ன? அவளுடைய நாய் ஜிம். அதற்கு வால் இல்லை. வால் இருந்தால் ஆட்டி இருக்கும். இரண்டு தாவலுடன் வந்து நின்றது. அவள் மடியில் முகத்தை உராய்ந்தது. அவள் 'ஜிம்' மை கவனிக்கவில்லை. தோளில் காலை வைத்து ஏறி கவனத்தைக் கவரப் பார்த்தது.

    சரிதாவின் மனத்தில் இருக்கும் நவநீத் அதன் கண்களுக்குத் தெரியவில்லை. அவனுடைய நினைவில் தோய்ந்ததனால் தான் தன்னை கவனிக்கவில்லை என்பது அதுக்குத் தெரியவில்லை. பாவம்! சரிதா மூட் அவுட்டானால் அதை முரட்டுத்தனமாகப் பிடித்துத் தள்ளிவிடுவாள். அந்த முரட்டுத்தனம் தனக்குத்தான் சொந்தம் என்பதுபோல் மீண்டும் மீண்டும் அவள் மீது தாவும் அந்த சின்ன ஜீவன். இப்பொழுதும் தள்ளி விட்டாள்.

    அது பரிதாபமாகத் தள்ளிப் போய் விழுந்து துள்ளிக் குதித்து எழுந்து சோம்பல் முறித்தது. 'கொஞ்ச நேரம் பொறுத்து எங்கிட்டதானே வருவே... வா... அப்ப பார்த்துக் கொள்கிறேன்' என்பது போல் செல்லமாக உறுமியது. பிறகு ஒற்றை சோபாவில் போய் ஏறிப் படுத்துக் கொண்டது.

    சட்டென்று சரிதாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நவநீத் வீட்டிற்கு போன் செய்தால் என்ன? அவனோடு நேரடித் தொடர்பிற்கு கைபேசியில் பேச முடியாது. கைபேசியை நடிகர்கள் எடுக்க மாட்டார்கள். உதவியாளர்கள்தான் எடுப்பார்கள். அவர்களின் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் எதுவும் தன்னால் சொல்ல முடியாது.

    அதனால் முயன்று வீட்டு எண்ணிற்கு போன் செய்ய வேண்டும். நவநீத் வீட்டிற்கு போன் செய்தாள். டர்... என்று போயிற்று ஒலி. தொண்டையைக் கனைத்துக் கொண்டாள் பேசுவதற்குத் தோதாக. சில மாய எண்ணங்கள் எப்படி எல்லாம் ஆட்டி வைக்கிறது. நெஞ்சு, தொடர்பு கிடைக்க வேண்டுமே என்று திக் திக் என்று தாளம் போட்டது. எடுக்கும் தொலை காதில் ஒலித்தது.

    அப்பாடா! நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள்.

    ஒரு நடிகன் மேல் இந்த வயசுப் பெண்களுக்கு எத்தனை எத்தனை கவர்ச்சி? தன்னையே மயக்க வைக்கும் மயக்கம். புத்தகங்களில் நடிகனின் படத்தை கத்தரித்து வைத்துக் கொண்டு பார்க்கும் ரசிப்புத் தன்மை. அவன் கதாநாயகியுடன் ஆடிப் பாடினால் அந்த இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கும் ரகசிய மகிழ்ச்சி. இது திருட்டுத்தனம்.

    இதற்கெல்லாம் சரிதா விதிவிலக்கல்ல. அவள் தோழிகளும் விலக்கல்ல. கிடைக்கும் நேரங்களில் சினிமா பற்றிய விமர்சனங்கள். அவர்களைப் பற்றிய கிசுகிசுப்பு பரிமாற்றங்கள்.

    டீ... இவளே. நடிகர் ராம்குமாரோடு பேசப்படும் நடிகை யாரடி?

    சீ.சீ உனக்குத் தெரியாதா? என்று அவள் மண்டையில் தட்டு தட்டி மக்கு. மக்கு. என்று பட்டம் கொடுத்து தப்பான பெயரை இன்னொரு தோழி சொல்லுவாள்.

    இவர்களிடம் இல்லாத செய்திகளோ புகைப்படங்களோ, தொலைபேசி எண்களோ கிடையாது. வகுப்புப் பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்குகிறார்களோ இல்லையோ சினிமா செய்திகளில் அனைவருமே முதல் மார்க்தான். அதிலும் சரிதா அவளுடைய கதாநாயகனான நவநீத் பற்றிய சகல செய்திகளிலும் யுனிவர்சிடி கோல்டு மெடலிஸ்ட்தான். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூடச் சொல்லுவாள்.

    அவளுடைய இந்த வெறித்தனமான ரசிப்பு தோழிகளுக்கும் தெரியும்.

    சரிதா, நீ கல்யாணம் செய்துகிட்டுப் போனாக்கூட உன் பெயரை நவநீத்னு மாத்திக்குவியா? என்று ஒருத்தி கேட்பாள்.

    இல்லேடி சாரு, இவ புருஷன் பெயரை நவநீத்னு மாத்தி வச்சுடுவா என்றாள் இன்னொருத்தி.

    "ஏய்

    Enjoying the preview?
    Page 1 of 1